பெட்ரோல் விலையேற்றம்: பின்னணியும் முன்னணியும்

இந்தத் தலைப்பு மிகப் பரந்தது என்பது நாம் அறிந்ததே.
எனவே ரொம்பவும் விலாவரியாக சொல்லாமல், முடிந்தவரை சுருக்கமாக, எனக்குப் புரிஞ்சவரை பகிர முயற்சிக்கிறேன்.

மொத்தம் மூனே மூனு விசயங்களில் தேடுவோமே…

1. கொஞ்சம் சர்வதேச பின்னணி.
2. நம்ம இந்திய சூழல்.
3. நம்ம தமிழ் நாட்டிலிருந்து ஒரு பார்வை.

I. சர்வதேச பின்னணி

அமெரிக்காவும் 

உலகைக் கட்டுப்படுத்திய அதன் 3 வழி முறைகளும்


1. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள்:

பெட்ரோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு (OPEC) 1960 ல் ஆஸ்திரிய நாட்டு வியன்னாவில் ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் தென் அமெரிக்க வெனிசூலா என 5 நாடுகளோடு தொடங்கியது.

 

இன்று 12 உறுப்பு நாடுகள்.

இந்த 12 நாடுகள்தான் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 81 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன.

அரபு நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, U.A.E ஆகிய நாடுகளும்,
ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, அங்கோலா,  லிபியா, நைஜீரியா மற்றும்
தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, ஈக்வடார் ஆகிய நாடுகள் இணைந்து

OPEC (0rganisation of the Petroleum Exporting Countries)  என்ற அமைப்பை ஏற்படுத்தி

45 நாட்களுக்கொருமுறை கூடி தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கின்றது. காண்க:

உலகின் மிகப்பெரும் எண்ணெய் வளமிக்க நாடு சவூதி அரேபியா. அதன் ஒரே ஒரு எண்ணெய் வயல் கவார் மட்டுமே (ரஷ்யா தவிர்த்து) உலகின் எந்தவொரு தனி நாடும் உற்பத்தி செய்யாத அளவுக்கு உற்பத்தி செய்கிறது.  காண்க:


வளைகுடா நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், அபுதாபி, யெமன், துபாய், U.A.E  போன்றவை இவற்றில் அடங்கும். இந்த மத்திய கிழக்கு நாடுகள் சுமார் 727 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்தினை கொண்டுள்ளது.

 

அதனால்தான் அமெரிக்கா எப்போதும் வளைகுடா நாடு களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் நாட்டம் கொண்டிருக்கிறது.

அதிகம் உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்யும் உலகின் முதல் 20 நாடுகள்.

2. பிரெட்டன் வுட்ஸ் மாநாடு (Bretton Woods Meet) 

இந்த மாநாடுதான் இன்றைய உலகப்பொருளாதாரத்தையே மாற்றி அமைத்த மாநாடு. ஒவ்வொரு நாடும் அதனதன் பண மதிப்போடு வியாபாரம் செய்து வந்த நேரத்தில்

அமெரிக்க டாலரை மையப்படுத்திய சர்வதேச பொருளாதாரம்

என்பதை நிறுவ முதன் முதலாக அடித்தளமிட்டது இந்த மாநாடு.

இரண்டாம் உலகப்போர் முடிவதற்கு சற்று முன்னதாகவே (1944 ஜூலை 1-22) அமெரிக்கா, ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா உள்ளிட்ட உலகின் 44 நாடுகளின் 730 நிதித்துறை அதிகாரிகளை அழைத்து இனி வரும் காலங்களில் இருக்கப்போகும் அமெரிக்க ஆதிக்கத்தை வெளிப்படையாக அறிவித்தது.


அம்மாநாடு எடுத்த முடிவுகளில் மிக முக்கியமான 2 முடிவுகள்.காண்க:

1. இனி சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரில் தான் நடைபெறும்.
2. நிதி நிர்வாகம், உதவி மூலமான ஆக்கிரமிப்பு களுக்கு 
1. சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும்
2. உலக வங்கி (World Bank- previously International Bank for Development) அமைத்தல்.

[இதனை ஒட்டி 1947 ல் தொடங்கிய (GATT -General Agreement on Tariff and Trade) உலக அளவிலான வரி, வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தை உலகில் 9 முறை நடைபெற்று இறுதியில் மொராக்கோ நாட்டின் மராகேஷ் நகரில் டங்கல் அறிக்கையை  (Dunkel draft) அடிப்படையாகக் கொண்ட உலக வர்த்தக நிறுவனமாக உருமாற (WTO – World Trade Organization) அதில் இந்திய உள்ளிட்ட 123 நாடுகள் 1994 ஏப்ரல் 15 ல் கையெழுத்திட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டனர். காண்க:]

 

எவ்வாறு ஒரு மொழி மக்களின் சிந்தனையை, பண்பாட்டை உருவாக்குகிறதோ
அது போல சர்வதேச பண பரிவர்த்தனையான அமெரிக்க டாலர் உலக பொருளாதரத்தை

1. அமெரிக்க திட்டத்திற்கேற்ப,
2. அமெரிக்க உள்நாட்டு வளத்தை உருவாக்க,
3. பிறநாடுகளிடம் அமெரிக்க சார்புத்தன்மையை உருவாக்க,
4. ஒட்டுமொத்தமாக அமெரிக்க வல்லாதிக்கத்தை உலகில் திணிக்க வெகுவாக அடித்தளம் இட்டது

1944 ல் நடந்த பிரெட்டன் வுட்ஸ் மாநாடு.
1944 ல் தொடங்கிய அமெரிக்க வல்லாதிக்கம் 2015 இன்று வரை 70 ஆண்டுகளாக தொடர்கிறது. காண்க: அமெரிக்க டாலரை சர்வதேச வர்த்தக பணமுறையாக தக்க வைக்க அடிப்படை உலக அளவிலான ஆதார சுருதி (Point of reference) தேவைப்பட்டது.


   அமெரிக்க முதலாளியம் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் 

                                   3 வழிமுறைகளில்  

     மி கத்தந்திரமாக பொருளாதார அரசியல் காய் நகர்த்தி 

                தனது டாலர் ஆதிக்க பொருளாதார உலகை 

                         உருவாக்குவதில் வெற்றி கண்டது.


1. பிற நாட்டு பணம் > அமெரிக்க டாலர் > தங்கம்

அதாவது

சர்வதேச அடிப்படை வர்த்தகப்பணமாக டாலர் நிர்ணயிக்கப்பட்டது.
டாலரின் மதிப்பை தங்கம் நிர்ணயித்தது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர்.

1 அவுன்ஸ் தங்கம் என்பது 31 கிராம். காண்க:
(நமது கணக்குப்படி 1 பவுன் என்பது 8 கிராம்)
(1900 முதல் அமெரிக்க பணமதிப்பு, பண அச்சடிப்புக்கு தங்கம் அடிப்படை அளவுகோல் ஆனது.) காண்க:
இரண்டாம் உலகப்போருக்குப்பின் குறிப்பாக மார்ஷல் திட்டம் என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளை புணரமைப்பது அமெரிக்காவின் வியாபாரத் தந்திரமாய் இருந்தது.

-பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கடன் உதவி என்ற பெயரில் அமெரிக்க டாலர்.
-கடனை அவர்கள் தங்கம் மூலம் திருப்பிச் செலுத்தவேண்டும்.
-அமெரிக்க பொருட்களுக்கும் சந்தை திறந்து விடப்படவேண்டும்.


(இந்த வழிமுறை இன்று கிரீஸ் நாடு வரை தொடர்கிறது – கடனுக்கு நாட்டையே தனியாருக்கு திறந்து விடுவது. ஆக ஜெயித்தது கிரீஸ் மக்களோ அல்லது ஐரோப்பிய யூனியனோ அல்ல அமெரிக்காவும் அதன் ஐ. எம். எப் (I M F) பும் தான்)

இதன் மூலம் டாலர் – சர்வதேச செலாவணி என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்காவுக்கு தங்கம் குவிந்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்க I M F 3000 டன் தங்கத்தை குவித்தது. காண்க:

2. பிற நாட்டு பணம் > அமெரிக்க டாலர் > பெட்ரோல்

 

அமெரிக்காவின் தந்திரத்தை புரிந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தங்களிடம் இருந்த டாலரை விற்று தங்கமாக மாற்றி கொண்டனர். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என “பிரெட்டன் வுட்ஸ்” திட்டத்திலிருந்து விலக அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது.

1. ஜெர்மனியும், ஜப்பானும் பொருளாதாரத்தில் முன்னேறின. 2. அமெரிக்காவின் வியட்னாம் போர் தோல்வி என அமெரிக்க டாலர் ஆட்டம் காண ஆரம்பித்தது. 


1971 ஆகஸ்ட் 15 ல் அமெரிக்க அதிபர் நிக்சன் பிரெட்டன் உட்ஸ் லிருந்து வெளியேறுவதாகவும், அமெரிக்க டாலரைக் கொடுத்து தங்கமாக இனி மாற்ற முடியாதெனவும் அறிவித்தார். 

இது நிக்சன் அதிர்ச்சி என அழைக்கப்படுகிறது. காண்க:

அமெரிக்க டாலர் தங்கத்தின் பிடியிலிருந்து வெளியேறியதாய் அறிவிக்கப்பட்டதால் டாலரின் மதிப்பு அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஏற்றபடி மாறும் ஊசலாடும் பணமாக மாறியது. (Floating Currency)

நிக்சனின் அடுத்த திட்டம்

1973 ல் சவூதி அரேபியாவுடனான 

                       அமெரிக்க மூன்று தந்திர ஒப்பந்தங்கள்.


1. சவூதி அரேபியா உலக நாடுகளுக்கு விற்கும் பெட்ரோலை அமெரிக்க டாலரில்தான் விற்க வேண்டும். (அமெரிக்க டாலர் இல்லாமல் எந்த நாடும் சவூதி அரேபியாவிடமிருந்து பெட்ரோல் வாங்கமுடியாது) (இதனை பிற பெட்ரோல் விற்கும் நாடுகளும் (OPEC) ஏற்றுக்கொண்டன. தற்போது   ஈரான், வெனிசூலா போன்ற சில நாடுகள் விலகிவிட்டன)


2. இந்த ஒப்பந்தத்தை சவூதி ஏற்கும் பட்சத்தில் சவூதியில் உள்ள எண்ணெய்க் கிணறுக்களுக்கு இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து பாதுகாக்க அமெரிக்க இராணுவம் பொறுப்பேற்கும். (ஏனெனில் 1973 அக்டோபர் 6-25 ல் தான் இஸ்ரேல்-9 அரேபிய நாடுகளுக்கிடையேயான யோம்-கிப்பூர் போர் நடை பெற்றிருந்தது. காண்க:


3. அவ்வாறு சவூதி சம்பாதிக்கும் அமெரிக்க டாலரை அமெரிக்க வங்கிகளில்தான் முதலீடு செய்ய வேண்டும்.


என்னவொரு அமெரிக்க ஆதிக்க சூழ்ச்சி. 

மற்ற நாடுகள் தங்களின் பணத்தை அதிகமாக அடித்து வெளியிட்டால் நாட்டில் பணவீக்கம் அதிகமாகி விலையேற்றம் நடக்கும். ஆனால் உலகளவில் அமெரிக்கா உருவாக்கின செயற்கையான டாலர் தேவை காரணமாக அந்த நாடு எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளும் ஆக்கிரமிப்புச் சூழல் உருவானது. அமெரிக்கா பண, செல்வ செழிப்பில், கொள்ளை, சுக போகத்தில் மிதக்க ஆரம்பித்தது.

அமெரிக்க இராணுவம் வளைகுடா நாடுகள்-இராக், குவைத், பக்ரென், கத்தார், சவூதி, யேமன், ஓமன் சிரியா- என அனைத்திலும் தனது தளத்தை நிறுவியது.

இராணுவ ஆக்கிரமிப்பு, எண்ணெய் வள கொள்ளை, டாலர் குவிப்பு, அமெரிக்காவில் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர்வு என பிற நாடுகளின் இரத்தத்தில் அமெரிக்க மக்களின் சொகுசு வாழ்க்கை தொடர்ந்தது.


3. இராணுவப்போர் > பெட்ரோல் > அமெரிக்க டாலர் 

நம் அனைவருக்கும் தெரிந்த விசயம் 2001 செப்டெம்பர் 11. இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு.


உண்மையிலேயே பின்லேடனோ அல்லது மதத் தீவிரவாத அமைப்புகளோ இதை செய்ததா என்றால் இல்லை என்பதே உண்மை.


1. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிக்க 2001 செப்டெம்பர் 11 க்கு முன்னமே போட்ட திட்டங்கள். காண்க:

2. இரட்டை கோபுரங்கள் இடிப்புக்கு பின்னணி அமெரிக்காவே. காணொளி ஆதாரம்: 

3. முக்கியமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் பெட்ரோல் விற்பனையை அமெரிக்க டாலருக்கு பதில் ஐரோப்பிய ஈரோவில் செய்யப்போவதாக அறிவித்தார். இதன் பின்னரே அமெரிக்கா அசாதரணமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது. அமெரிக்க மற்றும் உலக மக்கள் மத்தியில் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்க காரணம் இருப்பதை நம்ப வைக்க தன் கட்டடம், மக்களை பலி கொடுத்தது.

According to page 28 of William R. Clark’s book Petrodollar Warfare:

“On September 24, 2000, Saddam Hussein allegedly “emerged from a meeting of his government and proclaimed that Iraq would soon transition its oil export transactions to the euro currency.”

 ஈராக்கும் அமெரிக்காவும்

1928 ல் 3 அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கூடி குழு அமைத்தது. 1960 ல் இக்குழு 7 என்றானது. ஏழு சகோதரிகள் என்றழைக்கப்பட்டன. 85 சதவிகித உலக எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஏழில் சில ஒன்றோடு ஒன்று இணைந்து இன்று 4 (British Petroleum, Chevron, Exxon Mobil and Royal Dutch Shell) என உள்ளது.
காண்க:

நமது “திருமங்கலம் பார்முலா” என்பதுபோல எண்ணெய்க்கான தனியார்மய போர் பார்முலா என்பது ஈராக் மீதான போர் மூலம் அமெரிக்கா தொடங்கி உள்ள வழிமுறை. அதாவது போருக்கான வீரர்களை விட, தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்களே அதிகமாக நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டனர். காண்க:


ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம் கொழிக்கும் ஈராக் நாட்டினைப் பார்த்தாலே அமெரிக்காவின் எண்ணெய்க் கொலைவெறியின் பின்புலம் தெரிகிறது.

In 2009, Texas oil billionaire T. Boone Pickens complained that “we,” meaning the people of the United States, had sacrificed 5,000 lives, 65,000 wounded soldiers, and one and a half trillion dollars in Iraq, and that “we,” meaning U.S. oil corporations, were therefore entitled to Iraq’s oil, but that the oil contracts were all going to China. Oil and energy investigator and analyst Antonia Juhasz said, on the contrary, that the Iraq War served US and UK based oil companies very well. காண்க:


கீழ்க்காணும் டெய்லி மிர்ரர் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஜார்ஜ் புஷ் ஷின் அறிக்கையையும் அதன் பின்னால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் கோர ஆக்கிரமிப்பு முகத்தையும் காணலாம். (Read between lines என்ற ஆங்கில பதம் சொல்வதுபோல இங்கு புரிந்து கொள்ளலாம்)

2007 ல் துபாயில் ஈராக் நாட்டின் வளங்களை பங்கு பிரித்து கொள்ளை அடித்துக்கொள்ள மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ONGC) ஒன்று. காண்க:  

The oil majors met at the Iraq Oil, Gas, Petrochemical & Electricity Summit from 2 – 4 September 2007 in Dubai to discuss “the future of Iraq’s abundant energy resources.” Attending were US puppets, described as “some of the most important figures from Iraq’s energy sector.” Also attending were the waiting vultures, BP, Exxon, Conoco Phillips, Chevron, Lukoil, Statoil, Marathon Oil, Total, Shell, Kuwait National Petroleum, Annadarko, Schlumberger, ABB, ONGC, General Electric, Cummins Power, Mitsui, Aegis, ArmorGroup, Janussian, Control Risks Group, Unity, Hart, Olive Security, GardaWorld and Triple Canopy. காண்க:

                      II. நம்ம இந்திய சூழல்.

                                           பெட்ரோல் கொள்ளைகாரர்கள்
                      1. மத்திய மற்றும்  மாநில அரசுகளின் 10 கொள்ளைகள்
                                    2. ரிலையன்சின் ஏக போக கொள்ளை  
 

                                       (1) வது கொள்ளை


1. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்: விலையும் தொடர்பானவைகளும்

1 பீப்பாய் (Barrel) என்பது 159 லிட்டர் கொண்டது.
1 பீப்பாய் கச்சா எண்ணெய்

1980 ல் இருந்து 2002 வரை 20 டாலருக்குக் கீழாக விற்றது 2008 ல் 147 டாலராகி 2015 ல் 50 டாலரில் நிற்கிறது.

இந்திய அரசின் பெட்ரோலியத்துறை 01.12.2014 முதல் டீசல், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளதாகச் சொல்வது பன்னாட்டு பெட்ரோலிய விலைக்குத் தொடர்பில்லாத மோசடி அறிவிப்பாகும்.                                 

                                   கடந்த 25.07.2014 அன்று


பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலை ஒரு பீப்பாய்க்கு 106.01 அமெரிக்க டாலர்கள் ஆகும். 

ஜூன் மாதம் ஒன்றாம் நாள் நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாயின் மதிப்பு 59.19 ரூபாய் ஆகும்.

இதன் படி பார்த்தால் பெட்ரோலியத்தின் ஒரு லிட்டர் பன்னாட்டு விலை 01.06.2014 அன்று 52.46 ரூபாய் ஆகும். அதே நாளில் இந்திய அரசின் பெட்ரோலியத் துறை ஒரு லிட்டர் பெட்ரோல் 74.60 ரூபாய் என்று விலை அறிவித்தது.     

                                         24.12.2014 அன்று


பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை பீப்பாய்க்கு 57 டாலர். 

அதாவது இன்றைய நிலவரப்படி ரூபாய் கணக்கில் லிட்டருக்கு 33.94 ரூபாய்.

அதாவது 2014 ஜூலையுடன்  ஒப்பிட 2014 டிசம்பரில் பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை 61 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதன்படி பார்த்தால் இந்திய அரசு டீசல் விலையை வரி உட்பட லிட்டருக்கு 37.28 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை 40.29 ரூபாய் என்றும் அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் விற்பனை வரியையும் சேர்த்து டீசல் விலையை 55.99 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை வரி உட்பட 66.05 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது.

உண்மையில் பன்னாட்டு விலையை விடப் பெட்ரோல் லிட்டருக்கு 25.76 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. டீசல் விலை பன்னாட்டு விலையை விட லிட்டருக்கு 18.71 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.   காண்க:

                                  இவ்வார நிலவரப்படியும் ஒரு பீப்பாய் 57 டாலர்தான்.


                  ஏன்யா பொதுமக்கள் வயித்துல அடிக்கிறதுக்கு 

                              ஒரு வரைமுறை இல்லையா?


இல்லை கேள்வியே கேட்க எந்த அமைப்பும் இல்லையா? இல்ல கேட்கவே முடியாதா?

இந்த இலட்சணத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை 2014 ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது.

அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது. தங்கம் விலை போல், அன்றாட விலையைப் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் போல.

கம்பெனிகள் பொறுப்பில் விலைக் கட்டுப்பாட்டை வைத்தால், பிறகு பெட்ரோலிய அமைச்சகம் என்பதே தேவையில்லையே. மத்திய அரசு என்று ஒன்று அவசியமே இல்லையே.

   (2) வது கொள்ளை


1. பெட்ரோல் மீதான கலால் வரி மூலம் மட்டுமே மத்திய அரசு 2011-2012 ல் 68,000 கோடி கொள்ளை அடித்தது.

2. 2013-2014 ல் பெட்ரோல் வரி மூலம் மத்திய அரசின் கொள்ளை 77,000 கோடி.
அந்தாண்டின் மொத்த கலால் வரியான 1,79,00 கோடியில் பெட்ரோல் கொள்ளை மூன்றில் ஒரு பங்கு.

3. மக்களின் பைகளில் இருந்து மத்திய அரசு உருவும் ஒட்டு மொத்த மறைமுக வரியில்  (Indirect tax) பெட்ரோல் கொள்ளை மட்டுமே 5 ல் 1 பங்கு. காண்க:

   (3) வது கொள்ளை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 5,280 ரூபாய் விற்ற வேளையில்,

இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சி., உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 2,420 ரூபாய்க்கு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. ஆனால் இதுவும் மக்களுக்கு விற்கும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததுபோல விலை உயர்த்தியே கொள்ளையடிக்கப்பட்டது.
அமெரிக்க டாலர் மதிப்பில் அனைத்து எண்ணெயும் இறக்குமதியானதாக கற்பனையாகக் காட்டப்பட்டது.
கச்சா எண்ணெயின் மொத்தத் தேவையில் 78% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 22% உற்பத்தியாகிறது. காண்க:

அம்பானி நிறுவனங்களுக்கு பணம் வானத்திலிருந்து கொட்டவில்லை. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வின் ஒரு பகுதியை மக்கள் தலையில் தான் சுமத்தியாக வேண்டும். இதை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை’ என்று நூறு கோடி மக்களின் அன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  (இன்றைய ஜனாதிபதி) சொன்னார்.

ஒருவேளை உலகச்சந்தையிலிருந்து பெறுகின்ற கச்சா எண்ணெய்க்கு வேண்டுமானால் விலையேற்றம் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கும்.
ஆனால், உள்ளூரில் தோண்டி எடுத்து, துரப்பணம் செய்யப்படுகின்ற எண்ணெய்க்கும் அதே விலை வைப்பது, என்ன நியாயம்? மக்களை ஏமாற்றும் மோசடியல்லவா?

   (4) வது கொள்ளை

பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.77.53 என்றால் இதில் ரூ.45.75 பெட்ரோல் மீது இந்திய, தமிழக அரசுகள் விதிக்கும் வரித்தொகையாகும். பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்திவரி, மேல்வரி, கல்விவரி ஆகியவை மொத்தம் 32 விழுக்காடு. மாநில அரசின் விற்பனைவரி  27 விழுக்காடு.

கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்குக்கிடைத்த வரி வருவாய் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரியைப் பாதி குறைத்தால் கூட பெட்ரோல் விலை உயர்வைத் தவிர்க்கமுடியும்.

‘ எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா; ரொம்ப நல்லவன்டா ‘

என்று ஒரு படத்தில் வடிவேல் சொல்வதைப் போல, பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்தினாலும்  தாங்குறாங்க; நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்கப்பா என்று கிடுகிடுவென வரிக்கு மேல் வரி என்று விலையை ஏற்றிவிட்டார்கள்.

அட்டவணையில்  கச்சா எண்ணெய் அடிப்படை விலையையும், கட்டப் பஞ்சாயத்துக்காரன் ஸ்பீட் வட்டி, மீட்டர் வட்டி என்பதைப்போல மத்திய அரசின் கொடுமையான வரி சுமையையும் காணலாம்.

   (5) வது கொள்ளை


பெட்ரோலியப் பொருள்களை மானிய விலையில் மக்களுக்கு அளிப்பதால், அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு திரும்பத் திரும்பக் கூறிவருவது அப்பட்டமான பொய்.

டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி எவரும் ஏன் வாய் திறப்பதில்லை.
நடுவண் அரசுக்கு உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 5இல் 2 பங்கு பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலமே கிடைக்கிறது. 2010-11ஆம் ஆண்டில் பெட்ரோலியத் துறை மூலம் நடுவண் அரசுக்கு ரூ.1,36,000 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.80,000 கோடியும் வருவாய் கிடைத்தது.

2010-11 காலத்திலான 6 ஆண்டுகளில் நடுவண் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

வருமான வரிச் சலுகையாக ரூ.3,74,937 கோடி,
உற்பத்தி வரிச் சலுகையாக ரூ.7,49,623 கோடி,
சுங்கவரிச் சலுகை யாக ரூ.10,00,463 கோடி
என மொத்தம் ரூ.21,25,023 கோடி அளித்துள்ளது.

அதாவது  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.240 கோடி தள்ளுபடி செய்துள்ளது. 

ஆனால் பெட்ரோலியப் பொருள் களுக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகப் பொய்யான புள்ளிவிவரத்தை அரசு அளிக்கிறது.   காண்க:

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23 ஆயிரத்து 325 கோடிதான்.

ஆனால் கிடைத்த வருமானமோ நடுவணரசுக்கு ரூ.4,10,842 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.2,63,766 கோடியுமாகும்.

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசு வழங்கும் மானியமோ கிடைக்கின்ற இலாபத்தில் வெறும் 3.45 விழுக்காடு மட்டுமே’ (நன்றி பி.எஸ்.எம்.ராவ், தினமணி)
காண்க:
மறுபுறம், கச்சா எண்ணெய்யின் விலையைப் போல 152 சதவிகிதம் அதிக விலைக்கு சாமானியனுக்கு பெட்ரோலை விற்று விட்டு நட்டம், மானியம் என ஓலமிடுகின்றன அரசும், ஊடகங்களும்.

இப்போது 2008 ல் இந்தியா வில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உருபா 53. ஆனால், பாக்கித்தானில் உருபா 26, வங்க தேசத்தில் உருபா 22, நேபாளத்தில் உருபா 34, இரத்தக்களறியாகக் கிடக்கும் ஆப்கானித் தானில் உருபா 33, மலேசியாவில் உருபா 20 என விற்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் தேவை யில் இந்தியா 70 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. இதைப்போலவே இந்த நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அந்த நாடு களில் மட்டும் விலை எப்படி மிகவும் குறைவாக இருக்கிறது?
உற்பத்தி வரி, சுங்கவரி என்று நடுவண் அரசும், விற்பனை வரி என்று மாநில அரசு களும் அதிகஅளவில் வரி விதிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது.   காண்க:

   (6) வது கொள்ளை

டாலருக்கு நிகரான உருபாயின் வீழ்ச்சியால் இறக்கு மதியாகும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறும் நடுவண் அரசு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் இதே காரணத்தால் கூடுதல் வருவாய் கிடைப்பதை மறைக்கிறது. 2010-11ஆம் நிதி ஆண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பு கொண்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பில் இது 16.53% ஆகும்.
காண்க:

   (7) வது கொள்ளை

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கக்கூடிய கமிசன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தங்கள் கூட்டமைப்பின் மூலமாகக் குரலுயர்த்தியுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் குதிப்பதைத் தடுப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தியுள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் வருமானத்திலிருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கமிசன் வழங்குவதை விடுத்து, அதனையும் ஒட்டு மொத்தமாக மக்களின் தலையில் கட்டியுள்ளனர். அப்பட்டமான இந்த மோசடியைக் கண்டிப்பதற்கு இந்திய நடுவணரசுக்குத் துணிச்சலில்லை. எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காகப் போராடும் எண்ணத்திலில்லை.  காண்க:

   (8) வது கொள்ளை


ஒரு பீப்பாயில்,
1. விமானங்களுக்கு பயன்படும், “ஏ’ ரக பெட்ரோல் 40 லிட்டர்,
2. கார்களுக்கு பயன்படும், “பி’ ரக பெட்ரோல் 50 லிட்டர் மற்றும் 41 லிட்டர் டீசல் கிடைக்கும்.
3. 18 லிட்டர் மண்ணெண்ணெய்,
4. 10 லிட்டர் உயர்தர மசகு எண்ணெய்
5. காஸ்,
6. தார் கோக்,
7. சுத்தப்படுத்தும் எண்ணெய்,
8. பிளாஸ்டிக் மூலப்பொருள்

இன்னும் பல பொருட்கள் கிடைக்கின்றன.


“ஏ’ ரக மற்றும் “பி’ ரக, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உயர்தர எண்ணெய், இவை மொத்தம் 150 லிட்டர்.  இதில் 40 லிட்டர், “ஏ’ ரக பெட்ரோல். இதன் விலை, சாதா பெட்ரோலை விட ஒன்றரை மடங்கு அதிகம். 40 லிட்டர், “ஏ’ ரக பெட்ரோலுக்கு 1,550 ரூபாய் கிடைக்கும்.  காண்க:

இதர பொருட்களின் விலை, கச்சா எண்ணெயை சுத்திகரிக்க ஆகும் செலவுக்கு போதுமானது.
மேலும்

மொத்தம் 150 லிட்டரில், சுத்திகரிக்கப்பட்ட பின் மாற்றப்படும் போது, அதில் 8 லிட்டர் வீணாக அல்லது ஆவியாக மாறினாலும், 142 லிட்டர் கிடைக்கும்.

ஆனால் பெட்ரோல், உப பொருட்கள் எல்லாம் சுத்திகரிக்கும்போது 159 லிட்டரைவிட அதிகமாக கிடைப்பதுதான் உண்மை. மேலே உள்ள படம் இதனை விளக்கும்.

ஆக இந்த இலாபத்தை கணக்கில் காட்டாது அடிக்கும் கொள்ளையை யாரிடம் சொல்ல?

   (9) வது கொள்ளை

1)  1976 இல் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பர்மா செல், கால்டெக்ஸ் போன்ற மிகப்பெரிய  வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். அதற்கு முன், அந்த நிறுவனங்கள் சர்வதேச விலை நிர்ணயத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிவந்தன.

2) 1991இல் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த, உலகமாயமாக்கல் கொள்கை, மீண்டும் தனியார் முதலீடுகளை அதிகரித்தது. விளைவு கட்டுப்பாடில்லாத விலை நிர்ணய நடைமுறை உருவானது.

3) இதற்கிடையில், 2010 ஜுன் 26 முதல் பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது.

அதற்குப் பிறகு, தனியார் முதலாளிகள் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்தத் தொடங்கினர். இப்போது, ஒரே ஆண்டிற்குள், 10ஆவது முறையாக விலையேற்றம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர்.

கொள்ளையில் தனக்குப் பங்கு தரும் தனியார் பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதில்தான் அரசுகள் கவனமாய் இருக்கின்றனவே அன்றி, மக்களை அல்ல.   காண்க:                             2. ரிலையன்ஸ் சின் கொள்ளை


 

கச்சா எண்ணெய் (Crude oil)  இந்தியாவில் 


1. பாம்பே ஹை (Bombay High),
2. அசாம் மாநிலம் (திக்பாய்),
3. குஜராத்,
4. ஆந்திரா (கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை)
5. தஞ்சை, நாகை, திருவாரூர் (காவிரி படுகை) ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

                                                  பாம்பே ஹை கடலடி எண்ணெய் துரப்பணம் 


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் OIL (OIL INDIA LIMITED) போன்றவையும்,

ரிலையன்ஸ் மற்றும் CAIRNS INDIA (P) LTDஆகிய தனியார் துறை நிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன.

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், கெரசின், LPG, நாப்தா, LSHS, F.O (Fuel oil), கெரசின், போன்ற எரிபொருட்களும், பென்சீன், டொலுவீன் போன்ற வாசனை வேதிப்பொருட்களும், சிறப்பு கொதிநிலை ஸ்பிரிட்டுகளும், பிடுமின் (தார்) போன்ற பயன்பாட்டு பொருட்களும் கிடைக்கின்றன.

இவையனைத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் (Refineries) சுத்திகரிக்கப்பட்டு, எண்ணெய் வணிக நிறுவனங்களால் (IOCL, BPCL, HPCL)  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது 20 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் IOCL, BPCL, HPCL, ONGC  போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆயில் போன்ற தனியார் துறை நிறுவனங்களும் அடங்கும். 

ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பு

1. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் குஜராத் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனமே. காண்க:

7,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த ஜாம் நகர் நிறுவனம்.


2. அது மட்டுமல்ல எண்ணெய் துறையில் எந்த பொதுத்துறை நிறுவனமும் ரிலையன்ஸ் அனுமதி இல்லாமல் செயல்படமுடியாது. குறிப்பாக பிளாஸ்டிக், இராசயனம், பெட்ரோலிய உப பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அவர்கள் இந்திய அளவில் சர்வாதிகார கட்டுப்பாட்டினை கொண்டிருப்பதாக ஆதாரங்களைத் தருகிறது பிரண்ட்லைன் பத்திரிகை. காண்க:

3. ரிலையன்ஸ் நிறுவனத்தின்  ஆந்திர கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை கச்சா எண்ணெய் உற்பத்தி மட்டுமே ஒட்டுமொத்த இந்திய எண்ணெய் உற்பத்தியில் 60 %  காண்க:

4. 2002 ல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயலில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் கண்டுபிடிப்பு ரிலையன்சின் திருபாய் 1 எண்ணெய் வயல் . காண்க:
மற்றும் காண்க: 

5. எந்தெந்த தனியார் அந்நிய நிறுவனம், இந்தியாவின் எந்தெந்த எண்ணெய் வயல்களை கொள்ளை அடிக்கலாம் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தனியார் அரசு அனுமதித்துள்ளதைக் காணலாம்.

6. இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெறும் இலாபத்தைவிட அதிகமான இலாபத்தைக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறுகிறது.

7. ரிலையன்சு நிறுவனம் எண்ணெய் யைத் துரப்பணம் செய்தல், உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறது. கோதாவரிப் படுகையின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி-பகிர்வு ஒப்பந்த (PSC) விதிகளுக்குப் புறம்பாக ரிலையன்சு செயல்படுகிறது என்று அந்நிறுவனத்தின் மீது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

8. கோதாவரிப் படுகை டி6 எண்ணெய் வயலில் 1.85 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்திச் செலவைப் பொய்யாகக் காட்டியுள்ளது. இதை ரிலையன்சு நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காண்க:

9. ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை யில் ஏராளமாக பெட்ரோல் வளம் இருப்பதை இந்திய செய்மதி மூலம் கண்டுகொண்ட அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாநில அரசுக்கு உரிய ராயல்டி தராமல் சோனியா காங்கிரஸ் மூலம் கொள்ளை இலாபம் பார்த்தது (வருடத்துக்கு 25,000 கோடி). மாநிலத்துக்கும், தனக்கும் எதிர்பார்த்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி உலங்கு வானூர்தி “விபத்தில்” கொல்லப்பட்டார். காண்க:


அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என்று ரஷ்ய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது குறித்த ரஷ்ய நிறுவனத்தின் தகவல். காண்க: 


ஒரு எண்ணெய் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பை ஒரு மாநில முதல்வரே தடுக்க முடியாது என்றால்

                                               இந்த நாட்டை ஆட்சி செய்வது யார்?

                                       தனியார் கும்பல்கள் கொள்ளையடிப்பது எவ்வளவு?


கெய்ன் (Cairn) நிறுவனம்

1. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றான இராஜஸ்தான் கச்சா எண்ணெய் வயலில் எண்ணெய் எடுக்க கெய்ன் (Cairn, Haryana) நிறுவனத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது. காண்க:

2. இராஜஸ்தானில் மட்டுமல்ல காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய்கிணறுகள், தஞ்சை காவிரி படுகை வரை அந்த கெய்ன் (Cairn) நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1989 லிருந்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலவரம்

YEAR               PETROL  KEROSENE    DIESEL     LPG
————————————————–
Apr 1  1989       8.50           2.25                   3.50      57.60
Oct 15 1990      12.23          2.77                   5.05       —
Jul 25 1991       14.62         2.52                      —       67.90
Sep 16 1992      15.71            —                      6.11      82.75
Jul 03 1996      21.13            —                      9.04     119.95
Jan 15 2000     25.94           —                      14.04       —
Mar 01 2002    26.54        8.98                    16.59     259.95
Jan 16 2003     30.33         —                       19.47       —
Jun 16 2004     35.71          —                      22.74     261.60
Nov 05 2004    39.00         —                     26.28     281.60

Jun 06 2007    43.52         —                      30.48       —
Jun 05 2008    50.56         —                      34.80     346.30
Apr 01 2010     47.93         —                      38.10     310.35
Jun 26 2010     51.43       12.22                 40.10     345.35

காண்க:

  3. நம்ம தமிழ் நாட்டிலிருந்து ஒரு பார்வை.

1. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.

இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி
தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

2. அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான்.

3. அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை (ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

4.  காவிரிப்படுகையை இந்திய அரசு அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும்போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்” . காண்க:

5. பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு தில்லியில் ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டில் ரூ.7.98
அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது!

6. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவளிக் கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து மாதந்தோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு மாதத்திற்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும். டீசல் நுகர்வு மாதத்திற்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.
அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்ச இலாபம் உட்பட அதன் அடிப்படை விலையானது அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு தேவைக்குத் தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சாஎண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேசச் சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

7. தமிழ்நாட்டின் எரிவளித் [எரிவாயு- (LPG-Liquified Petroleum Gas)] தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும். காண்க:

இந்திய தேசம் என்றைக்கு மக்களின் தேசமாய் மாறும் ???

தொடர்ந்து தேடுவோம்…

5 கண்டங்களின் பெயர்களும் தமிழே

உலகின் முதல் மனித இனம் தமிழினம், உலகின் முதல் மொழி தமிழாய் இருக்கும் போது உலகின் நிலப்பெயர்களும், கண்டப்பெயர்களும் தமிழாய் இருப்பதில் வியப்பில்லை.

 1. ஆசியா, 2. ஆப்பிரிக்கா, 3. ஐரோப்பா, 
 2. அமெரிக்கா, 5. ஆஸ்திரேலியா – எல்லாம் தமிழ்ப் பெயர்களே. தேடித்தான் பார்ப்போமே…
 3. ஆசியா

ஆசியா என்பதற்கான தமிழ் மூல வார்த்தை உதயம். சூரியன் முதலில் உதயமாகும் நிலம் என்பதே.

இயற்கையாக நிலம் அமைந்த விதத்திலும் பெரிய கடலான பசுபிக் கடலுக்கு அடுத்து முதலில் அமையும் நிலம் ஆசியாதான். தொல் தமிழர்கள் வசித்த இந்தோனேசிய, ஆதித்திரேலிய நாடுகள், தீவுகள் பகுதிக்கும் தொடக்கமாக அமைந்தது இப்பகுதியே.

இன்றும் கூட உலக நேரக்கணக்கீடு இலண்டன் கிரீன்விச் மையக்கோட்டை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டாலும், ஒரு நாளின் துவக்கம் (International Date Line) இந்த ஆசிய கிழக்கு பகுதியைக்கொண்டே தொடங்குகிறது.

ஞாயிறு கடந்து திங்கள் கிழமை வருவதின் தொடக்கம் (வார தொடக்கம்) கிழக்கு ஆசியாவில்தான்.

