திருவிளையாடலில் தமிழர் அறிவியல்


எல்லோருமே பிறப்பு, மற்றும் வளர்ப்பால் ஏதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்போம்.

இது இயல்பானது.

இந்த நம்பிக்கையின் போக்கில் பலருக்கும் வரக்கூடிய சந்தேகங்கள் கடவுள் பற்றி, மதம் பற்றி, மத நிறுவனங்கள் பற்றி, அதில் ஒரு சில தவறான தனி மனிதர்கள், அல்லது நிறுவனக்குறைபாடுகளால் அல்லது தனிப்பட்ட பாதிப்புகளால்.

இதுவும் இயல்பானதே.

தேடலை விடாதவன் மனிதன். அதனால் தான், கண்டுபிடிப்புகள் சாத்தியமானது.

ஆனால் மதம் கேள்விக்கு அப்பாற்பட்டது என மனிதனின் வளர்ப்பில் புகுத்தப்படுகிறது, பிறகு அது நிறுவப்படுகிறது. எனவே அப்பாற்பட்டு சிந்திப்பது சிரமமாகிறது. தவிர்க்கிறோம், கட்டாயப்படுத்தப்படுகிறோம், சமூகக்கட்டுமானம் நிர்பந்திக்கிறது. ஆனால் உண்மையில் மன ஆழத்தில் எண்ணற்ற கேள்விகள், குழப்பங்கள்.

தத்துவஇயல் , மனோவியல், இறையியல், அறிவியல், மொழியியல், வாழ்வின் அன்றாடவியல், கடைசியில் எல்லாம் அவியல் தான். 

நானும் கேள்விகளோடு வளர்ந்தவன் தான். 

பல கேள்விகளுக்கு பழந்தமிழரின் அறிவியல் தான் எனக்கு விடை கொடுத்திருக்கிறது. ஏதோ தமிழனாய் பிறந்ததால் அவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். 

இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் அறிவியல், மதம், மொழி மூன்றின் வேர்களைத் தேடிச் சென்றால் அவை மூன்றும் ஒரு புள்ளியில் நிற்கும். 

அந்தப்புள்ளி தமிழ்தான். இதை ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும். 

இன்னும் தமிழை உலகம் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழனே கண்டுகொள்ளவில்லை எனும்போது யார் கண்டுகொள்வார். ஆனால் தமிழரின் எதிரிகள் கண்டுகொண்டுவிட்டார்கள். அதனால் தான் தமிழனை எழ விடாமல் அடிக்கிறார்கள். விழித்துக்கொள்ளாமலிருக்க தூங்க வைக்கிறார்கள். தூக்கம் வரலைன்னா ஊற்றிக்கொடுக்கிறார்கள். 

உலகின் அனைத்து மதங்களின் ஊற்றுக்கண் தமிழர்களின் அறிவியல். தமிழன் மத நம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை உருவாக்காதவன். அவனின் அளவுகடந்த அறிவியல், விண்ணியல் ஞானம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது. பறிக்கப்பட்ட அறிவு அவன் மீதே மதக்கோட்பாடாய் திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உலகின் எந்த மதமும் விதிவிலக்கல்ல. 

விரைவில் ஒவ்வொன்றாய் பகிர்ந்து விவாதிப்போம். எல்லா மதங்களும் அவைகளின் கோட்பாடுகளும் விவாதத்திற்கு உட்பட்டவையே. 

காரணம் மனிதனே முதன்மையானவன். 

மனிதனே இல்லையென்றால் மதங்கள் எங்கே நிற்கும்.


திருவிளையாடல்:

 

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேசுக்கு அடுத்து நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஞானப்பழம். புராணக்கதை நம் எல்லோருக்கும் தெரியும். மூத்தவர் விநாயகர் இளையவர் முருகர் யார் முதலில் உலகம் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே ஞானப்பழம். விநாயகர் தாய், தந்தையை சுற்றிவந்து இவர்களே உலகம் என்று பேசி ஞானப்பழம் பெற்றுவிடுவார். கோபித்துக்கொண்டு முருகன் பழனிக்கு.

இது புராணக்கதை. இதில் எங்கே தமிழர்களின் அறிவியல்.

திரிசூல மூன்று சக்திகள் பிரம்ம, விஷ்ணு, சிவனில் இந்த சிவன் யார் ?

உலக உயிர் உருவாகக் காரணமாயிருக்கும் சூரியனே சிவன். சிவன் – சிவந்தோன். ஆங்கிலத்தில் Red Sun or Red Giant. சூரியனின் முதிர் நிலை சிவந்த நிலை. (தி.மு.க. உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே அதுதான் Red Giant.)

நாம் காணும் சூரியனின் தற்போதைய நிலை இளம்பிராயம். அதாவது நமது சூரியனின் வயது நாலரை கோடி. 

