தமிழ்ப்புத்தாண்டு எது? ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்
பதிலுக்குப் பிறந்த அண்ணன் கிரி கிரி ராஜாவும்,

கேள்விக்கு பிறந்த தம்பி டகால்டியும் ஒட்டாமப் பிறந்த ரெட்டையர்கள்.
திருவிளையாடல் தருமி போல கேள்வி மட்டுமே கேட்கப்பிறந்த டகால்டி தனது கேள்விக் கணைகளை ‘ஸ்கட்’ ஏவுகணை போல தொடுக்க, ‘பேட்ரியாட்’ ஏவுகணை போல அவற்றை சமாளித்தார் கிரி கிரி .


டகால்டி :  ஏன்ணா, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கொழப்புராங்க; ஏதுண்ணே உண்மைலே தமிழ் புது வருஷம்.?

கிரி கிரி :
தம்பி  ஒன்னுமட்டும் தெரிஞ்சிக்க ஏமாறவங்க இருக்கிற வரை ஏமாத்துரவனும் இருப்பான்.

ஒன்னு தமிழனுக்கு விரோதி இன்னொன்னு தமிழனுக்கு துரோகி.

குட்டையை யாரும் குழப்பாம இருக்கணும்னா எல்லாரும் மட்டையா போனும்கிரதுல ரெண்டும் தெளிவா இருக்கு. நல்ல பாம்பு நல்லதா, கட்டுவிரியன் நல்லதான்னு ஒவ்வொரு தேர்தலுக்கும் பட்டிமன்றம் நடத்தி ஓட்டு போட்ற நமக்கும்  எதத்தின்னா பித்தம் தெளியும்கிற கவலை இல்லை. பொழுது போக்க சினிமாவுல சந்தானம் வந்து அப்பப்ப கிச்சுகிச்சு மூட்ற மாதிரி அவங்களும் தைக்கும், சித்திரைக்கும் வருசா வருசம் வந்து கிச்சு கிச்சு மூட்டத்தான் போறாங்க. 2050 வரைக்கும் அவங்களோட ஆட்சிதான்கிர சாபக்கேடு தமிழ்நாட்டுக்கு இருந்துச்சுனாலும் அப்பவும் கூட இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்ல மாட்டாங்க. அப்ப தமிழ்நாட்டுல வீதிக்கு வீதி கஞ்சாமாக் அரசே  எடுத்து நடத்தும்டா கேள்விக்கு பொறந்த கிறுக்கு பயலே.
டகால்டி :   இவ்ளோ பேச்சு பேசுறீங்களே அதான் 1921 லேயே சொல்லிட்டாங்கலாமில்ல தமிழறிஞர்கள் எல்லாம் கூடி.  இதுக்கு என்னா சொல்றீங்க பெருசு ?
கிரி கிரி : 1921 ல ஆங்கிலேயர்கள் ஆட்சி. அந்த வருஷம் தான் பாரதியாரை ஊர் ஊராக அலைய வச்சு கொன்னாங்க. தமிழறிஞர்கள் பேசுனதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏன்னா 1955 மே மாதம் 15 ந்தேதி தமிழ் மறைக்கழகத்தால் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் மலர், பக்கங்கள்  128-130 களில் திருவள்ளுவர் தினம் ஜூன் 2 (வைகாசி மாதத்தில்) என்கிறது.

(http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ )
1966 முதல் ஜூன் 2 ந்தேதி திருவள்ளுவர் தின விடுமுறையாக அறிவிக்கப்பட்டு 1970 ல் தி.மு.க  வந்ததும் ஜனவரிக்கு மாற்றப்படுகிறது. 1921 ல பேசுனது  2008 வரைக்கும் ஏன் ஞாபகத்துல வராமபோச்சு அதான் 1967 லேயே ஆட்சிக்கு வந்தாங்கள்ளே.

