சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் நாம் அறிந்ததே : 8 கோள்கள்

(புளுட்டோ 1930 ல் ஒரு கோளாக கண்டுபிடிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப்பின் 2006 ல் அனைத்துலக வானியல் ஒன்றியம் (IAU) அது கோள் இல்லையென அறிவித்தது. காண்க:

தமிழரின் வானியல்படி உள்ள கோள்கள்:

 • சூரியன்,
 • சந்திரன்,
 • புதன்,
 • வெள்ளி,
 • செவ்வாய்,
 • குரு (வியாழன்),
 • சனி,
 • ராகு,
 • கேது,

இரண்டு வகைப்படுத்துதலிலும் என்ன வித்தியாசங்கள் ?

தமிழரின் நவகிரகங்களில் காணப்படும் வித்தியாசங்கள் நான்கு.

 1. சூரியன், சந்திரன் சேர்க்கப்பட்டுள்ளது.
 2. பூமி இல்லை.
 3. யுரேனஸ், நெப்டியூன், (ப்ளுட்டோ) இல்லை.
 4. ராகு, கேது என புதிய இரண்டு கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
 1. சூரியன், சந்திரன் சேர்க்கப்பட்டுள்ளது.
 2. பூமி இல்லை.

மனிதர்கள் வாழ்வது இந்தப் பூமியில்தான். வாழும் இந்த பூமியை அடிப்படையாகக்கொண்டுதான் மற்ற கிரகங்கள் கணிக்கப்படுகின்றன. எனவே பூமி இந்தப்பட்டியலில் இல்லை.

இந்த பூமிக்கு வாழ்வு கொடுப்பதோடு கிரகிக்கும் தன்மையும் உள்ளதால் சூரியன் ஒரு கிரகமாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதே போல சந்திரனின் கிரகிக்கும் ஈர்ப்புவிசை பூமியை பாதித்து கடலில் ஓதங்களை (ஏற்ற, இறக்கங்கள்) ஏற்படுத்தும் அளவிற்கு இருப்பதால் சந்திரனும் ஒரு கிரகமே.

அப்போல்லோ 11 விண்கலத்தில் நிலவுக்கு சென்றவர்கள் அதே கலத்தில் நிலவில் இறங்கவில்லை. நிலவின் ஈர்ப்பு அ கிரகிக்கும் எல்லை வரை அப்போல்லோவில் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து நிலவிற்கு “ஈகிள்” என்ற இன்னொரு விண்கலத்தில் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மட்டும் சென்றனர். கொல்லின்ஸ் என்பவர் அப்போல்லோவிலேயே தங்கிவிட்டார் நிலவின் ஈர்ப்பு எல்லைக்கருகில். காண்க:

ஆனாலும் கூட தமிழர்கள் சூரியன், சந்திரன் இரண்டிற்கும் பிற கிரகங்களுக்கு கொடுத்த “கிரகங்களுக்குரிய இடத்தைக்” கொடுக்கவில்லை. கொஞ்சம் இரண்டாம் நிலைதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால்தான் வானவியலோடு தொடர்புடைய சோதியவியலில் மற்ற கிரகங்களுக்கு இரண்டு இடங்கள் கொடுத்தவர்கள், சூரியன், சந்திரனுக்கு மட்டும் ஒரே ஒரு இடம் தான்.

காரணம் சூரியன் ஒரு நட்சத்திரம், சந்திரன்  பூமியை சுற்றி வரும் இயற்கையான ஒரு துணைக்கோள் என்பதால்.

 1. யுரேனஸ், நெப்டியூன், (ப்ளுட்டோ) இல்லை.

(எனது தனிப்பட்ட கருத்து

மனித இனம் முதலில் சனி கிரகத்தில் தான் தொடங்கியிருக்க வேண்டும். பின்னர் வியாழன், செவ்வாய் அதன்பிறகு தற்போது இந்த பூமியில். காரணம் என்னென்னா சூரியனிலிருந்து உருவான நவ கிரகங்கள் தொடக்கத்தில் சூரியன் போல நெருப்புக் கிரகங்கள்தான். கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பிக்கவும்தான் உயிர் உருவானது. அப்படின்னா எது முதலில் குளிர்ந்திருக்க வேண்டும் தூரத்தில் உள்ளதுதானே. ஆக தூரத்தில் இருந்த பெரிய கிரகங்களில் ஒன்றான சனியில் தான் உயிர்கள், மனிதன் உருவாகியிருக்க வேண்டும்.

