சமசுகிருதம் ஒரு மொழியே அல்ல: 33 காரணங்கள்

1)  சமசுகிருதம் என்ற வார்த்தைக்கே மூலச்சொல் சமசுகிருதத்தில் இல்லை. தமிழில் தான் உள்ளது.

கிருதம் என்றால் மொழி, சம் என்றால் சமைக்கப்பட்டது, செய்யப்பட்டது, மேம்படுத்தப்பட்டது. ஆக

சமசுகிருதம் என்றால் மேம்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்து மேம்பாடு, மாறுபாடு

செய்யப்பட்டது என்று பொருளாகிறது. எது ஏற்கனவே இருந்தது? பிராகிருதம், அதாவது வட இந்தியத்தமிழ்.

பிராகிருதம் என்றால் முதலாவதாக செய்யப்பட்டது என்று பொருள். காண்க: மற்றும் காண்க:

பிராகிருதம் என்றால் முதல் மொழி என்றே பொருள்.

தென்னிந்தியத்தமிழர் வட இந்தியத்தமிழ் மொழியை வடமொழி என்று அழைத்தனர்.

வட இந்தியத்தமிழர் வட இந்தியத்தமிழை பிராகிருதம் அதாவது முதல் மொழி என்று அழைத்தனர்.

2) தமிழில் மட்டுமே அதன் எல்லாச்சொற்களுக்கும் மூலச்சொல், வேர்ச்சொல் தமிழிலேயே உள்ளது.

# தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 155 ல் தொல்காப்பியர்

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதைப்போல (காண்க:)

தமிழின் எல்லாச்சொற்களும் பொருளோடு அர்த்தத்தோடு உள்ளவையே.

“இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று
அணைத்தே செய்யுள் ஈட்டச்சொல்லே” – தொல். 880.

தொல்காப்பியம் என்பது இடைச்சங்க நூல் என்பதால் அதன் காலம் கி.மு. 3000 த்தைச் சேர்ந்தது.

# தமிழே உலகின் முதல் மொழி என்பதற்கான 15 காரணங்களைக் கூறும் தமிழ் வேர்ச்சொல்லறிஞர்

தேவநேயப்பாவாணர் 6 வது காரணமாய் சொல்வது:

“ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல்.காண்க:

3) வேதம் என்ற வார்த்தைக்கும் மூலச்சொல் தமிழில்தான் உள்ளது. வித்து, விதை என்பதே அம்மூலம். 

அதனால் கல்விச்சாலை வித்யாலயா எனப்படுகிறது. சுத்த தமிழ் வார்த்தை. (வித்து+ஆலயம்) –  அகம் லயித்து,

ஒருமனப்பட்டு விதை நாற்றங் காலாய் கல்வி பயிலுமிடம்.

4) சமசுகிருத வார்த்தைகளின் வேர்ச்சொற்கள் தமிழில்தான் உள்ளது.

 # மன்னுதல் என்றால் எண்ணுதல், சிந்தித்தல், பகுத்து ஆய்தல் என்று பொருள். காண்க:

சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உயிரினம் மனிதன்.

அனுமன் என்றால் மனிதனைப் போன்றவன் என்று பொருள். எ. கா. பல்லவி, அனுபல்லவி.

mon-key என்ற ஆங்கிலச்சொல்லும், மன்காட் என்ற இந்திச்சொல்லும்

மனிதனைப்போன்றது என்றே பொருள் தரும்.

தமிழில் வானரம் என்று குரங்குக்கான வார்த்தை அறிவியல் பூர்வமானது.

வானரம்=வால் + நரம், (நரன்=மனிதன்).

இந்த வார்த்தை அப்படியே சமசுகிருதத்தில்  வானர என உள்ளது.

# கல்லிலிருந்து உருவான கலயம் என்ற தமிழ், சமசுகிருதத்தில் கலசம்ஆகிறது.

# சொல், சொலவடை அப்படியே சுலோகம் ஆகிறது சமசுகிருதத்தில்.
5) சமசுகிருதம் என்ற மொழி பேசுகின்ற, பேசப்பட்ட ஒரு நாடோ, மாநிலமோ, ஊரோ, வீடோ 
எக்காலத்திலும் இருந்ததில்லை.

# படகா,தோடா போன்ற சிறிய மொழிகள் கூட பேசப்படும் இடம், பேச மக்கள்

என்று இருக்கும்போது சமசுகிருதத்திற்கு அப்படி பேசப்படும் ஒரே ஒரு ஊரோ

ஒரு மக்கள் கூட்டமோ ஏன் ஒரு வீடோ கூட இல்லை என்பதே உண்மை.

# செத்த மொழிகள்:

லத்தீன், பழைய கிரேக்கம், பழைய ஹீப்ரு, அரமாய்க், சுமேரியன் போன்ற மொழிகள்

செத்த மொழிகள் எனப்படுகின்றன என்றால் ஒரு காலத்தில் பேசப்பட்டது,

இப்போது வழக்கில் இல்லை என்று அர்த்தம்.

அந்த வகையில் கூட சொல்லப்பட முடியாத ஒன்று இந்த சமசுகிருதம்.

காரணம் ஒருபோதும், எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு ஊரிலும்,

எந்தவொரு வீட்டிலும் பேசப்படவில்லையே.

# சாத்தூர் சேகரன் சொல்லுவார், செத்த மொழி என்று சொல்வதற்குக்கூட

ஒரு சில இலக்கணங்கள், வரைமுறைகள் தேவை என்று. உதாரணமாக,

1. செத்த மொழியின் வாரிசாக ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டோ சில மொழிகள் இருக்க வேண்டும்.

2. வாரிசு மொழிகளில் செத்த மொழியின் சிறப்புக்குரிய மரபுகள் பல காணப்பட வேண்டும்.

சமசுகிருதத்திற்கு வாரிசு கிடையாது. அம்மா இருந்தாத்தானே பிள்ளைங்க.

# தமிழோடு இணையாக அல்ல, ஒரு மொழியாகவே கருதப்பட தகுதியற்ற  வார்த்தைத் தொகுப்புதான்,

வார்த்தைத் திணிப்புதான்  சமசுகிருதம் என்பது.

# அதேபோல வடமொழி என்று ஒன்று இல்லை. வடஇந்தியத் தமிழ் என்றே அது அழைக்கப்படவேண்டும்.

காரணம், சமசுகிருதம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்தான் செய்யப்பட்டது. ஆனால் வட இந்தியத்தமிழ் என்பது

கி.மு 5000 க்கு முன்பே வழக்கத்தில் இருந்த மொழியாகும். ஆரியர்களின் மோசடியான பரப்புரையால்

வடமொழி சமசுகிருதமாக்கப்பட்டு இருக்கிறது.

6) சமசுகிருதம் என்பது ஓது மொழியே அன்றி எழுத்து மற்றும் பேச்சு மொழி அல்ல.

சமசுகிருதம் என்பது ஸ்ருதி – வாயால் உச்சரிக்கப்பட வேண்டுமே ஒழிய எழுதப்பட முடியாத மொழி.

சமசுகிருதம் என்பது ஸ்ம்ருதி  – காதால் கேட்கப்படவேண்டுமே ஒழிய எழுதப்பட முடியாத மொழி.

சமசுகிருதம் என்பது தேவ பாஷை  – ஆதலால் “தேவர்களின் மொழி”? யே யன்றி மனிதரின் மொழியல்ல.

ஆக சமசுகிருதம் என்பது ஒரு மொழியே அல்ல.


7) சமசுகிருதத்திற்கு எந்த ஒரு கிளை மொழியும் இல்லை. 

தற்போதுள்ள எந்த மொழியும் சமசுகிருதத்திலிருந்து உருவானது என்று சொல்ல முடியாது,

நிரூபிக்கவும் முடியாது, தமிழிருந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகள் உருவானதைப்போல.

சட்டியிலே இருந்தாத்தானே அகப்பையில் வரும்.

ஒரு சில வார்த்தைகள் இருப்பதைக்கொண்டு மட்டும் முடிவு செய்துவிட முடியாது.

8) சமசுகிருதம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தது.

1. ஆதி இராமாயணம் 8,000 பாடல்களை மட்டுமே கொண்டது. இன்று இருப்பது 27,000 பாடல்கள்.

ஆதி மகாபாரதம் 28,000 பாடல்களை மட்டுமே கொண்டது. இன்று இருப்பது 1,08,000 பாடல்கள்.

ஆக சமசுகிருதத் திணிப்புகள், சமுசுகிருத மேலாதிக்கம் பல வழிகளில் புகுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்

ஆர். ஜி. பண்டாரகர் (R.G. Bhandarkar) மற்றும் சாத்தூர் சேகரன் அவர்கள்.

(பக்கம். 15. உசாத்துணை கட்டுரையின் கீழ்)

2. பொய் + மெய் சேர்ந்ததே பொம்மை. அதாவது, மெய் போலத் தோன்றும் பொய்யைக் குறிப்பதால்

இரண்டும் சேர்ந்து பொம்மை என வழங்கப்படல் ஆயிற்று.

சமசுகிருதம் என்பதனை பாவாணர் மட்டுமே பாவை மொழி அல்லது பொம்மை மொழி என்றார்.

3. s . s. சர்மா என்பவர் உலகில் சமசுகிருதம் பேசும் ஒருவர் கூட இல்லை. சில சுலோகங்களை

சொல்லி அரசவையில் பிழைப்பு நடத்தியவர் உண்டு. பக்கம் 9.