அதோட ராஜா ராம் மோகன்ராய் முதல் எல்லாருக்கும் “ஆங்கிலேய வளர்ச்சி, அறிவு, முன்னேற்றம்” இவைகளை ஒட்டி இருந்தால் தான் தாங்களும் முன்னேறியவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளமுடியும் என்று தவறாக நினைத்தார்கள். அதனால் தமிழர்களும் ‘உலகத்தோடு’ ஒத்துப்போனார்கள். ஆங்கில நாட்காட்டியை ஒட்டி தமிழ் நாட்காட்டியையும் அமைத்துக்கொண்டார்கள்.
அப்போது இருந்த அறிவியல், தகவல் தொடர்பு, அந்த அளவிற்கு உண்மையை எடுத்து சொல்லவில்லை. இப்பவே தலைவர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் என்னென்ன தகிடுத்தனம் செய்கிறார்கள். நாமளும் வாய் மற்றும் எல்லாம் மூடிகிட்டுத்தானெ போறோம். இப்பவே இப்படின்னா ஏறக்குறைய 100 வருசங்களுக்கு  முன்னாலே! நினைச்சுப்பார்த்தால் யார் என்ன சொன்னார்கள். யார் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்தார்கள். யார் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெரும் குழப்பம்தான்.
டகால்டி :  3. சரி. அப்படின்னா சித்திரை தான் வருடப்பிறப்பு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு?

கிரி கிரி :

கடிகாரத்தின் இரண்டு முட்களும் இணையும் நள்ளிரவு 12 மணியை நாளின் துவக்கமாகக் கொள்வதுபோல் 5113 ஆண்டுகளுக்கு முன் சூரியனும் பிற கிரகங்களும் நேர்கோட்டில் வந்த காலத்தில் துவங்கியது மேட ராசி வரும் சித்திரை.

காண்க:

சூரியனின் சுழற்சியை (360 பாகை) ஆட்டை வட்டம் என்பார்கள். இந்த வட்டம் எந்த இடத்தில் அ எந்த மாதத்தில் ஆரம்பிக்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.

கீழே உள்ள வான் கிரக நிலை படத்தைப் பார்த்தால் தெரியும். இப்படம் சந்துரு என்பவருடைய  வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. நண்பருக்கு நன்றி.

சூரியனின் சுழற்சியில் முதலில் வருவது மேட ராசி வரும் சித்திரை என்கிறது தமிழ் இலக்கியம்.

இந்த மேட அ  வருடை என்பது ஒரு மலை ஆட்டின் பெயர்.

பரிபாடல் 11-

 ‘வருடையைப் படி மகன் வைப்பஎன்கிறது.
இதன் பொருள்: வருடை என்னும் மேட ராசியில் சூரியன் நுழைகிறது.
மேட ராசி என்பது சித்திரை மாதத்தில் வரும் ராசி.
இதனை நெடுநல்வாடை வரி 160-161 மேலும் தெளிவாக சொல்கிறது:

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாகவிண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

இதன் பொருள். ஆட்டினைத் தலைமையாகக்கொண்டு சூரியன் விண்ணைச்சுற்றி வருகிறான் என்று.

இந்த வருடை ஆடு என்பது மலை ஆடு.

இதையொட்டியே  ஆண்டின் காலம் வருடம் என அழைக்கப்படுகிறது.

தமிழ் அரசின் விலங்கு, தமிழகத்தின் விலங்கு இந்த வரை ஆடு தான், வருடை ஆடு என்பது.

இந்த வருடை அ வரை ஆடு இதுதான்.

Aries என்ற சோதியக (Zodiac) ராசியின் சின்னமும் இதே கொம்பு மற்றும் வாலோடுதான்  இருக்கிறது.

டகால்டி :  அண்ணே இந்த ராசிங்கிறாங்க, மாசங்கறாங்க எல்லாம் கொஞ்சம் கொழப்புதே. 

கிரி கிரி : 

தம்பி நம்ம முன்னோர்கள் கண்டுபிடிச்சதுல கால்வாசிகூட இப்ப யாரும் கண்டுபிடிக்கல. நம்ம தமிழர்களும் தேடுறதில்ல, தெளிவு படுத்தக்கூடிய கல்விமுறையும் நமக்கு மறுக்கப்படுது.