2014 கடந்து 2015 புத்தாண்டு முதலில் தொடங்குவதும் (ஆண்டு தொடக்கம்) இப்பகுதியில் தான்.

வழக்கம்போல கிரேக்க மூலம் என்று ஐரோப்பியர் சொன்னாலும் அந்த கிரேக்க ஆசியா (“Ἀσία”) என்ற வார்த்தையின் மூலம் எபிரேய செமிடிக் (Semitic) மூலத்தின்படி ‘அசு’ (Asu) அதன் பொருளான கிழக்கு, மற்றும் அக்காடிய (Akkad) மொழி மூலத்தின்படி ‘அசு’ (Asu) அதன் பொருளான உதயத்தின் நிலம் (Land of the Sunrise) என்பதையும் ஒத்துக்கொள்கின்றனர். காண்க: 

ஆசியாவுக்கு சமசுகிருத வார்த்தை மூலமும் ‘உஷா’ என்றே வருகிறது. காண்க:

உஷா (Usha, Asia) என்ற ஹிந்தி, சமசுகிருத வார்த்தைக்கு தமிழ் மூலச்சொல் விளக்கமும் உதயமே. காண்க:

தமிழ் சொல் பிறப்பியல் அகராதியில் இதற்கான விளக்கம்:

உசா [ ucā ] {*}, உசாதேவி, s. one of the consorts of the Sun; goddess of the dawn.

உசற்காலம், உஷாகாலம், உஷற்காலம், day-break, 5 naligas before daybreak. காண்க

கிரேக்கத்தில் ஆசியா (“Ἀσία”), எபிரேய, அக்காடிய மொழியில் அசு, ஆங்கிலத்தில் ஏசியா, ஹிந்தியில், சமசுகிருதத்தில் உஷா, தமிழில் உசா அல்லது உதயம்.

தோங்கா (Tonga) போன்ற பொலினேசிய, பசிபிக் தீவுகளில் சூரியன் ஒவ்வொரு நாளின் முதலில் உதயமானாலும், கிழக்குப்பகுதியின் பெரிய நாடு என்ற அடிப்படையில் உலக வரைபடத்தில் ஜப்பான் நாடே சூரியன் உதயமாகும் முதல் நாடு. அதனால் அந்நாடு நிப்பான் (ஜப்பான்) அதாவது முதலில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவதை நாம் அறிவோம். அதன் பழைய, புதிய கொடிகள் சூரியனைக் குறிப்பவையே.

 1. ஆப்பிரிக்கா

தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் இருண்ட கண்டம் என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது.

வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும் கிரேக்க ஹெரோடோடஸ் (Herodotus கி. மு. 484-425) என்பவரின் புரிதல் படி முழு ஆப்பிரிக்காவும் லிபியா என அழைக்கப்பட்டது.

பின் கொஞ்சம் விவரமாகி ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கேள்விப்பட்டு அப்பகுதியை எத்தியோப்பியா என்று அழைத்தனர்.

அப்பகுதி கடலையும் எத்தியோப்பியக் கடல் என அழைத்தனர்.

செமிட்டிய பினீசியர்களின் தொடர்புக்குப்பின் ஆப்பிரிக்கா என அழைக்க ஆரம்பித்தனர். காண்க:

ஆப்பிரிக்காவுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் ஒரு தனி பதிவில் விளக்கமாக பார்ப்போம்.

தற்போது ஆப்பிரிக்கா என்ற பெயரோடு நிறுத்திக்கொள்வோம்.

தமிழிலும் ஆப்பிரிக்கா என்பதற்கு பல புரிதல்கள் உண்டு. முக்கியமான நான்கு புரிதல்கள் தமிழோடு தொடர்புடையது.

 1. ஆப்பிரிக்கா ஒரு தூசி, புழுதி நாடு.

இத்தாலிய ரோமர்கள் வடக்கு ஆப்பிரிக்காவை (துனிசியா) வெற்றி கொண்ட பின் அப்பகுதியில் இருந்த அப்ரி (Afri) இன மக்களின் பெயர் கொண்டு முழு பகுதியையும் அவ்வாறே அழைத்தனர். காண்க:

ஆப்பிரிக்கா அபார் (Afar) என்ற எபிரேய வார்த்தையில் இருந்து வந்ததாக பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன. அபார் என்பதற்கு தூசி என்று பொருள். இன்றைய சகாரா பாலைவனம் இருக்கும் வடக்கு ஆப்பிரிக்கா பாலைவனப்புயலால் அப்பெயர் பெற்றது என்றனர். ஆங்கில மூலச்சொல் அகராதி

அபாகஸ் (Abacus) என்று சொல்லப்படும் கணிக்கும் முறை யின் மூலச்சொல் எபிரேய மூலச்சொல். தரையில் மணல் பரப்பி எழுதும் முறை. காண்க: மற்றும் காண்க:

தமிழிலும் அப்பு என்றால் மண் என்றே பொருள்.

அப்பு [ appu ] {*}, s. water, நீர்; 2. sea, கடல். மண்.  காண்க:

தூசி நாடு, மண் நாடு, அப்பு நாடு – ஆப்பிரிக்க நாடு.

 1. ஆப்பிரிக்கா ஒரு கடல் தாண்டி அடையும் நாடு.

தமிழர்கள் பாலினேசிய, இந்தியப் பெருங்கடல் தீவு மற்றும் நாடுகளிலிருந்து பல இடங்களில் குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் கடலோடிகளாக இருந்தனர். கலை வளர்த்தனர், கட்டடங்கள் எழுப்பினர். தங்கம் கண்டுபிடித்தனர்.

எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் ஆப்பிரிக்கா என்றானது.

காரணம் அப்பு என்றால் கடல் என்றும் தமிழில் பொருள்.

அப்பு [ appu ] {*}, s. water, நீர்; 2. sea, கடல். மண்.  காண்க:

அவ்வாறு இந்தப்பெருங்கடலில் பயணம் செய்து களைத்த சமயத்தில் முதலில் தென்பட்ட தீவில் தங்கி ஓய்வெடுத்தனர். அத்தீவுக்கு அதனால் சுகதரை என்றே பெயரிட்டனர். இன்றும் அத்தீவு சுகத்ரா (Succotra) என்றே அழைக்கப்படுகிறது.

சகோத்ரா தீவு நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சவூதி அரேபியாவுக்கு கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ள ஏமன் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவு. இந்த சகோத்ரா என்ற பெயரின் மூலச்சொல் சுக தரை. தமிழர்கள் எகிப்த்துக்கும் கிரேக்க ரோம நகரங்களுடன் வியாபாரம் செய்ய கடலில் பயணித்த பொது தங்கி ஓய்வெடுத்த இடம் இது. ஆங்கிலேயர்கள் இதன் மூலச்சொல் சுகதரை தீவு என்றே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சுகம் என்ற வார்த்தையை சமஸ்க்ரிதம் என்று நினைத்துவிட்டார்கள். இது பற்றிய தகவல் காண.

 1. ஆப்பிரிக்கா ஒரு தங்க நாடு.

தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலே சான்று. ஒரே ஒரு கோயிலில் இருக்கும் நகையையே இன்றைய நவீன உலகிலும் கணக்கிட முடியவில்லையே. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களைக் கணக்கெடுத்தால்? ஆனால் என்ன அந்நிய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களும், உள்ளூர் அரசியல் கொள்ளையர்களும் கொள்ளையடித்தது போக மீதம் தான் இப்ப இருப்பது.

சரி விசயத்திற்கு வருவோம்.

தமிழர்கள் சென்ற, வாழ்ந்த இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர். தென்கிழக்காசியாவில் சுவர்ண பூமி தங்க பூமி தான். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள்.

சுவர்ணதீபம் என்றால் பொருள்:

சுவர்ண தீவம் – சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு – வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக சுவர்ண தீவு என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள்.

பக்கத்தில் உள்ள நிலப்படத்தில் அதன் இருப்பிடம் காணலாம். படத்தை விரிவுபடுத்தியும் காணலாம்.

இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமிதான்.
இந்தியப்பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்க பெரு நிலப்பரப்பில் நுழைந்தவர்கள் அங்கும் தங்கம் கண்டறிந்தனர்.

கிறித்தவர்களின் விவிலியத்தில் சாலமோன் அரசர் ஓபிர் (Ophir) பகுதியில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தார் என்று ஒரு பகுதி வருகிறது. காண்க:

தமிழில் அபரஞ்சி என்றால் தங்கம் என்று பொருள்.

நம்மூரிலும் அபரஞ்சிதம் என்று பெயர்கள் உண்டு. தங்கப்பெண்.

அபரஞ்சி [ aparañci ] , s. (Tel.) fine gold, the purest gold, தங்கம். காண்க:

அபரஞ்சி நாடு ஆப்பிரிக்கா நாடு.

ஆப்பிரிக்காவில் தங்கம் கிடைக்கும் பகுதிகள் கொண்ட நிலப்படம்:

 1. ஆப்பிரிக்கா ஒரு கறுப்பு நாடு.

மனிதன் உருவான துவக்க கால கட்டத்தில் உலகின் அனைத்து மக்களும் கறுப்பர்களே.

முதல் ஐரோப்பியர்கள் வெள்ளையர்கள் அல்ல அவர்கள் கறுப்பர்களே. காண்க:

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து சென்று குடியேறியவர்களே அவர்கள். தொடர்ந்த குளிர் வானிலை, மற்றும் சூரிய வீச்சின் நேரடிபாதிப்புகளற்ற நிலையில் வெள்ளை நிறத்தினை பல நூறு ஆண்டு கால இடைவெளியில் பெறத்தொடங்கினர்.

அந்தமானிய தொல்லின மக்கள் உலகில் வேறெந்த இனத்தோடும் சேராதவர்கள்; ஆனால் தென்னிந்திய தமிழினத்தோடு நெருங்கியவர்கள் என மரபணு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. காண்க:

தென்னிந்திய தமிழினம் ஐரோப்பியா சென்று திரும்பிய ஆரிய இனத்தோடு கலப்பதற்கு முன்னதாக கலப்படமற்ற தொல்லினமாக, குமரிக்கண்ட தமிழினமாக, அந்தமானிய தொல்லினத்தோடு ஒன்றாக இருந்த இனமாக இருந்தது.

A genome-wide study by Reich et al. (2009) found evidence for two genetically divergent, ancient populations that are ancestral to most persons inhabiting the Indian subcontinent today: Ancestral North Indians (ANI), who are genetically close to Middle Eastern, Central Asian, and European populations, and Ancestral South Indians (ASI), who are genetically distinct from both ANI and East Asians. The Onge Andamanese were observed to be related to the Ancestral South Indians, and were unique in that they were the only South Asian population in the study that lacked any Ancestral North Indian admixture. The authors thus suggest that the Onge populated the Andamanese Islands prior to the intermixture that took place between the Ancestral South Indians and Ancestral North Indians on the Indian mainland.காண்க

மூர், மௌர், மௌரிய, நீக்ரோ என்பதெல்லாம் குறிப்பது கறுப்பு இனத்தைத்தான். காண்க: 

மறத்தமிழன் என்பதுவும் கறுப்பைக் குறிப்பதே.

-“Moor” meant “negro” or “black-a-moor” in A Dictionary of the English Language (1768) by Samuel Johnson.

-The Encyclopaedia Londinensis (1817) by John Wilkes lists “moor” as follows: “[maurus, Lat. μαυρο, Gr., black.] a negro; a blackamoor.”

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான மௌரித்தானியா (Mauritania), மொராக்கோ (Moracco), அங்கு வாழும் மூரி இனத்தவர், மொரீசியஸ் (Mauritius) தீவு நாடு என எல்லாம் குறிப்பது கறுப்பு நிறத்தைத்தான்.

Roman Catholic writers of the 5th-9th centuries AD used “Mauretania” synomymously with all of Africa, not any one particular region.

Although most Moorish families of nobility (the origin of the term “Black Nobility”) intermarried with Europeans, their surnames continued to link to their heritage. Family names such as Moore, Morris, Morrison, Morse, Black, Schwarz (the German word for “black”), Morandi, Morese, Negri, etc. all bear linguistic reference to their African ancestry. For example, the oldest Schwarz family crests even depict the image of an African, or “Schwarzkopf,” (“black head” in German). Other families and municipalities adopted similar coats of arms which continue to exist in some form, demonstrating the important role Africans played in European history. காண்க:

நம்மூரில் மாநிறம் என்றாலும் நல்ல கறுப்பு என்றே பொருள் என்பதை நாம் அறிவோம். மாரி, கருமாரி, மழைமேகம் எல்லாம் கருமையை குறிக்கும்.
தமிழில் அப்பிரகாசம் என்றால் இருள் என்றே பொருள்.

அப்பிரகாசம் [ appirakācam ] {*}, s. (அ, priv.) darkness, இருள். காண்க:

அப்பிரகாச தேசம் ஆப்பிரிக்க தேசம்.

 1. ஐரோப்பா

ஐரோப்பா கண்டம் பனிக்குளிர் காலங்கள் தாண்டி தாவரம், விலங்குகள், மனிதர் வாழத் தகுதி பெற்றதாய் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது. அவ்வாறு உருவான சமயத்தில் அறிவார்ந்த மனிதன் (Homo Sapiens) இந்திய, ஆசிய பகுதிகளில் இருந்து

 1. காக்கேசியன் மலைப் பள்ளத்தாக்கு வழியாக ரஷ்யா மூலம் ஐரோப்பா
 2. துருக்கி நாட்டின் கடல் வழியாக கிரீஸ் மூலம் ஐரோப்பா
 3. ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டின் மூலம் ஐரோப்பா

என ஐரோப்பாவிற்குள் நுழைந்தான். காண்க: மற்றும் இங்கும் காண்க:

இவ்வாறு ஐரோப்பாவிற்குள் நுழைந்தபோது மூன்று நுழைவுகளும் குறுகிய பாதைகளே.

 1. காக்கேசியன் மலைப் பள்ளத்தாக்கு வழியாக ரஷ்யா மூலம் ஐரோப்பா
 1. துருக்கி நாட்டின் கடல் வழியாக கிரீஸ் மூலம் ஐரோப்பா
 1. ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டின் மூலம் ஐரோப்பா

நுழைவுப்பாதைகள் குறுகலாய் இருந்தாலும் ஐரோப்பாவின் உள்ளே நாட்டுப்பகுதி விரிவாய் இருந்ததால் விரிந்த கண்டம் என்ற பொருளில் ஈரோப்பா.

தமிழில் ஈர்தல்,  ஈனுதல் என்றால் இரட்டிப்பாகுதல், பெருகுதல் என்று பொருள். காண்க:

The etymology of Europe: One theory suggests that it is derived from the Greek εὐρύς (eurus), meaning “wide, broad”[26] and ὤψ/ὠπ-/ὀπτ- (ōps/ōp-/opt-), hence Eurṓpē, “wide-gazing”, “broad of aspect”. காண்க:

குறுகி பின்னர் விரிந்து காணப்படும் கண்டம் விரிந்த ஈரோப்பா (Europa or Europe) என்று அழைக்கப்படுவது சரியே.

 1. அமெரிக்கா

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளடங்கிய அமெரிக்க கண்டம். இந்த இரு கண்டப்பகுதியிலும் இரு பெரும் இனங்கள்:

ஒன்று வட அமெரிக்காவில் இன்றைய மெக்சிகோ நாட்டுப்பகுதியில் வாழ்ந்த மாயன் அல்லது மயன் இனம். மாயன்களுக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு பற்றி வேறு ஒரு பதிவில் விரைவில் காண்போம்.

இரண்டு தென் அமெரிக்காவில் இன்றைய பெரு நாட்டுப்பகுதியில் வாழ்ந்த இன்கா (Inca) இனம்.

வட அமெரிக்காவின் மிகப்பெரிய மலைத்தொடர் ராக்கி மலைத்தொடர் என்பது நமக்குத்தெரியும் அலாஸ்கா விலிருந்து கீழே பனாமா வரை நீண்டுருக்கும் ராக்கி மலையின் படம் கீழே.
அதே போல தென் அமெரிக்காவின் நீண்ட நெடிய மலை ஆண்டிஸ் என்பதும் நமக்குத்தெரியும். கீழே ஆண்டிஸ் மலையுடன் தென் அமெரிக்கா.
இந்த இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் வாழ்ந்த இனம் மாயன் இனம். இந்த மாயன் கட்டிய பிரமிடுகள் இன்றும் அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும் இன்றைய மெக்சிகோ நாட்டின் முந்தைய பெயர் மெசோஅமெரிக்கா (Mesoamerica)
இந்த மெசோ அமெரிக்கா என்ற பெயர் எப்படி வந்தது. மெசபடோமியா-(மிசை +பேட்டை+இரு+ஆறு) இரு ஆறுகளுக்கிடைப்பட்ட நாடு  என்பதைப்போல இதுவும் நல்ல தமிழ்ப் பெயர்.
மெசோஅமேரிக்கா / மெசோ மேரிக்கா / மெசோ + மேரு + அகம் /

மிசை + மேரு + அகம். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட நாடு.

ராக்கி, ஆண்டீஸ் என்ற இரு மலைகளுக்கிடைப்பட்ட நாடு.
இந்தப்பெயரே மெசோஅமெரிக்கா வாக பின்னர் கண்டம் முழுவதற்கும் ஐரோப்பியர்களால் அமெரிக்கா என்று அழைக்கப்படவும் காரணமாயிற்று.

மேலும் விபரம் காண:

இன்னும் நம்பாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்காக

 1. வட அமெரிக்காவிலிருந்து ஒரு முக்கிய இடம்: நயாகரா (ஒரு தமிழ் வார்த்தை)
 2. தென் அமெரிக்காவிலிருந்து ஒரு முக்கிய உயிரினம் : அனகொண்டா பாம்பு (ஒரு தமிழ் வார்த்தை)
 1. நயாகரா நீர்வீழ்ச்சி:

வட அமெரிக்காவில் உள்ள மிகப்பிரபலமான பெயர் நயாகரா நீர்வீழ்ச்சி.

இந்த நயாகரா என்ற பெயரின் மூலச்சொல் என்னவென்று தேடியபோது, இது பற்றி தேடிய ஒர் அமெரிக்கர் ஜார்ஜ் ஸ்டீவர்ட் என்பவர் அப்பகுதி வாழ் அமெரிக்க பூர்வகுடிகளிடம் கேட்டு அவரே வெளியிட்ட அந்த மூலச்சொல் வார்த்தை ஓங்கின ஆறு என்பதே. அதாவது உயர்ந்த பகுதியில் அமைந்த ஆறு. இந்த ஆறு எவ்வளவு உயரமான பகுதியில் ஓடி பின்னர் இந்த இடத்திலிருந்து தாழ்வான பகுதியில் தொடர்ந்து ஆறாக ஓடுகிறது என்பதைக்  கீழுள்ள படத்தைப்பார்த்தாலே எளிதாக விளங்கும்.

விளக்கம் தேவைப்படுவோர் இந்த இணைப்பில் காணலாம்.

