திரைப்படம் ஒன்றில் ஒரு நடிகை மனப்பாடம் செய்வார், 

‘இந்தியன் எகொனமி இஸ் தெ பெஸ்ட் எகொனமி’ அப்படின்னு 

கொஞ்ச நேரத்துல கனவு கலைஞ்சி எந்திரிப்பார்.


அதுபோல  இந்தியா 3 வது பெரிய பொருளாதார நாடு என்பது நல்ல கனவு. இது ஓர் உலக  வங்கி சார்பிலான பலூன் ஊதல். ரொம்ப ஊதாதீங்க வெடிச்சிரும்.


இந்தியா 3 வது பெரிய பொருளாதார நாடு ஆகிருச்சுன்னு படிச்சா ஆகான்னு ஒரு மிதப்பு வரும் பாருங்க.   தேர்தலையொட்டி 5 வருட தறுதலைகளுக்கு இது தான் தேவையான ஒரு பிரச்சாரம்.


ஒரு  சில தகவல்களைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடும் இது உண்மையா இல்லையான்னு.

உள்நாட்டு செய்தி தரும்  மேலோட்டமான விசயங்களையும், பொருளாதார அலசல்களோடு வரும் சில ஆங்கில செய்தியையும்  குறிப்பாக இவைகளில் தடிமனாக்கப்பட்ட வார்த்தைகளையும் உற்று நோக்குவோம்.


சாதாரண விசயம்தான்.

உள்நாட்டு செய்தி:


உலக வங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2–வது இடத்தை சீனாவும் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து இந்தியா உள்ளது. 2005–ம் ஆண்டில் இந்தியா இதில் 10–வது இடத்தில் இருந்தது. 2011–ல் மிக வலிமையாக முன்னேறி இந்த இடத்தை பெற்றுள்ளது.


 அயல் செய்தி:

According to the World Bank’s International Comparison Program (ICP) data, India holds a 6.4 percent share of global GDP on a PPP basis. The United States remains in first place with a 17.1 percent share and China trails it at 14.9 percent. Japan, while still the world’s third largest economy in nominal terms, holds a 4.8 percent share of global wealth.

In exchange rate terms– that is, when all the national currencies are converted into U.S. dollars at current exchange rates– the Indian economy remains about a third of Japan’s in size, 

For India, the bad news is that its GDP per capita in PPP terms still ranks the country 129 out 199 — a reminder that the country has much to do in combating poverty. GDP மற்றும்  PPP என்றால் என்னன்னு மட்டும் பார்ப்போம்  


(பயப்படாம பார்ப்போம் எளிமையா இருக்கும்னு நம்பறேன் )


1. GDP  என்பது (Gross Domestic Product) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி. சர்வதேச செலாவணியான அமெரிக்க டாலரில் கணக்கிடப்படும். உதாரணமாக இந்தியாவின் ஓராண்டு ஒட்டுமொத்த உற்பத்தி அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிடுதல்.
2. PPP என்பது (Purchasing Power  Parity) மக்களின் வாங்கு சக்தி. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உள்நாட்டு பணமதிப்பில் கணக்கிடப்படுதல். உதாரணமாக இந்தியாவின் ஓராண்டு ஒட்டுமொத்த உற்பத்தி ரூபாய் மதிப்பில் கணக்கிடுதல்.

[ஒவ்வொரு நாட்டின் உற்பத்தியும் பொருளாதார வலிமையையும் அந்தந்த நாட்டின் பணமதிப்பு மற்றும் மக்களின் வாங்கு சக்தி (PPP) யைக்கொண்டு கணக்கிடப்படுதலே சரியானது என்று சமீப காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. (எ.கா: சீனாவின் யுவான் மற்றும் சீன மக்களின் வாங்கு சக்தி கொண்டு சீனப்பொருளாதாரம், பவுண்டின் மதிப்பு மற்றும் இங்கிலாந்து மக்களின் வாங்கு சக்தி கொண்டு இங்கிலாந்து பொருளாதாரம் கணக்கிடப்படுதல்.) முன்பு ஒரே அளவுகோல் மட்டுமே அது அமெரிக்க டாலர் மதிப்பைக்கொண்டே ஒவ்வொரு நாட்டின் உற்பத்தி வலிமை கணக்கிடப்பட்டது. ஆனால் இரண்டு வகை கணிப்புமே ஏமாற்று வேலைதான் அதிலும் குறிப்பாக PPP என்பது, ஒவ்வொரு ஏழை நாட்டின் பொருளாதாரமும் ஆகா ஓஹோ என்று சொல்லி உசுப்பி விடும் ஏமாற்று வேலைதான்.]