சூரியனின் சுழற்சியை (360 பாகை​) – 30 பாகைகளுக்கு ஒன்றாக 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆக நட்சத்திரக்கூட்டங்கள் 12 ஆகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. மேல உள்ள முதல் படத்த பார்த்தாலே புரியும்.

சூரியமானம்: பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் இந்த 12 நட்சத்திரக்கூட்டங்களில் எதற்கு முன்பாக நிற்கிறதோ அது ராசி எனப்படுகிறது. சூரிய அடிப்படையிலான இந்தக் காலக்கணிப்பு சூரியமானம்.

 1. மேழம்
 2. விடை
 3. ஆடவை
 4. கடகம்
 5. மடங்கல்
 6. கன்னி
 7. துலை
 8. நளி
 9. சிலை
 10. சுறவம்
 11. கும்பம்
 12. மீனம்

சந்திரமானம்நிலவாகிய மதி இந்த 12 நட்சத்திரக்கூட்டங்களில் எதற்கு முன்பாக நிற்கும்போது, முழு மதி அ பௌர்ணமி வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயர். இந்த காலக்கணிப்பு சந்திரமானம்.

 1. சித்திரா பௌர்ணமி வரும் மாதம் சித்திரை மாதம்.
 2. விசாகம் (வைசாகம்) பௌர்ணமி வரும் மாதம் வைகாசி (வைகாசி விசாகம்)
 3. அனுசம் ……….ஆணி
 4. பூராடம் ………..ஆடி
 5. சிரவணம் ……..ஆவணி
 6. பூரட்டாதி …….புரட்டாசி
 7. அசுவிணி ……..ஐப்பசி
 8. கார்த்திகை…..கார்த்திகை
 9. மிருகசீரிடம் ….மார்கழி
 10. பூசம் …………..தை (பூசம்)
 11. மகம் ……………மாசி (மகம்)
 12. உத்திரம்  ……..பங்குனி (உத்திரம்)

இந்த இரண்டும் இணைந்த காலக்கணிப்பு ஒரு பட விளக்கத்திலேயே தெளிவாகும் :

சேர நாடான கேரளத்தில் சூரியமானம் பின்பற்றப்படுவதால் அங்கு சித்திரைக்குப்பதிலாக மேடை அ மேச அ விஷு கனி மாதமாக இருக்கிறது. இந்த விஷு என்பது (Equinox) இரவு-பகல் சமநிலையில் இருக்கும் காலத்தைக்குறிப்பது. நமக்கு இது மார்ச் (பங்குனி) மாதக் கடைசியில் வரும்.
டகால்டி :  அண்ணே இந்த 60 வருடக்கணிப்பு பிரபவ, துந்துபி அப்படின்னு ஏதோ ஆபாசம், புராணம்னு சொல்றாங்களே அதுல ஏதுண்ணே உண்மை ?
கிரி கிரி : சரியான கேள்வி கேட்ட போ

 சித்திரையில் கொண்டாடக்கூடாது என்று சொல்பவர்கள் சொல்லும் காரணம். ஆரியர்களின் திணிப்பு 60 வருட ஆபாசக்கதை  என்பது அபிதான சிந்தாமணி புராணத்தில் வரும் ஒரு கதை, அதாவது:

‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள்.

இது உண்மையல்ல. உண்மையில் அறிவியலிலும், வானவியலிலும் சிறந்து விளங்கிய தமிழர்களின் அறிவாற்றல்,  பல புராணங்களைப் புகுத்தியதன் மூலம், மதத்தின் பெயரால் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழருக்கெதிரான ஆரியவலையின் மிகப் பெரிய சதி. இந்த சதியின் பின்னால் இருக்கும் தமிழரின் அறிவாற்றலை வெளிக்கொண்டு வராமல் மேம்போக்காக ஆரிய வலை, பிராமண சதி என்று சொல்வது, அந்த சதிக்கு உடந்தையாக மாற்றிவிடும். இதைத்தான் மறைமுகமான திராவிட சதி என்று சொல்லலாம். சரி. என்னதான் அந்த தமிழர்களின் வானியல்.

