பெற்றோர் தந்த பெயர் தக்சிணாமூர்த்தி 

எம்.ஆர்.ராதாவால் தூக்குமேடை நாடகத்துக்குப்பின் வந்த பெயர் கலைஞர் 

ஈழத் தமிழர்களை தூக்குமேடைக்கு அனுப்பியபின் நொந்த பெயர் கொலைஞர்

எண்ணத்தில் எப்போதும் சொந்தங்கள் 

எண்ண முடியாமல் சொத்துக்கள்.

சம்பாதித்த பெரும்பெயர் ராஜதந்திரி 

எந்நாளும் தொடர்பில் ராஜமுந்திரி (தெலுங்கு)

அன்றைய நாடகங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்றைய நாடகங்களால் வீழ்ந்து கொண்டிருக்கிறார்.

பண்ணியதெல்லாம் விஞ்ஞான ஊழல் 

சொல்லுவதோ தானொரு அஞ்ஞானி

பாசத்தகப்பனாய் தன் பிள்ளைகளுக்கு 

வேசத்தலைவனாய் தமிழ்ப் பிள்ளைகளுக்கு

திறமைகளால் வரும் தலைகளும் இருக்க அடுத்தவர்

தவறுகளால் தப்பிப்பிழைக்கும் தறுதலைகளுமுண்டு 

‘தமிழ்க்கருணா’வை காப்பாத்த எப்போதும் ஜெயா. 

ஆளுக்கு அஞ்சு வருசம், ஆட்சி ரகசிய கூட்டணி 

நடத்துறீங்களே காட்சி நல்லாத்தான் போவுது ‘மாட்னி’

வெளிப்படையாய் அரசியலில் இவர்கள் botany (நாயும், பூனையும்)

மிடாஸில் மட்டும் எப்படி இருவருக்கிடையே  chemistry (சசியும், பாலுவும்)

தென்னிந்தியாவெங்கும் தொலைக்காட்சி அந்தந்த மொழிகளில் 

இருக்கும் தமிழ்நாட்டிலோ ஆங்கிலக்காட்சி 

அய்யாவின் தமிழ்ப்பற்று வண்டவாளத்தில்

இதுக்கு எப்ப தலை வப்பீங்க தண்டவாளத்தில்

பெரியார் முதல் பாலு மகேந்திரா வரை சாகத்தானே போறோம்  

நல்லதும் செஞ்சிட்டுத்தான் போவோமே

Advertisements