உலக வரைபடத்தில் இன்னொரு மோசடின்னா முதல் மோசடி என்னன்னு கேள்வி வரும்.

உலக வரைபட முதல் மோசடி காண:

இரண்டாவது மோசடி:

உலக வரைபட முதல் மோசடி நில வழி சார்ந்தது. இரண்டாவது மோசடி கடல் வழி சார்ந்தது.

நமக்குத்தெரியும் நம்ம பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்தான் என்று.

இந்த 29 சதவிகித நிலப்பரப்பில்:

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 7 நாடுகளையும் நாம் அறிவோம். காண்க:

(1) ரஷ்யா (2) கனடா (3) அமெரிக்கா(USA) (4) சீனா (5) பிரேசில் (6) ஆஸ்த்ரேலியா (7) இந்தியா

இது உண்மையிலேயே உண்மையா?

தேடித்தான் பார்ப்போமே உண்மையா இல்ல பொய்யான்னு.

நமது கவனம் பொதுவாக நிலத்தோடு முடிந்துவிடும். நாம வாழ்ற நிலத்தில இருக்கிற பிரச்சினைய சமாளிக்கவே முடியல. இதுல எங்க கடல் பக்கம் கவனத்த திருப்ப?

நமது இந்தக் கடல் பற்றிய கவனக்குறைவுதான் கடல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாய் இருக்கிறது.

உண்மையில் 29 சதவிகித நிலத்த விட 71 சதவிகித கடல் முக்கியமானது.

புரிந்துகொள்ளும் வசதிக்காக 7 கடல்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், ஆர்ட்டிக் முதல் அண்டார்டிகா வரை அரபிக் கடல் முதல் பசிபிக் கடல் வரை எல்லாம் தொடர்ச்சியான ஒரே கடலே.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் கடல் தொடும் கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக எவ்வளவு தூரம் அந்நாட்டிற்கு சொந்தம்?

(புரிதலுக்காக: 1 கிலோமீட்டர் என்பது 1,000 மீட்டர். கடலில் 1 நாட்டிகல் மைல் (Nautical Mile) என்பது 1,852 மீட்டர், ஏறக்குறைய 2 கிலோமீட்டர்.)

1982 ம் ஆண்டு கடல் உடன்பாட்டின்படி:

1) கடற்கரையிலிருந்து (12 நாட்டிகல் மைல்) 22 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கு சொந்தம். நில, நீர், ஆகாய பரப்பு உட்பட.

2) கடற்கரையிலிருந்து (24 நாட்டிகல் மைல்) 44 கிலோமீட்டர் வரை அந்நிய நாட்டு ஊடுருவல் வராமல் பாதுகாக்கும் உரிமை அந்தந்த நாட்டுக்கு உண்டு.

3) கடற்கரையிலிருந்து (200 நாட்டிகல் மைல்) 370 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கான தனிப்பட்ட பொருளாதார பகுதி (Exclusive Economic Zones) (கடலில் மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்றவற்றிற்கு). காண்க:

4) கடற்கரையிலிருந்து (350 நாட்டிகல் மைல்) 650 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டுக்கான அதிகரிக்கப்பட்ட பரப்பில் கடல் (370-650) அந்தந்த நாட்டுக்கு சொந்தமல்ல, ஆனால் கடலடி நிலப்பரப்பு சொந்தம் (பெட்ரோல், கனிம வளம் எடுக்கலாம்.)

5)  கடற்கரையிலிருந்து (450 நாட்டிகல் மைல்) 833 கிலோமீட்டர் வரை அந்தந்த நாட்டின் கடலடி நிலம் நிலப்பரப்பாகவே தொடர்ந்து இருந்தால் அதிகரித்துக்கொள்ளலாம்.

அதிகரிக்கப்பட்ட கடல் தூரத்தை கடல் அமைப்பை பொறுத்து நிர்ணயித்துக்கொள்ளலாம். காண்க:

இதுல எப்படி எல்லாம் எல்லை விரிவாக்கம் அல்லது ஆக்கிரமிப்பு நடக்கிறது என்றால்

ஒரு நாட்டின் கடலுக்கான உரிமை என்பது அந்தந்த நாட்டின் கடற்கரையிலிருந்து மேற்சொன்ன கடல்பரப்பு வரை என்பது மட்டும் கிடையாது.