இதை கொஞ்சம் வேற மாதிரியும் சொல்லலாம். ஒரு ஆங்கில வழி பள்ளியில் உள்ள ஒரு வகுப்பில், அனைத்து மாணவர்களோடு ஒப்பிடும்போது அவர்களில் ஒருவன் கிராமத்தில் இருந்து வந்துள்ள, கல்வி கற்க சிரமம் உள்ள நிலையில் இருப்பவனாக ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். அவன் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்  11 வது இடத்தில் இருந்தால் அவன் 11 வது ரேங்க் எடுத்திருக்கிறான் என்று சொல்வோம். 

ஆனால் அவனுடைய வீட்டில் உள்ள மற்ற சகோதர, சகோதரிகளோடு ஒப்பிடும்போது அவன் அவர்களில் முதலாவது இடத்தில் இருந்தால் அவன் முதல் ரேங்க். 

இது இரண்டில் எது சரியானது. 

வகுப்பு சரியானது போலத்தோன்றும். ஆனால் வகுப்பு எப்படிப்பட்டது என்பதைப்பொறுத்தது. சமச்சீரற்ற வகுப்பில் ரேங்க் மதிப்பீடும் நியாயமானது அல்ல.

வகுப்பில் காணப்படும் ஆங்கில வழி மதிப்பீடும் சமத்துவமானது அல்ல. ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. படிக்க வசதியுள்ள 40 நகர ஆங்கில வழி மாணவர்கள் மத்தியில் 2 அல்லது 3 கிராம, படிக்க வசதியற்ற, தமிழ் மட்டும் தெரிந்த மாணவன் போல.

அதனால் வீட்டிலுள்ள மற்ற சகோதர, சகோதரிகளோடு ஒப்பிடுவதும் சரியான மதிப்பீடு அல்ல.

அடிப்படையில் கல்விமுறையே இங்கு மாற்றப்படவேண்டும் என்ற அணுகுமுறை போலத்தான் இந்த இன்றைய சர்வதேச பொருளாதார காலனியாதிக்க வழிமுறைகளும், மதிப்பீட்டு முறைகளும்.

இந்தியாவின் உற்பத்தி மதிப்பை ரூபாயில் கணக்கிட்டால், உலக நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 6.4 சதவிகிதம்.  உலகளவில் 3 வது இடம். இதே இந்தியாவின் உற்பத்தி மதிப்பை  சர்வதேச  பண மதிப்பீட்டில் அதாவது அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் உலகளவில் இந்தியா 11 ம் இடம். 


2013 லும் இதே இடம்தான்.

என்னமா ஏமாத்துது உலக வங்கி 


விஷயம் இதோட முடியல. இனிமேதான் முக்கியமான செய்தியே 


இந்தியாவின் தனியார் தொழில் அதிபர்கள் ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டிய வகையில் உள்ள ஒட்டு மொத்த உற்பத்தியே இது.


இந்த உற்பத்தியால தஞ்சாவூர் மாரிமுத்துவுக்கும், கொருக்குப்பேட்டை கோவிந்தசாமிக்கும், நாகர்கோவில் முத்துப்பேட்சிக்கும் ஏதாவது பயனுண்டான்னு பார்த்தா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.


எப்ப பொருளாதார வளர்ச்சின்னு சொல்லலாம்னா ஒரு நாட்டின் தனி  நபர் வருமானம் (Per Capita Income) கூடி இருக்கிறதா என்பதைப் பொறுத்தே இது அளவிடப்படுகிறது. அந்த வகையில்தான் மேலே சொல்லிருக்காங்க தனி நபர் வருமானத்தில் இந்தியா 199 உலக நாடுகளில் 129 வது இடம் என்று. இதுவும் PPP(ரூபாய்) அளவீட்டின் படிதான். GDP (டாலர்) அளவீட்டின் படி 142 வது இடம் தான்.


India’s per capita income (nominal) is $ 1219, ranked 142nd in the world,[1] while its per capita purchasing power parity (PPP) of US $3,608 is ranked 129th.[2]


இந்திய ஊடகங்கள்-பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களோடு சேர்ந்து கொண்டு நம்ம மக்களை, நம்மை  எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

இந்த இந்தியா கொடுத்துள்ள புள்ளி விபரத்தையும் பார்த்தால், ஒவ்வொரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் 1219 X 66 Rs = 80,454 Rs (மாத வருமானம் 6,000 Rs)

ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் இந்த நிலை மேலும் கவலைஅளிக்கும்.