4. சமசுகிருதம் பேசப்படும் ஊராக கர்நாடகாவில் மாத்தூர் என்ற ஊரை ஏற்படுத்தினர், பொய்

உரைத்தனர். த ஹிந்து ஆங்கில நாளிதழ் 2008 மார்ச் 2 தேதியிட்ட வெளியீட்டில் கர்நாடகாவில் உள்ள

மாத்தூரில் முழுக்க முழுக்க சமசுகிருதம் மட்டுமே பேசப்படுவதாக வெளியிட்டு புளகாங்கித பெருமிதம்

அடைந்திருக்கிறது. காண்க: 

திரு. சாத்தூர் சேகரன் அவ்வூர் மக்களிடம் விசாரித்த போது அவர்கள், இவை அனைத்தும் ஒரு சில ஒய்வு

பெற்ற அதிகாரிகளின் தவறான போக்கு, என்றனர். பக்கம் 38.


9) சமசுகிருதத்தை வளர்க்க தமிழை அழித்தனர் 

1. ஆரியர்களாக நுழைந்து வட இந்தியாவை ஆக்கிரமித்த இவர்கள் சில காலங்களிலேயே பிராகிருதத்திலும்,

தமிழிலும் இருந்த பல்வேறு தத்துவ, இலக்கிய, வாழ்வியல் நூல்களை அவர்கள் புதிதாக கற்றுக்கொண்டு

உருவாக்கிய சமசுகிருதம் என்ற மொழிக்கு மாற்றிக்கொண்டு இங்கிருந்த நூல்களையெல்லாம்

அழிக்கத்தொடங்கினர். இந்த நூல் இந்த முனிவன் இன்னாருக்கு உபதேசித்தது என்ற வரியையும்

சேர்த்துக்கொண்டனர். பக்கம் : 28. இப்படித்தான் ஊரை ஏமாற்றி அனைத்து உள்ளூர் இலக்கியங்களையும்

அவாள் இலக்கியமாக மாற்றியது.

2. 12 ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில்  தமிழ்நாட்டில் ஆரியர் மத ரீதியிலான (சைவ, வைணவ, சமண)

குழப்பங்களை உருவாக்கி எதிர்த்தவர்களை கழுவிலேற்றி, அனல், புனல் வாத ஏமாற்று வேலைகளால்

கொன்று குவித்தனர். தமிழரின் வானவியல், அறிவியல் கருத்துக்கள் எல்லாம் அவர்களுக்கேற்ற வகையில்

மதக்கோட்பாடுகளாக்கப்பட்டு, தமிழரின் அறிவியல் நூல்கள் எல்லாம் ‘ஆடிபெருக்கில் அனைத்தையும் போடு’

என்று அழிக்கப்பட்ட காலம். காண்க:)

3. மேலும் சமசுகிருதமே முதல் மொழி என்று பொய்மொழி பேசியதோடு இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும்

சமசுகிருதமே மூலம் என்று சில ஐரோப்பிய அறிஞர்களை ஏமாற்றியதும்.

சமசுகிருதம் பிற மொழிகளிலிருந்து சொற்களை கடன் வாங்கவில்லை என்றனர். ஆனால் கிட்டால், கால்டுவெல், டர்னர் (Kittal, Caldwell, R.L. Turner) போன்றோர் உண்மையை வெளிக்கொண்டுவந்து சமசுகிருதத்தின் பித்தலாட்டத்தை

வெளிப்படுத்தினர்.

டாக்டர். ஜி. யு. போப் (Dr. G.U. Pope) போன்றோர் தமிழுக்கும் ஐரோப்பிய மொழிக்கும் உள்ள தொடர்புகளை பதிவு செய்தனர்.

10) காஞ்சி சங்கராச்சரியாரின் கூற்று:

“எந்த நேரத்திலும் எந்தக்காலத்திலும் ஸமசுகிருதம் தேசபாஷையாக பேசப்படவில்லை என்று தெரிகிறது.”

என்று “ஸமசுகிருத பாஷாப் பிரயோஜனம்” என்ற தலைப்பில் பெரியவர் சந்திரசேகர சங்கராச்சாரியார்

கூறியுள்ளார். 29.10.1932 ம் ஆண்டு வெளியிடப்பட்ட சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள்: 

சங்கர விஜயம் 2 ம் பாகம், லா ஜேர்னல் ஆபிஸ் அச்சகம், மயிலாப்பூர், சென்னை.

2. “It is more than doubtful if any people in India spoke sanskrit in anytime and if it was not merely a

literary and religious vehicle. ” The Origin of Saivism and its history in the Tamil Land, 1929, page 21.

3. பிராமணர் என்ற சொல் தோற்றம்: ஆரியர் வடஇந்தியாவில் நுழைந்த காலத்தில் சமணர்களே அதிகம்

இருந்ததால் அவர்களைத்தவிர்த்த பிற சமயத்தினர் என்பதைக் காட்ட பிற + அமணர் = பிறாமணர் என்று

ஆக்கிக்கொண்டனர்.

11) ஆரியர் வந்தேறிகள் என்பதை மறைக்க இந்தியாவின் பூர்வகுடிகள் என்ற பொய் வரலாறுகள்.

1. வட இந்தியாவில் ஆரியர் இருந்ததற்கான பொய்க்கதை.

மராத்தி, குசராத்தி போன்றவை பஞ்ச திராவிட மொழிகள்

(மராத்தி, குசராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ்) காண்க:

வங்காளம், ஒரியா, அசாமி போன்றவை பஞ்ச கவுட மொழிகளாகும்.

இவை அனைத்தும் சேர்ந்த பகுதி அதாவது காஷ்மீரிலிருந்து (ஸரஸ்வதியிலிருந்து) பெங்கால் வரை

பரவியிருந்த பகுதி கௌட நாடு எனப்பட்டது என்று ஆதி கௌட தீபிகா கூறுகிறது. காண்க:

பஞ்ச கௌடம்: சரஸ்வதம், கான்யகுப்ஜம், கௌடம், உத்கலம், மிதிலை. காண்க:

இந்த கௌட நாடு ஆரியரின் பூர்வ வாழிடம் என்ற பொய்க்கதை.

2. தென்னிந்தியாவிலும் அவர்கள் இருந்தனர் என்பதற்கான பொய்க்கதை.

1. தென்னிந்தியப் பிராமணர்கள் தங்களைத் திராவிடர் என அழைத்துக் கொள்வதை

பதிவு செய்திருக்கிறார் எட்கர் தர்ஸ்டன்.

(குலங்களும் குடிகளும் தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987, பக் 251)

2. துடுப்பாட்ட வீரர் ராகுல் திராவிட் பெயர் இன்றும் மேற்சொன்ன கருத்துகளுக்கு ஆதாரமாக

இருக்கிறது. அவர் தன் நேர்காணலில் தன் முன்னோர்கள் கும்பகோணம் ஐயர் வகுப்பைச் சார்ந்தவர்கள்

என்றும் அதனால்தான் ‘திராவிட்’ என்ற பெயரொட்டைக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.  காண்க:

         3. கவுட சாரஸ்வத் பிராமணர் என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழியாகக்

கொண்ட பிராமணர்கள் ஆவர். தொழிலதிபர் விஜய் மல்லையா, நடிகை தீபிகா படுகோனே, துடுப்பாட்டகாரர்
சச்சின் டெண்டுல்கர் போன்றோர் இந்தப்பிரிவினரே. காண்க:

12) கால்டுவெல் முதல் கருணாநிதி வரை:”தமிழ்-திராவிட”க் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர்

மொழிக்குடும்பங்களை வகைப்படுத்தும்போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக்

கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர – திராவிட பாஷா’ என்று

குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய

பேச்சுமொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட

மொழிக்குடும்பம்’என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத

புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு 

பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன்(தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல

விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு

திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தமிழரைக் குறிக்க கால்டுவெல் ‘திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தெரிவு செய்தார் என்பதே ஆகும்.

காண்க:

4. எல்லிஸ் கூற்றுக்கும், கால்டுவெல் கூற்றுக்கும் வேறுபாடுகள் உண்டு. 

கால்டுவெல் தென்னிந்திய மொழிக் குடும் பத்தை ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்றும்,

தென்னிந்திய மக்களைத் ‘திராவிடர்கள்’ என்றும் பெயரிட்டழைத்தார்.

ஆனால் எல்லிஸ், தென்னிந்திய மொழிகள் ஒரு மொழிக்குடும்பம் என்று அடையாளப்படுத்தி,

அம் மொழிகளை ‘Dialects of Southern India’ என்று அழைத்தார்.

தமிழும், தெலுங்கும் அவற்றின் ஒரே மூலத்தைக் கொண்ட பிறமொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து

பிறந்தவை அல்ல என்றும், இவை தனித்துவமான ஒரு மொழிக்குடும்பம் என்றும் 1816-லேயே அறிவித்தார்.

இதுவரை தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கடிதத்திலும் அல்லது அவரது எழுத்து வடிவங்களிலும்

ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்ற சொல்லை எல்லிஸ் பயன்படுத்தவில்லை.

கருணாநிதியின் “திராவிடத்” தந்திரம் 

2010 ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்

செம்மொழி மாநாட்டின் இரண்டாவது நாள் நடைபெற்ற ஆய்வரங்கத்தின் தொடக்க விழாவில்

தொடக்க உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி இப்படி கருத்துரைத்தார்:

“கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786-ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ – ஐரோப்பிய

மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது.

திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816-ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து

1856-ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்”.

(தினத்தந்தி, தஞ்சாவூர், 25.06.2010).

திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத் தாக்கத்தை எல்லிசு எந்த காலத்தில் முன் வைத்தார்?

தென்னிந்திய மொழிகள் ஒரு தனித்துவமான மொழிக் குடும்பம் என்பது தான் எல்லிசின் பார்வை.

அது சரியான பார்வை.

திராவிட மொழிக்குடும்பம் என்பது கால்டுவெல்லின் பார்வை; அது பிழையாகப் பெயரிடப்பட்ட ஒன்று.

கால்டுவெல் செய்த பிழையை நாற்பதாண்டுகளுக்கு முன்பே சரியான கருத்தைப் பதிவு செய்த

எல்லிசின் தலையில் கட்டும் தெலுங்கு திராவிட கருணாநிதியின் கருத்து பிழையானது, தந்திரமானது.

இந்த கருத்துப் பிழையை அவர் மட்டுமா செய்கிறார்? ஆய்வாளர்களும் செய்கிறார்கள். காண்க:

5. ஆனால் உண்மையில் திராவிடம் என்பது பேச்சு வழக்கில் தமிழிலிருந்து திரிந்த சொல்பதமே

சொன்முதல் உயிர்மெய்யினின்று உயிரை நீக்கி ரகர மேற்றும் வடமொழி
வழக்கிற்கேற்ப, தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல் வடநாட்டில்
முதற்கண் ‘த்ரமிள’ என்று திரிந்து, பின்னர் முறையே த்ரமிட – த்ரவிட – த்ராவிட 
என வடிவு பெறலாயிற்று. ழகரம் பிறமொழிக்கின்மையால், வடநாட்டில் ளகரமாகத் திரிதல்
இயல்பே. காண்க:

13) தென்னிந்திய மொழிகளில் இருப்பது தமிழ் தவிர வேறில்லை.

1. தமிழில் வீடு, இல்லம், மனை என பல சொற்களில் அழைக்கப்படும் வீடு  அண்டை மாநிலங்களில் :

தெலுங்கு:    இல்லு / இண்டி

கன்னடம்:     மனே

மலையாளம்: வீடு.

2. தமிழில்:   எங்கு / அங்கு / இங்கு

தெலுங்கு: எக்கட/அக்கட/ இக்கட

கன்னடம்: எல்லி / அல்லி / இல்லி

மலையாளம்: எவ்விட / அவ்விட / இவ்விட

3. தமிழ்: பத்து

தெலுங்கு: பதி

கன்னடம்: ஹத்து

மலையாளம்: பத்து

4. தமிழ்: ஒன்று

தெலுங்கு: ஒக

கன்னடம்: ஒந்து

மலையாளம்: ஒண்ணு

1 முதல் 10 வரையிலான எண்களுக்கு இந்தியாவிலுள்ள முன்னாள், இந்நாள் தமிழ் வழி சொற்கள்:

மேலும் விபரமறிய:

எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oṇṭa okkod asiṭ
2 இரண்டு ரெண்டு எரடு raṇdu randu ரண்டு indiŋ irāṭ irāṭ
3 மூன்று மூடு மூரு mūji nnu மூந்நு mūnd mūndiŋ musiṭ
4 நான்கு நாலுகு நாலக்கு nālu nālu நாலு kh nāliŋ čār (II)
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II)
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II)
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ēḍ(3) haft (II)
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēṇma eṭṭu எட்டு aṭṭhē (II) enumadī (3) hašt (II)
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒன்பது naiṃyē (II) tomdī (3) nōh (II)
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II)


14)   தமிழ் மொழி பரவல் தொடர்பான நில வரைபடங்கள்.

15) கி. மு. 500 க்கு முன்னர் இந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது என்பதற்கு சாட்சியாக


இந்தியா முழுவதும் மக்கள் பெயர், ஊர்ப்பெயர்களில் உள்ளது 

முற்றிலும் தமிழே, தமிழ் மட்டுமே.

1. சாஸ்திரி – சா (நான்கு) + திறம் தெரிந்தவர்

2. சர்மா – ஆரியர் வட இந்தியரோடு கலந்ததால் கருத்த நிறம் பெற்றனர்.

நிறமாற்றம் பெற்றவர் சரும மாற்றத்தால் சர்மா என பெயர் மாற்றம் பெற்றனர்.
3. வனஜா, கிரிஜா – மூலப்பெயர்கள் வனயா, கிரியா. ஆய், ஆயா என்பது தாய், பெண்

எனப்பொருள் படும். வனப்பு, அழகு மிக்க பெண், என்ற பொருளிலும், மலை – கிரி – மலை

போன்று புயலாலும் அசராத பெண்.

4. பங்கஜம் – தாமரை = பங்கஜம் – பன் + கை+ அம் = பல இதழ்களை உடைய மலர்.

5. சங்கரன்=சங்கு+கரன், இது இன்று இன்னும் சுருக்கப்பட்டு சங்கர், ஷங்கர் என்றாகிவிட்டது.

6. பட்நாயக்-பட்டி+நாயகன். அதாவது ஊர்த்தலைவன்.

7. சிங்கம் என்ற தமிழ் சொல்லே வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் சிங் என மாறியுள்ளது.

மன்மோகன்சிங், ஜெயில்சிங், பகத்சிங்

8. ரஹ்மான் – இரக்கமான மனிதன் – (ஏ. ஆர். ரஹ்மான்)

9. சுலைமான் – சூல் வழி வந்த மனிதன், ஆங்கிலத்தில் Solomon, தமிழில் அப்படியே சாலமன்.

(விவிலிய அரசன் சாலமோன், சாலமன் பாப்பையா)

10. நுஹ்மான் – நுட்பம் நிறைந்தவன்

11. கேசரி – கேசம் உள்ள அரி (அரிமா என்றால் சிங்கம், கேசம் உள்ள சிங்கம், பிடரி உள்ள சிங்கம்)

சீதாராம் கேசரி, கேசரிவர்மன்.

இதிலிருந்தே ஜெர்மானிய கெய்சர் மன்னன் (Keiser. காண்க:),

இத்தாலிய சீசர் மன்னன் (Caesar- இத்தாலியில் சேசரே என உச்சரிப்பு),

ரஷ்ய ஜார் மன்னன் (Tzar/Czar. காண்க:)

12. சகுந்தலா – ச+கூந்தலா – அடர் கூந்தலை உடைய பெண்.

13. கேசம் – முடி. நீலகேசி -கருநீல கூந்தலை உடையவர். புலிகேசி புலி போன்ற கேசம் உடையவர்.

14. விநாயக் – வி + நாயகன் = அகன்ற நாயகன்.

15.விசுவாமித்திரர் – விசுவம் – அகன்ற உலகம் + மித்திரன் – அரசன்

16. இலட்சுமி -எல் என்றால் ஒளி, வெளிச்சம் – ஒளியின் நாயகி.

17. ரேவதி – ஏர் + அத்தி(வதி) – அழகான பெண்

18. கஜேந்திரன் – கஜ + இந்திரன்

(கஜ என்றால் யானை என்று பொருள். மூலச்சொல் – கைமா – கையுள்ள பெரிய விலங்கு.

சாதி ஜாதி ஆவது போல் கைமா கஜமா ஆகிவிட்டது.

அஷ்டதிக்கஜங்கள் – எட்டு கரங்கள், எட்டு வழிமுறைகள்)

இப்படி ஏராளமாய் சொல்லிக்கொண்டே போகலாம். எந்த சமசுகிருத வார்த்தையையும் பிரித்து

எழுதினால் கண்டிப்பாக தமிழே அங்கு இருக்கும்.

 16) இந்தியா முழுவதும் ஊர்ப்பெயர்களில் தமிழே, தமிழ் மட்டுமே.

1. ஊர்,(ப் + ஊர் = பூர்) என்றால் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள ஊர் என்று பொருள்.

(எ. கா)

 1.  ஜெய்ப்பூர், உதய்ப்பூர் [ராஜஸ்தான்].
 2.  மணிப்பூர் [வடகிழக்கு மாநிலம்],
 3.  லாகூர் [பாகிஸ்தான்]
 4. கிண் ஆவூர் [பஞ்சாப்]
 5. பாடலிபுத்திரம் என்ற பாதிரி புத்தூர் (பாட்னா) [பீகார்]
 6. திரிச்சூர் [கேரளா]
 7. பெங்களூர், மைசூர் [கர்நாடகா]
 8. நெல்லூர், சித்தூர் [ஆந்திரா]
 9. நாக்பூர், லாத்தூர் [மகாராஷ்டிரா]
 10. கான்பூர் [உத்தரப்பிரதேசம்]
 11. திமாப்பூர் [அசாம்]
 12. இந்த ஊர் என்பது இலத்தீனில் Urbs, Urbis  என்று ஆகி ஆங்கிலத்தில் Urban (நகரம் சார்ந்த), Rural (கிராமம் சார்ந்த) என்று வழங்கப்பட்டு வருகிறது. காண்க:

2. புரி – என்றால் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஊர், நகரம் என்று பொருள்.

 1.  நாகபுரி மற்றும் பல.