According to George R. Stewart, the name Niagara comes from the name of an Iroquois town called “Ongniaahra”,.[4]

 1. அனைகொண்டா பாம்பு:

தென் அமெரிக்காவிற்கும் தொடர்பான ஒரு தமிழ்த்தொடர்பு பெயரினைக்கானலாம். அது தென் அமெரிக்காவின் பிரபலமான அனைகொண்டா பாம்பு. இதன் பெயருக்கான விளக்கம். அது யானையையும் கொல்லக்கூடிய வலிமையுள்ள ஒரு பாம்பு. யானை கொன்றான் அல்லது ஆணை கொன்றான். (தமிழில் ஆணை என்றாலும் அது யானையையும் குறிக்கும்.) மேலும் நான் விசாரித்த வரையில் தென் அமெரிக்காவில் யானை என்ற விலங்கு கண்காட்சிசாலை (Zoo) தவிர வேறெங்கும் இல்லை. பிறகு எப்படி இந்தப்பெயர் தமிழர் பூர்வகுடி அங்கில்லாமலா? இதற்கான விளக்கத்திற்கு செல்ல கீழ்கண்ட இணைப்பைப் பயன்படுத்தலாம்.

Yule and Frank Wall noted that the snake was in fact a python and suggested a Tamil origin anai-kondra meaning elephant killer.[5]

 1. ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் அட்லாண்டிஸ் என்ற இரண்டு பெயர்களும் குறிக்கும் சொல் ஆதித்தேயம் என்பதே.

இங்கிலாந்து என்ற வார்த்தைக்கு  இத்தாலிச்சொல் இங்கில் தெர்ரா (Inghil terra) (அதாவது இங்குள்ள தரை. அங்குள்ள தரை – அது ஐரோப்பா கண்டப்பகுதி)

அதேபோல அட்லாண்டிஸ் என்பதும் அட்லாந்து – அதி லாந்து – ஆதி லாந்து – ஆதி நிலம்.

அதேபோல ஆஸ்த்ரேலியா என்பதும் ஆதித்தேயம் என்பதிலிருந்தே மருவி இருக்கவேண்டும்.

காரணம் அறிவியல் பூர்வமானதும் கூட. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுடைய ஜீன்களையும் இந்திய பழங்குடி மக்களின் ஜீன்களையும் ஆய்வுக்குட்படுத்திய போது மிகபொருத்தமாய் இருந்ததாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காண்க:

ஆஸ்திரேலிய பூர்வகுடி பெரியவரும், சிறுவர்களும் தமிழர்களைப்போல் இல்லையா?

DNA ஆய்வு முடிவுகள்:

அறிவியல் ஆய்வு முறையில் பிரித்தானிய ஆக்ஸ்போர்ட்டின் DNA பரிசோதனையில் தென்கிழக்காசிய மக்களின் தொன்மை 50,000 வருடங்கள் என்றும் அவர்களே பூர்வ குடி மக்கள் என்றும் மூன்று முறை ஏற்பட்ட கடல்கோள்களிலிருந்து (இறுதியாக ஏற்பட்டது 15,000 – 7000 ஆண்டு கால இடைவெளியில்) மீண்டு வந்தவர்கள் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காண்க:

3 கடல் கோள்கள்: முதலாவது 70,000 ஆண்டுகளுக்கு முன்னதாக, கடைசி 12,000. காண்க:

தமிழ் இலக்கியச் சான்றுகளும் 3 தமிழ்ச்சங்கங்கள் ஒவ்வொரு அழிவுக்குப்பிறகும் நடைபெற்று தமிழ் வளர்த்ததை சொல்வது இந்த 3 கடல்கோள்களை நிரூபிக்கிறது.

ஒரு ஜீன் விளக்கப்படம், எவ்வாறு தென்னிந்தியர் ஆஸ்த்ரேலியாவிற்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு: மஞ்சள் நிற ஜீன் குறியீடு ஆத்திரேலிய பழ ங்குடியினருடையது. பச்சைக்குறியீடு தென்னிந்திய தமிழருடையது.

மேலும் உலகின் பல நாட்டு நபர்களை விட தமிழர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பாக BBC யும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் உசிலம்பட்டியைச்சேர்ந்த விருமாண்டி என்பவரின் DNA 99 சதவிகிதம் பொருந்துவதாக கண்டுபிடித்ததை யூ டியூப் காணொளியிலும் காணலாம்.

It took five years for the Pitchappan team of 10 scientists to establish the DNA link between Virumandi and the first migrants to the subcontinent. The studies also proved that though the migration to India took place some 70,000 years ago, the first settlement in the South happened about 10,000 years later.

More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia,” said Dr Pitchappan.

 1. கங்காரு.

கங்காரு என்ற பெயர் எப்படி வந்ததுன்னு பலருக்கும் தெரியும்.

ஆஸ்திரேலியா வந்திறங்கிய ஒரு ஐரோப்பியர் அதிசயமாகத்தெரிந்த இந்த விலங்கினத்தை முதன்முறை பார்த்து பழங்குடிகளிடம் இதன் பெயரென்ன எனக்கேட்க, அவர் என்ன கேட்டார் என்று புரியாத அம்மக்களில் ஒருவர் கேட்டது புரியவில்லை என்று அவர்கள் மொழியில் சொன்னதையே அவ்விலங்கின் பெயராய் புரிந்துகொண்டு கங்காரு என்பதையே அவ்விலங்கின் பெயராக்கினார் என்பது வழக்கு.

உண்மையில் அந்த விலங்குக்கு பெயர் வச்சவன் தமிழன்.

அந்த விலங்கின் பெயர் ஒரு தமிழ் பெயர். அது மார்சூப்பி.

கூகுள் போய் கங்காரு என்று தேடினால் அந்த விலங்கின் உட்குழு பெயர் மார்சூப்பியல் என்று வரும்.

Scientific classification
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Mammalia
Infraclass: Marsupialia
Order: Diprotodontia
Family: Macropodidae
Genus: Macropus
Subgenus: Macropus and Osphranter

மார்சூப்பியல் சென்று தேடினால் அது ஓரியண்டல் என்று முடித்து கொள்கிறார்கள்.
ஏன் அந்த பெயர் ?

எந்த விலங்கினத்தின் குட்டியும் அதன் தாயை விட பொதுவாக பத்தில் ஒரு மடங்கு அல்லது பதினைந்தில் ஒரு மடங்கு சின்னதாக இருக்கும், மனிதன் உட்பட.

ஆனால் இந்த கங்காரு மட்டும் பிறக்கும் பொது  தாயை விட 500 மடங்கு சிறியது.
தாய்க் கங்காருவின் வயிற்றுப்பையுள் செல்லும் குட்டி வெளியே வராது. வர முடியாது. ஏறக்குறைய 4 வருடங்கள் தாயின் வயிற்றுப்பைக்குள்தான் அதற்கு வாழ்க்கை. அதனாலேயே தமிழர்கள் அந்த விலங்குக்கு வைத்த பெயர் மார்சூப்பி.

தொடர்ந்து தேடுவோம்…

இளையராஜா: வித்தியாச முயற்சிகளின் ராஜா

இசைஞானி அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 2) முன்னிட்டு இந்தப் பதிவு.

இளையராஜா அவர்கள் “தாரை தப்பட்டை” வரை 1000 திரைப்படங்கள் என்றால், 1 படத்திற்கு குறைந்தது 4 பாடல்கள் என்று வைத்துக்கொண்டாலும் 4000 பாடல்கள்.

ஒவ்வொரு பாடலிலும் வரும் இரண்டு 2 இடையீடுகளுக்கும் (Interlude) வெவ்வேறு இசைக்கோர்வை என்ற கணக்கில் பாடல் இசை தவிர 8000 இடையீடுகள்.

இந்த 4000 பாடல்களில் ஒவ்வொன்றையும் எடுத்து ஆய்வு செய்தால் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு புது முயற்சி, தனித்துவம் இருக்கும்.

இராகங்களின் முழுப்பரிமாணமாக, இராகங்களின் கலப்பாக, இராகங்களின் மீறலாக, இராகங்களின் பரிணாமமாக…
நாட்டுப்புற, கர்நாடக, இந்துஸ்தானிய, மேற்கத்திய இசையின் ஊடாக அடுத்த இசைக்கிரகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ராக்கெட் விண்கல விமானியின் வல்லமை இளையராஜா என்ற இசை மாஜிக் நிபுணருக்கு இருக்கிறது.

ஆனால் அவரின் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னாலான ஏதோ ஒரு சின்ன தேடல் முயற்சி.

1. இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு சினிமா பாடல்.

“மாயா பஜார் 1995” என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.

முதலில் இதற்கான கற்பனை, திரைப்படத்தில் ஒரு விஷப்பரிட்சை, என்பதையெல்லாம் தாண்டி மிகவும் இனிமையான ஒரு பாடல்.

சமீபத்தில் அவரின் இசைக்கச்சேரியிலும் பாடப்பட்டது இந்தப் பாடல்.

இசைவடிவ காணொளி காண: நான் பொறந்து வந்தது 

கச்சேரி காணொளி காண: இங்கே 

2. ரிதம் கருவி (Rhythm Pad) மட்டுமே கொண்ட ஒரு திரைப்பாடல்

வேறெந்த இசைக்கருவியும் பயன்படுத்தாது வெறும் ரிதம் கருவி மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும் பெரும் வரவேற்பை பெற்ற “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

ராஜா… ராஜாதி… ராஜன் இந்த ராஜா…

3. “சிட்டுக்குருவி” என்ற படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே குயிலினிமை உடையதுதான்.

அதிலும் இந்தப்பாடல் என் கண்மணி… என் காதலி… என்ற பாடல்.

1. இனிமையான இசைப்பாடல்.

2. புது முயற்சியாக பாடலின் இடையே வரும் உரையாடல்கள்: 78 களில் நவீன முயற்சிகள்.

– தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு…,

– இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடி போ…

– நல்ல பொங்கல் போங்கோ…

3. மூன்றாவதாக இரு குரல் ஒன்றில் மேல் ஒன்று ஏற்றி பாடுவது. இதனை (Counter Point) என்று சொல்கிறார்கள்.

அதாவது, ஒரு கனவுப்பாடலில் நிஜ நாயகனும் அவனது கனவு நாயகனும்,

அதேபோல், நிஜ நாயகியும் அவளது கனவு நாயகியும், இந்த 4 பேரும் பாடுவது போல் ஒரு பாடல்.

இதில் நாயகனும், கனவு நாயகனும் கேள்வி-பதிலாக பாடி ஒரே கருத்து முடிவில் இணைவது.

இந்த இரு குரல் ஒன்றில் மேல் ஒன்று ஏற்றி (Counter Point) பாடுவது பற்றி ராஜா அவர்களின் விளக்கம் காண:

அந்த இனிமையான நவீன முயற்சியை கண்களால் கண்டு, செவியின்பமும் பெற: என் கண்மணி

4. “குணா” திரைப்படத்தில் எல்லாப்பாடல்களுமே இனிமைதான்.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலும், உரையாடல்களோடு இணைந்த பெரும் வரவேற்பு பெற்ற வித்தியாச முயற்சி பாடல் தான்.

எனக்கு அந்தப்படத்தில் மிகவும் பிடித்தது உன்னை நான் அறிவேன் என்ற பாடல்.

அந்தப் பாடல் சுழலும் ஒரு மின்விசிறியின் ஒலியோடு துவங்கி நம்மை அப்படியே ஈர்த்துக்கொள்ளும். என்னவொரு இசைக்கற்பனை.

தொடர்வது: மதிக்குறையுள்ள நாயகனின் மீது  உண்மையான இரக்கம் கொள்ளும் ஒரு பெண்ணின் குரலில் ஜானகி அம்மாவின் அணுக்கம்.

ஒரு மாடி அறையில் தொடங்கும் அந்த மெல்லிய இசைப் பாடல், அங்கிருந்து பயணித்து வெளியில் நடக்கும் ஒரு இந்துஸ்தானி கச்சேரி யை  சேர்த்துக் கொள்ளும். தொடர்ந்து அப்படியே வண்டிகளின் இரைச்சல்களுக்கு  இடையே உலாவி, பின் ஒரு கூத்துப்பாடல் கூட்டத்தோடு கும்மாளமடிக்கும் பிறகு மீண்டுமாக மெல்லிசையாக நாயகனின் நிம்மதியான உறக்கத்தோடு நிறைவு அடையும்.

பாடலில் உள்ளம் கொள்ளை கொள்ள: உன்னை நான் அறிவேன்

5. “மீண்டும் கோகிலா” திரைப்படத்தில் பெண் பார்க்கும் படலமாக ஒரு பாடல், சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என பாரதியார் வரிகளில் தொடங்கும். வெத்தலை இடிக்கும் பாட்டியின் இதமான இடிப்பு இன்னிசையின் இடையீடாய் (Interlude). சிறுவனின் சேட்டை, நாயகி மறக்க, எடுத்துக்கொடுக்கும் நாயகன், சபாஷ் போட வைக்கும் கற்பனை நயங்கள். கேட்டுத்தான் அனுபவிப்போமே: சின்னஞ்சிறு வயதில்

6. “பூந்தளிர்” படத்தில் ஜென்சி அவர்களின் குரலில் ஞான் ஞான் பாடனும் பாடல். துவக்க இசையே நம்மை எங்கோ அழைத்துச்செல்லும். அதை உணர்ந்து மீள்வதர்க்குள்ளாக ஜென்சியின் குரலலை நம்மை வீழ்த்தும். கடித விளக்கம் பெறும் மொழி புரியா நாயகியின் ஏக்கம் இடையீட்டு உரையாடலில்.

சேரனின் ‘ஆட்டோகிராப்’ படப் பாடல் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ என்ற பாடலுக்கு முன்னோடி இந்தப்பாடல். இன்ப வெள்ளத்தில் நீராட: ஞான் ஞான் பாடனும்

7. “சின்ன வாத்தியார்” படத்தில் ஒரு பாடல் கண்மணியே கண்மணியே நான் சொல்லுவதைக்கேளு. நாயகன் முழுக்க பாட, அதற்கு நாயகி பாடலுக்கு பதில் வசனம் மட்டுமே. முழுப்பாடலிலும் அப்படியே. நாயகியின் வசனக்குரல் நடிகை ரோகினி அவர்களுடையது. கேட்டு ரசிக்க: கண்மணியே  கண்மணியே

8. “மெட்டி” என்ற இயக்குனர் மகேந்திரனின் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் முத்தானவையே. அதில் நாயகியின் கல்யாண நிபந்தனைகள் உப காட்சியாக, இடையீடாக பாடலில் லயிக்க வைக்கும் பாடல் கல்யாணம் என்னை முடிக்க. கொஞ்சம் லயிப்போமா:

இப்பாடல் மேலே கிடைக்க வில்லையென்றால் முழுப்பாடல்கள் உள்ள இந்த தொகுப்பில் 4. 40 நிமிடத்தில் இப்பாடலைக் கேட்கலாம். கண்டு களிக்க:

9. “பகலில் ஒரு இரவு” படத்தில் தோட்டம் கொண்ட ராசாவே என்ற பாடல். இந்தப்பாடலில் மொத்தம் 4 இசைக் கருவிகள் மட்டுமே. ஆனாலும் பாடல் ஒரு தேனிசை மழை, அந்த மழையில் நனைவோமா: தோட்டங் கொண்ட ராசாவே

10. 3 சுரத்தில் ஒரு திரைப்பாடல் ச, ரி, க என்ற மூன்றே மூன்று சுரத்தில் ஒரு முழுப்பாடல். இது ஒரு தெலுங்குப் பாடலாய் இருந்தாலும் ராஜா கொஞ்சம் தமிழ்ப்படுத்துகிறார். கேட்டுத்தான் பார்ப்போமே:

காணொளி: 

கொசுறாக இந்த வரிசையில் எனக்கு பிடித்த இராஜாவின் பாடல்களில் மிகச்சிறந்த ஒன்று:

1. “எனக்காக காத்திரு” என்ற படத்தில் வரும் பனி மழை விழும் என்ற பாடல்.  1978 ல் வந்த படப்பாடல். அருணாச்சல பிரதேச இமய மலையில் புத்த விகாரங்களுக்கு மத்தியில் மலையகப் பிரதேச பிரத்யேக இசைக்கருவிகளோடு மலை முகட்டிற்கும், எவரெஸ்டின் உச்சிக்கும் ஏன் அதற்கும் மேலே நம்மை கொண்டு செல்லும் பாடல் இது. துவக்க இசை, இரண்டு இடையீடுகளை இமைகளை திறவாது அனுபவியுங்கள்.

பாடலின் இசையை மட்டும் ரசிக்க: பனி மழை விழும்.

திரைப்பாடலாய் ரசிக்க: இங்கே  

இவைதவிர

2.  “கரையெல்லாம் செண்பகப்பூ” படத்தில் பாடல் கற்றுக்கொடுக்கும் பாடலாக ஏரியிலே எலந்தை மரம் 

3. “பொண்ணு ஊருக்கு புதுசு” படத்தில் மிதிவண்டி கற்கும் பாடலாக ஒரு காலகட்டத்தில் தமிழகத்தையே கலக்கிய பாடல்: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது..

4. தமிழ்த்திரைப்படத்தில் இரத்தப் புற்றுநோய் என்பதை அறிமுகப்படுத்தி அதன் வீச்சு சில ஆண்டுகளுக்கு இருக்கச்செய்த “பயணங்கள் முடிவதில்லை” படத்தில் இருமலோடு நாயகன் பாடும் மணியோசை கேட்டு எழுந்து…

5. மூச்சு அடக்கி பாடி படத்திற்கே விளம்பரமாய் அமைந்த “கேளடி கண்மணி” படத்தின் மண்ணில் இந்தக் காதலின்றி.. 

இசைஞானி அவர்களின் காலக் கட்டத்தில் வாழும் தமிழ் இசைப்பிரியர்களாகிய நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவருக்கும், தமிழுக்கும், தமிழிசைக்கும் என்றுமே நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொடர்ந்து தேடுவோம்…

நவீன அறிவியலின் மறுபக்கம்

நவீன அறிவியலின் மறுபக்கம்

21 ம் நூற்றாண்டு, கம்ப்யூட்டர் நூற்றாண்டு, நவீன அறிவியலின் உச்சக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று சொல்லி நமக்கு நாமே சுய பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

செய்மதி

1975 ல் அனுப்பிய ஆரியபட்டா என்ற செயற்கைக்கோள் முதல் இன்று வரை (2015 மே 13) இந்தியா 77 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. காண்க: மற்றும் காண்க:

இந்த செய்மதிகள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என்று யாரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.  ஒவ்வொன்னையும் அனுப்பும் போது ஆகா இந்தியா அறிவியலில் எங்கேயோ போயிருச்சு, மேலை நாடுகளுக்கு சமமா நாமும் செயற்கைக்கோள் அனுப்புறோம் ன்னு நமக்கு ஒரு மிதப்பு.

நமக்கு செல்பேசியில் பேச, இணையம் தேட, தொலைக்காட்சியில் பல சேனல்கள் பார்க்க முடிகிறது செய்மதியால்.

இதோடு போதும் என நினைத்து விடுகிறோம். படம் காட்டியே, கடலை போட வச்சே நம் கவனத்தை திசை திருப்பி விடுகிறார்கள்.

1. வானிலை அறிவிப்பில் துல்லியமாக சொல்கிறார்களா. இல்லையே, இருந்திருந்தால் ரிஷிகேஷ், கேதர்நாத் வருடாவருடம் வெள்ள உயிரிழப்பு தவிர்த்திருக்கலாமே.

2. சுனாமி அறிவிப்பு செய்து பல்லாயிரம் பேர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாமே.

3. மண் வளம், நீர்வளம், முன்பாகவே மழை அளவு சொல்லி விவசாயத்தை வளர்த்திருக்கலாமே.