தமிழர்களின் அனைத்து விழாக்களும் வானியல், அறிவியல் விழாக்களே. கார்த்திகை முதல், கும்ப மேளா வரை எல்லாமே வானியல் பூர்வமானவை. ஆரியம் அவற்றை மதங்களாக்கிவிட்டது. இவைகளைப்பற்றி பின்னால் வரும் கட்டுரைகளில் விளக்கமாகக் கூறுகிறேன். தற்போது புத்தாண்டு பற்றிமட்டும்.

புவியீர்ப்புச்சக்தியை நியூட்டன் கண்டிபிடித்ததாக சொல்வது 17 ம் நூற்றாண்டு இறுதியில் (1679).

ஆனால் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களுக்கு கிரகிக்கும் தன்மையுள்ளது என்பதன் அடிப்படையில் கிரகங்கள் என்று கி.மு. விலேயே பெயரிட்டுவிட்டார்களே தமிழர்கள்.

இந்த கிரகங்களில் சில கிரகங்கள் (5 ஆவது வியாழன் 6 ஆவது சனி) பூமிக்கும் (3 ஆவது) பின்னால் இருந்து கொண்டு சூரியனைச்சுற்றுவதால் அவற்றின் ஈர்ப்பு பூமியையும்  பாதிக்கும் என்று கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள்.
பூமியைவிட சிறிய நிலவின் தாக்கமே கடலில் மாறுபாடுகளை கொண்டுவரும்போது,
பூமியைவிட 700 மடங்கு பெரிய சனி, 1200 மடங்கு பெரிய வியாழன் கிரகங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால்தான்  சோதியத்தில் (ஜோசியம்) குரு, சனி  கிரகங்களின் பெயர்கள் அடிக்கடி வரும். இவை ஜோசியம் என்று மிகச்சாதாரணமாய் ஒதுக்கிவிடுவோம். அதனால் ஜோசியம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்று சொல்லவில்லை. அது பழங்கால அறிவியல் உண்மை மீது பின்னர் கட்டப்பட்ட கற்பனைக்கோட்டை. பிழைப்புக்கான வழிகளில் ஒன்றே அது.

இப்ப விசயத்திற்கு வருவோம்.

இந்த இரண்டு பெரிய கிரகங்களில் வியாழன் சூரியனைச்சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் (நமது பூமி 365 நாள்).

அதனால் தான் கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை. (இது பற்றி பின்னர் கூறுகிறேன்)

அடுத்து சனி கிரகம் சூரியனைச்சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்.

இந்த இரண்டு கிரகங்களும் எப்ப ஒரே நேர்கோட்டில் வரும்.

வியாழன் -12, 24, 36, 48, 60.

சனி – 30, 60.

ஆக 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சூரியன், பூமி, வியாழன், சனி என நான்கும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன.

ஆகவேதான் இந்தகால கட்டத்தை 60 ஆண்டுக்கணக்காக தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள். என்ன ஒரு கண்டுபிடிப்பு. இத்தனை வளர்ச்சியடைந்ததாகக்கூறும் நம்மால் இன்று வானத்தைப்பார்த்தால் எல்லாம் நட்சத்திரம் தான்.
சூரியன், சந்திரன் தவிர, இத்தனை கிரகங்கள் இருக்கின்றன, அவற்றில் சிறியது இது, பெரியது இது, இவை இவை சூரியனை சுற்றிவர இத்தனை ஆண்டுகள் ஆகும் என என்ன ஒரு கண்டுபிடிப்பு.
அப்பப்பா எத்தனை நூற்றாண்டுகள் இந்த கிரகங்களை கண்காணித்து, கண்டுபிடித்து, உறுதிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் என்ன கொடூரமாக அது மறைக்கப்படுகிறது புராணத்தின் பெயராலும், அந்தப்புராணத்தை அழிப்பது என்ற பெயராலும்.

டகால்டி :  உண்மையிலே உங்களைப் பாராட்டுறேன் கிரி கிரி. 