3. வாடி, பாடி- என்றால் படை வந்திறங்கிய இடம் என்பது பொருள். இந்த பாடி வட நாட்டில் திரிந்து பாத்
ஆகியுள்ளது. வாடிப்பட்டி, தாளவாடி, அலகாபாத்…
4. கோட்டை: பதான்கோட் (pathankot), ராஜ்கோட் (rajkot)

5. தானம் – என்றால் போர் நடந்த இடம் என பொருள்.

தானைத்தலைவன் என்றால் படைகளின் தலைவன் என்றே பொருள்.

இன்றைய காலகட்டத்தில் ஈனத் தலைவனை எல்லாம் தானைத்தலைவன் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

தானம், ஸ்தானம், ஸ்தான். இராஜஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இஸ்தான்புல் (துருக்கி)

6. நகர்.

1. சீர்+ நகர் ஸ்ரீநகர். காசுமீரம்., Dadar Nagar Haveli, அஹ்மத்நகர்,

உலகின் 7வது பெரிய நாடான இந்தியாவில் உள்ள 6 லட்சம் சிற்றூர், 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களில்

ஒன்று கூட சமசுகிருதப்பெயர் இல்லை.

எந்த ஊர்ப்பெயரின் மூலமும் சமசுகிருதத்தை கொண்டிருக்கவில்லை.

17) தமிழ் மொழிப்பரவல் மாநில வாரியாக:


1. மேற்கு வங்காளம்

1. வங்க தேசம் – மேற்கு வங்காளம், பங்களாதேஷ் – வங்க – தேசம் – வேங்க தேசம் – புலிகளின் நாடு.

2. கல்கத்தா அ கொல்கத்தா வின் மூலப்பெயர் காளி கோட்டம். காளி அ துர்க்கை என்பவர் தமிழ்

கொற்றவை ஆவார். இந்தக் காளி என்பதே காலன் என்ற எமன் என்ற மனித வாழ்க்கை காலத்தை

நிர்ணயிக்கும் பொதுவான காலத்தினைக் குறிக்க தமிழர் பயன்படுத்திய ஆண்பால், மற்றும் பெண்பால்

பெயர்களே.

3. மேற்கு வங்காளம் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் நபர்களில் ஒருவர் சத்யஜித்ரே. பதேர் பாஞ்சலி 

என்ற புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த பதேர் பாஞ்சலி யின் பொருள் என்ன.

“பாதைக்கு பா அஞ்சலி” என்பதே. காண்க: சுத்தத் தமிழ்ப்பெயர்.

4. உபாத்தியாயா – உப + வாத்தியார் (துணை ஆசிரியன்)

5. சடகோபத்தியாய – சட்ட + உப + வாத்தியார் பின்னர் இது சட்டர்ஜி ஆகியுள்ளது.

6. Sunderban Forest – சுந்தரவனம் என்ற சுத்தத் தமிழ்ப்பெயர்; பொருள் அழகிய வனம், காடு.

(சுந்தரி நீயும் சுந்தரன் நானும்…).

Sunderban Forest என்பது சுந்தரவன வனம் என்று 2 முறை சொல்வது போல் உள்ளது. சுந்தரவனத்தில் உள்ள

ஒரு தீவின் பெயர் காக்கா தீவு (இடது ஒர சிவப்பு சாலை அருகே உள்ளது)

7. வங்காள மொழி அறிஞரான சுனிந்த் குமார் சட்டர்ஜி என்பவர் (இவர் தன் பெயரை தமிழ் மேல் உள்ள

விருப்பால் நன்னெறி முருகன் என்று மாற்றிக்கொண்டவர்). வங்காள மக்கள் தமிழ் மக்களே என்றவர்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இவர் படித்த 3 ம் கட்டுரை:

“மங்கோலியாவில் தமிழ் ஊர்ப்பெயர்கள்.” பக்கம் 39.

2. பீகார்

1. பாதிரிபுத்தூர் – பாடலிபுத்திரம் – பாட்னா
அங்க தேசம் – பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம். யானைகளின் நாடு. காண்க:

3. வட கிழக்கு மாநிலங்கள்

1. திரிபுரா  – திரி (3) + புரம்

2. மணிப்பூர் – மணி + புரம்

4. இமயம் – இமயம் என்ற வார்த்தை நெடிதோங்கி நிற்கும் சிகரங்களால் அமைந்த மலை என்று பொருள். 

தமிழில் சிமையம் என்றால் சிகரம் என்றே பொருள். காண்க:

இதிலிருந்து தான் இத்தாலியில் Cima என்றால் சிகரம், அப்படியே ஆங்கிலத்தில் summit,

ஸ்பானிய மொழியில் sierra என அனைத்தும் குறிப்பது சிகரத்தையே.

எனது இடைச்செருகல் : சீனா வும் ஒரு தமிழ்ப்பெயரே. பழைய காலத்தில் சீமைக்குப் போறார் என்றால்,

பனி படர்ந்த மலை நாடான சீனாவையே குறித்தது. சீமை… சீனாவாகி இருக்கலாம்.

5. கேரளா. இங்கு 90 சதவிகிதம் தமிழ் கலப்பே. நம் அனைவருக்கும் தெரிந்தவைகளே.

1. மலையாளம் – மலை + ஞாலம் (உலகம்)

2. எர்ணாகுளம் –  எரணன் + குளம்
6. ராஜஸ்தான் தான் – தளம்.

1. அபு மலை, ஆரவல்லி: இந்த கோடை வாழுமிடமான மலைப்பகுதி ஆரவல்லி மலைத்தொடரில்

அமைந்துள்ளது. குஜராத்திலிருந்து டில்லி, ஹரியானா வரை செல்லும் ஒரு மலைத்தொடர். இதன்

மூலப்பெயர் ஒரு தமிழ்பெயர். அது அற்புதாரண்யா (அற்புத+ஆரண்யம்= அற்புதக்காடு) காண்க:
2. இராஜஸ்தானில் ஏராளமாக தொல் தமிழர் வாழ்ந்த பகுதிகள் அதிகம் உண்டு.

களிபாங்கன், கண்வேரிவாலா, பிர்ரானா என அது தொடரும். காண்க:

“When Bhirrana [Rajasthan] was excavated, from 2003 to 2006, we [recovered artifacts that provided] 19 radiometric dates,” said Dikshit, who was until recently joint director general of the Archaeological Society of India. “Out of these 19 dates, six dates are from the early levels, and the time bracket is forming from 7500 BC to 6200 BC.” காண்க:
3. ஆரவல்லி மலைச் சிகரத்தின் பெயர் குரு சிகரம் (1723 மீ):

இந்த ஆரவல்லி மலையில் உள்ள மிக உயரமான சிகரத்தின் பெயர் Guru Shikhar, வேறோன்னுமில்லைங்க  

குரு சிகரம் தான். இதத்தான் அப்படி கொல பண்ணி வச்சிருக்காங்க.
4. ஆரவல்லி மலையில்  வாழும் “மீனா” இனம்:

இந்த ஆரவல்லி மலையில் வசிக்கும் பழங்குடி மக்களின் பெயர் “மீன்” அல்லது “மீனாண்ட” வர்கள்.

இவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்.  காண்க:

மீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பாண்டிய குல தெய்வம் மீனாட்சி – மீன்+ஆட்சி.

அதனால்தான் பழைய இந்திய வரைபடத்தில் மச்ச (மீன்) நாட்டினைச் சேர்ந்தவர்கள் (Matsya) என்று

குறிக்கப்படுகிறது.காண்க:

       6. அவர்களிடம் காணப்படும் பல்வேறு தமிழ்க்கூறுகளில் ஒன்று கோலம் போடுவது.

        7. தார் பாலைவனம்: இந்தத் தார் பாலைவனம் பற்றி தேடத்தேட ஆச்சரியமான விசயங்களே அதிகம்

கிடைத்தன. முதலாவதாக தார் என்பதன் பொருளே விண்மீனைக் குறிப்பது.

(வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப் பெயர் என்பார்கள். உண்மையில் சுத்தத் தமிழ்ப்பெயர்.

நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள்.

வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் ‘மண்ணில் வந்த நட்சத்திரம்‘. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக் கூட்டத்தைத்தான் குறிக்கிறது.

கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக் கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.

இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்-தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.)
தார் பாலைவனம் என்பது விண்மீன் பாலைவனம் என்ற பொருளில் தான். இந்தப் பாலைவனமும் சமீப கால மாற்றம்தானே தவிர முன்பு சிந்து வெளி நாகரிகத் தமிழர் வாழ்ந்த வளமான பகுதியே.

8. இந்த பாலைவனத்தின் பெரும்பகுதி (80%)இந்தியாவில் உள்ளது. மற்ற பகுதி (20%) பாகிஸ்தானில் உள்ளது. பாகிஸ்தான் பகுதி பாலைவனத்தின் பெயர் சோலிஸ்தான் பாலைவனம். காண்க:

இந்த சோலிஸ்தானில் சோல் என்றால் என்ன என்று பார்த்தால் ஆச்சரியம் அதன் பொருளும் மீன்தான். காண்க:

அதுவும் சோல் வகையில் இரண்டு வகை இனங்கள் இருக்கின்றன.

ஒன்று இந்திய மீன்; மற்றொன்று பாகிஸ்தான் மீன். என்ன ஒரு அதிசயம். காண்க:

7. மத்தியப்பிரதேசம் 

இந்தப்பெயரே முழுத்தமிழ்ப்பெயர், இந்திய வரைபடத்தில் மத்தியில் இருக்கும்

பிரதேசமாக இருந்தாலும் இராஜஸ்தான் பகுதியில் பார்த்ததுபோல மச்ச நாடாகவே இருக்கிறது.

