நவீன அறிவியலின் மறுபக்கம்

21 ம் நூற்றாண்டு, கம்ப்யூட்டர் நூற்றாண்டு, நவீன அறிவியலின் உச்சக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று சொல்லி நமக்கு நாமே சுய பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

செய்மதி

1975 ல் அனுப்பிய ஆரியபட்டா என்ற செயற்கைக்கோள் முதல் இன்று வரை (2015 மே 13) இந்தியா 77 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. காண்க: மற்றும் காண்க:

இந்த செய்மதிகள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என்று யாரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.  ஒவ்வொன்னையும் அனுப்பும் போது ஆகா இந்தியா அறிவியலில் எங்கேயோ போயிருச்சு, மேலை நாடுகளுக்கு சமமா நாமும் செயற்கைக்கோள் அனுப்புறோம் ன்னு நமக்கு ஒரு மிதப்பு.

நமக்கு செல்பேசியில் பேச, இணையம் தேட, தொலைக்காட்சியில் பல சேனல்கள் பார்க்க முடிகிறது செய்மதியால்.

இதோடு போதும் என நினைத்து விடுகிறோம். படம் காட்டியே, கடலை போட வச்சே நம் கவனத்தை திசை திருப்பி விடுகிறார்கள்.

1. வானிலை அறிவிப்பில் துல்லியமாக சொல்கிறார்களா. இல்லையே, இருந்திருந்தால் ரிஷிகேஷ், கேதர்நாத் வருடாவருடம் வெள்ள உயிரிழப்பு தவிர்த்திருக்கலாமே.

2. சுனாமி அறிவிப்பு செய்து பல்லாயிரம் பேர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாமே.

3. மண் வளம், நீர்வளம், முன்பாகவே மழை அளவு சொல்லி விவசாயத்தை வளர்த்திருக்கலாமே.

வேற எதுக்கு செய்மதிய பயன்படுத்துராங்கன்னு பாத்தா

1. நிலத்தில் எங்கெங்கே கனிம வளம் இருக்கிறது என்று கண்டுபிடித்து தனியார், மற்றும் அன்னிய நாட்டு நிறுவங்களுக்கு சொல்லி அவர்கள் கொள்ளையடிக்கத்தான் உதவுகிறார்கள். காண்க: 

மற்றும் காண்க:

2. கடலில் எங்கெங்கே மீன் வளம் இருக்கிறது என்று அந்நிய நாட்டு நிறுவனங்களுக்குத் தான் சொல்கிறார்கள். காண்க:

3. மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராம பாத்துக்கிறது. தறுதலைத் தலைவர்களோட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துல ஆயுதங்களோட யாரும் வராங்களான்னு வேவு பாத்து அவிங்க உயிரை மட்டும் பாதுகாத்துக்க செய்மதிய பயன்படுத்திக்கிராங்களே ஒழிய மக்களை பாதுகாக்கவே அல்ல.

1. உதாரணத்திற்கு நம் அனைவருக்கும் தெரிந்த 2G ஊழல்.

செய்மதியின் தொலைத்தொடர்புக்கான அலைக்கற்றை இடத்தை இந்திய செய்மதி துறையிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிகவிலைக்கு விற்றது.

இதனால் இந்தியாவுக்கு இழப்பு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். காண்க:

அமெரிக்காவின் டைம் (Time, 2011) இதழ் உலகில் நடந்த மிகப்பெரிய 10 ஊழல்களில் 2 வதாக இதனை அறிவித்தது. காண்க:

முதல் ஊழல் 1972 ல் நடந்த அமெரிக்க அதிபர் நிக்சனின் வாட்டர் கேட் (Water gate) ஊழல். காண்க:

2. ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை யில் ஏராளமாக பெட்ரோல் வளம் இருப்பதை இந்திய செய்மதி மூலம் கண்டுகொண்ட அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாநில அரசுக்கு உரிய ராயல்டி தராமல் சோனியா காங்கிரஸ் மூலம் கொள்ளை இலாபம் பார்த்தது (வருடத்துக்கு 25,000 கோடி). மாநிலத்துக்கும், தனக்கும் எதிர்பார்த்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி உலங்கு வானூர்தி “விபத்தில்” கொல்லப்பட்டார். காண்க:

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என்று ரஷ்ய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது. காண்க: 

இது குறித்த ரஷ்ய நிறுவனத்தின் தகவல். காண்க:

மரபணு மாற்று

மரபணு மாற்று உயிர்கள், விதைகள். GMO (Genetically Modified Organisms): இது இயற்கையின் மீதான இறுதி யுத்தம். இது பற்றி இங்கே விளக்கமாக காணலாம். காண்க:

1. மரபணு மாற்றம் பற்றி 1997 ல் ஒரு ஆடு குளோனிங் செய்யப்பட்ட போது பரவலாக அறியப்பட்டது.