“According to a World Bank paper Development Policy Review, $1 a day poverty rates in rural Orissa (43%) and rural Bihar (40%) are some of the highest in the world.[12] Seven low-income states – Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Orissa, Rajasthan, and Uttar Pradesh – are home to more than half of India’s population.[13] Bihar‘s 80 million people are by far the poorest in India.”

இதே சமயம் தனி நபர் வருமானம் அதிகமுள்ள 10 நாடுகளையும் பார்ப்போம். இந்தியாவையும் ஒப்புமைப்படுத்திப்பார்ப்போம்.

இந்தியாவில் இது  $ 1219. 

எப்படிங்க உலகத்துல சமத்துவம் வரும். 

15 ம் நூற்றாண்டுல காலனியாதிக்கம் செஞ்சு ஆசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளை சுரண்டிக் கொழுத்த மேற்கத்திய நாடுகள், இன்றைக்கும் அந்த நாடுகளை புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பெயரில் புதிய காலனியாதிக்கம்  செய்து சுரண்டிக் கொழுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த பொருளாதாரக் கொள்கைகளை ஏழை நாடுகள் மீது திணிக்கும் உலக வங்கி (World Bank), சர்வதேச நிதியம் (IMF) போன்றவைகளை யார் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று பாருங்கள்.

 சர்வதேச நிதியம்:

 உலக வங்கி:

விடிவு தான் என்ன ? கஷ்டம் தான்.

இன்னும் இருக்கிறது.


இந்தியா பெரிய நாடு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். பரப்பளவில் மட்டுமல்ல மக்கள்தொகை, அல்லது மக்கள் சக்தியிலும் பெரிய நாடு.  உதாரணமாக உள்ள படம் இன்னும் அதைத் தெளிவாக விளக்கும். நமது ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாட்டுக்குச் சமம், மக்கள் தொகையில்.

இதையே விளக்கும் விதமாய் இன்னொரு வரைபடம்.

சரி, இதே வகையில் தனி நபர் வருமானம் இருக்கிறதா என்று பார்த்தால், தனி நபர் வருமானம் சரிசமமாயுள்ள நாடுகளைப் பாருங்கள். நம் நாட்டின் உண்மை நிலையை மட்டும் புரிந்து கொள்வோம்.

மக்கள்தொகைப்பெருக்கம் தான் காரணம் என்று பொய்யான காரணம் சொல்வார்கள். நாமும் நம்புவோம்.


நம்மைவிட மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனா சாதிக்கிறது.


1970 களில் இந்தியா, சீனா இரண்டும் சரிசமமாய் ஏழை நாடுகளாய்த்தான் இருந்தன. ஆனால் இன்றைய அதன் வளர்ச்சி, பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதன் தனிநபர் வருமானம், எல்லாம் மக்களுக்கான அரசு அமைந்தால் தான் உண்டு.


இந்தியாவின் ரூபாய் மதிப்பு 1947 எப்படி மதிப்போடு இருந்தது பாருங்க.

இந்த உள்நாட்டு கொள்ளைகாரனுங்க (காங்கிரஸ், பி.ஜே.பி ரெண்டும்தான், அதோட எல்லா மாநிலக்கட்சிகளும்தான்) வந்தானுங்க. நம்ம நாட்டை திரும்பவும் வித்துபுட்டானுங்க. 

1991 மன்மோகன்சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகுதான் ரூபாயின் மதிப்பு மிதிப்பில், படு பாதாளத்தில். 

அட்டவணை பாருங்கள்.

Year Exchange rate
(INR per USD)
1947 1
1948 3.31
1949 3.67
1950 – 1966 4.76
1966 7.50
1975 8.39
1980 7.86
1985 12.38
1990 17.01
1991 32.427
2000 43.50
2005 (Jan) 43.47
2006 (Jan) 45.19
2007 (Jan) 39.42
2008 (October) 48.88
2009 (October) 46.37
2010 (January 22) 46.21
2011 (April) 44.17
2011 (September 21) 48.24
2011 (November 17) 55.3950
2012 (June 22) 57.15
2013 (May 15) 54.73
2013 (Sep 12) 70.36
2013 (Sep 16) 62.83
2013 (Sep 28) 61.98
2013 (Oct 16) 61.45
2013 (Oct 25) 61.61
2013 (NOV 14) 63.53