சனியைத்தொடர்ந்து வியாழன், செவ்வாய், பூமி. பூமிக்கடுத்து வெள்ளியில் தொடர வேண்டும்.
என்ன, ஒன்று முடிந்து மற்றொன்றில் உயிர் தொடங்க பல கோடி வருடங்கள் இடைவெளி ஆகும்.
பூமிக்கு அடுத்துள்ள செவ்வாயில் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். காண்க:
அப்படியானால் ஏன் வியாழன், சனியில் தொடங்கியிருக்கக்கூடாது.
ஒருவேளை அந்த கிரகங்களின் உருவாக்க காலத்தில் ஆக்சிசன் இல்லை என்றால் மனித இனம் கரியமில வாயுவை (co 2) அல்லது நைட்ரஜனை சுவாசித்திருக்கலாம். ஆக்சிசன் தான் சுவாசிக்கனும்னு ஒரு கட்டாயம் இல்லையே. பூமியிலே நமக்கு வேற வழியில்லை. பிராண வாயு சுவாசிக்கும் பிராணிகளாக வாழுமாறு சூழல் உருவாகிவிட்டது.
மேலும், பூமிக்கணக்கில் ஒரு ஆண்டு என்பது  அந்தக் கிரகங்களில் 10, 30 வருடங்களாகக் கூட இருந்திருக்கலாம். அங்கே உருவான மனித இனம் அந்தக் கிரக சூழ்நிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்துன்னு சொல்லலாம், கண்டுபிடிப்புன்னு சொல்லலாம் ???

ஏன் சனி கிரகத்தில் தொடங்கணும்? சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ வில் தொடங்கி இருக்க வேண்டியதுதானே? என நீங்கள் கேட்கலாம்.

அந்த 3 கிரகங்களையும் நமது முன்னோர் ஒதுக்கியிருக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானும் தேடிப்பார்த்தேன். இதோ ஒரு சில விபரங்கள்.

 1. நமது சூரியனை சூரியக்குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் இடமிருந்து வலமாகத்தான் சுற்றிவருகின்றன.

எதுவும் விதிவிலக்கு இல்லை. ஆனால் ஒவ்வொரு கிரகமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

 1. சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தங்களைத்தாங்களே சுற்றும்போது உள்ள குளறுபடிகளை கீழே உள்ள படம் தெளிவாகக் காட்டும்.
 1. முதலாவதாக உள்ள புதன் என்னும் மெர்க்குரி சாய்ந்துள்ள கோணம் வெறும் 2 பாகைதான். இதனால் ஒரே ஒரு பிரச்சினைதான். பகலில் கடுமையான வெயில், இரவில் கடுமையான குளிர் என்பதைத்தவிர கோடை, மழை, குளிர், வசந்தம் போன்ற காலநிலை மாற்றம் என்பதே இருக்காது.
 1. எல்லா கிரகங்களும் தங்களைத்தாங்களே இடமிருந்து வலமாக சுற்றும்போது இரண்டாவதாக உள்ள வெள்ளி கிரகம் மட்டும் தன்னைத்தானே வலமிருந்து இடமாக சுற்றுகிறது. இங்கும் காலநிலை மாற்றம் இல்லை.
 1. நமது பூமி  23.5 கோணம் சாய்ந்து சுற்றுகிறது என்றும் அதனால்தான் தன்னைத்தானே சுற்றும்போது கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை சூரியனின் ஒளி நேரடியாக படும் வகையில் சுற்றுகிறது என்றும் அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது என்றும் நமக்கெல்லாம் தெரியும்.

மற்றகிரகங்களின் சுழற்சியையும் மேலேயுள்ள படம் தெளிவாகக் காட்டும். அவைகளில் செவ்வாயும், சனியும் ஏறக்குறைய நமது பூமியைப்போல.

அவைகளில் நமக்கு முக்கியமானவை யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ.