1. உஜ்ஜைன் – உச்சினி மாகாளிப் பட்டினம்.

8. கோவா – (கோவா: கோ-பசு அதிகம் உள்ள பகுதி. காண்க:) கோவாபுரி பட்டினம்.

ரஷ்ய மாஸ்கோ வைக்கூட ரஷ்யர்கள் மாஸ்கோவா என்றுதான் அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள்.

Thus, the roots of the word “Москва” (Moscow) can be found in the Finno-Ugric languages.

корова” (cow) காண்க:

9. சண்டிகார் – சண்டி (காளி) + கார் – காடு = காளி காடு.

The name Chandigarh, meaning “the fort of goddess Chandi”, is derived from Chandi Mandir, an ancient temple devoted to the Hindu goddess Chandi, near the city in Panchkula District. காண்க:

10. கர்நாடகம் – கரு + நாடு + அகம்

1. பெங்களூர்

2. மைசூர் – என்பதன் மூலப்பெயர் எருமையூர். எருமைகள் அதிகம் இருந்த, இருக்கும் பகுதி

ஆதலால் எருமையூர். காண்க: 

ஆரியர்கள் எருமை என்பதை உச்சரிக்க விரும்பாமல் அதனை மகிஷபுரி என மாற்றினர். காண்க:

மகிஷம் என்றால் எருமை என்றே பொருள். ஆங்கிலேயர்கள் இந்த மகிஷபுரியை அவர்களின்

வாய்க்கேற்றபடி மைசூர் ஆக்கினர் .

நம்மூர் மயிலாடுதுறை அவாள் களால் மாயவரம் ஆனதுபோல.

நம்மூர் மறைக்காடு அவாள்களால் வேதாரண்யம் ஆனது போல

நம்மூர் ஒத்தைக்கல் மந்து ஆங்கிலேயர்களால் Ootacamund (உதகமண்டலம்) ஆகி பின் அது நம்ம

தமிழர்களால்? சுருக்கப்பட்டு Ooty ஆனது போல அதையும் தமிழ்ப்படுத்தி?? உதகை.

3. ஹூப்ளி – பூ + பள்ளி (தமிழ் ப கன்னடத்தில் ஹ ஆக மாறும்)

4. தார்வார் – தாரைவாடி

5.கன்னட கவுட குல மக்கள் இன்றைய தமிழ் பகுதியில் குடியேறிய பின் தங்களை கவுண்டர்கள்

என அழைத்துக்கொண்டனர்.


11. உத்தரப்பிரதேசம் – உத்தரம் (மேல் பகுதி) + பிரதேசம்

1. உத்தரப்பிரதேசம், உத்தர கான்ட், (காந்தா பகுதி என்றால் மலைப்பாரைப்பகுதி என்று பொருள்.)

காந்தகார் (ஆப்கானிஸ்தான்),  Cima khanda (இத்தாலி), தக்காணம்

2. அலிகார் – அலி + காடு

3. அலகாபாத் என்ற நகரம் அக்பரால் பெயரிடப்பட்ட நகரம். அதன் பொருள் அல்லாவின் பேட்டை அ

அல்லாவின் நகரம் அ கடவுளின் நகரம். இந்த நகரத்தின் பழைய பெயர் பிரயாகை. பிரயாகையின் பொருளும்

அதே. பிரம்மனின் அகம் என்ற சுத்தத் தமிழ்ப்பெயர். பிரம்மனின் அகம் அ பிரம்மாவின் அ கடவுளின் இடம்.

12. ஒடிசா

1. திரு.பாலகிருஷ்ணன் இ. ஆ . ப

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது.

அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என்

கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன்.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில்

உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை

ஆச்சரியப்படுத்தியது. பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி,

கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்… காண்க:

2.  கட்டாக் – கடகம்

13. அசாம்

1. அசாமிலுள்ள ஊர்களில் தமிழ். உடல்குடி, அம்கூர், கசாரிபட்டி, நல்பார், குயிப்பாறை, திப்ருகாடு,

மேலூர் (மேலூரி), இட்டா நகர்.

2. அசாமின் முந்தைய தமிழ்ப் பெயர் காமரூபம்.

16 ம் நூற்றாண்டுவரை காமரூபம் என்றே அழைக்கப்பட்டது. இப்பகுதி தமிழ் நாகர்களால் ஆளப்பட்ட பகுதி.

நரகாசுரன் என்ற தமிழ் மன்னன், அசுர மன்னன் (அசுர-கருமை) ஆண்ட பகுதி. காண்க:

16 ம் நூற்றாண்டில் அகோம் இன மன்னர்கள் ஆண்டனர்.காண்க:

எனவேதான் 2006 முதல் அசாம் (Assam) என்ற மாநிலம் அசோம்  (Asom) என அழைக்கப்படுகிறது. காண்க:

அசாமின் முக்கிய நகரம் கௌகாத்தி மற்றும் தலைநகர் திஸ்பூர் இருக்கும் மாவட்டம் இன்றும்

காமரூப் என்றே அழைக்கப்படுகிறது.

இனிமேல் முழு அசாமும் இதற்கும் முன்னதாக அழைக்கப்பட்ட காமரூபம் என்ற தமிழ் பெயரில்

விரைவில் அழைக்கப்படலாம்.

3. எனக்குத்தெரிந்த ஒரு அசாமிய நண்பரின் பெயர் டேவிட் குஜுர் (David Kujur). அவரிடம் பேசியபோது

அங்கிருக்கும் பல பழங்குடி இனத்தவரின் குழு பெயர்களில் அவரது குழுவின் பெயர் ஆதிவாசி என்றார்.

ஆனால் அதன் பொருள் அவருக்குத் தெரியவில்லை.

14. நேபாளம்.

1. நேபாளத் தலைநகர் காட்மாண்ட். தொல் பெயர் காட்டு மந்தை.


15. மகாராட்டிரம்

1. மும்பை – மூன்று பேய் என்பதே மும்பை ஆகிவிட்டது. நம்மூரில் மூன்று தேவியரை

மூதேவி என்று அழைப்போமல்லவா அப்படித்தான்.

2. நாக்பூர் – நாகம் + புரி.

3. பூனா – புனல் நாடு (நீர்நிலை)

4. சோலாப்பூர் – சோலைப்பூர்

5. மாடா – மாடு, செல்வம்

6. சின்னேர் – சின்ன ஏரி

7. அகல்கோட்டை – அப்படியே தமிழில்

16. ஆந்திரா

1. செக்கந்தராபாத் – சிக்கந்தர் (அமைத்த/நினைவாக)+பாத் (பேட்டை).

இதில் சிக்கந்தர் என்பது சிக்க=சிறிய+இந்திரன் = அரசன், அது ஒரு இசுலாமியப் பெயராகிவிட்டது.


17. காஷ்மீர்

1. காசுமீர் என்பதே நல்ல தமிழ்ப்பெயர். க + சுமேரு (சுமேரு – மேரு என்ற

இமய மலையின் மேல் பகுதி. காண்க:)

2. காசுமீரில் உள்ள ஊர்ப்பெயர்களில் ஒரு சில :

தாமிரக்கடல், ஆயிரக்கடல், வண்டிபுரம், அவந்திபுரம், சீர்நகர், உதம்பூர், அக்கன்வூர், ராவல்கோட்டை,

ஏவலாகோட்டை

18) பாபாசாகிப் அம்பேத்கார் அவர்களின் ஆய்வுக்கூற்று:

இந்திய ஊர்ப்பெயர்களில் சமசுகிருதம் இல்லை, இந்திய மக்கள் பெயர்களில் சமசுகிருதம் இல்லை,

இந்திய மொழிகளில் மூலச்சொற்களில் சமசுகிருதம் இல்லை.

ஆக  இந்திய ஊர்ப்பெயர்களில், இந்திய மக்கள் பெயர்களில், இந்திய மொழிகளில் மூலச்சொற்களில் 

தமிழ் இருக்கும் வரை இந்தியாவின் தாய் மொழி தமிழே என்பதை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ 

 முடியவே முடியாது என்பதே ஆய்வு அடிப்படையிலான உண்மை.

19) இந்தியாவில் மட்டுமல்ல, சுற்றியுள்ள ஆசிய நாடுகளிலும் தமிழே.

இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற அருகாமை நாடுகளில் தமிழர்கள்

இனப்பரவலின்பொது வழக்கம்போலவே தாம் வாழ்ந்த பகுதிப்பெயர்களை சென்று பரவிய

இடங்களிலெல்லாம் தொடர்ந்து ஏற்படுத்தினர். ஈழத்தில் திருநெல்வேலி போன்ற ஊர்கள் இருப்பதைப்போல.

திரு பாலகிருஷ்ணன் இ.ஆ ப. அவர்கள் அவ்வாறு கண்டுபிடித்த பெயர்களைக்கொண்டு வரைபடம்

வெளியிட்டுருக்கிறார். மேலும் விபரம் காண:

20) இந்தியாவைச்சுற்றியுள்ள கடல்களின் பெயர்களும் தமிழே 
       1. உலகின் மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் பெயர் ஒரு தமிழ்ப்பெயர் : சோழ ஏரி 

வங்காளவிரிகுடா 10, 11, 12, ம் நூற்றாண்டுகளில் சோழ ஏரி என்று அழைக்கப்பட்டது.