ஒரு நாடு எங்கோ கடலில் ஒரு தீவை உரிமையாக வைத்திருந்தாலும் அந்தத் தீவின் கடற்கரையிலிருந்தும் கடல்பரப்பை உரிமை கொண்டாடலாம், ஆக்கிரமிக்கலாம்.

உதாரணமாக பிரான்ஸ் என்ற ஐரோப்பிய நாடு அட்லாண்டிக் கடலில், இந்தியப்பெருங்கடலில், பசிபிக் பெருங்கடலில், கரீபிய கடலில் பல தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதால் அத்தனை தீவுகள், அதற்கான கடல் பரப்பு என எல்லாவற்றையும் சேர்த்தால், 

வெறும் 0.45 % நிலம் மட்டுமே உள்ள அந்த நாடு உலகின் 8 % கடல் பரப்பை ஆக்கிரமிக்கிறது. காண்க:

கீழே அதற்கான நிலப்படங்கள்: படத்தை அழுத்தி விரிவுபடுத்தியும் காணலாம்.

பிரான்ஸ் ஆக்கிரமித்துள்ள தீவுகளின் காரணமாக அந்நாட்டிற்கு கிடைத்துள்ள கடல்பரப்பு

அமெரிக்காவும் அதே போலத்தான் பெருமளவில் அந்த நாட்டிற்கே கடற்கரை இருந்தாலும் அமெரிக்க ஆக்கிரமித்துள்ள தீவுகள், தீவுகளின் கடற்பரப்பு என கணக்கிட்டால் அந்நாட்டின் பரப்பளவை விட ஒன்றரை மடங்கு அதிகமான நில, கடல் பரப்பை ஆக்கிரமித்து உலகின் மிகப் பரந்த நாடாக அமெரிக்க இருக்கிறது. காண்க:

இந்தியாவும் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் கூட லட்சத்தீவுகள், அந்தமான், நிகோபார் தீவுகள் காரணமாக அதன் நிலப்பரப்பில் 60 % கொண்ட கடல் பரப்பை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்தியாவின் கடல்பரப்பை இலங்கை தான் மட்டுப்படுத்துகிறது. இதனால் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். (அந்த பாதிப்புகளை இந்தக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

கீழே உள்ள நில, கடல் படங்கள் இதனை தெளிவாகக் காட்டும்.

வெறும் நிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்ட உலகின் 7 பெரிய நாடுகளை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

ஆனால் நிலம் மற்றும் கடல் பரப்புகளின் அடிப்படையில் உலகின் பெரிய நாடுகளின் பட்டியல்:

நிலப்பரப்பில் 7 வதாக இருக்கும் இந்தியா நில, கடல் பரப்புகளின் அடிப்படையில் 19 வது நாடுதான்.

Country EEZ km2 Shelf km2 EEZ+TIA km2
1.  United States 11,351,000 2,193,526 21,814,306
2.  France 11,035,000 389,422 11,655,724
3.  Australia 8,505,348 2,194,008 16,197,464
4.  Russia 7,566,673 3,817,843 24,664,915
5.  United Kingdom 6,805,586 722,891 7,048,486
6.  Indonesia 6,159,032 2,039,381 8,063,601
7.  Canada 5,599,077 2,644,795 15,607,077
8.  Japan 4,479,388 454,976 4,857,318
9.  New Zealand 4,083,744 277,610 4,352,424
10.  China 2,287,969 831,340 13,520,487
11.  Chile 3,681,989 252,947 4,431,381
12.  Brazil 3,660,955 774,563 12,175,832
13.  Kiribati 3,441,810 7,523 3,442,536
14.  Mexico 3,269,386 419,102 5,141,968
15.  Federated States of Micronesia 2,996,419 19,403 2,997,121
16.  Denmark 2,551,238 495,657 4,761,811
17.  Papua New Guinea 2,402,288 191,256 2,865,128
18.  Norway 2,385,178 434,020 2,770,404
19.  India 2,305,143 402,996 5,592,406

மேலும் விபரம் காண :

இதன்படி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாத உலகக் கடலின் பரப்பு அல்லது சர்வதேச கடல் என்பது உலக நாடுகளின் கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பொதுப்பரப்பு. கீழே வரைபடத்தில் கருநீலத்தில் காணப்படும் பகுதி மட்டும் தான் சர்வதேச கடல்.