 1. யுரேனஸ்

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் எல்லாம் தங்களைத்தாங்களே இடமிருந்து வலமாகவோ, அல்லது வலமிருந்து இடமாகவோ சுற்றும்போது, இக்கிரகம் மட்டும் கீழிருந்து மேலாக ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி எப்போதும் இரவாகவும் மற்றொரு பகுதி எப்போதும் பகலாகவும்  தொடர்ந்து நீடிக்கும். காண்க:

 1. நெப்டியூன்

உயிரினங்கள் வாழத்தகுதி அற்ற கிரகங்கள் இவை காரணம்:

 1. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களின் காந்தப்புலம் அதாவது ஈர்ப்புத்தன்மை நிலையற்று இருப்பதைக்காணலாம். ஒருபக்கம் பூமியைவிட 50 மடங்கு ஈர்ப்புத்தன்மை உடையது. மறுபுறம் மிக,மிகக்குறைவாக. காண்க:
 1. அவ்வாறு காந்தப்புலம் மாறுபட காரணம். அந்தக்கிரகங்களில் இரும்பு போன்ற உலோகத்தன்மை இல்லை. யுரேனஸ் கிரகத்தின் உள்புறம் கட்டும் படம்.
 1. யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ மூன்று கிரகங்களிலும் சூரியனிடமிருந்து பெற்ற நெருப்பு இல்லை. மேலே உள்ள படத்தில் காண்பது போல எல்லாம்  குளிர்ந்துபோய் வெறும் பாறை மற்றும் ஒரு சில வாயுவாய் கிடக்கிறது. மற்ற கிரகங்களைவிட வெகு சீக்கிரமாய் குளிர்ந்து போய்விடக் காரணம், சூரியனிலிருந்து தூரமும், உருவ அளவில் சிறிய தன்மையும்.

மாறாக பூமி நெருப்புத்தன்மையோடும், உலோகத்தன்மையோடும் இருக்கிறது.

 1. எனவே புளுட்டோ வை கிரகம் இல்லை என்று சொன்னதுபோல் இன்னும் சில வருடங்கள் கழித்து யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களும் கிரகங்கள் இல்லை என்று அறிவிப்பு வரும்.

இதைத்தான் எங்க முன்னோர்கள் 2000 வருசங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்களேன்னு அப்பத்தான் உணர்வோம்.

நம்ம தமிழ் முன்னோர்களின் எந்த கண்டுபிடிப்பைத்தான் நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

 • எப்படி அவ்வளவு தொலைவிலுள்ள கிரகத்தின் நிறம் கருப்பு என்று கண்டுபிடித்து அதற்கு காரி என்றும், அதற்கு வளையம் இருக்கிறது என்று கண்டுபிடித்து வளைந்தது என்ற பொருளில் சனி என்று நமது தமிழ் முன்னோர்கள் பெயரிட்டார்கள். காண்க:
 • மிகப்பெரியது, விரிந்தது மற்றும் வாயுக்களின் காரணமாய் ஆழமானது என்று கண்டுபிடித்து வி-யாழன் என்று பெயரிட்டார்கள்.
 • சிவப்பு நிறமுள்ளது என்று கண்டுபிடித்து செம்மையான வாய், செவ்-வாய் என்று பெயரிட்டார்கள்.
 • பூக்கக் கூடியது என்று கண்டுபிடித்து பூ-மி என்று பெயரிட்டார்கள்.
 • வெள்ளை நிறமானது என்று கண்டுபிடித்து வெள்ளி என்று பெயரிட்டார்கள்.
 • புத்தி கூர்மை உள்ளவர்கள்தான் சூரிய வெளிச்சத்திற்கு மிக அருகில் உள்ள கண்ணுக்கு எளிதில் புலப்படாத அந்த மிகச்சிறிய கிரகத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதற்கு புதன் என்று பெயரிட்டார்கள். எப்படி???   அதனால் தான் ஒரு பழமொழியே உண்டு: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று. நாம அப்படியே புதன் கிழமைக்கு அதை மாற்றி விட்டோம்.காண்க:
 • பொதுவாக  சனி கிரகத்திலிருந்து வரக்கூடிய கதிர் வீச்சுக்கள் மட்டும் நீலம் மற்றும் கருமை நிறம் உடையதாக இருக்கிறது என்று மேலை நாட்டு அறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள சித்தன்னவாசல் குகை ஓவியத்தில் சமணர்கள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கு கருப்பு வண்ணம் கொடுத்துள்ளனர் அதற்கு ஒரு வளையத்தையும் இட்டுள்ளனர் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘புலிப்பாணி’ தமது பாடலில் சனி ஒரு பனிக்கிரகம் எனப் பாடியுள்ளாரே. காண்க:
 • வியாழன் கிரகத்திற்கு அடுத்து மிகப்பெரிய கிரகமான சனி கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியை பாதிக்கும் என்றும், அதன் பாதிப்பு பூமிக்கு அருகில் வரும்போதும், மிக நெருங்கி இருக்கும்போதும், மற்றும் சற்று விலக ஆரம்பிக்கும்போதும் என்றும்  27 நட்சத்திரக்கூட்டங்களில் சனி கிரகம் 3 நட்சத்திரக்கூட்டங்களைக் கடக்கும் வரை அந்த பாதிப்பு இருக்கும் என்றும், ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்தையும் சனி கிரகம் கடக்க இரண்டரை வருடங்கள் எடுப்பதால் (3 x இரண்டரை – ஆக ஏழரை வருடங்கள்) என்றும் கண்டுபிடித்து ஏழரை சனி என்று கண்டுபிடித்த தமிழர் அறிவு எங்கே? காண்க:
 • கடக ரேகை முதல் மகர ரேகை வரை பூமியின் மேல் சூரியனின் ஒளி படும் வகையில் பூமியின் சுழற்சி உள்ளது என்று கண்டுபிடித்து கடக ரேகை வரை சூரியப்பயணம் போனதும் திரும்புதல் என்று தமிழர்கள் சொன்னதைத்தானே Tropic of Cancer மற்றும் Tropic of Capricorn என்று மேற்கத்தியம் பெயர் மாற்றி இருக்கிறது.