இன்னும் 5 கோடி வருடங்களுக்கு பிரச்சினை இல்லை. அதன்பின் அது பெரிதாக ஆரம்பிக்கும். எந்தளவிற்கு என்றால் படிப்படியாக வளர்ந்து முதல் கிரகம் புதனை விழுங்கும். அதாவது பெரிதாகும் சூரியனின் வெப்பத்தில் புதன் சாம்பலாகிவிடும். பின்னர், வெள்ளி கிரகம், பூமி (நம்ம பூமிதான்), செவ்வாய், வியாழன் வரை விழுங்கப்படும், அந்த அளவிற்கு சூரியன் மிகப்பெரிய சூரியனாக, சிவப்புச்சூரியனாக (Red sun ) விரிவடையும். 

நம் சூரியன் இனிமேல்தான் Red giant ஆகணும். ஆனா ஏற்கனவே Red giant ஆன சூரியன்கள் நிறைய சுத்திக்கிட்டு இருக்குது. இப்ப மே மாதத்தில் இரவு பத்துமணிக்கு மேலே வானில் கிழக்கு பக்கம் பார்த்தால் ஒரு Red Giant தெரியும். அது விரைவில் வெடிக்கும் என்கிறார்கள். அவ்வாறு வெடிக்கும் போது அதன் வெளிச்சம் நன்றாக நமக்குத்தெரியும் என்கிறார்கள்.

அந்த  Red Giant டின் பெயர் Betelgeuse என்பதாகும். 

நம்ம சூரியன் 5 கோடி வருடங்களுக்குப்பின்னாடி Red Giant ஆவதற்கு முன்னாடியே இப்ப Red Giant ஆக இருக்கக்கூடிய இந்த திருவாதிரை நட்சத்திரத்தை நமது சூரியனுக்கு பதிலாக வைத்தால் அது எவ்வளவு பெரிசாக இருக்கும்?

 

இந்த Betelgeuse நட்சத்திரத்துக்கு தமிழர் வைத்த பெயர் திருவாதிரை. அந்த Red giant டயும் தான் பார்ப்போமே. குறித்துக்காட்டப்பட்டுள்ளதுதான் அது.

இந்த திருவாதிரைக்குக் கீழே இருக்கும் 3 நட்சத்திரங்களை வானில் பார்த்திருப்போம் கிராமங்களில் ஒலக்கைத் தடிமீன் என்பார்கள் (உலக்கை போல இதன் வரிசை இருப்பதால்). திருவாதிரை நம்ம பூமியிலிருந்து இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள் தூரம். 

ஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.

நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம். 

(நமக்குத் தெரியும் 1 கி. மீ. – 1,000 மீட்டர்)

கடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள். 

பன்னாட்டுத் தர அடிப்படையில்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.

விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.

ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர் 

(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை) ஆனால்

ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம்)

அப்படின்னா 

1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)

1 மணி நேரத்தில (3,00,000 X 60 X 60)

1 நாளைக்கு (3,00,000 X 60 X 60 X 24)

1 மாதத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30)

1 வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12)

இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)

திருவாதிரை நட்சத்திரம் இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள். (பெருக்கிகொள்ளுங்கள்)

நம்ம பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ரோக்சிமா செந்தௌரி (Proxima Centauri) இதன் தொலைவு 4.24 ஒளி ஆண்டுகள்தான்.

1. பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 லட்சம் (3,86,640) கி. மீ. என்பதால் அதன் பிரதிபலிக்கும் ஒளி நம்மை 1 வினாடியில் அடைந்துவிடுகிறது. 

2. சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் அதன் ஒளி வந்து சேர 8 நிமிடம் ஆகிறது. நாம் பார்க்கும் சூரியன் 8 நிமிடத்திற்கு முன்னாள் இருந்த சூரியன் தான். 

3. ஆனால் மிக அருகில் உள்ள நட்சத்திரமான ப்ரோக்சிமா செந்தௌரி யின் ஒளி நமக்கு வந்து சேர ஆகும் வருடங்கள் 4 வருடம், 2 மாதங்கள், 4 நாள்.

ஆக நாம் பார்ப்பது நட்சத்திரத்தை அல்ல அதிலிருந்து பல வருடங்களுக்கு முன் புறப்பட்ட ஒளியைத்தான். 

அப்ப திருவாதிரை நட்சத்திரம். ஆமாம் 640 வருடங்களுக்கு முன்னாள் புறப்பட்ட ஒளியைத்தான் பார்க்கிறோம். 

இதவிடக்கொடுமை என்னன்னா பல நட்சத்திரங்கள் செத்துப்போயாச்சு கருந்துளையாகி. ஆனா அதிலிருந்து வரும் ஒளியை இன்னும் பல நூறு, ஆயிரம் வருடங்களுக்கு பார்த்துக்கொண்டிருப்போம். 