வேற எதுக்கு செய்மதிய பயன்படுத்துராங்கன்னு பாத்தா

1. நிலத்தில் எங்கெங்கே கனிம வளம் இருக்கிறது என்று கண்டுபிடித்து தனியார், மற்றும் அன்னிய நாட்டு நிறுவங்களுக்கு சொல்லி அவர்கள் கொள்ளையடிக்கத்தான் உதவுகிறார்கள். காண்க: 

மற்றும் காண்க:

2. கடலில் எங்கெங்கே மீன் வளம் இருக்கிறது என்று அந்நிய நாட்டு நிறுவனங்களுக்குத் தான் சொல்கிறார்கள். காண்க:

3. மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராம பாத்துக்கிறது. தறுதலைத் தலைவர்களோட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துல ஆயுதங்களோட யாரும் வராங்களான்னு வேவு பாத்து அவிங்க உயிரை மட்டும் பாதுகாத்துக்க செய்மதிய பயன்படுத்திக்கிராங்களே ஒழிய மக்களை பாதுகாக்கவே அல்ல.

1. உதாரணத்திற்கு நம் அனைவருக்கும் தெரிந்த 2G ஊழல்.

செய்மதியின் தொலைத்தொடர்புக்கான அலைக்கற்றை இடத்தை இந்திய செய்மதி துறையிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிகவிலைக்கு விற்றது.

இதனால் இந்தியாவுக்கு இழப்பு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். காண்க:

அமெரிக்காவின் டைம் (Time, 2011) இதழ் உலகில் நடந்த மிகப்பெரிய 10 ஊழல்களில் 2 வதாக இதனை அறிவித்தது. காண்க:

முதல் ஊழல் 1972 ல் நடந்த அமெரிக்க அதிபர் நிக்சனின் வாட்டர் கேட் (Water gate) ஊழல். காண்க:

2. ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை யில் ஏராளமாக பெட்ரோல் வளம் இருப்பதை இந்திய செய்மதி மூலம் கண்டுகொண்ட அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாநில அரசுக்கு உரிய ராயல்டி தராமல் சோனியா காங்கிரஸ் மூலம் கொள்ளை இலாபம் பார்த்தது (வருடத்துக்கு 25,000 கோடி). மாநிலத்துக்கும், தனக்கும் எதிர்பார்த்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி உலங்கு வானூர்தி “விபத்தில்” கொல்லப்பட்டார். காண்க:

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என்று ரஷ்ய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது. காண்க: 

இது குறித்த ரஷ்ய நிறுவனத்தின் தகவல். காண்க:

மரபணு மாற்று

மரபணு மாற்று உயிர்கள், விதைகள். GMO (Genetically Modified Organisms): இது இயற்கையின் மீதான இறுதி யுத்தம். இது பற்றி இங்கே விளக்கமாக காணலாம். காண்க:

1. மரபணு மாற்றம் பற்றி 1997 ல் ஒரு ஆடு குளோனிங் செய்யப்பட்ட போது பரவலாக அறியப்பட்டது.

2. இந்த குளோனிங் டோலி ஆடு பற்றிய ஒரு விளக்கப்படம் கீழே. படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம்.

குளோனிங் என்பது என்ன?

ஆண் விலங்கின் விந்தணு உட்கருவுக்குப்பதிலாக உடல் செல்லின் உட்கரு (Body Cell Nucleus) எடுக்கப்பட்டு,  உட்கரு நீக்கப்பட்ட ஒரு பெண் விலங்கின் சினை முட்டைக்குள் திணிக்கப்பட்டு புதிய உட்கரு உருவாக்கப்படுகிறது.


இந்த புதிய உட்கரு வேறொரு பெண் விலங்கு கருப்பையில் வளர வைக்கப்பட்டு பிறப்பு உருவாக்கப்படுவதே குளோனிங் முறை.

இது மனிதனில் சோதிக்கப்படவில்லை என்கிறார்கள். விலங்குக்கும் முதலில் அப்படித்தான் சொன்னார்கள்.

4. மரபணு மாற்ற சோதனையை பல வழிமுறைகளில் சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக:

1. ஆப்பிளின் விதை உட்கருவும், திராட்சையின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு கிராப்பிள்.

(Grape + Apple = Grapple)

2. உருளைக்கிழங்கின் விதை உட்கருவும், தக்காளியின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு பொமாட்டொ (Potato + Tomato = Pomato) அல்லது Tomtato என அழைக்கப்படுகிறது.

3. இதைவிட கொடுமை விலங்குகளிலும் இயற்கைக்கு விரோதமாக பரிசோதிக்கப்படுவதுதான்.

ஆண் சிங்கத்தின் விந்தணுவும் பெண் புலியின் சினை முட்டையும் இணைக்கப்பட்டு லைகர் எனவும்,

(Lion + Tiger = Liger) 

அதே போல ஆண் புலி மற்றும் பெண் சிங்கம் இணைத்து டைகன் (Tiger + Lion = Tigon) எனவும் பரிசோதிக்கப்படுகிறது.

தக்காளியும், தவளையும்

தக்காளி சீக்கிரம் அழுகி கெட்டுப்போகாமல் இருக்க தவளை ஜீனையும் (Gene) தக்காளியோடு இணைக்கிறார்கள். காண்க:

இந்த மரபணு மாற்று கத்திரிக்காயிலும் உண்டு. (BT- Bacillus Thuringiensis காண்க:)

மரபணு மாற்று பயிர்களை உண்ணும் எலிகளுக்கு என்ன ஆகிறது பாருங்கள்:

70 சதவிகித எலிகள் வயிறு வீங்கி வெகு சீக்கிரம் செத்துப்போகின்றன.

1. இந்தியாவில் சக்கரை வியாதிகள் போன்ற அனைத்து வியாதிகளும் பெருகுவதற்கு முதற்காரணமாய் மரபணு மாற்று பயிர்கள் இருக்கின்றன.

2. மரபணு மாற்று பயிர், கனிகளில் இருந்து விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது.

3. ஒவ்வொரு முறையும் அந்த அன்னிய நிறுவனங்களைத்தான் தேடிச்செல்லவேண்டும் விதை வாங்க. அவர்கள் தரும் விதைதான். வேறு வழியே இல்லாமல் போய்விடும். மீண்டுமாய் அடிமைத்தனத்தில் நமது விவசாயம்.

மரபணு மாற்று பயிர்களை தீவிரமாக நம்மீது திணிக்க நினைக்கும் முக்கிய அந்நிய நிறுவனங்கள்:

முன்னணியில் பிடி கத்திரிக்காயின் நிறுவனம் மான்சாண்டோ

மான்சாண்டோ நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர் உலகின் பெரும் பணக்காரரும், பெரும் “நன்கொடையாளருமான” பில் கேட்ஸ்.

அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்:

1. உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முதல் பயங்கரவாத நாடு அமெரிக்கா.

மேலே உள்ள 5 அதிகளவில் ஆயுத விற்பனை செய்யும் நாடுகள் தான்,

ஐ. நா. சபையின் பாதுகாப்பு சபையில்

வீட்டோ (Veto) அதிகாரத்தோடு உள்ள நிரந்தர 5 உறுப்பு நாடுகள். காண்க: விளங்குமா உலகம்?

மேலும் காண்க: 

அமெரிக்க இராணுவ புலனாய்வு அமைப்பு இயற்கையையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்களின் நண்பனான டால்பினையும் உளவு காரியங்களுக்குப் பயன்படுத்திகொள்கின்றனர்.

2. அமெரிக்காவின் இராணுவ செலவுகள்:

3. அமெரிக்காவின் ரகசிய உளவு விமானம். இது வானில் பல மாதங்கள் சுற்றி வந்து பல நாட்டு ரகசிய தகவல்களை சேகரித்தது யாருக்கும் தெரியாமல் அது பூமியில் இறங்கியதும் தான் தெரிய வந்தது.

இது பற்றிய மேலும் விபரங்களுக்கு காண்க:

இது தவிர ரகசிய செய்மதியையும் அனுப்பியுள்ளது. காண்க: 

மற்றும் காண்க:

4. உலகம் தடை செய்துள்ள பொதுமக்களுக்கு அபாயகரமான கூட்டுக்குண்டுகளை (Cluster Bombs) அமெரிக்கா பயன்படுத்தி மக்களைக் கொல்வதோடு, பெருமளவில் ஏற்றுமதியும் செய்கிறது. காண்க:

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டதை நாம் அறிவோம்.

உண்மையான காரணம் போரை முடிக்க அல்ல.

அணு குண்டுகளால் ஜப்பானுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் நாம் அறிவோம்.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி காலை 8.15 க்கு ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டால் உடனடி 90,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ந்தேதி காலை 11.02 க்கு நாகசாகியில் வீசிய அணுகுண்டால் உடனடி 37,000 மக்கள் கொல்லப்பட்டனர். விரைவில் 2 நகரங்களிலும் இறந்தோர் எண்ணிக்கை 2,00,000 ஆனது. குற்றுயிருமாய், குலையுயிருமாய் அனுக்கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம்.

ஜப்பான் நாடு போரை முடித்து சரணடைய தயாராக இருந்த நேரம். ஆனால்

அணுகுண்டுகள் ஜப்பானின் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்டு கொல்லப்பட்டனர். காரணம்:

1. அமெரிக்காவால் தான் போர் முடிந்தது, ரஷ்யாவால் அல்ல என நிரூபிக்க.

2. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவ.

3. அமெரிக்கா பற்றிய பயத்தை நாடுகளிடையே உண்டுபண்ணி சோவியத்தின் கம்யூனிசத்துக்கு எதிராக அணி திரட்ட.

4. தான் தயாரித்து வைத்திருக்கும் அணு குண்டுகளை சோதிக்க.

5. ஆயுத விற்பனையை அதிகரிக்க. காண்க:

என்ன வகையான பரிசோதனைகள்:

1. ஹிரோஷிமா மீது யூரேனியம் அணுகுண்டு வீசப்பட்டது. நாகசாகி மீது புளுடோனியம் அணுகுண்டு வீசப்பட்டு ஒவ்வொன்றின் பாதிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.

2. ஹிரோஷிமா நகரத்தின் மீது 600 மீட்டர் உயரத்திலும், நாகசாகி நகரத்தின் மீது 500 மீட்டர் உயரத்திலும் வீசப்பட்டு அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வித்தியாசம் பரிசோதிக்கப்பட்டது. காண்க:

அறிவியலில் மனித இனம் வளர்ந்ததாய் சொல்லப்படும் இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் பணம் பண்ணும் மிகப்பெரிய 13 தொழில்களாய் இருப்பவை:

1. போதைப்பொருள் 2. இராணுவ தளவாட விற்பனை 3. விபச்சாரம் 4. பெட்ரோலிய உற்பத்தி

5. போலியான பொருள் உற்பத்தி 6. விளையாட்டுத்துறை 7. சூதாட்டம் 8. வங்கித்தொழில் 9. மதுபான நிறுவனங்கள் 10. ஆபாச வலைதள வியாபாரம் 11. மருந்துத்துறை 12. திரைப்படங்கள் 13. ஆள்கடத்தல், உறுப்புகள் கடத்தல்.  காண்க:

மனிதகுல மேம்பாட்டை விடுத்து பணம் பண்ணும் குறிக்கோளே செல்வந்த நாடுகளின் முதலாளித்துவ குறிக்கோளாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் உந்து செல்ல ஒவ்வொரு கட்டத்திலும் நுணு நுணுக்கமாக திட்டமிடும் அறிவியல் உலகம் (காண்க காணொளி🙂 நிலநடுக்கத்தை தடுக்க முடியாவிட்டாலும் அது அடிக்கடி வரும் இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலாவது மக்கள் இழப்பை தடுக்கும் வகையில் நிலநடுக்கத்தை தாங்கும்  கட்டட அமைப்புகளை உருவாக்கலாமே.

பூமியிலிருந்து ஏறக்குறைய 8  கோடி கி.மீ தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் மைக்ரோ வினாடி சுத்தமாக அனுப்பும் தொழில் நுட்பம் படைத்த, 40 % ஏழையர் வாழும் இந்திய அறிவியல் உலகம்,

விபத்தினால் மனித உயிர்கள் அதிகம் இழக்கும் பேருந்துகளில், மகிழுந்துகளில் இருப்பதுபோல் காற்றுப்பை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒவ்வொரு இருக்கையிலும் பாதுகாப்பான கச்சை (Seat belt) வசதியாவது செய்தால் மனித உயிரிழப்பு பெருமளவு குறையுமே.

படிகளில் கட்டாயமாக கதவுகள் இயங்கச்செய்து உயிர்ப்பலிகள் குறைக்கலாமே, குடும்பங்களில் இருள் அடையாமல் ஒளி ஏற்றலாமே.

கோக-கோலா  vs டொரினோ

உள்நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தால் பரவாயில்லை. இங்கேதான் ஏற்கனவே மோர், இளநீர், பழரசம் போன்ற இயற்கை பானங்களும், டொரினோ போன்ற நல்ல செயற்கை பானங்களும் இருக்கின்றதே.

இங்கு எதற்கு நீரினை கொள்ளை அடித்து விவசாயத்தை, குடிநீரை அழிக்கும் அமெரிக்க கொக கோலா பானம்.

அய்யா கிணத்தைக் காணோம்.

தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன.

கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர், கொளத்தூர் (தற்காலிகமாக தப்பித்திருக்கிறது), தாமிரபரணி ஆற்றுப்படுகை ஜெயங்கொண்ட சோழபுரம், விக்கிரவாண்டி, மதுரை விளாங்குடி (வைகை ஆற்றுப்படுகை) ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு கோக் நிறுவனத்துக்காக நீர் உறிஞ்சப்படுகிறது. நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம். காண்க:

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளில் (2000-2015) மட்டும் 35,000 கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டு விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. காண்க:

வறட்சி என்பது இயற்கையானதே ஆனால், நீர் வள மேம்பாடு என்பது அரசு திட்டமிடவேண்டிய ஒன்றே. காமராசர் திட்டமிட்டார், அணைகள் கட்டினார். இப்போது புதிதாக கட்டாவிட்டாலும் இருக்கும் நீர்வளத்தையாவது காக்கவேன்டாமா.

அணைகள், கண்மாய்கள், ஆறுகளை தனியாருக்கு விட்டுவிட்டு குடிசை வீடுகளில் மழைநீர் சேமிக்க சொல்வது யாரை ஏமாற்ற?

செந்நெல் அரிசியும் வெந்நெல் அரிசியும்

1.  ஆங்கிலேய ஆட்சியில் இமாச்சல பிரதேசத்தில் பயிரான சிவப்பு நெல் அரிசியை அங்கிருந்த ஒரு கவர்னர் மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. 

2. நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்! 

3. பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு – வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (Embryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். 

4. மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் – எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து – ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. 

5. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன. 

6. இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். ‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர். 

7. இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. 

8. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி… இப்போது காணாமல் போன மர்மம் என்ன? சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள். ஏன்..? 

9. ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். ‘பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். 

10. தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது. நம்ம முன்னாள் தமிழர்கள் சேர நாட்டவர் இன்னும் விடாமல் உண்ணும் அரிசி செந்நெல் அரிசிதான். மேலும் விபரங்களுக்கு காண்க:

இந்தியாவில் மாங்கனிகளில் 1000 க்கும் மேற்பட்ட ரகங்கள், காண்க: 

படத்தை பெரிதுபடுத்தி வகைகளை பார்க்கலாம்.

அரிசியில் 4,000 க்கும் மேற்பட்ட ரகங்கள் காண்க:

என ஒவ்வொரு விவசாய விளைபொருட்களிலும் உருவாக்கி பாரம்பரியத்தோடு இருக்கும் நமது விதை வளங்களை எல்லாம் கூண்டோடு அழிக்க பன்னாட்டு வியாபார கும்பல் உள்ளூர் அரசியல் எட்டப்பர்களோடு சதி செய்து ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்.

இது மூன்றாம் உலகப்போர், நவீன யுத்தம், மறைமுகப்போர், எங்கே, எப்படி துவங்கும் எனத் தெரியாத போர், ஆனால் ஏற்கனவே துவங்கிவிட்ட போர். விழித்திருப்பதே இப்போரை எதிர்கொள்ளும் வழிமுறை. நாமும் விழித்திருப்போம், நம்முடன் இருப்போரையும் விழிக்க வைப்போம்.

கோல்கேட் பற்பசை Vs கரித்தூள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

ஆனால் நமது தங்கத்தை தகரமாக நினைத்து, அந்நிய தகரத்தை தங்கமாக வைத்திருக்கிறோமே.

இது வடிகட்டிய அடிமைத்தனம் இல்லையா…

சொல்லுவார்கள் குரங்கானது தனது காயத்தை நோண்டி அந்த துன்பத்தில் சுகம் காணுமாம். (இது உண்மையா என தெரியவில்லை)

நாமும் அதுபோல வாழும் அற்ப பிராணிகளோ ?

மெல் கிப்சன் என்ற அமெரிக்க இயக்குனர் இயக்கிய அப்பொகலிப்டொ என்ற திரைப்படத்தில் மேற்கிந்திய மூதாதையரை, அறிவியலில், வானியலில் சிறந்து விளங்கிய மாயன் இன மக்களை மனிதக்கறி வேட்டையாடுபவர்களாக கேவலமாக காட்டியிருப்பார்.

நம்மூரிலும் அதேபோல செல்வராகவன் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தமிழர்களை கேவலமாகக் காட்டியிருப்பார்.

வரலாற்று உலகின் முதல் கப்பற்படையை கொண்டிருந்த, தென்கிழக்காசியா முழுவதையும் தன் வணிக கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கோர்வாட் போன்ற பிரம்மாண்ட கோயில் கட்டி, உன்னத பண்பாட்டை செல்லுமிடமெல்லாம் ஏற்படுத்திய சோழர்களை கொலைகாரர்களாக, இழி நிலையில் இருப்பவர்களாகக் காட்டியிருப்பார்.

சோழர்கள் பற்றிய உண்மை வரலாறு இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் சோழர் என்றே படம் முழுக்க சொல்ல வேண்டும், வடுகர் என்று சொல்ல வேண்டியதுதானே.

இங்கே நவீன தகவல் தொடர்பு சாதனமான திரைப்படம் எப்படி வரலாற்றை திரித்துக்கூற சதிகாரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.

21 ம் நூற்றாண்டிலும் கூட அறிவியல் உலகம் ஆப்பிரிக்க வறுமையை ஒரு புள்ளிவிபரமாகத்தான் பார்கிறதே ஒழிய இவற்றிற்கெல்லாம் காரணமான மேற்கத்தியத்தை, செய்த வரலாற்றுத்தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய வைக்கவோ அல்லது வறுமையை போக்கவோ இல்லாது வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதே போல 21 ம் நூற்றாண்டிலும் கூட தமிழ் அறிவியல் உலகமும், கற்றறிந்தோர் உலகமும் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கும் அழிவுலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது.

                                      நாமும் கூடத்தான்.

தொடர்ந்து தேடுவோம்…

இந்திய தேசீய கீதமும் தமிழும்

இந்திய தேசிய கீதமான

 வங்க மொழிப் பாடலுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

எல்லா வார்த்தைகளுமே தமிழில் உள்ள தமிழர்த்தம் உள்ள வார்த்தைகளே.  தமிழுக்கும் வங்கத்துக்கும் உள்ள தொடர்பே வலியுறுத்தப்படுகிறது. மாறாக இங்கு ஜெயலலிதா போன்ற கொள்ளைகாரர்களின் தேசீயமாகிப்போன இந்திய தேசியத்தை முன்னிறுத்த முயற்சிக்கவில்லை.