சோழர்களின் கப்பல்களும் கடற்படையும்  தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வியாபாரத்திற்காகவும்,

ஆட்சி அதிகாரத்திற்காகவும் இந்த கடலின்  மீது சர்வ சாதரணமாக புழங்கிய காரணத்தால்

சோழ ஏரி என்றே அழைக்கப்பட்டது. காண்க:  

In the 10th century the explosion of Indianized kingdoms, led by the Chola Empire, resulted in the

Bay of Bengal being known as the Chola Lake. It later came to be known as Bay of Bengal

after the region of Bengal.

       2. வங்காள விரிகுடாவிற்கு இன்னொரு தமிழ்ப்பெயர் பூர்வ கடல்.

தமிழர்களுக்கு இக்கடல் கிழக்குப்பகுதியில் அமைந்ததால் கிழக்குக்கடல் என்ற பொருளில்

பூர்வ கடல் என அழைக்கப்பட்டது. காண்க:

        3. அரேபியக் கடலும் தமிழ்ப்பெயராலேயே அழைக்கப்பட்டது.

அபரா கடல் என்பதே அதன் பெயர். அபரா என்றால் மேற்கு என்றே பொருள். காண்க:


          4. இந்தியப்பெருங்கடலின் பெயரும் ஒரு தமிழ்ப்பெயரே எரிதிரைக்கடல். காண்க:

21) தென்கிழக்காசியவிலும் தமிழே

சோழர்களின் காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் தமிழ்பெயர்களிலேயே அழைக்கப்பட்டன.

22) தென்கிழக்காசிய பெயர் வேர்களில் தமிழ்.

அங்கத்தின் (இன்றைய ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம்) தலைநகராக சம்பா காணப்பட்டது.

சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது.

இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில்

ஒன்றாக இருந்தது. பீகாரிலுள்ள பகல்பூரே சம்பா என கருதப்படுகிறது.

இங்குள்ள இரண்டு கிராமங்களின் பெயர்கள் சம்பா நகரம் மற்றும் சம்பா புரம் என்பனவாகும். காண்க:

சம்பா அதன் செல்வம் மற்றும் வணிகத்துக்காக புகழ்பெற்றது. இது ஒரு வணிக நிலையமாக

காணப்பட்டதோடு இதன் வணிகர்கள் சுவர்ணபூமி காண்க: எனுமிடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக

அடிக்கடி சென்று வந்துள்ளனர். 4ம் நூற்றாண்டின் இறுதியில் சீனத் துறவியான ஃபக்சான் தனது

யாத்திரிகையின்போது சம்பாவில் பல பௌத்த கோயிகள் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இந்நகரை சீன மொழியில் சான்போ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பா ராச்சியம் (இன்றைய வியட்நாம்) என்பதும் இந்த கிழக்கிந்திய சம்பா நகரிலிருந்தே 

ஆரம்பமானதாக எண்ணப்படுகிறது. காண்க:

1. சம்பா என்னும் பெயர் அன்றைய தமிழரின் அங்க நாடு மற்றும் இன்றைய இந்தியாவின் பீகார் பகுதியின்

பெயர் மட்டுமல்ல இன்றைய வியட்நாம் நாட்டின் அன்றைய தமிழ் பெயரும் கூட.

(மேலேயுள்ள நிலப்படத்தில் காணலாம்)

2. கம்போசா என்ற அன்றைய தமிழ்ப்பெயர் இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அதே பெயரினை 

அன்றைய தமிழர்கள் தென்கிழக்காசிய கு-மேரு நாட்டிற்கு காம்போசம் என வைத்தது இன்று 

கம்போடியா என அழைக்கப்படுகிறது.

காம்போஜம் என்னும் பெயர் எப்படி எழுந்தது என்று தேடினால்,  அது ஒரு செடியின் பெயராகும். அதன் விதையை நாம்

தமிழில் குந்துமணி என்கிறோம். (Abrus precatorius).

இந்தக் குந்துமணியானது, எடைக்கல்லாகப் பயன் படுத்தப்பட்டது. குந்து மணி தங்கம் என்கிறோம். அப்படி என்றால் குந்துமணி எடையிலான தங்கம் என்று பொருள். மிகவும் குறைந்த எடை கொண்டவற்றை நிறுத்தி எடை பார்க்க்க் குந்துமணி பயன்பட்டது. ரத்தினம், விலையுயர்ந்த மணிகள் போன்றவற்றைக் குந்து மணியால் எடை பார்ப்பார்கள். ரத்தின, கோமேதக வாணிபத்தில் ஈடுபட்ட காம்போஜர்களால் இந்தக் குந்து மணி எடை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் வாழ்ந்த இடங்களில் இந்தச் செடி அதிக அளவில் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களினால் காம்போஜம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். காண்க:

இதே கம்போஜாவை தமிழ் மாயன்கள் அமெரிக்காவிலும் வைத்துள்ளனர். காண்க: மற்றும் காண்க:

தென் கிழக்காசியா பற்றி விரிவாகக் காண:

23) பங்களாதேஷ்: இந்த நாடு முன்பு வேங்கை நாடு என்றே அழைக்கப்பட்டது. காண்க:

ஏனென்றால் புலிகள் அதிகம் உள்ள பகுதி. (Bengal Tigers) பெரிய வேங்கை புலி என்று நாம் சொல்லும் வழக்கம் அதனால் தான்.

வேங்கை நாடு – வங்க நாடு – ஆங்கிலேயர்களால் பங்களா தேஷ்.

24) கல்வெட்டுகளிலும் தமிழே முதன்மை 

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்  எண்ணிக்கை சுமார் 1,20,000. இவற்றில் 80

சதவிகிதத்திற்குமேல் அதாவது 96,000 கல்வெட்டுகள் தென் இந்தியாவில்தான் கிடைத்தது.

இவற்றில் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் 70,000.

இன்னும் படியெடுக்கப்படாமல் மைசூரில் கிடக்கும் கல்வெட்டுகள் 30.000.

சமசுகிருத கல்வெட்டாக சொல்லப்பட்ட முதல் கல்வெட்டு கிடைத்த காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டே.

கிர்நாரில் கிடைத்த அந்தக்கல்வெட்டும் பிராகிருத மொழி (வட இந்திய தமிழ்) நடையிலேயே உள்ளது.

25) இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர் எங்கிருந்து வந்தவர்கள்:

1. துருவப்பகுதியிலிருந்து வந்தவர்கள். பால கங்காதர திலகர் என்ற பார்ப்பனரின் கருத்து.

2. மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்.

3. ரஷ்யப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம். “வோல்கா விலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதிய

இராகுல சாங்கிருத்தியான் என்பவரின் கருத்து.

4. ஆரியர் ஐரோப்பிய வழி மரபினர். ஹிட்லரின் இன மரபினரான அவர்களின் ஒரு பிரிவினரே

இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள்.

5. சிந்துவெளித்தமிழர்களுக்கும் முந்தைய தமிழர்களே இவர்கள்.

இனப்பரவலில் ஐரோப்பா வரை சென்று தங்கியவர்களைத்தவிர திரும்பியவர்களே இவர்கள்.

26) இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியரின் அன்றைய மொழி:

இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர் பேசி வந்த மொழி ரோமானி. ஜிப்ஸி என அழைக்கப்படும்

நாடோடிகளின் மொழி அது.

ஐரோப்பா, மத்திய ஆசியாவிலிருந்து நாடோடியாய் வந்த

ஆரியர்களின் தொடர்பாளர்கள் இன்றும் அங்கே இருக்கிறார்கள்.
இன்றும் அத்தகைய மொழி பேசும் மக்கள் இருப்பது ருமேனியா (Romania)

என்ற கிழக்கு ஐரோப்பிய நாடாகும். காண்க:

27) இந்தோ-ஐரோப்பாவிற்கு வழி வகுத்த ஐரோப்பாவிற்குள் நுழைந்த தமிழர் பரவல்:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்துசமவெளி நாகரிகத்திற்குப் பின், பாரத நாட்டிலிருந்து பிரிந்து

சென்ற தமிழர்களில் சில பிரிவினர் மூன்று  வழிகளில் ஐரோப்பாவில் நுழைந்தனர்.

1. துருக்கி (அனடோலியா) பகுதியிலிருந்து ஐரோப்பாவின் கிரேக்க, ருமேனியா,

வழியாய் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர்.

2. அர்மேனியா (காகசஸ் மலைப்பகுதி) வழியாய் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா சென்றவர்கள். காண்க:

3. மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி, பிரான்ஸ், ஸ்பானியா, போர்த்துகல் சென்றவர்கள்

இன்னொரு குழுவினர்.

இதனாலேயே

1. இலத்தின் வழி இத்தாலிய, பிரெஞ்ச், ஸ்பானிய, போர்துகீசிய மொழிக்குடும்பமும்,
2. கிரேக்க வழி ஆங்கிலோ-ஜெர்மானிய மொழிக்குடும்பமும்
3. ஸ்லாவிக் வழி ரஷ்ய, பால்டிக், கிழக்கு ஐரோப்பிய மொழிக்குடும்பமும்

என மூன்று  மொழிக் குடும்பங்கள் ஐரோப்பாவில் பெரும்பான்மையாய் இருப்பதைக்காணலாம். காண்க:

கீழே காணும் வரைபடமும் இதனை விளக்கும். ரோமானிய நாடு ஜிப்சி என்ற நாடோடி மொழிக்குடும்பமாய்

இருப்பதால் அது மட்டும் தனித்தீவாய் இருப்பதையும் காணலாம்.