ஆனால் இந்த பொது கடல் பரப்பிலும் கடற்கொள்ளை, ஆக்கிரமிப்பு, காலனி ஆதிக்கம் தொடர்கிறது.

இந்த பொதுக்கடல்பரப்பில் கடற்கொள்ளை, இத்தாலிய மாலுமிகள் இந்திய மீனவர்களை கொன்றது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டால் எந்த நாடும் அந்தந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்தான். காண்க:

ஆனால் வழக்கம்போல வலிமையான நாடுகளே உயர் கடல் தொழில்நுட்பம் மற்றும் நவீன மீன்பிடி கப்பல்கள் மூலம் கடல்வளங்களை கபளீகரம் செய்கின்றன. காண்க:

ஆதிக்க செல்வந்த நாடுகளே கடல் மீன் வள கொள்ளையிலும் முதலில் இருக்கிறார்கள். காண்க:

இதற்கென செய்மதி போன்ற தொழில் நுட்பங்களையும் பயன்படித்திக் கொள்கின்றனர்.

கடற்கொள்ளையினை இயற்கை பேரழிவுகளை விளக்கும் விதமாய் சில படங்கள்.

இந்தியக் கடற்பரப்பும், இலங்கையும்: பாதிக்கப்படும் தமிழர்களும் 

இந்தியக்கடற்பரப்பு இலங்கை தீவால் சுருங்கி விடுவதைக்கண்டோம். இதன் முழு பாதிப்பும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும்தான்.

மற்ற மாநில கடல் பிரதேசத்தில் 370 கிலோமீட்டர் வரை மீன் பிடிக்க உரிமை இருக்கும்போது தமிழர்களுக்கு 10 கிலோமீட்டர்தான். உடனடியாக இலங்கை பகுதி வந்துவிடுகிறது.

கன்னியாகுமரி, கடலூர், நாகப்பட்டினம், சென்னைப்பக்கம் தான் தமிழர்கள் மீன் பிடிக்க இடம் இருக்கிறது. வேதாரண்யம் முதல் உவரி, திருச்செந்தூர் வரை உள்ள மீனவர்களுக்கு பிரச்சினைதான்.

இதில் இன்று 30 ஏப்ரல் 2015 தேதியிட்ட தினமலர் நாளிதழ் கச்சத்தீவு கிடைத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா என்று கேலி பேசுகிறது. நிச்சயமாக தீர பெரும் வாய்ப்பு உள்ளது.

கீழே உள்ள படத்தில் சர்வதேச எல்லை கச்சத்தீவின் காரணமாக எந்த அளவிற்கு தமிழர்களின் கடல்பரப்பை இலங்கை எடுத்துக்கொள்ள உதவி இருக்கிறது என காட்டுகிறது.

கச்சதீவு நம் பக்கம் இருந்தால் நமக்கு தீவு மட்டுமல்ல தீவோடு சேர்ந்து வரும் கடல்பரப்பும் நமக்கு கிடைக்கும். 

அது பல தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும்.

கச்சத்தீவு மூலமாக நமக்கு கிடைப்பது தீவு நிலம் மட்டுமல்ல, மற்றும் கடல் பரப்பு மட்டுமல்ல, கடல் மற்றும் கடல் நிலத்திற்கு அடியிலுள்ள அபிரிமிதமான எண்ணெய் வளம். காவிரி படுகை என்று சொல்லப்படும் பெட்ரோல் எண்ணெய் பகுதியும் நம் கைவிட்டு போகாமல் நம் உரிமை நமக்கே கிடைக்கும்.

நம் அனுமதி இல்லாமல் நம் நிலத்தை அந்நியனுக்கு தானமாகக் கொடுத்த இந்தியத் தேசியத்திடம் போராடி மீட்போம். நம் உரிமையை நிலைநாட்டுவோம். தமிழக மீனவர் உயிரைக் காப்போம்.