காற்று மண்டலம் என்ற பிரம்மன், (வளி)

விண்வெளி மண்டலம் என்ற விஷ்ணு, (வெளி)

சூரிய மண்டலம் என்ற சிவன் (ஒளி)

இவை மூன்றும் மூன்று சக்திகள், மாபெரும் இயற்கை சக்திகள் என முதல் பாகத்தில் கண்டோம்.

இந்த வளி, வெளி, ஒளி, என்ற தமிழர்களின் வானியல் கோட்பாடு உயிர் சூல் கொள்ள அடிப்படையான திரிசூலமாக பின்னர் பிரம்மன்,விஷ்ணு, சிவன் ஆக ஆரிய மதமாக,  பின்னர் யூத, இஸ்லாமிய, கிறித்தவ மதமாக மாற்றம் பெற்றிருக்கிறது.  

இம்மூன்று சக்திகளுக்கும் சமமான பெண்பால் சக்திகளும் தெய்வங்களாக உண்டு. மூன்று தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி,  பார்வதி ஆகிய மூவரும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் துணைவியராக கருதப்படுகின்றனர். ஆனால், மூன்று இயற்கை சக்திகளை ஆண்பால், பெண்பால் கொண்டு அழைத்தார்களே தவிர அவை யாவும் தனி நபர் தெய்வங்களல்ல. உருவகப்படுத்தப்பட்ட வானியல் இயற்கை சக்திகளே, அவ்வளவுதான். காண்க:

 

1. வளி – காற்று மண்டலம் – பிராண வாயு – பிரம்மன் – சரஸ்வதி 

சரஸ்வதி என்பவர் இரண்டு நிலைகளில் இருக்கிறார். அதாவது, காற்றாகவும், நீராகவும். ஆங்கிலத்தில் நீருக்கான சமன்பாடான H2O என்பதைப்போல சரயு நதி என்பது, ஆகாய கங்கையையான பால்வெளி மண்டல வாயுவையும் (H) குறிக்கும், 

நிலத்தில் அயோத்தி நகரில் பாயும் நதியான சரயு நதி நீரையும் (H2O) குறிக்கும். இராமனின் தந்தை மன்னன் தசரதன் ஆண்ட கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. அந்த நகரின் வழியாய் இன்றும் பாயும் நதி சரயு. நதி பிற நதிகள் போல் நீல நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

2. வெளி – விண்வெளி மண்டலம் – விண்ணவம் – விஷ்ணு – லட்சுமி.

இங்கும் லட்சுமி இரண்டு நிலைகளில் இருக்கிறார். அதாவது, நாராயணி அ வைஷ்ணவியாக விண்ணவனின் பெண்பாலாகவும், லட்சுமியாக ஒளியின் பெண்பால் வடிவமாகவும் இருக்கிறார்.

3. ஒளி – சூரிய மண்டலம் – சூரியன் – சிவன் – பார்வதி 

இங்கும் பார்வதி இரண்டு நிலைகளில் இருக்கிறார். ஒன்று சிவம் என்ற சூரியனின் சக்தியை உயிர்களின் வாழ்வாக மாற்றும் பூமி சக்தியாகவும், வாயு மண்டலத்தைக் கட்டிக்காக்கும் நில உலகாகவும், மலைகளில் வாழும் பார்வதமாகவும்.

இவை தவிர வரும் அனைத்து தெய்வப் பெயர்களும் 

1. இம்மூன்று தேவியரின் பெருமைகளை விளக்கும் பெயர்களாக 

2. காலப்போக்கில் பெருகிய பெயர்களாக 

அமைந்திருக்கும்.

இவைதவிர குலதெய்வங்கள், பிற உள்ளூர் தெய்வங்கள் எல்லாம், அரவான் திரைப்படத்தில் காண்பதைப்போல கடந்த 200, 300, 500 வருடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தன்னையே பொது நலனுக்காக, ஊர் மக்களுக்காக தியாகம் செய்த மனித குல மாணிக்கங்களே.

மதுரை வீரன், சுடலை மாடசாமி, நல்ல தங்காள் என்பவர்களைப்போல.

இவை தவிர தீய சக்திகளாக இருக்கக்கூடிய சக்திகளும் உண்டு. எமன், காளி, சாத்தான்.

1. எமன்: எமன் என்பது தமிழர்களின் யாமம் என்ற பொழுது அல்லது காலத்தைக் குறிக்கும் குறியீடு. அதனால் தான், தமிழர்கள் இறந்தவர்களை காலமாகிவிட்டார் என்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான வார்த்தை. காலத்தோடு காலமாகிவிட்டார், இயற்கை எய்தி விட்டார். என்ன ஒரு அறிவியல் சிந்தனை. இறப்பு மெதுவா வரட்டும் என்பதற்காக எமனின் வாகனம் எருமை. 