இதையே விளக்கும் விதமாய் இன்னொரு இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்ப அட்டவணை

28) ஐரோப்பாவிலும் தனித்துவமான, தமிழோடு தொடர்புடைய ஒரு இனம் பாஸ்கு 

இந்த அனைத்து மொழிக்குடும்பங்களிலும் சிக்கிக்கொள்ளாது தனது தனித்துவத்தை

இன்று வரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரே ஐரோப்பிய மொழி பாஸ்கு (Basque).

இந்த பாஸ்கு மொழி பேசுவோர் வாழுமிடம் (சிவப்பு நிற பகுதி) பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு

இடைப்பட்ட தனி நாடு கேட்டு போராடும் ஸ்பெயினின் ஒரு பகுதி.

இந்த பாஸ்கு மொழி தமிழோடு தொடர்புடைய ஒரு மொழி. காண்க:

Some examples: Dravidian and Basque –

Odal (body), Odal (blood);

Mukku (nose), moko (beak);

Kallar (thief), Kaldar (thief);

Ubbu (swelling), Ug-atz (breast);

Kuru (small), Korro (small);

Alal (crying), Aldia (lament). காண்க:

பாஸ்கு நாட்டில் பழக்கத்தில் உள்ள காளை விரட்டு மற்றும் ஓவியங்கள்.

 

நம்மூர் காளை விரட்டு

 

சிந்துவெளி நாகரீக முத்திரை கி.மு. 2000

கி.மு. 2000 ல்  நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பாறையில் வரையப்பட்ட காளை விரட்டு ஓவியம்

 

பாஸ்கு நாட்டின் மழை தெய்வத்தின் பெயரும் மாரி

நம்மூர் மாரி என்ற மழை தெய்வம்

மேலும் விபரங்களுக்கு காண்க:
29) இந்தோ – ஐரோப்பா வும் உலக மொழிகளும், தமிழ் வேர் மூலமும்:

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மலைத்தொடரான காக்கேசியன் பகுதியானது

கருங்கடல், காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

ஐரோப்பிய ஆரியர்கள் இங்கிருந்தே ஆர்மீனிய-காக்கேசியன் பகுதியிலிருந்தே அவர்களின் மூதாதையர்

வந்ததாக நம்புகின்றனர், எழுதுகின்றனர்.

கறுப்பின ஆசிய, ஆப்பிரிக்கர்களோடு அவர்கள் தொடர்பு படுத்த விரும்புவதில்லை,

அறிவியல் பூர்வ ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு எதிர்மறையாக இருந்த போதும். அப்படின்னா

அர்மேனிய-ஐரோப்பிய மொழிக்குடும்பம் அப்படின்னு சொல்லவேண்டியது தானே?

ஏன் இந்தோ-ஐரோப்பிய மொழின்னு சொல்லணும் ?

 1. இந்தியாவிலிருந்து ஈரான், அர்மேனியா, துருக்கி, கிரேக்கம், ரஷ்யா, ஜெர்மானியம், இலத்தின்,

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இங்கிலாந்து, இவை தவிர

 1. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
 2. ஸ்பானியம் பேசும் மெக்ஸிகோ, கியூபா, வெனிசூலா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே,

பராகுவே, பொலிவியா, பெரு, எகுவேடார், கொலம்பியா, பனாமா, கொஸ்டரிக்கா, நிகரகுவா,

எல்சால்வடார், பெலிஸ்

 1. போர்ச்சுகல் பேசும் பிரேசில்

என இத்தனை நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மொழியின் தோற்றம் இந்தியாவைத்தவிர

வேறு எந்த நாட்டு மொழியோடும் தொடர்பு படுத்த முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பதற்கு பதிலாக சீன- ஐரோப்பிய, ஜப்பானிய-ஐரோப்பிய,

பர்மா- ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று சொல்லவேண்டியது தானே?

மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து தொடங்கியது என்று சொல்லும் அவர்கள் அவர்களது

மொழியையும் ஆப்பிரிக்க-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று சொல்லவேண்டியதுதானே?

ஏன் இந்தோ-ஐரோப்பான்னு சொல்லணும்.

ஆக மொழி இங்கிருந்துதான் தொடங்கியது என்றால்,

மனித இனமும் இங்கிருந்துதானே தொடங்கி இருக்க வேண்டும்?

ஒரு சிலர் கேட்கலாம் இங்கிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும் என்று சொல்வதற்கு

பதிலாக அங்கிருந்து இங்கு வந்திருக்கலாம் இல்லையா?

எது தீர்மானிக்கிறது?

மூலச்சொல்லே தீர்மானிக்கிறது.

உதாரணமாக தமிழிலிருந்து மலையாளமா? அல்லது மலையாளத்திலிருந்து தமிழா?

என்று கேள்வி வந்தால் என்னதான் நமக்குத்தெரிந்திரிந்தாலும் நிரூபிக்க உதவுவது எது?

தமிழ் மொழியின் மூலச்சொற்களே.

தமிழ் வார்த்தைகளுக்கு மூலச்சொல் மலையாளத்தில் இல்லை. மாறாக

மலையாள வார்த்தைகளுக்கு மூலச்சொல் தமிழில் தான் உள்ளது.

ஐரோப்பிய மொழிகளின் எந்த சொல்லுக்கும் மூலச்சொல் ஐரோப்பிய மொழியில் இல்லை.

இந்தியாவின் மொழி தான் மூலம் எனத்தெரிந்தாலும், ஐரோப்பிய தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் இல்லாததால் வேறு வழியில்லாமல் இந்தோ (Indo) என்று போட்டாலும் கூடவே

ஈரோப்பியன் (Indo-European ) என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டனர்.

30) போன மச்சான் திரும்பி வந்தான் கதையான இந்தியாவில் நுழைந்த ஆரியர்

இந்தக் காக்கேசியன் பகுதியிலிருந்து ஐரோப்பா சென்றவர்களில் ஒரு பிரிவினர்

திரும்பி இந்த காக்கேசியன் மலை வழியாகவே திரும்பி வந்தனர்.

தமிழர்களாய் சென்றவர்கள் ஐரோப்பிய பனி, காலநிலைக்கேற்ப வெண்மையான நிறத்தவராய்,

கடும்பனி மற்றும் வெப்ப மண்டல விளைநிலங்களற்ற பகுதியின் கடுமையான சூழல் காரணமாக

கடின மனம் படைத்த, நாகரீகப் பண்பாடு குறைந்த ஆரியராய் திரும்பி வந்தனர்.

காகசுஸ் மலை, ஈரான், கைபர், போலன் கணவாய் வழியாக அன்றைய இந்தியா

இன்றைய பாகிஸ்தான் மூலமாக நுழைந்து வட இந்தியத்தமிழர்களின் ஆட்சிப்பகுதியை

ஆக்கிரமிக்க தொடங்கினர்.

31) மனித இனத்தோற்றம் ஓரிடமே

இவை எல்லாம் நிகழ பல்லாயிரம் ஆண்டுக் காலம் ஆனது. ஆக ஆரியர் என்று ஒரு தனி இனம் இல்லை,

காரணம் மனித இனத்தோற்றம் உருவானது வெப்ப மண்டலப்பகுதியான
குமரிக்கண்டம் என்ற ஓரிடத்தில் தான். 

 1. காண்க : 
 1. காண்க :

முதல் மனித இனம் தமிழினமாய் இருக்கும்போது அவர்களின் இனப்பரவலே பல கண்டங்களுக்கும் பரவியது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கும்போது ஆரியர் ஆர்டிக் பனிப்பகுதியில் உருவாகி இருக்க அறிவியல் பூர்வ வாய்ப்பே இல்லை.

ஆனால், பால கங்காதர திலகர் போன்ற பார்ப்பனர்கள் கி. மு 10,000 ஆண்டளவில்

ஆர்டிக் பனிப்பகுதியில் தான் ஆரிய இனம் உருவானதாக கதைகளை அள்ளி வீசினர். காண்க:

கி. மு. 2500 ஆண்டளவில் தான் ஐரோப்பாவில்

இன்றைய காலகட்டங்களில் இருப்பது போன்ற காலநிலைக்குத்திரும்பியது. காண்க:

கி. மு. 10,000 வரை பனியால் சூழப்பட்ட கண்டமாகத்தான் ஐரோப்பா இருந்தது.

ஆங்கிலம் என்ற மொழி தோன்றியே 600 ஆண்டுகள்தான் ஆகிறது. காண்க:

32) சூரிய மண்டல நிலப்பரப்பும் மனித இன வரலாறும்

இன்றளவும் பல்லுயிர் பெருக்கம் (Bio-Diversity) அதிகம் இருப்பது வெப்பமண்டலக் காடுகளில்தான்

(Tropical Countries).