ஆனால் மேற்கத்திய நாடுகளிலும் வருடப்பிறப்பு ஜனவரியில் தானே வருது. இதுக்கு என்னதான் சொல்றீங்க? 

கிரி கிரி : கிரேக்க ரோமானியப்  பண்பாட்டில் மார்ச் மாதத்துவக்கத்தில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சாயநீரை ஒருவர் மீது மற்றவர் அடித்து விளையாடி வரவேற்பது வழக்கம் நம்ம ஊர் மஞ்சத்தண்ணீர் அடித்துக் கொள்ளும் கிராம வழக்கம் போல. வட இந்தியாவில் ஹோலி (Holi) பண்டிகை இதே காலகட்டத்தில் (மார்ச் இறுதியில்), வசந்த கால பல நிற இலை துளிர்கால புத்தாண்டை  வரவேற்கும் நோக்கிலேதான், கொண்டாடத் தொடங்கினார்கள். இப்போது வெறும் சடங்குத்தனமாக ஆகிவிட்டது. இந்த ஹோலியும் தமிழர்களின் விழா தான். அதன் உண்மையான பெயர் ஊழித்திருவிழா. ஊழி என்றால் யுகம், காலம் என்றே பொருள். ஊழி ஹோலி ஆகிவிட்டது.

கிரேக்க கால கணக்கீட்டின்படி (Aries) ஏறிஸ் என்ற நட்சத்திரத்துக்கருகில் சூரியன் வரக்கூடிய மாதமே மார்ச் மாதம்.

இந்த ஏறிஸ் என்பது, நம் தமிழ் வார்த்தை தான். மறி என்று நாம் சொல்லும் செம்மறி ஆடு. முன்பு சொன்ன நம்மூரு மேட ராசி தான் மறி, ஏறி, ஏறிஸ் ஆகிருக்கிறது. (M)Ari-es.
Peripulus என்பவரின் கிரேக்க நூலான Maris Erythraei

(6:24) என்பதிலும் மார்ச் மதத்தில் தான் ஆண்டின் தொடக்கம் என எழுதப்பட்டிருக்கிறது.செவ்வாய் (Mars) கிரகத்தோடு தொடர்புடைய அந்த விண்மீன் (Aries, மேட, மேஷ,) என்பதால் அந்த மாதத்தின் பெயரே மார்ச்.

ஐந்தாம் மாதம் ஜூலியஸ் சீசர் பெயரில் ஜூலை என்றும்,  ஆறாவது ஆகஸ்ட் மாதம் அகஸ்டஸ் சீசர் பெயரிலும் அமைத்துக்கொண்டார்கள். செப்டெம்பர் (சப்த (7), அக்டோபர் (அட்டம் (8), நவம்பர் (நவ (9), டிசம்பர் (தசம் (10), என எல்லாம் தமிழ் பெயரிலேயே வருவதைப்பார்க்கலாம். ஆக ஓர் ஆண்டுக்கு மொத்தம் 10 மாதங்கள்தான் இருந்தன.
ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் குளிர்மாதங்கள் என்பதால் கணக்கில் எடுக்கப்படாத விடுமுறை நாட்களாயிருந்தன.
இதில் விநோதமானது ஏன் இன்னமும் டிசம்பர் என்ற பத்தாம் மாதத்தை 12ம் மாதமாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம் (இது 7, 8, 9 க்கும் பொருந்தும்). இது வரலாற்றுக் கணக்கீட்டுப்  பிழை இல்லையா?
போப் கிரகோரியன் காலத்தில் தான் (1582 பெப்ரவரி 24) முதல் முறையாக இப்போது நாம் பயன்படுத்தும் நாட்காட்டி (ஜனவரி – டிசம்பர், 12 மாத)முறை வழக்கத்திற்கு வருகிறது.

இத ஏற்காமல் தொடர்ந்து ஏப்ரல் முதல் தேதியில் வருடப்பிறப்பு கொண்டாடியவர்களை ஏமாற்ற ஆரம்பிக்கப்பட்ட வழக்கமே ஏப்ரல் ‘ fool ‘ வழக்கம்.