இந்த எமன் என்பதற்கு உள்ள இன்னொரு வார்த்தை காலன்.

பாரதியார் பாடுவார்:

காலா உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன் – என் 

காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் 

2. காளி: இந்தக் காலன் என்பதற்குரிய பெண்பால் காளி. காளியும் காவு வாங்கும் தெய்வமாகத்தான் கருதப்படுகிறார்.


3. சாத்தான்:

இந்த பேய், பிசாசு, சாத்தான் எல்லாம் உருவகங்கள். எதுவும் உண்மையில்லை. தமிழர்கள் சூரியன் சாய்ந்து மாலை நேரம் வருவதை, பொழுது சாயும் நேரம், அல்லது பொழுது சேரும் நேரம் என்பார்கள். மேற்கு திசையில் மறைவதால் மேற்கில் இருந்த தமிழர் பகுதியை சேர நாடு, பொழுது சேரும் நாடு என்று அழைத்திருந்தார்கள். மறையும் பொழுதில் மேற்கே இருக்கும் மலையை ஒட்டிய அடிவாரப்பகுதிகள் விரைவில் இருட்டத்தொடங்கும். எனவே சேரும் இரவை, சேருதலை சாமியாக்கி சேர்ந்தான், சேர்த்தான், சார்த்தான், சாத்தான், சாஸ்தா என்றாக்கினார்கள். விடாது கறுப்பு, கறுப்பு அடிச்சிறும் என்று சொல்வது இருளை, அல்லது இருள் தரும் பயத்தை. 

தமிழக மேற்கு மலை அடிவார நெடுகிலும் சாஸ்தா என்ற பெயரைக் கொண்ட கோயிலைக்காண முடியும். 

இந்த சாஸ்தா அய்யப்பனாக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதே போல் சாஸ்தா என்பதும் அய்யனார் என்பதும் ஒன்றே அவை குறிப்பது புத்தனை என்ற வரலாறும் உண்டு. 

இந்த தமிழ் சாத்தான் தான் வட மொழியில், சைத்தான், ஆங்கிலத்தில் satan, இத்தாலியில், satana. உலகின் பல மொழிகளிலும் அதே பெயர்.

– English Language: Satan

– Afrikaans Language : Satan

– Albanian Language : Satani

– Arabic Language : “Shaytan”

– Armenian Language :satani

– Azerbaijani Language : Åžeytan

– Basque Language : Satan

– Belarusian Language :sejtankij

– Bulgaria Language :Сатаната

– Catalan Language : Satanàs

– Chinese (Simplified) Language :shawshaw

– Croatian Language : Sotona

– Czech Language : Satan

– Danish Language : Satan

– Dutch Language : Satan

– Estonian Language : Saatan

– Filipino Language : Satanas

– Finnish Language : Saatana

– French Language : Satan

– Galician Language : Satanás

– German Language : Satan

– Haitian Creole Language : Satan

– Hebrew Language: şeytan

– Hindi Language :saiththaan

– Hungarian Language : Sátán

– Icelandic Language : Satan

– Indonesian Language : Setan

– Italian Language : Satana

– Latvian Language : Sātans – Lithuanian Language : Å Ä—tonas

– Malay Language : Setan

– Maltese Language : Satana

– Norwegian Language : Satan

– Polish Language : Szatan

– Portugese Language : Satanás

– Romanian Language : Satana

– Russian Language :Szatan

– Slovak Language : Satan

– Slovenian Language : Satan

– Spanish Language : Satanás

– Swahili Language : Shetani

– Swedish Language : Satan

– Turkish Language : Åžeytan

– Vietnamese Language : Satan

– Welsh Language : Satan

ஒவ்வொரு நாளும் மாறும் இருள்-பகல் மாற்றம் தான் “ஒளி – இருளாக”, “கடவுள்-சாத்தானாக” மாறியது என்கிறது zeitgeist. அங்கும் இருளாக இருப்பது “சேத்” (set) என்ற தமிழ் தான். Horus என்பது தமிழ் ஓரை அதாவது நட்சத்திரக்கூட்டம் என்பது பொருள். ஓரியன் (Orion) நட்சத்திரக்கூட்டம், Hour என்பதெல்லாம் தமிழ் ஓரையிலிருந்தே.

தொடர்ந்து தேடுவோம்…

Advertisements