அமேசான் காடுகள் உள்ள பிரேசில், டார்வின் முதன்முதல் பல புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்த, அவரின் பரிணாமக் கோட்பாட்டிற்கு அடிப்படையை அமைத்துக்கொடுத்த கலாபகோஸ் (Galapagos) தீவுகள்,

இன்னமும் கண்டுபிடிக்கமுடியாத பல உயிர்கள் வாழும் இந்தோனேசியக் காடுகள்,

டேவிட் அட்டென்பரோ போன்ற இயற்கை ஆய்வலர்கள் லெமூர் போன்ற அரிதான உயிர்களைக் கண்டுபிடிக்கத் தேடிச்செல்லும் மடகாஸ்கர் போன்ற தீவுகள்

லெமூர் விலங்குகள் (நம்ம லெமுரியாவோடு தொடர்புடைய அதே விலங்குதான்)

மற்றும் உலகில் வேறெங்கும் இல்லாத இராஜநாகம் போன்ற உயிர்கள் வாழும் இந்திய  மேற்குத் தொடர்ச்சி மலைகள்,

முட்டையிட்டு பால் கொடுக்கும் உலகின் ஒரே அதிசய விலங்கு பிளாட்டிபஸ் (கீழே) 

மேலும் விபரங்களுக்கு:, 

மற்றும் கங்காரு,

போன்ற அரிதான உயிரினங்கள் வாழும் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் இருப்பது வெப்ப மண்டலக் காடுகளில் தானேயொழிய ஐரோப்பா போன்ற பனிப்பிரதேசத்தில் பல்லுயிர் உருவாக மற்றும் பெருக வாய்ப்பே இல்லையே.

விலங்குகளே உருவாக வழியில்லாத ஐரோப்பிய பனிகண்டம் எப்படி மனிதனும் அவனது மொழியும் உருவாகுவதற்கு மூல காரணமாய் இருந்திருக்க முடியும்?

அப்படி காலங்காலமாக பனிப் பிரதேசமாக இருந்து சமீப காலங்களில் உருவான ஐரோப்பாவிலிருந்து

மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து திரும்பி வந்த ஆரியர்களின் சமசுகிருதம் எப்படி ஐரோப்பிய

மொழிகளுக்கு மூலமாய் இருக்க முடியும். எப்படி இந்தியாவின் முதல் மொழியாய் இருக்க முடியும்?
இந்த ஆரியர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்னரே இந்தியாவின் பூர்வ குடியாய் இருந்த,
மக்களினப்பரவலுக்கு தொடக்கமாயிருந்த, தொன்மையான மக்களின் மொழி தானே

மூலமாய் இருக்க முடியும்.

என்னதான் தமிழை மூல மொழியாகக் கொண்டிருந்தாலும்

முன்னாள் தமிழ் சேரர்கள் மலையாளிகள் எனத்தனியாகப் பிரித்து சொல்லப்படுவதைப் போல
முன்னாள், முன்னாள் தமிழர்கள், ஆந்திரர், கன்னடர், வட இந்தியர் என ஆனதைப்போல
முன்னாள், முன்னாள், முன்னாள் தமிழர்கள் ஆரியர் ஆகிப்போனார்கள்.

ஆகவே

இந்தியாவிலுள்ள கல்வெட்டுக்கள் தமிழருடையவை. உலகில் வேறெந்த நாட்டிலும் கல்வெட்டு முறை இல்லை. காண்க:

இந்தியா (உலகமெல்லாம்) பயன்படுத்தும் கணித எண்கள் தமிழருடையவை. காண்க:

இந்திய பரதக்கலை தமிழருடையது. காண்க:

இந்திய (கன்னட) இசையின் மூலம் தமிழருடையது. காண்க: மற்றும் கருணாமிர்த சாகரம் காண்க:

இந்திய (உலக) சமயங்களின் (மதங்களின்) தோற்றம் தமிழருடையது. காண்க:

இந்திய (உலக) வானியலின் மூலம் தமிழருடையது. காண்க:

இந்திய (உலக) மொழிகளின் மூலச்சொற்களும் தமிழருடையவை.

33) உலக மற்றும் இந்திய மொழிகளும் சமசுகிருத பொய்யும் தமிழர் மெய் வரலாறும்.

தமிழர்கள் என்றால் இந்த மொழி பேசுவோர், உலகின் இந்த இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

 1. மொத்த மக்கள்தொகை: 77,000,000[1]

2.குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்

 India 72,138,958 (2011)[2]
 Sri Lanka 3,113,247 (2012)[3]
 Malaysia 1,892,000 (2000)[4]
 South Africa 250,000 (2008)[5]
 Singapore 200,000 (2008)[5]
 Burma 200,000 (2008)[5]
 Canada 138,675 (2012) [6]
 United Kingdom 218,000 (2011)[7]
 United States 132,573 (2005-2009)[8]
 Mauritius 115,000 (2008)[5]
 Fiji 110,000 (2008)[9]
 France 100,000 (2008)[9]
 Germany 50,000 (2008)[9]
 Indonesia 40,000 (2011)[10]
 Switzerland 40,000 (2008)[5]
 Australia 30,000 (2008)[5]
 Italy 25,000 (2008)[5]
 Netherlands 20,000 (2008)[5]
 Norway 10,000 (2008)[5]
 Thailand 10,000 (2008)[5]
 United Arab Emirates 10,000 (2008)[5]
 Denmark 7,000 (2008)[5]
 Bahrain 7,000 (2008)[5]

சமசுகிருதம் பேசுவோர் மொத்தம் எத்தனை பேர்? உலகின் எந்தெந்த நாட்டில் வாழ்கிறார்கள்? இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள்? யாராவது சொல்ல முடியுமா?

ஏறத்தாழ196 நாடுகள் கொண்ட இந்த பூமியில் காண்க: சுமார் 6909 மொழிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. காண்க:

முதல் 20 மொழிகள்

 1. மாண்டரின் (சீனம்) – சீனா – 885 மில்லியன்
 2. ஸ்பானிய மொழி – ஸ்பெயின் – 332 மில்லியன்
 3. ஆங்கிலம் – ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா – 322 மில்லியன்
 4. வங்காள மொழி – இந்தியா, வங்காளதேசம் – 189+ மில்லியன்
 5. ஹிந்தி – இந்தியா – 182+ மில்லியன்
 6. போர்த்துக்கீச மொழி – போத்துக்கல் – 170+ மில்லியன்
 7. ரஷ்ய மொழி – ரஷ்யா – 170+ மில்லியன்
 8. ஜப்பானிய மொழி – ஜப்பான் – 128+ மில்லியன்
 9. ஜெர்மன் – ஜெர்மனி – 125+ மில்லியன்
 10. பிரெஞ்சு – பிரான்ஸ் – 120+ மில்லியன்
 11. வூ மொழி (சீனம்) – சீனா – 77+ மில்லியன்
 12. ஜாவா மொழி – இந்தோனீசியா – 75+ மில்லியன்
 13. கொரிய மொழி – தென் கொரியா, வட கொரியா – 75+ மில்லியன்
 14. வியட்நாமிய மொழி – வியட்நாம் – 67+ மில்லியன்
 15. தெலுங்கு – இந்தியா – 66+ மில்லியன்
 16. யூவே மொழி (சீனம்)- சீனா – 66+ மில்லியன்
 17. மராட்டி – இந்தியா – 64+ மில்லியன்
 18. தமிழ்இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா – 63+ மில்லியன்
 19. துருக்கி மொழி – துருக்கி – 59+ மில்லியன்
 20. உருது – பாகிஸ்தான், இந்தியா – 58+ மில்லியன்
 1. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் 122 பெரும் மொழிகளும், 1599 சிறு மொழிகளும் உள்ளன. ஆக 1721 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
 1. இந்தியாவில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர் பேசும் மொழிகள் 29. இதலாவது சமசுகிருதம் இருக்குமா என்று பார்த்தால் காணோம். காண்க:
 1. 1 இலட்சத்திற்கும் மேல் பேசப்படும் மொழிக்கூட்டத்திலாவது சமசுகிருதம் இருக்குமா என்று பார்த்தால் அதிலுள்ள 27 மொழியிலும் காணோம். காண்க:
 1. இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள மொழிகளின் கூட்டத்திலாவது சமசுகிருதம் இருக்குமா என்று பார்த்தால் குறிப்பிடப்பட்ட அட்டவணையில் 171 மொழிகள் இருக்கின்றன. 250 பேர் மட்டுமே பேசும் காண்டோ (Kanto) மொழி கூட இருக்கிறது. சமசுகிருதத்தை மட்டும் கானோம். காண்க
 1. ஆனால் 2009 டிசம்பர் 1 மத்திய அரசு அறிவிப்பின்படி இந்தியாவின் அலுவல் மொழிகள் 22. அந்த 22ல் ஒன்று சமசுகிருதம். மேலும் உத்தரகான்ட் மாநிலத்தின் அலுவல் மொழி சமசுகிருதம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுல நகைச்சுவை என்னான்னா அலுவல் மொழின்னு இருக்கும் வாக்கியத்தின் முந்தைய வாக்கியம்: சமசுகிருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி. காண்க:

(உதவிய அனைத்து மூலங்களுக்கும் நன்றி. குறிப்பாக திரு. சாத்தூர் சேகரன் அவர்களின் கட்டுரையான சமசுகிருதம் ஒரு மொழியே அல்ல, தமிழ் நேயம் 29, கோவை ஞானி, கோயம்புத்தூர்.)

சாலமன் பாப்பையா பாணியில் சொன்னால்:

சமசுகிருதம்னு ஒன்னு… இருந்தாத்… தானய்யா… வரும்.

வடிவேலு பாணியில் சமசுகிருதம் இருக்கா? இல்லையா? ன்னு கேட்டால் :

சமசுகிருதம் இருக்கு… ஆனா… இல்லை…

தொடர்ந்து தேடுவோம் …

Advertisements