எதற்க்காக இந்த கிரகோரியன் நாட்காட்டி கொண்டுவரப்பட்டது.

ஒன்று கிழக்கத்திய (தமிழ்) வானியல் நாட்காட்டியில் உள்ள சரியான கணக்கீடுகளைக் கொண்டு மேற்கத்திய குறைபாடுகளை களைதல்.

இரண்டு உலகளவில் இந்த நாட்காட்டியை பொதுமைப்படுத்துவது.

மூன்று இயேசுவின் ‘பிறப்பு மைய’ ஆண்டுக்கணக்கீட்டை (ஜனவரி முதலாகக்கொண்டு) நடைமுறைக்குக் கொண்டுவருவது. (கி.மு – கி.பி எல்லாம் இதற்கு பிறகுதான் வருது.)

நாட்காட்டியிலும் ஐரோப்பிய காலனியாதிக்கம்தான்.

டகால்டி :  கிரி கிரி அண்ணே,  தட்சணாயணம், உத்தராயணம் வழக்கப்படி தை தான் வருடப்பிறப்பு என்கிறார்களே. 

அதை ஏத்துகிறீங்களா இல்லையா ?

கிரி கிரி :

இது வேறு ஒன்றுமில்லை. பூமியின் சுழற்சியில் சூரியனின் இருப்பிடம் கடகரேகை யிலிருந்து மகரரேகை வரை பயணிப்பதை தட்சணாயணம் (தெக்கண அயனம்-தென் திசை நோக்கிய பயணம்), உத்தராயணம்- திரும்பவும் மகர ரேகையிலிருந்து கடக ரேகை நோக்கிய மேல்நோக்கிய பயணம். அவ்வளவுதான்.

அதனால்தான் இந்தியாவில் தெற்கே உள்ள பகுதி தக்கான பீடபூமி என்றும், மேலே உள்ள பகுதி உத்திரப்பிரதேசம் என்றும்  அழைக்கப்படுகிறது. சூரியன் தெற்கு முனையான மகர ரேகைக்கு (Tropic of Capricorn) போய்விட்டு திரும்பும் நாள் டிசம்பர் 22. [இந்த  இயற்கையான மகரஜோதி (சூரியன் மகரத்தில்) திரும்புவதை மறைத்து, செயற்கையான வெளிச்சம் ஏற்படுத்தி அய்யப்பன் என்று சொல்லி சேர நாட்டவர் ஏமாற்ற, நம்ம தமிழர்கள், பக்தி என்ற பெயரில் ஏமாந்துபோய் வருகிறார்கள்]

இந்த சூரியன் மகர ரேகையில் திரும்புதலை சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் என்று அந்த நாளில் கொண்டாடுகிறார்கள். காண்க:http://www.chidambaramnataraja.org/festivals.html

மகர ரேகை ஆஸ்திரேலியா வழியாக செல்கிறது.

கடக ரேகை இந்தியாவின் மத்தியில் மத்தியப்பிரதேசம்  வழியாக செல்கிறது.

பண்டைய கடக நாடு, ஒரிசா, மத்திய பிரதேசம், பீகாரை உள்ளடக்கியது. ஒரிசா மாநிலத்தின் முக்கிய நகரத்தின் பெயர் கட்டாக். (கடகம் – Tropic of Cancer).

சூரியன் வடக்கிலிருந்து தெற்காக, பின் தெற்கிலிருந்து வடக்காக பயணிப்பதற்கும் ஆண்டின் தொடக்கத்திற்கும் நேரடித் தொடர்பில்லை. அதனைஒட்டி ஒரு விழாவாகத்தான் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் தைப்பொங்கல் என்பதைப்போல் பிற மாநிலங்களிலும்

தெலுங்கர், கன்னடர் – மகர்சங்கராந்தி

குஜராத்தில் – உத்தராயண்

ஒரிசாவில் – மகர்மேளா

பஞ்சாப், சம்மு, உத்தரப்பிரதேசம் – லோக்ரிபண்டிகை

வங்காளம் – கங்காசாகர்மேளா

என கொண்டாடப்படுகிறது.