இதையெல்லாம் நம்ம தமிழ் மூதாதையர்கள் எப்பவோ கண்டிபிடிச்சு சொன்ன விசயங்கள். ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்திற்கும் பெயரே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்னா அவற்றை எல்லாம் சேர்ந்து தேடுவோம். 

பின்னால் வரும் சில செய்திகளுக்கு தேவை என்பதால் சூழ்நிலை விளக்கம் கொஞ்சம் நீண்டுவிட்டது. 

சிவந்த சிவன் என்பது நம்ம சூரியன் தான். 

அடுத்த  பெயர் பார்வதி. இந்த பெயருக்கு தனி விளக்கமே தேவையில்லை. 

பார் என்றால் இந்த பூமி. வதி என்றால் வசிப்பவர். இந்த பூமித்தாய் தான் அவர். அந்த சூரியனும் இந்த பூமியும் சேர்ந்தால் தான் உலகில் உயிர் உருவாகும். 

சக்தி இல்லையேல் சிவன் இல்லை. சிவன் இல்லையேல் சக்தி இல்லை. 

பூமி தனியாகவோ, சூரியன் தனியாகவோ இருந்து உயிர் தர முடியாது. இரண்டும் சேர்ந்ததுதான் அர்த்தநாரீஸ்வரர். 

அர்த்த-பாதி. (அர்த்த ராத்திரியில வந்து எழுப்புறியே ன்னு சொல்வோம்ல)

நாரீ – (நரன் என்றால் மனித ஆண், நரபலி, நரன் என்பதன் பெண்பால் பெயர் நாரீ)

ஈஸ்வரன் – இரட்சிப்பவன், உயிர் கொடுப்பவன், சூரியன்.

 

அடுத்து 

விநாயகன் – விரிந்த நாயகன் 

கணபதி – கணத்த சரீரன். பெரிய வயிறு கொண்டிருப்பது.

பிள்ளையார் -பெரிய பிள்ளை 

ஆனைமுகன் / யானைமுகன் / கஜமுகன் / ஐங்கரன்-ஐந்து கரங்களை உடையவன் – எல்லாம் யானையைக்குறிக்கும். மனிதன் காணும் விலங்குகளிலேயே மிகப்பெரியது என்ற அடிப்படையில் இப்பெயர்.

கிரகங்களிலேயே பெரியது வியாழன். விரிந்த கிரகம், உப்பிய கிரகம் உப்பிட்டர், Jupiter, உப்பர், upper எல்லாம் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள். வியாழனை ஒரு விரிந்த பாத்திரம் போல கருதினால், அதற்குள்ளே எத்தனை பூமிகளை போடலாம் என்றால் 1,321 பூமிகள். காண்க:

இந்த வியாழன் தான் விரிந்த நாயகனான விநாயகன்.

அப்ப முருகன். ஏற்கனவே இது பற்றி முந்தைய பதிவில் பார்த்திருப்போம். இருந்தாலும் மீண்டும் கலந்து பேசுவோம்.


தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது.  

முருகனுக்கான வார்த்தை ச ர வ ண ப வ என்பதும் ஓர் ஆறெழுத்து பெயரே.

 

 

எபிரேயர்களின் ‘சீயோன்’ என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம்.

வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் – ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்குப்பதிலாக, 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது. காண்க:
அந்த நட்சத்திரக்கூட்டம் இது தான்.

இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள். இது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் ‘ஆறு’ என்பதைக்கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது. அந்தப்பெயர் சுபஆறு (Subaru)

கார்த்திகை திருவிழா தமிழர்களின் வானியல் அறிவுத்திருவிழா. பூமி, நிலா, சூரியன், இந்த கார்த்திகை நட்சரத்திரக்கூட்டம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரும் நாள் அது. காண்க:

இந்த Pleiades அல்லது கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் பூமியிலிருந்து 440 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது. 

எனவே கார்த்திகேய நட்சத்திரக்கூட்டம் அல்லது முருகன் நம்ம சூரியனைச் சுற்ற வாய்ப்பே இல்லை.

ஆனால் வியாழன் சூரியன், பூமி இரண்டையும் சுற்றுகிறது. காரணம் சூரியனை சுற்றும்போது பூமி இடையில் இருப்பதால் அதையும் சேர்த்தே சுற்றுகிறது.

எனவேதான் 

வியாழன் (பிள்ளையார்) – சூரியன் (சிவன்), பூமி (பார்வதி) யை சுற்றுகிறது. (ஞானப்பழம் கிடைத்தது)

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (முருகன்) – சூரியன், பூமியைச் சுற்ற வில்லை. (ஞானப்பழம் கிடைக்கவில்லை.)

                                                          தொடர்ந்து தேடுவோம் 

Advertisements