அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யார்?
அப்படின்னு கேட்டா உடனே பதில் வரும் கொலம்பஸ் னு.

நிச்சயம் இல்லை.
இன்னும் ஒரு சிலர் சொல்லலாம் கண்டுபிடிச்சது அமெரிக்கோ வெஸ்புச்சி  (Amerigo Vespucci)   னு.

கண்டிப்பா ரெண்டு பேரும் இல்ல.

It is now universally recognized that neither Vespucci nor Columbus “discovered” America.  காண்க: 
பிறகு யார்தான் கண்டுபிடிச்சாங்க.
உடனடியா யார் கண்டிபிடிச்சாங்கன்னு சொல்றதை விட ஏன் அவங்க ரெண்டு பேரும் இல்லை அப்படிங்கிறது ரொம்ப முக்கியம்.
ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி :
சமீப காலங்களில்,கொலம்பஸின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் கொலம்பஸ் தினக் கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 1992ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு

(​ அக்டோபர் 12 1492 – 1992) கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2002ல், வெனிசுலா அதிபர் குகொ சவெஸ் கொலம்பஸ் தினத்தை

“பூர்வகுடிகளின் எதிர்ப்பு தினம்”

“The Day of Indigenous Resistance”
என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.

இவ்வாறு பூர்வகுடி மக்களால் வெறுக்கப்படும் அளவிற்கு கொலம்பஸ் என்ன செய்தான். காண்க: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-இல் கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்தான். அப்போது அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த மக்கள் சமாதான விரும்பிகள் என்று அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தன்னுடைய தினக்குறிப்பில் இப்படி எழுதி இருக்கிறான்.

“அரவாக்ஸ் மக்கள் தம்மிடம் இருப்பதை எல்லாம் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறார்கள்.”

“அரவாக்ஸ் மக்களிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. அவர்களுடைய சமூகத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை. கைதிகள் என்று யாரும் இல்லை. அங்கே சிறைகள் இல்லை. எங்களுடைய கப்பலான சாந்தா மரியா கரை தட்டிய போது கப்பலில் இருந்தவர்களையும் கப்பலில் இருந்த பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த எந்த ஒரு பொருளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை…”

இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யும் பரந்த மனப்பானமை கொண்ட நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைமாறு என்ன தெரியுமா?

அந்த மக்களை அப்படியே அடிமைகளாக்கினான். அங்கு இருந்த தங்கச் சுரங்கங்களில் அவர்களைக் கட்டாய வேலை வாங்கினான். மகிழ்ச்சியாக வாழ்ந்த அரவாக்ஸ் மக்கள் மனம் ஒடிந்து போனார்கள். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டுத் தற்கொலையும் செய்து கொண்டனர்.

அரவாக்ஸ் பெண்களைக் கொலம்பஸின் வேலையாட்கள் பாலியல் அடிமைகளாக ஆட்டிப் படைத்தனர். கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளான்: “இளம் பெண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வேலையாட்கள் 9, 10 வயது சிறுமிகளைத் தேடிச் சென்றார்கள்…”

அரவாக்ஸ் மக்களை அடிமைகளாக்கிய பிறகு அவர்கள் இறக்கும் வரையில் வேலை வேலை என்று அவர்களுடைய இரத்தம் பிழிந்து வேலை வாங்கப் பட்டனர். ஓர் அடிமை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குத் தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். ஐரோப்பாவிலிருந்து பிளேக் கிருமிகள் கொண்ட போர்வைகளை எடுத்துச்சென்று அந்தத் தீவு மக்களுக்கு கொடுத்து ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்றான் கொலம்பஸ்.

அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவாக்ஸ் தொழிலாளிகளின் மூக்கு, காதுகள் அறுக்கப் பட்டன. அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடியவர்கள் பிடிபட்டால் உயிரோடு கொளுத்தப் பட்டனர்.

கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். வேட்டையாடும் நாய்கள் அவர்களைக் கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாகப் பிய்த்து விடும். அது மட்டும் இல்லை. கொலம்பஸின் வேலைக்காரர்கள் தங்களுடைய நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டித் தீனி போட்டார்கள்! என்னே கொடுமை.

ஒரே நாளில் கொலம்பஸ் ஆட்கள் 3000 பேரின் தலைகளை வெட்டி வீசி இருக்கிறார்கள். 3000 பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி எழுதி உள்ளனர்.