“ஜன கண மன” வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும்.

# 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.

# 1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் “ஜன கன மண” இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தேமாதரம்” தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. காண்க:

தேசிய கீதம்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாச்சல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ ஷுப நாமே ஜாகே,

தவ ஷுப ஆஷிஷ மாகே,

காஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

  இப்பாடலின் பொருள்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொ லிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

வங்க மொழிப் பாடலுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

ஜன –  சனம், மக்கள்.

கண – குழு, மக்கள் கூட்டம்

மன – மனம்

அதிநாயக – உயர் நாயகன்

ஜெய ஹே – செயம், வெற்றி

பாரத – பாரதம்

பாக்ய – பாக்கியம், புண்ணியம்

விதாதா – விதிர்த்தல், உதிர்த்தல், அளித்தல்

பஞ்சாப – பஞ்சாப்

சிந்து – சிந்து (பாகிஸ்தான்)

குஜராத்த – குஜராத், கூர்ச்சரம்

மராட்டா – மராட்டியம்

திராவிட – திராவிடம்

உத்கல – உத்கலம், (ஒரிசா வின் முந்தைய பெயர்)

வங்கா – வங்காளம்

விந்திய – விந்திய மலைப்பகுதி (மத்தியப் பிரதேசம், மராட்டியம்)

இமாச்சல – இமாச்சலம் (இமயம்-சிமயம்-சிகரம்+ சலம் -நீர்-ஆறு- மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றுப்பகுதி)

யமுனா – யமுனை

கங்கா – கங்கை

உச்சல – உச்சம்  செல்லும், உயரும்

ஜலதி தரங்கா – கடலின் அலைகள். (கடலருகே இருக்கும் தரங்கம்பாடியை நினைவுகூர்வோம் தரங்கம்பாடி என்றால் அலைகளின் இடம் என்றே பொருள். காண்க:)

தவ -மிகுதியான காண்க:

ஷுப நாமே – சுப நாமம், மங்களப் பெயர்

ஜாகே –  செய பேரிக, வெற்றி முழக்கம்

தவ ஷுப – சுப நாமம், மங்களப் பெயர்

ஆஷிஷ – ஆசீர்

மாகே – வேண்டுதல் – மாகத என்றால் தமிழில் கேட்பு, வேண்டல் (மா கேட்பு – பெரும் வேண்டல்)

மாகதர், s. A particular tribe said to spring from a Kshatrya, or kingly, mother, and a Vaisya, or servile, father. Their profession is that of minstrels, who sing the praises and chivalrous exploits of sovereigns, and attend on the march of an army. காண்க:

தவ – உனது

ஜெய – செயம்

காதா. – அறிவித்தல் – காதை, [ *kātai, ] s. A story, a narrative, சரித் திரம். 2. Word, message, errand, news, செய்தி. 3. Uttering, declaring, telling, சொல்லுகை.  காண்க:

ஜன கண

மங்கள – சுப

தாயக – தாயக்கட்டை [ tāyakkaṭṭai ] சூதுகவறு. காண்க:

ஜெயஹே – செயம்

பாரத பாக்ய விதாதா – விளக்கம் ஏற்கனவே கண்டோம்

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, – வெற்றியே

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. – வெற்றியே

உலக வரைபடத்தில் இன்னொரு மோசடி

உலக வரைபடத்தில் இன்னொரு மோசடின்னா முதல் மோசடி என்னன்னு கேள்வி வரும்.

உலக வரைபட முதல் மோசடி காண:

இரண்டாவது மோசடி:

உலக வரைபட முதல் மோசடி நில வழி சார்ந்தது. இரண்டாவது மோசடி கடல் வழி சார்ந்தது.

நமக்குத்தெரியும் நம்ம பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்தான் என்று.

இந்த 29 சதவிகித நிலப்பரப்பில்:

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 7 நாடுகளையும் நாம் அறிவோம். காண்க:

(1) ரஷ்யா (2) கனடா (3) அமெரிக்கா(USA) (4) சீனா (5) பிரேசில் (6) ஆஸ்த்ரேலியா (7) இந்தியா

இது உண்மையிலேயே உண்மையா?

தேடித்தான் பார்ப்போமே உண்மையா இல்ல பொய்யான்னு.

நமது கவனம் பொதுவாக நிலத்தோடு முடிந்துவிடும். நாம வாழ்ற நிலத்தில இருக்கிற பிரச்சினைய சமாளிக்கவே முடியல. இதுல எங்க கடல் பக்கம் கவனத்த திருப்ப?

நமது இந்தக் கடல் பற்றிய கவனக்குறைவுதான் கடல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாய் இருக்கிறது.

உண்மையில் 29 சதவிகித நிலத்த விட 71 சதவிகித கடல் முக்கியமானது.

புரிந்துகொள்ளும் வசதிக்காக 7 கடல்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், ஆர்ட்டிக் முதல் அண்டார்டிகா வரை அரபிக் கடல் முதல் பசிபிக் கடல் வரை எல்லாம் தொடர்ச்சியான ஒரே கடலே.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் கடல் தொடும் கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக எவ்வளவு தூரம் அந்நாட்டிற்கு சொந்தம்?

(புரிதலுக்காக: 1 கிலோமீட்டர் என்பது 1,000 மீட்டர். கடலில் 1 நாட்டிகல் மைல் (Nautical Mile) என்பது 1,852 மீட்டர், ஏறக்குறைய 2 கிலோமீட்டர்.)

1982 ம் ஆண்டு கடல் உடன்பாட்டின்படி:

1) கடற்கரையிலிருந்து (12 நாட்டிகல் மைல்) 22 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கு சொந்தம். நில, நீர், ஆகாய பரப்பு உட்பட.

2) கடற்கரையிலிருந்து (24 நாட்டிகல் மைல்) 44 கிலோமீட்டர் வரை அந்நிய நாட்டு ஊடுருவல் வராமல் பாதுகாக்கும் உரிமை அந்தந்த நாட்டுக்கு உண்டு.

3) கடற்கரையிலிருந்து (200 நாட்டிகல் மைல்) 370 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கான தனிப்பட்ட பொருளாதார பகுதி (Exclusive Economic Zones) (கடலில் மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்றவற்றிற்கு). காண்க:

4) கடற்கரையிலிருந்து (350 நாட்டிகல் மைல்) 650 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கான அதிகரிக்கப்பட்ட பரப்பில் கடல் (370-650) அந்தந்த நாட்டுக்கு சொந்தமல்ல, ஆனால் கடலடி நிலப்பரப்பு சொந்தம் (பெட்ரோல், கனிம வளம் எடுக்கலாம்.)

5)  கடற்கரையிலிருந்து (450 நாட்டிகல் மைல்) 833 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டின் கடலடி நிலம் நிலப்பரப்பாகவே தொடர்ந்து இருந்தால் அதிகரித்துக்கொள்ளலாம்.

அதிகரிக்கப்பட்ட கடல் தூரத்தை கடல் அமைப்பை பொறுத்து நிர்ணயித்துக்கொள்ளலாம். காண்க:

இதுல எப்படி எல்லாம் எல்லை விரிவாக்கம் அல்லது ஆக்கிரமிப்பு நடக்கிறது என்றால்

ஒரு நாட்டின் கடலுக்கான உரிமை என்பது அந்தந்த நாட்டின் கடற்கரையிலிருந்து மேற்சொன்ன கடல்பரப்பு வரை என்பது மட்டும் கிடையாது.

ஒரு நாடு எங்கோ கடலில் ஒரு தீவை உரிமையாக வைத்திருந்தாலும் அந்தத் தீவின் கடற்கரையிலிருந்தும் கடல்பரப்பை உரிமை கொண்டாடலாம், ஆக்கிரமிக்கலாம்.

உதாரணமாக பிரான்ஸ் என்ற ஐரோப்பிய நாடு அட்லாண்டிக் கடலில், இந்தியப்பெருங்கடலில், பசிபிக் பெருங்கடலில், கரீபிய கடலில் பல தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதால் அத்தனை தீவுகள், அதற்கான கடல் பரப்பு என எல்லாவற்றையும் சேர்த்தால், 

வெறும் 0.45 % நிலம் மட்டுமே உள்ள அந்த நாடு உலகின் 8 % கடல் பரப்பை ஆக்கிரமிக்கிறது. காண்க:

கீழே அதற்கான நிலப்படங்கள்: படத்தை அழுத்தி விரிவுபடுத்தியும் காணலாம்.

பிரான்ஸ் ஆக்கிரமித்துள்ள தீவுகளின் காரணமாக அந்நாட்டிற்கு கிடைத்துள்ள கடல்பரப்பு

அமெரிக்காவும் அதே போலத்தான் பெருமளவில் அந்த நாட்டிற்கே கடற்கரை இருந்தாலும் அமெரிக்க ஆக்கிரமித்துள்ள தீவுகள், தீவுகளின் கடற்பரப்பு என கணக்கிட்டால் அந்நாட்டின் பரப்பளவை விட ஒன்றரை மடங்கு அதிகமான நில, கடல் பரப்பை ஆக்கிரமித்து உலகின் மிகப் பரந்த நாடாக அமெரிக்க இருக்கிறது. காண்க:

இந்தியாவும் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் கூட லட்சத்தீவுகள், அந்தமான், நிகோபார் தீவுகள் காரணமாக அதன் நிலப்பரப்பில் 60 % கொண்ட கடல் பரப்பை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்தியாவின் கடல்பரப்பை இலங்கை தான் மட்டுப்படுத்துகிறது. இதனால் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். (அந்த பாதிப்புகளை இந்தக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

கீழே உள்ள நில, கடல் படங்கள் இதனை தெளிவாகக் காட்டும்.

வெறும் நிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்ட உலகின் 7 பெரிய நாடுகளை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

ஆனால் நிலம் மற்றும் கடல் பரப்புகளின் அடிப்படையில் உலகின் பெரிய நாடுகளின் பட்டியல்:

நிலப்பரப்பில் 7 வதாக இருக்கும் இந்தியா நில, கடல் பரப்புகளின் அடிப்படையில் 19 வது நாடுதான்.

Country EEZ km2 Shelf km2 EEZ+TIA km2
1.  United States 11,351,000 2,193,526 21,814,306
2.  France 11,035,000 389,422 11,655,724
3.  Australia 8,505,348 2,194,008 16,197,464
4.  Russia 7,566,673 3,817,843 24,664,915
5.  United Kingdom 6,805,586 722,891 7,048,486
6.  Indonesia 6,159,032 2,039,381 8,063,601
7.  Canada 5,599,077 2,644,795 15,607,077
8.  Japan 4,479,388 454,976 4,857,318
9.  New Zealand 4,083,744 277,610 4,352,424
10.  China 2,287,969 831,340 13,520,487
11.  Chile 3,681,989 252,947 4,431,381
12.  Brazil 3,660,955 774,563 12,175,832
13.  Kiribati 3,441,810 7,523 3,442,536
14.  Mexico 3,269,386 419,102 5,141,968
15.  Federated States of Micronesia 2,996,419 19,403 2,997,121
16.  Denmark 2,551,238 495,657 4,761,811
17.  Papua New Guinea 2,402,288 191,256 2,865,128
18.  Norway 2,385,178 434,020 2,770,404
19.  India 2,305,143 402,996 5,592,406

மேலும் விபரம் காண :

இதன்படி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாத உலகக் கடலின் பரப்பு அல்லது சர்வதேச கடல் என்பது உலக நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பொதுப்பரப்பு. கீழே வரைபடத்தில் கருநீலத்தில் காணப்படும் பகுதி மட்டும் தான் சர்வதேச கடல்.

ஆனால் இந்த பொது கடல் பரப்பிலும் கடற்கொள்ளை, ஆக்கிரமிப்பு, காலனி ஆதிக்கம் தொடர்கிறது.

இந்த பொதுக்கடல்பரப்பில் கடற்கொள்ளை, இத்தாலிய மாலுமிகள் இந்திய மீனவர்களை கொன்றது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டால் எந்த நாடும் அந்தந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்தான். காண்க:

ஆனால் வழக்கம்போல வலிமையான நாடுகளே உயர் கடல் தொழில்நுட்பம் மற்றும் நவீன மீன்பிடி கப்பல்கள் மூலம் கடல்வளங்களை கபளீகரம் செய்கின்றன. காண்க:

ஆதிக்க செல்வந்த நாடுகளே கடல் மீன் வள கொள்ளையிலும் முதலில் இருக்கிறார்கள். காண்க:

இதற்கென செய்மதி போன்ற தொழில் நுட்பங்களையும் பயன்படித்திக் கொள்கின்றனர்.

கடற்கொள்ளையினை இயற்கை பேரழிவுகளை விளக்கும் விதமாய் சில படங்கள்.

இந்தியக் கடற்பரப்பும், இலங்கையும்: பாதிக்கப்படும் தமிழர்களும் 

இந்தியக்கடற்பரப்பு இலங்கை தீவால் சுருங்கி விடுவதைக்கண்டோம். இதன் முழு பாதிப்பும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும்தான்.

மற்ற மாநில கடல் பிரதேசத்தில் 370 கிலோமீட்டர் வரை மீன் பிடிக்க உரிமை இருக்கும்போது தமிழர்களுக்கு 10 கிலோமீட்டர்தான். உடனடியாக இலங்கை பகுதி வந்துவிடுகிறது.

கன்னியாகுமரி, கடலூர், நாகப்பட்டினம், சென்னைப்பக்கம் தான் தமிழர்கள் மீன் பிடிக்க இடம் இருக்கிறது. வேதாரண்யம் முதல் உவரி, திருச்செந்தூர் வரை உள்ள மீனவர்களுக்கு பிரச்சினைதான்.

இதில் இன்று 30 ஏப்ரல் 2015 தேதியிட்ட தினமலர் நாளிதழ் கச்சத்தீவு கிடைத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா என்று கேலி பேசுகிறது. நிச்சயமாக தீர பெரும் வாய்ப்பு உள்ளது.

கீழே உள்ள படத்தில் சர்வதேச எல்லை கச்சத்தீவின் காரணமாக எந்த அளவிற்கு தமிழர்களின் கடல்பரப்பை இலங்கை எடுத்துக்கொள்ள உதவி இருக்கிறது என காட்டுகிறது.

கச்சதீவு நம் பக்கம் இருந்தால் நமக்கு தீவு மட்டுமல்ல தீவோடு சேர்ந்து வரும் கடல்பரப்பும் நமக்கு கிடைக்கும். 

அது பல தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும்.

கச்சத்தீவு மூலமாக நமக்கு கிடைப்பது தீவு நிலம் மட்டுமல்ல, மற்றும் கடல் பரப்பு மட்டுமல்ல, கடல் மற்றும் கடல் நிலத்திற்கு அடியிலுள்ள அபிரிமிதமான எண்ணெய் வளம். காவிரி படுகை என்று சொல்லப்படும் பெட்ரோல் எண்ணெய் பகுதியும் நம் கைவிட்டு போகாமல் நம் உரிமை நமக்கே கிடைக்கும்.

நம் அனுமதி இல்லாமல் நம் நிலத்தை அந்நியனுக்கு தானமாகக் கொடுத்த இந்தியத் தேசியத்திடம் போராடி மீட்போம். நம் உரிமையை நிலைநாட்டுவோம். தமிழக மீனவர் உயிரைக் காப்போம்.

தமிழில் சிறந்த 10 திரைப்படங்கள்: எனக்குப் பிடித்தவை

நான் ஒன்றும் திரைப்பட தொழில் நுட்பவியலாளனும் அல்ல, நுணுக்கமான திரை விமர்சகனும் அல்ல. சாதாரண ரசிகன். என்னுடைய பார்வையில் சிறந்த பத்து தமிழ் படங்கள்.

10. மகாநதி

படம் வந்த நேரத்திலேயே பார்த்தவுடன் பிடித்துப்போன கமல் நடித்த படம். நடுத்தர வர்க்கத்து மனிதனின் இயலாமை கதையின் கரு. தொழில் சூழ்ச்சியில் சிதிலமாகிப்போன குடும்பத்தில் தான் பெற்ற மகள் பாலியல் தொழில் செய்யும் கோலம் பார்த்த ஒரு தந்தையின் மனநிலை நினைத்தால் இன்றும் சமூகக் கோபம் கொள்ள வைக்கும் திரைப்படம். எனக்குத் தெரிந்து சிறைச்சாலையின் கொடிய சூழலை கொஞ்சம் விவரமாய் சொன்ன முதல் படம்.

9. தமிழ்படம்.

தமிழ்படங்களின் அர்த்தமற்ற காட்சியமைப்புகளை கேள்விக்குள்ளாக்கிய கேலிப்படம். எவருக்கும் இல்லாத தைரியம் இருந்த இயக்குனர் அமுதன். அவரது இரண்டாவது படத்தின் பெயரே இரண்டாவது படம். எதிர்பார்ப்போம். அர்த்தமற்ற தமிழ்ப் படங்களின் பாடல் வரிகளை மட்டுமே கொண்ட ஒரு முழுப்பாடல் ‘ஓ மக சீயா’ கேலியின் உச்சம்.

8. முன்டாசுப்பட்டி 

நகைச்சுவை படம் தான். நகைச்சுவை 7ல்1சுவைதானே. ஆனால் இச்சுவை கலந்த விசயம் வித்தியாசமானது. மூடநம்பிக்கை களைதல். நடிகர் ராமதாஸ் இயல்பான ஆனால் ஆர்ப்பாட்டமான நகைச்சுவையில் களைகட்டுவார். நடிகர் காளியின் ஆங்காங்கே வரும் உரிய நேர நகைச்சுவை பங்களிப்பும் சிறப்பாய் இருக்கும். கதாநாயகன் விஷ்ணு குள்ளநரிக்கூட்டம் படத்தைப்போலவே இதிலும் மிக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

7. சலீம் 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாய். ‘நான்’ மற்றும் அதன் இரண்டாம் பாகமான சலீம். சமூகக் கருத்துக்களை வலியத் திணித்திருப்பார்கள் சில படங்களில் (சிவாஜி போன்றவை). நாயக மைய வழிபாடு கொண்டவை அவற்றில் பல (முதல்வன் போன்றவை). வியாபார நெருக்கடிகளுக்கு மத்தியில் சொல்லும் கருத்தில் நேர்மையும், மக்களின் மனங்களில் உணர்ச்சிப்பிரவாக தூண்டுதலுக்கு பதிலாக ஒரு உத்வேகத்தையும், கூடுமானவரையில் இயல்புத்தன்மையும் கொண்டு செல்கிறது.

6. பேராண்மை 

சமூகக் கோபம் கொண்ட இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் ‘ஈ’ மற்றும் இந்தப்படம். வித்தியாசமான கதைக்களம். இந்திய விண்ணியல் செயற்கைக்கோளை அழிக்க நினைக்கும் அன்னியரை அழிக்கும் கதை நாயகன். ஆதிக்க சாதியம் அழிக்க நினைக்கும் அடித்தட்டு நிலை முயற்சிகளை வெளிக்காட்டும் திரைப்படம். இந்த இரு நோக்கங்களுக்கு மத்தியில் கதாநாயகியற்ற நேரிய நாயகன், பெண்களின் பங்களிப்பு, போர்த்திட்டமிடல் என வித்தியாசமான களம்.