TROPIC

Top of Form

Search: 

tropic

late 14c., “either of the two circles in the celestial sphere which describe the northernmost and southernmost points of the ecliptic,” from L.L. tropicus “of or pertaining to the solstice” (as a noun, “one of the tropics”), from L. tropicus “pertaining to a turn,” from Gk. tropikos “of or pertaining to a turn or change, or to the solstice” (as a noun, “the solstice”), from trope “a turning” (seetrope). The notion is of the point at which the sun “turns back” after reaching its northernmost or southernmost point in the sky. Extended 1520s to the corresponding latitudes on the earth’s surface (23 degrees 28 minutes north and south); meaning “region between these parallels” is from 1837. Tropical “hot and lush like the climate of the tropics” is first attested 1834.

trope

1530s, from L. tropus “a figure of speech,” from Gk. tropos “turn, direction, turn or figure of speech,” related to trope “a turning” and trepein “to turn,” from PIE base trep- “to turn”

Etymology of the English word tropical

the English word tropical

derived from the English word tropic

derived from the Old French word tropique

derived from the Late Latin word tropicus

derived from the Late Latin word tropus (trope, figure of speech, figurative use of word)

derived from the Greek word tropos, τρόπος (a turn; mode or style (especially with preposition or relative prefix as adverb, like); figuratively, deportment or character)

derived from the Proto-Indo-European root *trep-

also English word trophy means thiruppi

Tropic means thirumbuthal

ஒன்பது கிரகங்களை:

 • கோள்கள் என்று சொன்னது மூலம் பூமி தட்டையானது அல்ல எல்லாம் சுற்றி வருகிற கோளங்கள் என்றும்,
 • உலகம் என்ற சொல் மூலம் ​(எ.கா: உலங்கு வானூர்தி- helicopter அந்தரத்தில் அப்படியே எழும்புவது) இந்த பூமி அந்தரத்தில் சுற்றும் கோள் என்றும்
 • வியாழன் சூரியனைச் சுற்ற 12 வருடங்கள், சனி சூரியனை சுற்ற 30 வருடங்கள் இவை இரண்டும் இணையும் வருடம் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் (12,24,36,48,60 – வியாழன்) (30,60 – சனி ) என்று 60 வருடக்கணக்கை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த தமிழர்கள் இருக்க,
 • பூமி சூரியனை சுற்றி வருவதை கி.பி.1543 ல் கோப்பர்நிகஸ் கண்டுபிடித்ததாய் உலகத்தை நம்ப வைத்திருக்கும் மேற்குலகம், அதை கோப்பர்நிகஸ் புரட்சி (Copernican Revolution) என்று வேறு வர்ணிக்கிறது.
 • முதலில் நம்ம முன்னோரின் அறிவை நாமாவது புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒட்டுமொத்த தமிழரின் வளர்ச்சிக்கு அது அடித்தளம் அமைக்கும். தமிழரின் ஆட்சி வரும்போது உலகத்தை உணர வைப்போம். ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் நமது முன்னோரின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளும்.

அடுத்த தலைப்பான ராகு-கேது பற்றி சாதரணமாக தேடினால் அது ஒரு இன்னொரு தமிழர் வானியல் புதையல் போல இருந்தது. எனவே இதன் தொடர்ச்சியாய் அடுத்த பதிவில் தேடுவோம்.