டகால்டி :   தமிழர்கள்  வருடத்தை எப்படி பிரித்திருந்தார்கள்? அப்பறம் இந்தியாவில என்கெங்கெலாம் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கிரி கிரி : இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். பழந்தமிழர் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தனர். இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும்

இளவேனில் ; (சித்திரை, வைகாசி) / முதுவேனில்   (ஆனி, ஆடி),

கார் ; (ஆவணி, புரட்டாதி) / கூதிர் ; (ஐப்பசி,கார்த்திகை),

முன்பனி ; (மார்கழி, தை) / பின்பனி ; (மாசி, பங்குனி),

என்றுசற்றுவிரிவாகக்குறிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையிலும் ஆண்டு இளவேனிலோடுதான் ஆரம்பமாகிறது.

இந்தியாவில் சித்திரை ஒன்றில் புழங்கும் 
வருடப்பிறப்புகள்;

காஷ்மீர் -நவரேக்

மஹாராஷ்டிரா- குடிபட்வா

கோவா- குடிபட்வா

பஞ்சாப், ஹரியானா- பைசாஹி

பீஹார்- வைஷாகா

மேற்குவங்கம்-போஹேலாபைசாஹி

இராஜஸ்தான் -தப்னா

மணிப்பூர்-சஜிபுநோங்மாபன்பா

பாலி ,இந்தோனேசியா,மொரிஷியஸ்-நியேபி

அஸ்ஸாம்-போஹாஹ்பிஹு

சிந்தி- சேத்திசந்த்

ஆந்திரா -உகாதி

கர்நாடகா-உகாதி

கேரளா- விஷு

தமிழ்நாடு- சித்திரைபுத்தாண்டு

இதில்

ஆந்திரா,கர்நாடகாவில்சித்திரைஒன்றுமார்ச்-23 இல்வருவதாககணக்கிட்டுஅன்றுஉகாதிகொண்டாடுகிறார்கள்.

மஹாராஷ்டிரா,கோவாவில்குடிபட்வாசித்திரைஒன்றுமார்ச் 23 இல்வருவதாககொண்டாடப்படுகிறது.

மற்றஇடங்களில்சித்திரைஒன்றுஏப்ரல்-13 இல்வருகிறது.

டகால்டி : அண்ணே நீங்க இப்ப இருக்கிற இத்தாலி நாட்ட வச்சு இதுக்கு ஏதாவது சொல்ல முடியுமா?

கிரி கிரி :

சித்திரை மாதம் என்ற பெயரிலேயே திரை விலகும் மாதம் என்ற பதம் தொனிக்கிறது.

இத்தாலியிலும் பழைய வருடத்தின் முதல் மாதமாகிய (aprile) அப்ரீலெ, என்ற வார்த்தையும் (aprire) அப்ரீரே என்ற வினைச்சொல்லிலுருந்துதான் வருகிறது. அதன் அர்த்தம் திறப்பது. வருடத்தின் திறப்பு.

டகால்டி :  உலகளவில பொதுவாக இந்த வருடப்பிறப்பு பத்தி என்ன சொல்றீங்க?

கிரி கிரி :

பூமியின் எந்தப்பகுதியில் பார்த்தாலும் அது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி, ஆப்ரிக்காவாக இருந்தாலும் சரி பூமியில் செடி, கொடி, மரங்கள் இலை உதிர்த்து மீண்டும் துளிர்க்கும் காலம், வசந்த காலம் அது சித்திரைதான். இயற்கையே தனக்குள் உயிர் உருவாக ஒரு காலநிர்ணயத்தைக் கொண்டிருக்கிறது. இயற்கையை  மனிதன் வெல்ல முடியாது. இணைந்துதான் பயணிக்க வேண்டும்.

இன்று தமிழ் நாட்டை ஆள்பவர்களால் (ரெண்டும்தான்) மதியிழந்துவிடாமல், பழந்தமிழரின் ஆற்றலறிவின்படி அறிவியல் உண்மையை ஏற்போம்.

Advertisements