5. மெளனகுரு 

மென்மையான மனிதன் வன்மையான சூழலில் சிக்கிக்கொள்ளும் நிலை கதைக்கரு. இயக்குனர் சாந்தகுமாரின் திரைக்கதை தான் படத்தின் வலிமையான பலம்.

4. இம்சை அரசன் 23 ம் புலிகேசி

அன்றைய அந்நிய ஆங்கில ஆதிக்கத்தை மட்டுமல்ல மறைமுகமாக நுழையும் 21 ம் நூற்றாண்டு பன்னாட்டு ஆதிக்கத்தையும், இன்றைய எட்டப்பர்களான அனைத்துக்கட்சி கைக்கூலிகளையும் அரசியல் பகடி செய்யும் படம். என்னவொரு துர்ப்பாக்கியம் இதில் வடிவேலுவின் நகைச்சுவை ஆளுமை முழுமையாய் வெளிப்பட்டதால், மையக்கருத்து விளிம்பாகிப் போனது.

3. நந்தலாலா

மிஷ்கினின் படைப்புகளில் இது முக்கியமானது. பலரும் அவர் பற்றி சிலாகித்திருக்கிறார்கள், விமர்சித்திருக்கிறார்கள். அவரின் கதை சொல்லும் பாணி தனித்துவமானது அவரது பரந்த காட்சிபடுத்துதல் போல. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மனிதம் தேடலில் ஒரு நிலை என்றால் – ஓநாயான ஆட்டுக்குட்டி மீண்டும் ஆட்டுக்குட்டியாதல், நந்தலாலா இன்னொரு நிலை-தாய்மைப்பற்று தேடும் முழு மதியற்ற ஒரு மனிதன் எளிய மனிதரில் எல்லாம் மனிதம் வெளிப்பட அதையே இறுதியில் குறையற்ற தாய்மையில் நிறைவாய்க் கண்டுகொண்டு பற்றற்ற மாமனிதன் ஆகிறான்.

2. ஆரண்யகாண்டம் 

இந்தியாவின் குவண்டின் டரன்டினோ, என்று முதல் படத்திலேயே சொல்லுமளவிற்கு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா “வன்முறையில் அழகியலை” சொல்லும் படம். ஜாக்கி செராப், சம்பத், சோமசுந்தரம், கொடுக்காப்புளி சிறுவன் வசந்த், யாஸ்மின் பொன்னப்பா என பங்களிப்பு கொடுக்க பின்னணியில் அழகியல் இசைத்தாண்டவம் ஆடியிருப்பார் யுவன். தமிழ்த் திரைக்கதையில் இது ஒரு மைல் கல்.

1. வாகை சூட வா

“நீ விதைக்கல ஆனா அறுக்கற” என்ற தைக்கும் வாக்கியம்-மையக்கரு. நாயகனின் இயல்பான நடிப்பு, இனியா என்ற நாயகி யின் ஈர்க்கும் நடிப்பும், முக பாவனைகளும், 1966 காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் காட்சியமைப்புகள், ஜிப்ரான் என்ற புதுமுக இசையமைப்பாளரின் ரம்மியமான பாடலும், சூழலும், கிராமம்னா அதன் உண்மை இயல்பை காட்டும் வறட்சி, ஏழ்மை, அறியாமை, சிட்டுக்குருவிக்காய் கூடு தேடும் ஊர் போற்றும் முதிய இயற்கை சூழல்வாதி.

தேசிய விருது பற்றி பொதுவாக எதிர்மறை கருத்து இருந்தாலும், இதற்கு கொடுக்கப்பட்டதால் அதை நம்பவேண்டியதாகிவிட்டது. வாழ்த்துக்கள் சற்குணம்.

இவை தவிர வரையறைகளுக்கு அப்பாற்பட்டு அமர காவியங்களாய் வலம் வரும்

முத்தான நான்கு தமிழ்த் திரை ஓவியங்கள்.

4. பாரதிராஜாவின் 16 வயதினிலே,

இந்தப்படமே பல விதங்களில் தமிழுக்கு முன்னோடி:

முதலாவதாக ஆணாதிக்க சினிமா சிந்தனை உலகத்திலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணிய திரைப்படம்.

இப்படத்திற்கு  முதலில் வைக்கப்பட்ட தலைப்பு மயிலு.

மயிலு என்ற கிராமியப்பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதை.

அவள்தான் காதலனைத் தேர்ந்தெடுப்பாள், அவள்தான் பிடிக்காதவனை நிராகரிப்பாள். அது அந்த மாட்டு வைத்தியராக இருக்கலாம், பரட்டையாக இருக்கலாம் அல்லது சப்பானியாக இருக்கலாம், முடிவெடுப்பது அவள்தான்.

கிராமியத்துக்கு ஓங்கி அடித்தளமிட்ட திரைப்படம்.
சோளம் வெதக்கையிலெ என்ற தொடக்கப்பாடல் ஒலிக்கும் போதே படத்தின் வெற்றி தொடங்குகிறது.

இசையில் கிராமியம், சொலவாடைகளில் கிராமியம், சந்தைக்கு போகும் பயணத்தில் கிராமியம், டூரிங் கொட்டகை படத்துக்கு கிளம்புவதில் கிராமியம், மஞ்சத்தண்ணி தெளிக்கையில் கிராமியம், வீண் சண்டை வலிக்கையில் கிராமியம், ஊர் மைனருக்கு உடன் வரும் அல்லக்கைகளில் கிராமியம், மாட்டுவைத்தியரில், கிராமிய வைத்தியரில், அந்த பெட்டிக்கடையில், டீக்கடை பெஞ்சில் என ஒரே கிராமிய வாசம். சென்தூரப்பூவில், ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செவ்வந்தி பூ முடிச்ச பாடல்கள் அந்தக்காலகட்டத்தில் கிராமிய தேசிய கீதங்கள்.

3. மகேந்திரனின் உதிரிப்பூக்கள்,

முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி என ஒவ்வொன்றும் முத்துக்களே. மனித உறவுகளை கொச்சைப்படுத்தாமல் மேம்படுத்திய காவியங்கள்.

முள்ளும் மலரும் – ஊரில் அடிதடியில் இறங்கினாலும் தாய், தந்தையற்ற தங்கைக்காய் வாழும் அண்ணன் காளி, காளியை விரும்பும் ஆதரவற்ற வாயாடி

படாபட், பெருந்தன்மையான மேலதிகாரி சரத்பாபு, அவர் நேர்மையாய் பெண் கேட்கும் காளியின் தங்கை ஷோபா, அண்ணனின் பாசத்தைவிடாத தங்கை, தங்கையை வெற்றி பெற வைக்கும் அண்ணனின் பக்குவம் என உணர்வுக்குவியல்.

உதிரிப்பூக்கள்: கிராமத்தில் தம்பதி, இரு அழகிய இரு குழந்தைகள், அமைதியான வாழ்வில் சூறாவளியாய் தந்தையின் வரம்பு மீறிய உறவினால் குடும்ப, ஊர் உறவில் பங்கம் ஏற்பட இறக்கும் தாய், மாய்த்துக்கொள்ளும் அவன், உதிரிப்பூக்களாய் குழந்தைகள்.

2. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர்

80 களின் துவக்கத்தில் முரட்டுக்காளையாய் ரஜினியும், சகலகலாவல்லவனாய் கமலும் மசாலாத்தனத்தில் வலம் வர வியாபார புதைகுழியில் தமிழ் சினிமா உலகம் சிக்கித்திணறத் துவங்கியது. இந்த வியாபார போதை காலத்திற்கு சற்று முன்பாக 70 களின் பிற்பாதியில் சமூகம் சார்ந்த மக்கள் படங்கள் வந்த காலகட்டத்தில் கோமல் சாமிநாதனின் தண்ணீர்… தண்ணீர்… நாடகத்தை திரைத்தளத்தில் அரங்கேற்றினார் பாலச்சந்தர்.

தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

தண்ணீருக்காய் அலையும் கிராமத்திற்கு விடிவாய் ஒரு வெளியூர் மனிதன் அருகிலுள்ள அருவியிலிருந்து ஊருக்கு தண்ணீர் கொண்டுவர ஓடை வெட்ட, அதுவரை வராத அரசியல்வாதியும், காவல்துறையும் வந்து தடை போட பிரச்சினை நீண்டு கொண்டே…. இன்றைய கூடங்குளம் பேச்சிப்பாறை, தாமிரபரணி கொக்க கோலா, பெருந்துறை கொக்க கோலா என பிரச்சினைகள் செல்வது போலத்தான்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் போராடினால் தான் விடிவு கிடைக்கும் என்றால் மக்கள் தலைவர்கள் என்று மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். பொது மக்களே பார்த்துக்கொள்ளலாமே?

1. ருத்ரையா வின் அவள் அப்படித்தான்

இயக்குனர் சேரன் கூட ஆட்டோகிராபில் ஆணாதிக்க காதல் கதையை சொல்லியிருப்பார். ஒரு ஆண் பல பெண்களை காதலித்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும், பாராட்டும், படத்தை பெரிய வெற்றி பெறச்செய்யும்.

அதேநேரம் ஒரு பெண் இரு ஆண்களை காதலித்தால் கூட இழிவாகக் கருதும். படமும் வந்த இடம் தெரியாமல் திரும்பிப் போகும்.

1978 களிலேயே தான் விரும்பிய நல்ல வாழ்கையை வாழ விரும்பும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அந்தப் பெண்ணின் கண்ணோட்டத்தில் வழங்கியிருப்பார் இயக்குனர் ருத்ரையா “அவள் அப்படித்தான்” படத்தில். ஸ்ரீ பிரியா நாயகியாக நடிக்க கமல், ரஜினி இருவரும் உடன் நடித்திருப்பார்கள்.

காலம் போற்றும் இசையை, பாடல்களை தந்திருப்பார் இளையராஜா: பன்னீர் புஷ்பங்களே…, வாழ்க்கை ஓடம் செல்ல…, உறவுகள் தொடர்கதை… என.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ருத்ரையா வின் “அவள் அப்படித்தான்” தமிழ்படங்களில் மிக முக்கிய இடம் வகிக்கும்.

மருத்துவக் குறியீடும் தமிழர் அறிவியலும்

மருத்துவக் குறியீடாகவும்  மருத்துவர்களின் மருந்துத் தாளில் காணப்படும் அடையாளமாகவும் இருப்பது கீழ்க்காணும் படம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதன் பொருள் என்ன? இதற்கும் தமிழர்களின் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?
தேடித்தான் பார்ப்போமே.
 

ஐ.நா.வின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனத்தின் சின்னமும் இதுதான்.

இந்த மருத்துச்சின்னத்தின் தொடக்கம் ஒரு ஒற்றைப் பாம்பு சுற்றியுள்ள ஒரு கம்பு. இந்த ஒற்றைப்பாம்புக்கம்பு மேற்கத்தியர்களால் வழக்கம்போலவே கிரேக்க வரலாற்றோடு தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இதன் பெயர் அசேப்பியசின் தடி (Rod of Asciepius). 

இந்த அசேப்பியசு ஒரு மருத்துவர் என்றும், கிரேக்கப் பழங்கதையில் வரும் அப்போல்லோவின் மகன் என்றும், வரலாற்றின் தந்தை ஹிப்போகிரடஸ் என்பவரால் வணங்கப்பட்டவர் என்றும் அறியப்படுகிறார். கீழே  அசேப்பியசு படம்.

இந்த சின்னத்தில் இருக்கும் உருவம் பாம்பே அல்ல. அது ஒரு புழு. தமிழில் சிலந்திப்புழு என்று அழைக்கப்படும் டிராகன்குலஸ் புழு. காண்க:

உடலில் தோலுக்குள் இருக்கும் இப்புழுவை தமிழ் மருத்துவர்கள் குச்சி கொண்டு எடுத்து விடும் மருத்துவ முறை இருந்தது. காண்க:

பாம்பு பொதுவாக ஆபத்துக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அதன் மருத்துவ விஷம், மற்றும் அதன் சட்டை உரித்தல் புதுப்பிறப்பை, மரணத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆக பாம்பு தீமையையும் குறிக்கும் நன்மையையும் குறிக்கும்.

 1. மருத்துவ தொடர்பைக் குறித்த ஒற்றைத்தடி பாம்புதான் மருத்துவ அடையாளமாக இருக்க வேண்டியது.
 1. ஆனால் 1902 ஜூன் மாதம் 28 தேதியில் அமெரிக்க படையினரின் மருத்துவ குழும அடையாளமாக இரண்டு பாம்புகளோடு தடியும், இறக்கையும் என உருவான  பின்பு பலராலும் ஏற்கப்பட்ட பொதுவான மருத்துவக்குறியீடாக மாறிப்போனது. காண்க:

இரண்டு பாம்பு அடையாளம் ரோம கதுசெயுஸ் மெர்க்குரி (Caduceus of Mercury) அல்லது கிரேக்க கெர்மஸ் (Karykeion of Hermes) என்ற மந்திரவாதத் தன்மை உள்ள தெய்வங்களோடு தொடர்புள்ளதாக கருதப்படுகிறது. காண்க: 

இந்த அடையாளம் தமிழர்களோடு தொடர்புடையதா?

நாக வழிபாடு தமிழர்களோடும், தமிழர்களோடு இணைந்த நாகரீகங்களோடும் தொடர்புடையதே.

தமிழர்களுக்கும் பாம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழர்கள் நாகர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இன்றைய வடகிழக்கு இந்தியப் பகுதியான அன்றைய காமரூப நாட்டில் ஆண்ட நரகாசுரன் போன்றோர் நாக வம்சத்தை சேர்ந்தவர்களே. காண்க:

இன்றைய நாகாலாந்து, நாகப்பட்டினம், நாகர்கோயில், நாகமலை எல்லாம் அதன் தொடர்ச்சியே. மருத்துவ குணம் நிறைந்த அரச மரம் மற்றும் வேப்ப மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் நாக வழிபாடு, மற்றும் புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்றவை நாம் இன்னும் மறக்காத பாரம்பரியங்களே.

இங்கிருந்து சென்ற யூத, இசுலாமிய, கிறித்தவ ஆபிரகாம் வழி தமிழர்கள் அதன் தொடர்ச்சியாகத்தான் பாம்பை தீமையின் வடிவமாகவும் அதேசமயம் நன்மையின் வடிவமாகவும் கண்டனர்.

 1. ஆதாம், ஏவாளை ஏமாற்றியதும் பாம்பே; ஏதோன் தோட்டத்தை இழந்த அவர்களுக்கு மீண்டும் வாழ்வு கிடைக்க அறிகுறியாய் அவர்களுக்கு தரப்பட்டதும் ஒரு பாம்பே.

யூத மற்றும் கிறித்தவர்களின் விவிலிய பழைய ஏற்பாடு புத்தகத்தில் எண்ணிக்கை நூல் (21:5-9) மற்றும் 2 அரசர்கள் (18:4) என்ற இடங்களில் மோசே என்ற தலைவன் பாம்பால் துன்புற்ற மக்களுக்கு பாம்பாலேயே வாழ்வு கொடுப்பார்.

புதிய ஏற்பாட்டிலும் யோவான் (3:14) ல் இயேசு அதே மோசே வின் பாம்புக் குறியீடாகக் காட்டப்படுவார்.

பாம்புக்குறியீடும் தமிழரின் மருத்துவ அறிவியலும் 
உடலைக் கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு

ஏழு சக்கரங்கள் என்பவை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை.

இவை ஏழும் தமிழ் சித்தர்களோடு, தமிழரின் மருத்துவ அறிவோடு தொடர்புடையவை மட்டுமல்ல, இன்றைய மருத்துவ அறிவியலோடும் பொருந்தக்கூடியதே.

 1. மூலாதாரம்

  முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

2. ஸ்வாதிஷ்டானம்

தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.  உயிர் (ரிப்ரொடக்டரி) சுரப்பிகள்
உற்பத்தி உறுப்புகள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம்

தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.

கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது.
இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்

மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது.
தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு.

தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. துரியம்

இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

எந்த ஒரு மனிதனும் ஆண் மற்றும் பெண் பண்புகளால் உள்ளவனே. மனிதனின் வலப்புறம் உள்ள செயல்பாடுகள் சூரிய அம்சம் அல்லது ஆணின் தன்மை கொண்டதாகவும், இடப்புறம் சந்திர கலையை அல்லது பெண் தன்மை கொண்டதாகவும் தமிழ் சித்த முறையில் கூறப்படுகிறது.
வலப்புற நாடி பிங்கல நாடி என்றும், இடப்புற நாடி இட நாடி என்றும் அறியப்படுகிறது. இவை இரண்டும் தமிழர் வழிபடும் அந்த நாக வழிபாட்டு பாம்பு போல இரண்டறக்கலந்தது. ஏழு சக்கரங்கள், மற்றும் இரு நாடிகளையும் மையத்தில் இணைப்பது சுழுமுனை.

மேலே சொல்லப்பட்ட ஏழு ஆதாரங்கள், பிங்கல, இட நாடிகள், மைய சுழுமுனை என அனைத்தும் நாம் முதலில் கண்ட மருத்துவ குறியீட்டோடு பொருந்தி இருப்பதைக் கீழே காணும் படும் தெளிவாக விளக்கும்.

இதையே விளக்கும் விதமாக இன்னொரு படம்.

ரொம்பவும் உயிரியல் சொல்லி பயமுறுத்த மாட்டேன். கவலைப்படாமல் மேலே செல்வோம்.

தற்சமயம் அப்படியே நம் உடலின் அடிப்படை விசயமான செல் மற்றும் டி,என்.ஏ (DNA) மூலக்கூறுக்குள் செல்லலாம்.

நம் உடம்பு செல்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே.

இந்த செல்லுக்குள் என்ன இருக்கிறது என்று தேடினால் இப்படம் விளக்குவது போல செல்லுக்குள் நியூக்ளியஸ், நியூக்ளியசுக்குள் குரோமோசோம், அதில் டி,என்.ஏ என நாம் காண முடியும்.

நம் உடலின் பிங்கல மற்றும் இட நாடி நாகங்களைப்போலவே அப்படியே இருக்கிறது டி.என்.ஏ வின் வடிவமைப்பு. ஆச்சரியம்தான்.

 1. இரு பாம்புகளை, அல்லது நாடிகளை ஒத்தது இரு வளையங்கள். (Two Strands of sugar phosphate backbone).
 1. மையத்தில் அனைத்து மனித தகவல்களையும் கொண்டிருக்கும் நான்கு படிநிலைகள். (Adenline-Thymine-Guanini-Cytosine). இவை எதிர்காலத்தில் பரிணாம வளர்ச்சியில் 12 படிநிலைகள் வரை செல்லலாம் என்கிறது ஆராய்ச்சி. காண்க:
 1. இணைக்கும் பாலமாக இருப்பது சுழுமுனை போல ஹைட்ரஜன் இணைப்பு (Hydrogen Bond).
 1. வெளிப்புறத்தில் நம் பார்வைக்கு புலப்படும் உடம்பு பௌதிக உடம்பு, அல்லது ஸ்தூலம் எனப்படும்.
 2. அகத்தில், நம் பார்வைக்கு புலப்படாத மனம் சூட்சுமம் எனப்படும்.
 1. முதல் ஐந்து ஆதாரங்களும் பஞ்சபூத மையங்களாகும்.இவை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை குறிப்பதாகும்.
 2. ஆறாவதுபகுதிமனம்சார்ந்தசூட்சமபகுதியாகும்.
 1. மிக முக்கியமான இடகலை, பின்கலை, சூழமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நம் உடம்புக்கும் இவ்வுலகின் ஐம்பூதங்களுக்கும் என்ன தொடர்பு?