2. இந்த குளோனிங் டோலி ஆடு பற்றிய ஒரு விளக்கப்படம் கீழே. படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம்.

குளோனிங் என்பது என்ன?

ஆண் விலங்கின் விந்தணு உட்கருவுக்குப்பதிலாக உடல் செல்லின் உட்கரு (Body Cell Nucleus) எடுக்கப்பட்டு,  உட்கரு நீக்கப்பட்ட ஒரு பெண் விலங்கின் சினை முட்டைக்குள் திணிக்கப்பட்டு புதிய உட்கரு உருவாக்கப்படுகிறது.


இந்த புதிய உட்கரு வேறொரு பெண் விலங்கு கருப்பையில் வளர வைக்கப்பட்டு பிறப்பு உருவாக்கப்படுவதே குளோனிங் முறை.

இது மனிதனில் சோதிக்கப்படவில்லை என்கிறார்கள். விலங்குக்கும் முதலில் அப்படித்தான் சொன்னார்கள்.

4. மரபணு மாற்ற சோதனையை பல வழிமுறைகளில் சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக:

1. ஆப்பிளின் விதை உட்கருவும், திராட்சையின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு கிராப்பிள்.

(Grape + Apple = Grapple)

2. உருளைக்கிழங்கின் விதை உட்கருவும், தக்காளியின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு பொமாட்டொ (Potato + Tomato = Pomato) அல்லது Tomtato என அழைக்கப்படுகிறது.

3. இதைவிட கொடுமை விலங்குகளிலும் இயற்கைக்கு விரோதமாக பரிசோதிக்கப்படுவதுதான்.

ஆண் சிங்கத்தின் விந்தணுவும் பெண் புலியின் சினை முட்டையும் இணைக்கப்பட்டு லைகர் எனவும்,

(Lion + Tiger = Liger) 

அதே போல ஆண் புலி மற்றும் பெண் சிங்கம் இணைத்து டைகன் (Tiger + Lion = Tigon) எனவும் பரிசோதிக்கப்படுகிறது.

தக்காளியும், தவளையும்

தக்காளி சீக்கிரம் அழுகி கெட்டுப்போகாமல் இருக்க தவளை ஜீனையும் (Gene) தக்காளியோடு இணைக்கிறார்கள். காண்க:

இந்த மரபணு மாற்று கத்திரிக்காயிலும் உண்டு. (BT- Bacillus Thuringiensis காண்க:)

மரபணு மாற்று பயிர்களை உண்ணும் எலிகளுக்கு என்ன ஆகிறது பாருங்கள்:

70 சதவிகித எலிகள் வயிறு வீங்கி வெகு சீக்கிரம் செத்துப்போகின்றன.

1. இந்தியாவில் சக்கரை வியாதிகள் போன்ற அனைத்து வியாதிகளும் பெருகுவதற்கு முதற்காரணமாய் மரபணு மாற்று பயிர்கள் இருக்கின்றன.

2. மரபணு மாற்று பயிர், கனிகளில் இருந்து விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது.

3. ஒவ்வொரு முறையும் அந்த அன்னிய நிறுவனங்களைத்தான் தேடிச்செல்லவேண்டும் விதை வாங்க. அவர்கள் தரும் விதைதான். வேறு வழியே இல்லாமல் போய்விடும். மீண்டுமாய் அடிமைத்தனத்தில் நமது விவசாயம்.

மரபணு மாற்று பயிர்களை தீவிரமாக நம்மீது திணிக்க நினைக்கும் முக்கிய அந்நிய நிறுவனங்கள்:

முன்னணியில் பிடி கத்திரிக்காயின் நிறுவனம் மான்சாண்டோ

மான்சாண்டோ நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர் உலகின் பெரும் பணக்காரரும், பெரும் “நன்கொடையாளருமான” பில் கேட்ஸ்.

அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்:

1. உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முதல் பயங்கரவாத நாடு அமெரிக்கா.

மேலே உள்ள 5 அதிகளவில் ஆயுத விற்பனை செய்யும் நாடுகள் தான்,

ஐ. நா. சபையின் பாதுகாப்பு சபையில்

வீட்டோ (Veto) அதிகாரத்தோடு உள்ள நிரந்தர 5 உறுப்பு நாடுகள். காண்க: விளங்குமா உலகம்?

மேலும் காண்க: 

அமெரிக்க இராணுவ புலனாய்வு அமைப்பு இயற்கையையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்களின் நண்பனான டால்பினையும் உளவு காரியங்களுக்குப் பயன்படுத்திகொள்கின்றனர்.

2. அமெரிக்காவின் இராணுவ செலவுகள்:

3. அமெரிக்காவின் ரகசிய உளவு விமானம். இது வானில் பல மாதங்கள் சுற்றி வந்து பல நாட்டு ரகசிய தகவல்களை சேகரித்தது யாருக்கும் தெரியாமல் அது பூமியில் இறங்கியதும் தான் தெரிய வந்தது.

இது பற்றிய மேலும் விபரங்களுக்கு காண்க:

இது தவிர ரகசிய செய்மதியையும் அனுப்பியுள்ளது. காண்க: 

மற்றும் காண்க:

4. உலகம் தடை செய்துள்ள பொதுமக்களுக்கு அபாயகரமான கூட்டுக்குண்டுகளை (Cluster Bombs) அமெரிக்கா பயன்படுத்தி மக்களைக் கொல்வதோடு, பெருமளவில் ஏற்றுமதியும் செய்கிறது. காண்க:

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டதை நாம் அறிவோம்.

உண்மையான காரணம் போரை முடிக்க அல்ல.

அணு குண்டுகளால் ஜப்பானுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் நாம் அறிவோம்.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி காலை 8.15 க்கு ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டால் உடனடி 90,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ந்தேதி காலை 11.02 க்கு நாகசாகியில் வீசிய அணுகுண்டால் உடனடி 37,000 மக்கள் கொல்லப்பட்டனர். விரைவில் 2 நகரங்களிலும் இறந்தோர் எண்ணிக்கை 2,00,000 ஆனது. குற்றுயிருமாய், குலையுயிருமாய் அனுக்கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம்.

ஜப்பான் நாடு போரை முடித்து சரணடைய தயாராக இருந்த நேரம். ஆனால்

அணுகுண்டுகள் ஜப்பானின் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்டு கொல்லப்பட்டனர். காரணம்:

1. அமெரிக்காவால் தான் போர் முடிந்தது, ரஷ்யாவால் அல்ல என நிரூபிக்க.

2. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவ.

3. அமெரிக்கா பற்றிய பயத்தை நாடுகளிடையே உண்டுபண்ணி சோவியத்தின் கம்யூனிசத்துக்கு எதிராக அணி திரட்ட.

4. தான் தயாரித்து வைத்திருக்கும் அணு குண்டுகளை சோதிக்க.

5. ஆயுத விற்பனையை அதிகரிக்க. காண்க:

என்ன வகையான பரிசோதனைகள்:

1. ஹிரோஷிமா மீது யூரேனியம் அணுகுண்டு வீசப்பட்டது. நாகசாகி மீது புளுடோனியம் அணுகுண்டு வீசப்பட்டு ஒவ்வொன்றின் பாதிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.

2. ஹிரோஷிமா நகரத்தின் மீது 600 மீட்டர் உயரத்திலும், நாகசாகி நகரத்தின் மீது 500 மீட்டர் உயரத்திலும் வீசப்பட்டு அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வித்தியாசம் பரிசோதிக்கப்பட்டது. காண்க:

அறிவியலில் மனித இனம் வளர்ந்ததாய் சொல்லப்படும் இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் பணம் பண்ணும் மிகப்பெரிய 13 தொழில்களாய் இருப்பவை:

1. போதைப்பொருள் 2. இராணுவ தளவாட விற்பனை 3. விபச்சாரம் 4. பெட்ரோலிய உற்பத்தி

5. போலியான பொருள் உற்பத்தி 6. விளையாட்டுத்துறை 7. சூதாட்டம் 8. வங்கித்தொழில் 9. மதுபான நிறுவனங்கள் 10. ஆபாச வலைதள வியாபாரம் 11. மருந்துத்துறை 12. திரைப்படங்கள் 13. ஆள்கடத்தல், உறுப்புகள் கடத்தல்.  காண்க:

மனிதகுல மேம்பாட்டை விடுத்து பணம் பண்ணும் குறிக்கோளே செல்வந்த நாடுகளின் முதலாளித்துவ குறிக்கோளாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் உந்து செல்ல ஒவ்வொரு கட்டத்திலும் நுணு நுணுக்கமாக திட்டமிடும் அறிவியல் உலகம் (காண்க காணொளி🙂 நிலநடுக்கத்தை தடுக்க முடியாவிட்டாலும் அது அடிக்கடி வரும் இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலாவது மக்கள் இழப்பை தடுக்கும் வகையில் நிலநடுக்கத்தை தாங்கும்  கட்டட அமைப்புகளை உருவாக்கலாமே.

பூமியிலிருந்து ஏறக்குறைய 8  கோடி கி.மீ தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் மைக்ரோ வினாடி சுத்தமாக அனுப்பும் தொழில் நுட்பம் படைத்த, 40 % ஏழையர் வாழும் இந்திய அறிவியல் உலகம்,

விபத்தினால் மனித உயிர்கள் அதிகம் இழக்கும் பேருந்துகளில், மகிழுந்துகளில் இருப்பதுபோல் காற்றுப்பை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒவ்வொரு இருக்கையிலும் பாதுகாப்பான கச்சை (Seat belt) வசதியாவது செய்தால் மனித உயிரிழப்பு பெருமளவு குறையுமே.

படிகளில் கட்டாயமாக கதவுகள் இயங்கச்செய்து உயிர்ப்பலிகள் குறைக்கலாமே, குடும்பங்களில் இருள் அடையாமல் ஒளி ஏற்றலாமே.

கோக-கோலா  vs டொரினோ

உள்நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தால் பரவாயில்லை. இங்கேதான் ஏற்கனவே மோர், இளநீர், பழரசம் போன்ற இயற்கை பானங்களும், டொரினோ போன்ற நல்ல செயற்கை பானங்களும் இருக்கின்றதே.

இங்கு எதற்கு நீரினை கொள்ளை அடித்து விவசாயத்தை, குடிநீரை அழிக்கும் அமெரிக்க கொக கோலா பானம்.

அய்யா கிணத்தைக் காணோம்.

தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன.

கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர், கொளத்தூர் (தற்காலிகமாக தப்பித்திருக்கிறது), தாமிரபரணி ஆற்றுப்படுகை ஜெயங்கொண்ட சோழபுரம், விக்கிரவாண்டி, மதுரை விளாங்குடி (வைகை ஆற்றுப்படுகை) ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு கோக் நிறுவனத்துக்காக நீர் உறிஞ்சப்படுகிறது. நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம். காண்க:

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளில் (2000-2015) மட்டும் 35,000 கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டு விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. காண்க:

வறட்சி என்பது இயற்கையானதே ஆனால், நீர் வள மேம்பாடு என்பது அரசு திட்டமிடவேண்டிய ஒன்றே. காமராசர் திட்டமிட்டார், அணைகள் கட்டினார். இப்போது புதிதாக கட்டாவிட்டாலும் இருக்கும் நீர்வளத்தையாவது காக்கவேன்டாமா.

அணைகள், கண்மாய்கள், ஆறுகளை தனியாருக்கு விட்டுவிட்டு குடிசை வீடுகளில் மழைநீர் சேமிக்க சொல்வது யாரை ஏமாற்ற?

செந்நெல் அரிசியும் வெந்நெல் அரிசியும்

1.  ஆங்கிலேய ஆட்சியில் இமாச்சல பிரதேசத்தில் பயிரான சிவப்பு நெல் அரிசியை அங்கிருந்த ஒரு கவர்னர் மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. 

2. நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்! 

3. பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு – வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (Embryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். 

4. மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் – எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து – ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. 

5. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன. 

6. இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். ‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர். 

7. இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. 

8. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி… இப்போது காணாமல் போன மர்மம் என்ன? சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள். ஏன்..? 

9. ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். ‘பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். 

10. தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது. நம்ம முன்னாள் தமிழர்கள் சேர நாட்டவர் இன்னும் விடாமல் உண்ணும் அரிசி செந்நெல் அரிசிதான். மேலும் விபரங்களுக்கு காண்க:

இந்தியாவில் மாங்கனிகளில் 1000 க்கும் மேற்பட்ட ரகங்கள், காண்க: 

படத்தை பெரிதுபடுத்தி வகைகளை பார்க்கலாம்.

அரிசியில் 4,000 க்கும் மேற்பட்ட ரகங்கள் காண்க:

என ஒவ்வொரு விவசாய விளைபொருட்களிலும் உருவாக்கி பாரம்பரியத்தோடு இருக்கும் நமது விதை வளங்களை எல்லாம் கூண்டோடு அழிக்க பன்னாட்டு வியாபார கும்பல் உள்ளூர் அரசியல் எட்டப்பர்களோடு சதி செய்து ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்.

இது மூன்றாம் உலகப்போர், நவீன யுத்தம், மறைமுகப்போர், எங்கே, எப்படி துவங்கும் எனத் தெரியாத போர், ஆனால் ஏற்கனவே துவங்கிவிட்ட போர். விழித்திருப்பதே இப்போரை எதிர்கொள்ளும் வழிமுறை. நாமும் விழித்திருப்போம், நம்முடன் இருப்போரையும் விழிக்க வைப்போம்.

கோல்கேட் பற்பசை Vs கரித்தூள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

ஆனால் நமது தங்கத்தை தகரமாக நினைத்து, அந்நிய தகரத்தை தங்கமாக வைத்திருக்கிறோமே.

இது வடிகட்டிய அடிமைத்தனம் இல்லையா…

சொல்லுவார்கள் குரங்கானது தனது காயத்தை நோண்டி அந்த துன்பத்தில் சுகம் காணுமாம். (இது உண்மையா என தெரியவில்லை)

நாமும் அதுபோல வாழும் அற்ப பிராணிகளோ ?

மெல் கிப்சன் என்ற அமெரிக்க இயக்குனர் இயக்கிய அப்பொகலிப்டொ என்ற திரைப்படத்தில் மேற்கிந்திய மூதாதையரை, அறிவியலில், வானியலில் சிறந்து விளங்கிய மாயன் இன மக்களை மனிதக்கறி வேட்டையாடுபவர்களாக கேவலமாக காட்டியிருப்பார்.

நம்மூரிலும் அதேபோல செல்வராகவன் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தமிழர்களை கேவலமாகக் காட்டியிருப்பார்.

வரலாற்று உலகின் முதல் கப்பற்படையை கொண்டிருந்த, தென்கிழக்காசியா முழுவதையும் தன் வணிக கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கோர்வாட் போன்ற பிரம்மாண்ட கோயில் கட்டி, உன்னத பண்பாட்டை செல்லுமிடமெல்லாம் ஏற்படுத்திய சோழர்களை கொலைகாரர்களாக, இழி நிலையில் இருப்பவர்களாகக் காட்டியிருப்பார்.

சோழர்கள் பற்றிய உண்மை வரலாறு இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் சோழர் என்றே படம் முழுக்க சொல்ல வேண்டும், வடுகர் என்று சொல்ல வேண்டியதுதானே.

இங்கே நவீன தகவல் தொடர்பு சாதனமான திரைப்படம் எப்படி வரலாற்றை திரித்துக்கூற சதிகாரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.

21 ம் நூற்றாண்டிலும் கூட அறிவியல் உலகம் ஆப்பிரிக்க வறுமையை ஒரு புள்ளிவிபரமாகத்தான் பார்கிறதே ஒழிய இவற்றிற்கெல்லாம் காரணமான மேற்கத்தியத்தை, செய்த வரலாற்றுத்தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய வைக்கவோ அல்லது வறுமையை போக்கவோ இல்லாது வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதே போல 21 ம் நூற்றாண்டிலும் கூட தமிழ் அறிவியல் உலகமும், கற்றறிந்தோர் உலகமும் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கும் அழிவுலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது.

                                      நாமும் கூடத்தான்.

தொடர்ந்து தேடுவோம்…