1492 – இல் முப்பது இலட்சம் அரவாக் மக்கள் இருந்தனர். ஸ்பெனியர்கள் வந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொகை 60,000 ஆகக் குறைந்தது. 50 ஆண்டுகளில் ஒரே ஓர் அரவாக்ஸ் மனிதர் கூட இல்லை.

“In 1492, the population on the island of Hispaniola probably numbered above 3 million. Within 20 years of Spanish arrival, it was reduced to only 60,000. Within 50 years, not a single original native inhabitant could be found.”

‘Bartolome de Las Casas’ என்ற இயேசு சபை குரு கொலம்பஸ் செய்த கொடுமைகளை எல்லாம் கண்ட ஒரு நபர். கொலம்பஸின் கொடுமைகளை ஒரு புத்தகமாகவே போட்டிருக்கிறார். அப்புத்தகத்திற்கான அறிமுகம்:

Brief Report On theDestruction of the Indians
ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால்  இருந்து வந்த கொலம்பஸையும் அவனுடைய ஆட்களையும், அரவாக்ஸ் மக்கள் இனிய முகத்துடன் வரவேற்றார்கள். முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்தார்கள். இருந்ததை எல்லாம் கொடுத்தார்கள். அப்பேர்ப்பட்ட அந்த வெள்ளந்தி மக்களுக்கு கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் என்ன என்று பார்த்தீர்களா.
16 ம் நூற்றாண்டு வரை காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள்தான் இந்த மேற்கத்திய ஐரோப்பியர்கள். காண்க:

இப்போ மட்டும் எப்படி இருக்காங்கன்னா?

உயர் தொழில்நுட்ப, அதி நவீன காட்டுமிராண்டிகளாகத்தான்.

காரணம், ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நடக்கும் இன, மத, அரசியல், மற்றும் உள்நாட்டுப் போர்களைத் தூண்டிவிடுபவர்களாகவும், பின்னணியில் இரண்டு பக்கமும் ஆயுதம் விற்கும் சகுனிகளாகவும், பத்திரிக்கை மூலம் சமாதான விரும்பிகள் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டே போராடும் மக்களை அவர்களுக்குள்ளே எட்டப்பர்களை உருவாக்கி நசுக்கும் கயவர்களை எப்படி அழைக்க?

இதைவிட மோசமான விசயம் இந்த நடந்துகொண்டிருக்கும் மறைமுக மூன்றாம் உலக உலக யுத்தம் பற்றி பாதிக்கப்படும் மக்கள் தெரிந்துகொள்ளாத வண்ணம், ஏன் அவர்களே ஆதரிக்கும் வகையில் நடத்திக்கொண்டிருப்பது தான். மக்களின் கையைக்கொண்டே அவர்களின் கண்களில் குத்துவது. இது உள்ளூர் கூடங்குள அணு உலையிலிருந்து, லிபிய அதிபர் கடாபி படுகொலை வரை அப்படித்தான்.

சரி இப்போ அமெரிக்க கண்டிபிடிப்புக்கு வருவோம். கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு கொள்ளைப் பயணங்களுக்கான வரைபடம்.

கொலம்பஸ் (இத்தாலி நாடு) (1451 -1506)

முதல் பயணத்தில் 1492 ல் பகாமா, கியூபா, டொமிங்கோ தீவுகளுக்குத்தான் சென்றான். கடைசிப்பயனத்தில்தான் 1504 ல் மத்திய அமெரிக்காவுக்கு (இப்போதைய நிகரகுவா, ஹோண்டுராஸ் நாட்டுப்பகுதிக்கு) சென்றிருக்கிறான். அங்குதான் மீசோ அமெரிக்கா (Mesoamerika) நாகரிகத்தின் அமெரிக்கக்குடிகள் உடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது.

மே 20, 1506 – இல் கொலம்பஸ் இறந்தான். இறக்கும்  வரை கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினான். (வாஸ்கோ டா காமா செப்டெம்பர் 1499-இல் இந்தியாவிற்கு வந்தான்.)

அமெரிக்கோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) இத்தாலிய பிளாரென்ஸ் நகரில் 1454 ல் பிறந்து, ஸ்பானிய செவில்லெ நகரில் 1512 ல் இறந்தவன்.

இவரின் முதல் நான்கு பயணங்களுக்கான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. கொலம்பசுக்கு முன்னதாக இவர் அமெரிக்காவை ஒட்டிய கடற்கரையை அடையவில்லை. 1499-1500 ஆண்டளவில் இவர் தரை இறங்கியது தென் அமெரிக்காவிலுள்ள கயானா, மற்றும் பிரேசில் நாட்டுக்கடற்கரையே. அதையொட்டி வெளியிடப்பட்ட நில வரைபடம் காட்டுவது பிரேசிலை உள்ளடக்கிய தென் அமெரிக்காவைத்தான்.

வெஸ்புச்சி செய்த காரியங்கள் ரெண்டு:

ஒன்னு:

கொலம்பசைப்போல கடைசிவரை தான் கண்டுபிடிச்சது இந்தியாதான் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அதற்குபதில் ஒரு புதிய உலகம் என்று தான் சொன்னார்.

ரெண்டு: 

இந்த அறிவிப்பு ஐரோப்பாவில் மிக வேகமாக பரவியதால் புதிய நிலமானது அமெரிக்கா தான் என்பது மக்களிடையே பதிவு செய்யப்பட்டது.

இதற்கு மேலாக 1538 ல் மெர்காடெர் உலக வரைபடத்தில் முழு கண்டத்திற்கும் அமெரிக்கா என்பதே பொது பெயராக அறிவிக்கப்பட்டதே வரலாற்றில் நிலைத்துப்போனது. (மெர்காடெர் வரைபடம் பற்றி ஒரு பதிவு எழுதப்பட்டுள்ளது.)
மூன்றாவதாக:  ஸ்பானிய Enciclopedia Universal Ilustrada (1907) என்ற கலைக் களஞ்சியத்தில் கொலம்பஸ் தனது நான்காவது கொள்ளைக்கான பயணத்தில் நிகரகுவா நாட்டின் கடற்கரையில் இறங்கினான். அங்கிருந்த தொல் இந்தியர்களிடம் அந்நாட்டில் “அமெரிக்கா” (Americ or América) என்ற மலை இருப்பதைப்பற்றியும் அங்கு தங்கம் கிடைப்பதைப்பற்றியும் தெரிந்துகொண்டான்.

இன்டியானோ ஜோன்ஸ் (Indiana Jones ), நேஷனல் ட்ரெசர் (National  Treasure) போன்ற ‘கௌபாய்’ படங்கள் தங்கப்புதையல் தேடுகின்ற கதைகளாய் இருக்கக் காரணம் இதுதான்.

இதுவரையிலும் அமெரிக்கா என்பதற்கான எந்தவொரு மூலச்சொல் விளக்கமும் அவர்களால் தரப்படவில்லை.

“Too many claims are, for lack of hard evidence, based on speculation. Theories about the true origin of the name are ultimately historical fictions. It is now universally recognized that neither Vespucci nor Columbus “discovered” America.  They were of course preceded by the pre-historic Asian forebears of Native Americans.” காண்க: 

இந்த ஐரோப்பியர்கள் 15 ம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டுப்பகுதிக்கு சென்றபொது அங்கே ஏற்கனவே லட்சக்கணக்கில் மக்கள் வசித்திருந்தார்கள் என்று சொல்லும் போது அந்த நிலப்பகுதியை அவர்கள் தானே முதலில் கண்டுபிடித்திருக்கவேண்டும்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மட்டாங்க்ர கதையாக இதுவும் ஆகிவிடக்கூடாது அல்லவா.

அமெரிக்கா என்பதற்கான மூலச்சொல் விளக்கம் எங்கே தேட:
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளடங்கிய அமெரிக்க கண்டம். இந்த இரு கண்டப்பகுதியிலும் இரு பெரும் இனங்கள்:

ஒன்று வட அமெரிக்காவில் இன்றைய மெக்சிகோ நாட்டுப்பகுதியில் வாழ்ந்த மாயன் அல்லது மயன் இனம்.

இரண்டு தென் அமெரிக்காவில் இன்றைய பெரு நாட்டுப்பகுதியில் வாழ்ந்த இன்கா (Inca) இனம்.

வட அமெரிக்காவின் மிகப்பெரிய மலைத்தொடர் ராக்கி மலைத்தொடர் என்பது நமக்குத்தெரியும் அலாஸ்கா விலிருந்து கீழே பனாமா வரை நீண்டுருக்கும் ராக்கி மலையின் படம் கீழே.
அதே போல தென் அமெரிக்காவின் நீண்ட நெடிய மலை ஆண்டிஸ் என்பதும் நமக்குத்தெரியும். கீழே ஆண்டிஸ் மலையுடன் தென் அமெரிக்கா.
இந்த இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் வாழ்ந்த இனம் மாயன் இனம். இந்த மாயன் கட்டிய பிரமிடுகள் இன்றும் அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும் இன்றைய மெக்சிகோ நாட்டின் முந்தைய பெயர் மெசோஅமெரிக்கா (Mesoamerica)
இந்த மெசோ அமெரிக்கா என்ற பெயர் எப்படி வந்தது. மெசபடோமியா-(மிசை +பேட்டை+இரு+ஆறு) இரு ஆறுகளுக்கிடைப்பட்ட நாடு  என்பதைப்போல இதுவும் நல்ல தமிழ்ப் பெயர்.
மெசோஅமேரிக்கா / மெசோ மேரிக்கா / மெசோ + மேரு + அகம் /

மிசை + மேரு + அகம். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட நாடு.

ராக்கி, ஆண்டீஸ் என்ற இரு மலைகளுக்கிடைப்பட்ட நாடு.
இந்தப்பெயரே மெசோஅமெரிக்கா வாக பின்னர் கண்டம் முழுவதற்கும் ஐரோப்பியர்களால் அமெரிக்கா என்று அழைக்கப்படவும் காரணமாயிற்று.

(பின் குறிப்பு: இது வரை நான் தேடிய வரையில் யாரும் கண்டு பிடிக்காத ஒரு மூலச்சொல் விளக்கம். எனவே இந்த விளக்கத்தை பயன்படுத்துபவர்கள் என் அனுமதி பெற வேண்டும்.??)

நயாகரா நீர்வீழ்ச்சி:
அடுத்ததாக வட அமெரிக்காவில் உள்ள மிகப்பிரபலமான பெயர் நயாகரா நீர்வீழ்ச்சி. இந்த நயாகரா என்ற பெயரின் மூலச்சொல் என்னவென்று தேடியபோது, இது பற்றி தேடிய ஒர் அமெரிக்கர் ஜார்ஜ் ஸ்டீவர்ட் என்பவர் அப்பகுதி வாழ் அமெரிக்க பூர்வகுடிகளிடம் கேட்டு அவரே வெளியிட்ட அந்த மூலச்சொல் வார்த்தை ஓங்கின ஆறு என்பதே. அதாவது உயர்ந்த பகுதியில் அமைந்த ஆறு. இந்த ஆறு எவ்வளவு உயரமான பகுதியில் ஓடி பின்னர் இந்த இடத்திலிருந்து தாழ்வான பகுதியில் தொடர்ந்து ஆறாக ஓடுகிறது என்பதைக்  கீழுள்ள படத்தைப்பார்த்தாலே எளிதாக விளங்கும்.

விளக்கம் தேவைப்படுவோர் இந்த இணைப்பில் காணலாம்.

According to George R. Stewart, the name Niagara comes from the name of an Iroquois town called “Ongniaahra”,.[4]
அனைகொண்டா பாம்பு:

தென் அமெரிக்காவிற்கும் தொடர்பான ஒரு தமிழ்த்தொடர்பு பெயரினைக்கானலாம். அது தென் அமெரிக்காவின் பிரபலமான அனைகொண்டா பாம்பு. இதன் பெயருக்கான விளக்கம். அது யானையையும் கொல்லக்கூடிய வலிமையுள்ள ஒரு பாம்பு. யானை கொன்றான் அல்லது ஆணை கொன்றான். (தமிழில் ஆணை என்றாலும் அது யானையையும் குறிக்கும்.) மேலும் நான் விசாரித்த வரையில் தென் அமெரிக்காவில் யானை என்ற விலங்கு கண்காட்சிசாலை (Zoo) தவிர வேறெங்கும் இல்லை. பிறகு எப்படி இந்தப்பெயர் தமிழர் பூர்வகுடி அங்கில்லாமலா? இதற்கான விளக்கத்திற்கு செல்ல கீழ்கண்ட இணைப்பைப் பயன்படுத்தலாம்.

Yule and Frank Wall noted that the snake was in fact a python and suggested a Tamil origin anai-kondra meaning elephant killer.[5]

இன்னும் எத்தனையோ தரவுகள், விளக்கங்கள் தமிழர்களின் தொடர்பு குறித்து தர இயலும். ஆனால் இட, நேரங் கருதி அமெரிக்கா பற்றிய தமிழர் தொடர்பை தற்சமயம் இடைநிறுத்துவோம். எல்லாவற்றுக்கும் தொடக்க காரணமான தமிழர்களின் பூர்வ நிலம், ஆதியில் வாழ்ந்த இடம், அந்த குமரிக்கண்டம் பற்றி அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்.