 1. சரகர் என்ற மருத்துவர் எழுதிய நூல் சரக சம்கிதை (Saraka Samhita )
 2. சுசுருதரின் நூல் சுசுருத சம்கிதை (Sushruta Samhita )
 3. மூத்த வாகபதர் (Vagabatha the elder) தொகுத்த அட்டாங்க சங்கரகம் (Astanga Sangraha)

என்ற மூன்று நூல்களும் ‘மூத்தோரின் மூன்று வழிகாட்டிகள்’ என்று அறியப்படுகின்றன.

இம்மூன்று தொகுப்பும் உடல், உயிர் பற்றி கூறும் செய்திகளை பின் வருமாறு சுருக்கலாம்.

 1. ஆயுர் வேதம் என்றால் ஆயுள் + வேதம் – ஆயுளை நீட்டிக்கும் அறிவியல்
 2. மனித உடல் பஞ்ச (5) பூதங்களால் ஆன 3 காரணிகளால் உருவாக்கப்பட்டது.
 1. வாதம் (காற்று, ஆகாயம்) – மூச்சு, பேச்சு, சீரணம், இரத்த ஓட்டம், கழிவு நீக்கம்.
 2. பித்தம் (நெருப்பு) -சீரணம், உடல் சூடு, இரத்த, உடல் நிறம், மனம்.
 3. கபம் (நிலம், நீர்) -எச்சில், உடல் சக்தி, சுவை, ஐம்புலன்கள், எலும்பு உயவு.
 1. சுசுருதர் பயன்படுத்திய மருத்துவக்கருவிகள்:
 1. மனித உடல் பஞ்ச பூதங்களின் கலவையே. 5 பூதங்களும் பல்வேறு விகிதங்களில் கலந்து
 1. ரசம் (Plasma) 2. இரத்தம் (Blood) 3. சதை (Flesh) 4. கொழுப்பு (Fat) 5. எலும்பு (Bone) 6. மச்சை (Marrow) 7. சுக்ரம் (Semen) ஆகிய 7 வகை திசுக்கள் உருவாகின்றன.
 2. சம்கிதைகளின் காலம் ஏறக்குறைய கி.மு. 1500 – 1000.

உலக வரலாற்றின் ஆசிரியர் என்று மேற்குலகம் சொல்லும் கிரேக்க ஹிப்போகிரேட்டஸ் (கி. மு. 460 – 370.) காலத்துக்கு 1,000 வருடங்களுக்கு முன்பு.
கிரேக்க அரிஸ்டாட்டில் தனியாக எழுதிக்கொண்டிருந்த கி. மு. 350 களில்,

பீகார் மாநில பாட்னா விற்கு 80 கிலோமீட்டர் தூரத்தில் 1,500 பேராசிரியர்களோடும், 10,000 பலநாட்டு மாணவர்களோடும் நாளந்தா என்ற சர்வதேச பல்கலைக்கழகமே செயல்பாட்டில் இருந்தது.

 1. நமது நாட்டில் சித்தர்களும், புத்தர்களும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் ஆய்ந்து சமூக மேம்பாட்டிற்காய் பங்களித்துக்கொண்டிருந்த காலம்.

மருத்துவத்துறையில் பெரும் பங்காற்றிய சித்தர்கள் 11 பேர். (பதிணென் சித்தர்கள்)
திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகனாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுண்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர்.

 1. நம் உடம்பு என்பது இந்த அண்டத்தின் ஒரு பகுதி; இந்த அண்டம் என்பது நம் உடம்பின் முழுத்தொகுதி என்பதை அண்டத்தில் பிண்டமும் – பிண்டத்தில் அண்டமும் என்ற சொல்வழக்கில் புரிந்து கொள்ளலாம்.

திருமூலர் 478
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச

மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி

குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்

தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.
இந்த பரந்துபட்ட அண்ட உலகம் நமது சின்ன உடலிலும் உள்ளது என்கிறார். அதாவது

 1. பூமி – மாமிசம்
 2. நீர் – இரத்தம்
 3. நெருப்பு – உடல் சூடு
 4. ஆகாயம் – கேட்கும் சக்தி
 5. கடல் – வியர்வை, சிறுநீர்
 6. மகாமேரு (இமயமலை)- கழுமுனை

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே.

என்பதை சட்டை முனி சித்தரும் விளக்குகிறார்.

மூளை சந்திரனைப்போல் இயங்குவதாகவும்,

பித்தப்பை செவ்வாயைபோல் இயங்குவதாகவும்,

இதயம் சூரியன் போல் இயங்குவதாகவும்,

சிறுநீரகமும் பிறப்பு உறுப்புகளும் சுக்கிரன் என்கிற வெள்ளியைப்போல் இயங்குவதாகவும்,

நுரையீரல் புதனைப்போல் இயங்குவதாகவும்,

கல்லீரல் குரு என்கிற வியாழனைப்போல் இயங்குவதாகவும்,

மண்ணீரல் சனியைப்போல் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.
காண்க: 

மரணம் என்பது …

உலகின் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மரணம்.

கொஞ்சம் நினைச்சு பாத்தோம்னா மனித வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பது புரியும்.

என்ன ஒரு கொடூரம், மிகச்சின்ன உறுப்பான மனிதக் கழுத்து அறுபட்டால் உயிர் இல்லை, மனுசனே இல்லாம போயிடறான்.

விபத்து ஏற்பட்டு ஒரு கம்பியில் மோதினால் உயிர் போயிருது.

புற்று நோய் போன்று ஏதாவது வந்தால் வாழ்க்கையே முடிஞ்சு போயிருது.

என்ன ஒரு மானங்கெட்ட உயிர்டா இது.

இது ஒரு வாழ்க்கை.

மனித வாழ்க்கையை போல உண்டா ன்னு சொல்றதுக்கு வேற சில மதங்கள்.

வாழ்க்கைக்கு 1008 விளக்கங்கள் கொடுக்கலாம்.

ஆனா அடிப்படையில்

அர்த்தங் கெட்ட வாழ்க்கை இது.

எதுக்கு ஒரு பிறப்பு, கொஞ்ச நாளைக்கு ஒரு வாழ்க்கை, பரதேசி போல ஒரு சாவு.

என்னைப்பொருத்தவரை

மனுசன்

பிறக்கிறதுக்கும் அர்த்தமில்லை,

இறக்கிறதுக்கும் அர்த்தமில்லை.

ஆனா இருக்கிறதுக்கு அர்த்தம் இருக்கா?

நாமலா கொடுத்தாத்தான் உண்டு.

(Between meaningless birth and death, life is a search for meaning)

(முயலாத பிறப்புக்கும் விலகாத இறப்புக்குமிடை வாழ்க்கை ஒரு முடியாத தேடல்)

மரணத்தை இப்படியும் புரிஞ்சிக்கிறாங்க:

# மத ரீதியாக விண்ணில் பிறப்பு 

# தர்க்க ரீதியாக சிந்தனை நிறுத்தம் 

# உடல் ரீதியாக 

   1. நுரையீரல் சுவாசிக்க மறுப்பு 

   2. இதயம் துடிக்க மறுப்பு 

   3. மூளை செயல்பட மறுப்பு 

# எதார்த்த ரீதியாக ஒட்டு மொத்த மனித இயக்கம் செயலிழப்பு

ஒரு சில கல்லறை இடங்களில் இந்த வார்த்தையை பார்த்தாலே பயம் வரும்.

இன்று நான்… நாளை நீ…

மனித வாழ்க்கையின் நிலையாமையை இது சொன்னாலும் வாழ்கையை பற்றிய பயம்தான் முன் நிற்கும்.

மனித உடம்புன்னா இவ்வளவுதான்

1. நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை,

2. இரண்டு நீச்சல் குளங்களை சுத்தப்படுத்த தேவையான குளோரின்,

3. 3 கிலோ கால்சியம்,

4. 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்கக் கூடிய அளவிற்கு பாஸ்பரஸ்,

5. இரண்டு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு,

5. 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு (என்ன, சில பேருகிட்டேருந்து இன்னும் கொஞ்சம் சோப்பு அதிகமா கிடைக்கும்)

மனித உடம்புன்னா இவ்வளவுதானா ?

அதையும் தாண்டி…, அதுக்கும் மேலே… ன்னு சினிமாவில் சொல்லலாம். நடைமுறையில் …

தன்னிலே வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. விரும்பினால் நாம்தான் அர்த்தம் கொடுக்க முடியும்.

எப்படி ?

வாழ்க்கையை:

கருப்பு – வெள்ளையில் பார்க்கலாம்.

ஈஸ்ட்மென் நிறத்தில் பார்க்கலாம்.

பல வண்ணத்தில் பார்க்கலாம்.

முப்பரிமாணத்தில் கூட பார்க்கலாம்

வாழ்க்கைக்கு நாம் தரும் பிம்பம் நம் அங்கமாக மாறும்.

அலெக்சாண்டர் போல எடுத்துச்செல்வது எதுவுமில்லை எனலாம்.

கலிங்கப்போரால் மாறிய அசோகர் போல புத்த ஜீவி-புத்தி ஜீவி ஆகலாம்.

என்னைப்பொறுத்தவரை மரணம் என்பது ஒரு தொடர்ச்சி. 5 க்கு அடுத்து 6 என்பதைப்போல.

இயற்கையானது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

ஒரு பேருந்தில் ஏறி பயணித்து இறங்கி விடுவதைப்போல ஒரு நிகழ்வு அல்ல மரணம்.

அது பயணம் போன்ற ஒரு தொடர்ச்சி.

1. திருமணம் முடித்து நான் இன்னொரு பிறப்பை உருவாக்கலாம், இது ஒரு தொடர்ச்சி.

2. திரை, இலக்கியம் போன்ற துறைகளில் படைப்பை உருவாக்கலாம்,

இது ஒரு வகை தொடர்ச்சி.

3. மண்டேலா, மாவோ போல தன் வாழ்க்கைக்கு சிறப்பை உருவாக்கலாம், இது இன்னொரு தொடர்ச்சி.

1. டிசம்பர் 25 இயேசு பிறந்த நாளல்ல. அவர் செத்த நாள் தான் அவர் பிறந்த நாள்.

2. இன்று (மார்ச்-23) பகத்சிங் பிறந்த நாள். காரணம் தூக்கிலே போடப்பட்ட நாள், (ராஜகுரு, சுகதேவ் உடன்) அவர் பிறந்த செப்டம்பர் 27 ஐ யாரும் நினைப்பதில்லை. சாவுதான் பிறப்பிற்கு அங்கீகாரம் தருகிறது.

3. முதல் கரும்புலி கேப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் 1987 ஜூலை 5 ல் மரணத்தை நேரில் சந்தித்த முதல் உயிர்க்கொடையாளன். வாகனத்தில் சென்று வெடிகுண்டு கோட்டையை தகர்த்தவர். சாவை மரணிக்கச் செய்தவர்.

4. போராளியாய் போராடி விடுதலை பெற்றுத்தந்து அதே நாட்டின் (கியூபா ) அமைச்சராய் இருந்துவிட்டு மீண்டும் பொலிவியா நாட்டு மக்களுக்காய் போராளி ஆன உலகின் ஒரே மனிதன் சே குவேரா. (1967 அக்டோபர் 9)

5. ஒரு நாட்டின் பெயரையே நேரியவர்களின் நாடு (Burkina Faso) என்று மாற்றிக்காட்டி, காலனியாதிக்க வாதிகளுக்கு சவாலாய் இருந்ததால் 37 வயதிலேயே கொல்லப்பட்ட தாமஸ் சங்கரா (1987 அக்டோபர் 15)

மறுபிறப்பு, உயிர்ப்பு, ஏழ்பிறப்பு என்று விசுவசிப்பவர், நம்புபவர் எல்லாம் சாவைக்கண்டு பயப்படும் போது மரணத்தை ஒரு தொடர்ச்சி ஆக்க வாழ்வதே வாழ்வு.

47 வயதில் சாவதோ, 90 வயதில் சாவதோ அது நாட்காட்டியில் தான் வித்தியாசம் காட்டும் முன்னே அல்லது பின்னே என்று. வேறு ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை.

நாம் இறந்தால் 5 நாளில் மறக்கத்தொடங்கி விடுவார்கள். 5 வருடம் கழித்து நெருங்கிய உறவினர் ஒருவேளை நினைக்கலாம். 50 வருடம் கழித்து, 500 வருடம் கழித்து ???

நாம் இருந்ததற்காண அடையாளமே இருக்கப்போவதில்லை.

(இராஜராஜன், திருவள்ளுவர் போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அந்த திருக்குறள் ஓலைச்சுவடிகள் மீட்கப்படாமல் அழிக்கப்பட்டிருந்தால் திருவள்ளுவரே கூட முகவரியே இல்லாமல் போயிருப்பாரே, அது போல எத்தனை திருவள்ளுவர்கள் அழிக்கப்பட்டு இருப்பார்கள் முதல், இரண்டாம், சங்கப்புலவர்கள். தஞ்சை கோவில் கல்வெட்டை படித்ததும் தானே கட்டியது இராஜராஜன் என்கிறோம், இல்லையென்றால் வரலாற்றையே மாற்றியிருப்பார்களே கைபர், போலன் கணவாய் மக்கள்)

தூக்கம் என்பது ஒரு குட்டி மரணம் தானே. மூளை, இதயம், நுரையீரல், இரப்பை எல்லாம் வேலை செஞ்சாலும் நாம் நினைவிழந்து, செயலிழந்து தானே கிடக்கிறோம்.

இதிலே செயற்கையாக வேறு நம்மை செயலிழக்கச் செய்து சுகம் கண்டு கொள்கிறோம், மது மற்றும் போதைகளில்.

நினைவு திரும்பாத தூக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்வதை விட நிச தொடர்ச்சியை உருவாக்க நமக்கு திராணி வேண்டும்.

அந்த நெஞ்சுறுதி இருந்ததால் தான் சாவைப்பார்த்து பாரதி சொன்னார்:

காலா (எமன் அதாவது யாமம் அல்லது காலம்) உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன் – என் 

காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  

பாரதிதாசன் சொன்னார்:

“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்

தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

எதிர்காலத் தமிழகம்: எனது கனவு

எதிர்காலத் தமிழகம்: எனது கனவு

தமிழகம் பற்றிய ஒரு சின்னச்சின்ன ஆசை. வாங்க என்னதான் சொல்றான்னு பார்ப்போமே.

1. தமிழ் மற்றும் கல்வித்துறை:

1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.

2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.

3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.

4.  அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.

5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் – பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.

6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.

7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.

8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.

9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.

10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.

11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.

12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்.

2. தமிழ்ப் பண்பாடு:
1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.

2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.

3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.

4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் – பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.

5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும்

தமிழ் ரத்னா விருது வழங்கப்படும்.

3. மின்சாரம், தகவல் தொடர்பு:

1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்படும்.

2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்படும்.

3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்படும்.

4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்படும்.

5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.

6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்காது.

7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.

8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்படும். பின்பு அனைத்தும் இலவசமே.

9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

4. தொழில்துறை:

1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு “த”. (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது “த” உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)

2.  மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.

3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னை-வாகனம், கணினி

கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்

திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்

கோவை– தொழில், எந்திரங்கள்,

ஈரோடு-மளிகைப்பொருட்கள்

திருப்பூர்-ஆடைகள் ,

கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.

சேலம்-இரும்பு, அலுமினியம்

மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,

நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி

சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்படும்)

ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்.

1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்படுவர்.

2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்கும்.

3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு.

4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை.

5. போக்குவரத்து துறை:

1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.

2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.

4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்படும்.

வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாகும்.

5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகையில் இருப்பதோடு செய்மதி கண்காணிப்பும் இருப்பதால், விபத்து பெருமளவு குறைக்கப்படும்.

6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.

1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:

1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.

2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.

3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி

இவைதவிர

2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து 

சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.

என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:

1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.

2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.

3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்கலாம்.


சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்கலாம்.

7. ஆட்சி நிர்வாகத்துறை:


1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்படும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள்.

# தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்படும்.

# பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்படும்.

8. சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்:

1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்படும். அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்படும்.

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்படும்.

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்படும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை.

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்படும். விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் உண்டு. அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்படும்.

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்படும்.

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்படும்.

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்படும்.

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்கும்.

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே.

 9. பாதுகாப்பு:
1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்படும். குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்படும்.

2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்படும்.

3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்படுவர்.

5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். மீறுவோரின் உரிமம் பறிக்கப்படும்.

10. சமூக மேம்பாடு:

1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சுய நிர்வாகம், அதற்கு ஒரு கொடி, விளையாட்டுக்குழு, சிந்தனையாளர் குழு, இலக்கியக்குழு, சுற்றுலா இடங்கள், கண்காணிப்பு அமைப்பு, நிதி அமைப்பு உருவாக்கம்.

2. ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாய, உணவு, தொழில் பொருட்கள் வட்டார மக்களால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்படும். இலாபமும் மக்களால் பகிர்ந்து கொள்ளப்படும்.

11. அரசியல் நிர்வாகம்:

1. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களது சின்னங்களும் கலைக்கப்படும்.

2. சுயேட்சைகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், அவர்களின் கல்வி, சமூக ஈடுபாடு, பங்களிப்பு பொறுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

3. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் மாநிலத்திற்கான நிர்வாக செயற்குழுவையும், கண்காணிப்புக்குழுவையும் தேர்ந்தெடுப்பார்கள்.

4. நிர்வாகக்குழு நாட்டை நடத்தும், இந்த நிர்வாகக் குழுவை கண்காணிப்புக்குழு நெறிப்படுத்தும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஆராய்ந்து அறிக்கை தரும்.

5. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செயல்படும் 10 மாவட்ட நிர்வாகங்கள் பரிசளிக்கப்படும்.

6. முதல்வர் பதவி இருக்காது.

7. ஓட்டு போடுவது இணைய முறையில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை. வாக்களிக்காதவர் தண்டத்தொகை கட்டவேண்டும்.

12. மதம்:

1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்படும்.

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கை.

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமையும்.

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்கும்.

4. இதைப்பின்பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்படுவர். (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)

13. இந்தியா மற்றும் சர்வதேசம்:

1. தமிழ்நாடு குறிப்பிடத்தக்க மேம்பாடு அடைந்ததும் அதேபோல இந்தியாவும் அடைய ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு அதற்காக பாடுபடும்.

2. பின்னர் அது விரிவடைந்து உலகில் எங்கெல்லாம் சமத்துவம் இல்லையோ அங்கேயெல்லாம் சமத்துவம் உருவாக உழைக்கும்.

14. நிதி, பொருளாதாரம்:

1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்படும். பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.

காரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.

2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை)

3. தேநீர்க்கடையில் கூட ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்படும்.

4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்படும். தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்.

5.  எந்த ஒரு தனி நபரும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்க முடியாது; பணம் வைத்திருக்க முடியாது.

15. வேளாண்மைத்துறை:

1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்படும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.

2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்படும்.

3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்படும்.

4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்படும்.

5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும்.

6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களில் கொண்டுவரப்படும்.

7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்படும். உதாரணமாக,

தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர், நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள், கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.

8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.

9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்படும்.

10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்கும். அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட.