நேதாஜி மட்டுமா கொல்லப்பட்டார் ?

வழக்கம்போல பத்த வச்ச பரட்டை யாக சுப்ரமணிய சாமி இருந்தாலும் முதலில் கேள்வி எழுப்பியவர் வை.கோ. தான்.

டிசம்பர் மாதம் 2 ம் தேதி வை. கோ. வெளியிட்ட அறிக்கை. காண்க:

சனவரி 24 ல் சுப்ரமணிய சாமி கூறிய குற்றச்சாட்டு. காண்க:

இங்கே முதலில் கேள்வி எழுப்பியது யார் என்பது முக்கியமல்ல. செய்தியும், பின்னணியும் தான்.

தேசிய எழுச்சியை எவரெல்லாம் உருவாக்கி வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்தக் கதி தான் என்பது மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகளின் முடிவுறாத அடக்குமுறை சதி.
ஒரு சிறிய பின்னணி 

 1. 1945 ஆண்டளவில் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் தனியார் முதலாளித்துவமும் அரசு தொழிலாளித்துவமும் (பொதுவுடைமை) மக்களுக்கான எதிர்கால உலகளாவிய செயல் திட்டங்கள் தங்களுடயவையே என்பதை நிரூபிக்க முயற்சித்த காலகட்டம்.
 1. தனியார் முதலாளித்துவத்தின் தலைமையகமான அமெரிக்கா தனக்கென ஒரு கூட்டணி உருவாக்கியது NATO கூட்டணி (North Atlantic Treaty Organization).

அதே சமயம் அரசு தொழிலாளித்துவத்தின் தலைமையகமான முன்னாள் சோவியத் யூனியன் தனக்கென ஒரு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. WARSAW கூட்டணி (போலந்து நாட்டின் தலைநகரான ‘வார்சா’ என்ற பெயரைக்கொண்டு உருவாக்கியது.)

 1. நாடு பிடிக்கும் வெறியில் இருந்த இத்தாலி முசோலினி யின் பாசிசம் (Fascism),

ஆரிய இனத்தின் பெயரைச்சொல்லி பதவி வெறி, ஆக்கிரமிக்கும் வெறியில் இருந்த

    ஹிட்லரின் நாசிசம் (Nazism),

தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் ஆக்கிரமிக்க நினைத்த ஜப்பான்,

இவை மூன்று நாடுகளும் அச்சு நாடுகள் கூட்டணி என அழைக்கப்பட்டது (Axis Powers). ஆனால் வெளி உலகுக்கு சொன்ன காரணம்: மேலாதிக்க முதலாளியத்தையும், மக்களின எதிரி கம்யூனிசத்தையும் அழித்து புதிய அரசை நிறுவ வேண்டும் என்பதே. காண்க:

 1. இதனால் அதுவரை எதிரணியில் இருந்துவந்த அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரே கூட்டணிக்கு வந்தன. எலியும் பூனையுமாயிருந்த இங்கிலாந்தும் பிரான்சும் ஒன்று சேர்ந்தன. காண்க:

கீழே படத்தில் சோவியத் ஸ்டாலின், அமெரிக்க ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் சர்ச்சில் 1943 ல் இரானின் டெஹ்ரானில்.

சி. ஐ.ஏ (Central Intelligence Agency) அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனம்.

 1. 1941 ல் (Office of Coordinator of Information-COI) என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் துவக்கினாலும் 1947 ல் அமெரிக்க அதிபர் ட்ருமன் என்பவரால் சி. ஐ.ஏ (Central Intelligence Agency) என பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. காண்க:
 2. “கொலைகாரர்களின் நிறுவனம்” என்றழைக்கப்படும் இந்த உளவு நிறுவனத்தால் 1987 வரை மட்டுமே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 3. 1953 ல் ஈரானில் அந்நிய பிரிட்டிஷ் எண்ணை நிறுவனத்தை தேசிய மயமாக்க முயன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் முகம்மத் மொசாதேக் (Mohammed Mossadegh) தூக்கி எறியப்பட்டு சர்வாதிகாரி ஷா என்பவர் அதிபராக அமெரிக்காவால் நியமிக்கப்படுகிறார்.
 4.  1961 ல் ஐ. நா. வின் தலைமைச்செயலர் ஹம்மர்ஸ்ஜொல்ட் (Dag Hammarskjold) என்பவர் ஜாம்பியாவில் கனிமச்சுரங்கங்களை ஆக்கிரமிக்க நினைத்த பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு எதிரான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால்  “விமான விபத்தில்” கொல்லப்பட்டார். காண்க:
 1. 1967 அக்டோபர் 9 ல் அர்ஜென்டினா நாட்டுக்காரரான போராளி சே குவேரா பொலிவியா நாட்டில் கொல்லப்பட்டார்.
 1. 1973 ல் சிலி நாட்டின் மக்கள் அதிபர் அலண்டே (Salvador Allende) கொல்லப்பட்டு பினோச்சே (Augusto Pinochet) என்ற சர்வாதிகாரி அதிபராக்கப்படுகிறார். காண்க:
 1. எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்த இராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும் லிபியாவின் கடாபி வரை காலனியத்தை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின்  தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.
 1. தென் அமெரிக்காவில் மக்களுக்காக பாடுபட்ட சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் சமீப காலமாக இறக்க காரணமாய் இருப்பது புற்று நோய். சர்வாதிகாரிகளுக்கு வராமல் அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த புற்று நோய் வருவது ஒரு நவீன தொழிநுட்ப அமெரிக்க சதி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. காண்க:

2008 ல் சி.ஐ.ஏ பராகுவே (Paraguay) நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அந்நாட்டு அதிபர் பெர்னாண்டோ லுகோ வினுடைய டி.என்.ஏ படிமங்களைப் பெற்றதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுருக்கிறது. காண்க:

 1. 2010 ஆகஸ்டில் பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ (60 வயது)

புற்று நோயால்  மரிக்கிறார்.

 1. 2011 அக்டோபரில் பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா தா சில்வா (66)

புற்று நோயால் மரிக்கிறார்.

 1. 2013 மார்ச் 5 ல் வெனிசூலா நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸ் (59) புற்று நோயால் மரிக்கிறார்.
 2. 2012 ஜனவரியில் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்நெருக்கும் (58)

புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

 1. கியூபா முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ மீதான 12 முறைக்கும் மேற்பட்ட

சி.ஐ.ஏ வின் கொலை முயற்சிகள். காண்க:

இவை அனைத்தும் அமெரிக்க சி.ஐ.ஏ வின் அதிநுட்ப அறிவியல் படுகொலைகளே (Scientific Assassinations) என்கிறது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம். காண்க:

 1. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ப்ரெஞ்சுக்காலனியாக இருந்த அப்பர் வோல்டா (Upper Volta) என்ற நாட்டை நேரியவர்களின் நாடு (Land of Upright Men) என்ற பொருள் பொதிந்த புர்கினா பாசோ (Burkina Faso) என்ற பெயருள்ள நாடாக மாற்றிக்காட்டிய தாமஸ் சங்கரா என்ற இளம் போராளி ஆப்ரிக்காவின் சே குவேரா என்றழைக்கப்பட்டார். அவருடைய 5 வருட ஆட்சிக்குள்ளாக, 37 வது வயதிலேயே கொல்லப்பட்டார். காண்க:

 

அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனமான சி. ஐ.ஏ வுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல முன்னாள் சோவியத் யூனியனின் கே.ஜி.பி. என்ற உளவு நிறுவனம். 

KGB: Komitet gosudarstvennoy bezopasnosti – கமித்தியெத் கசுதார்ஸ்த்வின்னய் பெசப்பாஸ்னஸ்தி, Committee for State Security.

1954 ல் முறைப்படி தொடங்கப்பட்ட இந்த சோவியத் ரஷ்ய உளவு நிறுவனம் 1991ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக சிதறிப்போகும் வரை அதே பெயரில் செயல்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் யூனியன் காலனி ஆதிக்கம்செய்வதற்கு மட்டுமல்ல பங்களாதேஷ் மற்றும், ஆப்கானிஸ்தான், வடகொரியா, இராக் போன்ற நாடுகளில் ஆட்சிக்கலைப்புகளுக்கும் தலைவர்கள் கொலைகளுக்கும் காரணமாய் இருந்திருக்கிறது. காண்க:

யால்டா உச்சி மாநாடு 4-11 பெப்ரெவரி 1945 சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்.

இரண்டாம் போருக்கிடையில் போர் யுக்தி பற்றி பேசிய இவர்கள் (இங்கிலாந்தின் சர்ச்சில், அமெரிக்காவின் ரூஸ்வெல்ட், ரஷ்யாவின் ஸ்டாலின்), போருக்குப்பின் யார், யார் என்னென்ன உலக நாடுகளை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வது என்பது பற்றி பேசிய முக்கிய மாநாடு. இன்றைய ரஷ்யா ஆக்கிரமிக்க நினைக்கும் செசென்யா என்ற எண்ணெய் வளமிக்க அதே கருங்கடல் பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் யால்டா (Yalta).

இந்த நாடு பிடிக்கும் காலனி ஆதிக்க நாடுகளின் பிடியில் சிக்கித் தவித்த பல நாடுகளில் ஒன்று நம்ம இந்தியா.

 1. நேதாஜி கொல்லப்பட்டார்.

ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மை அரசிடமிருந்து இந்திய தேசியத்தை மீட்க மட்டுமல்ல மேற்கத்திய வல்லாதிக்க நாடுகளின் அடிமைப் பிடிகளில் இருந்தும் விடுதலை அடைய நினைத்தவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

காந்தி, நேரு இவர்களின் காங்கிரஸ்  என்பது  ஆங்கிலேயர்களின் ஆதிக்க ஆசைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களாலேயே 1885ல் துவக்

கப்பட்ட ஒரு துதிபாடி அமைப்பு காண்க: என்பதை உணர்ந்து கொண்டவர் நேதாஜி. 1938 மற்றும் 1939 ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜி 1939 ல் காங்கிரசிலிருந்து விலகினார். இந்திய தேசிய படை (Indian National Army) யைத் துவக்கினார். காண்க:

உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில்,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமி கூறியுள்ளார். காண்க: 

நேதாஜியைக்கொல்ல காங்கிரசின் நேரு செய்த தேச துரோகங்களை வெளிப்படுத்துகிறார். காண்க:

“Netaji was declared a war criminal after World War II and fake information was flashed that he had died in a plane crash. He had one to the USSR for political asylum but was arrested there by Stalin.”

Swamy said Stalin had informed Nehru that Netaji was held in captivity there.

Nehru, in turn, informed the same to Britain and also gave his consent for Bose’s killing.

“Nehru’s stenographer, Shyam Lal Jain of Meerut on August 26, 1945 had typed a letter which Nehru sent to Stalin.

 1. இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

1964 ஜூன் 9 இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆனார். 1966 ஜனவரி 11 ல் இறந்ததாக சொல்லப்பட்டார். இவர் பிரதமராக இருக்கும்போது தான் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் குஜராத் அருகில் உள்ள கட்ச் வளைகுடா மற்றும் காஷ்மீர் தொடர்பாக 1965 ல் போர் ஏற்படுகிறது. இந்த போர் முடிந்து தாஷ்கெண்ட் ஒப்பந்தம் ஏற்பாடாகிறது. சோவியத் அதிபராக பிரெஷ்னேவ் இருந்த போது அங்கு பிரதமராக இருந்த கோசிஜின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் பிரதமர் அயுப் கானும் இந்தியப் பிரதமர் சாஸ்திரி யும் தாஷ்கென்ட் சென்றனர்.

தாஷ்கென்ட் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு நகரம். இன்று உஸ்பெகிஸ்தானின் தலைநகரம்.

1966 ஜனவரி 10 ந்தேதி தாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஜனவரி 11 அன்று இறந்ததாக அறிவிக்கப்படுகிறார் சோவியத் யூனியனால். அவரது சாவில் மர்மம் இருப்பது தெரிய வருகிறது. காண்க: 

விஷம் வைத்தே கொல்லப்பட்டார் என்று அவரது மனைவியும், அவரது மருத்துவரும் சொல்ல, சாஸ்த்ரியின் அடிவயிற்றில் வெட்டுக்காயமும் நீல நிறத்திட்டுக்களும் இருந்ததாக அவரது மகனும், சொன்ன செய்திகளுக்கு அரசிடமிருந்து பதிலே இல்லை.

ஆனால் இன்று வரை பிரச்சினையை வேறு யாரும் எழுப்பவில்லை. காரணம் சோவியத் யூனியன் அல்லது ரஷ்யாவுடன் உறவு பாதிக்கும் என்று. காண்க:

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது

மகாத்மா காந்தியே கூட காங்கிரஸ் கட்சியாலேயே கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

கோட்சே நேரடியாகக் கொன்றாலும் கூட காங்கிரசின் ஆரிய, பிராமணிய கருத்துக்களுக்கு, சோவியத் யூனியன் சார்ந்த அந்நிய நாட்டு கூட்டுக்கு உடன்பட மாட்டார் என்றும், என்றைக்கும் முதலாளித்துவ கொள்கைகளுக்கு உடன்படாமல், கிராமிய திட்டங்களையே செயல்படுத்த நினைப்பார் என்று பார்சி இன காந்தி, பிராமண, ஆர். எஸ். எஸ். நபரான கோட்சே மூலம் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. (இங்கே ஆரிய, பிராமணீய கொள்கையில் ? காங்கிரசுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதையும் நினைவு கூர்வோம்.)

நான் தேடிய வரை இது குறித்த தகவல் இல்லை என்றாலும் இந்த அளவுக்கு நேதாஜி, சாஸ்திரி விசயங்களில் அந்நிய நாடுகளின் சார்பாக செயல்படும் காங்கிரஸ் ஏன் இதையும் செய்திருக்கக் கூடாது. விரைவில் யாராவது காந்தியின் கொலை குறித்தும் கேள்வி எழுப்பினால் தக்க பதில் கிடைக்கலாம்.

 1. சஞ்சய் காந்தி கொல்லப்பட்டார். : காண்க:

சஞ்சய் காந்தியைக் கொல்ல நடந்த வெளி நாட்டு சதிகள் விக்கி லீக்ஸ் செய்திகள். காண்க 1:

காண்க 2:

அந்நிய பொருளாதார விசயங்கள் அவர் கொல்லப்பட காரணமாகும். காண்க:

 1. இந்திரா காந்தி கொல்லப்பட்டார். : காண்க:

காங்கிரசுக்குள்ளேயே சதி நடந்திருக்கிறது. காண்க:

The head of the investigating commission, Justice M. P. Thakkar, described Mr. Dhawan’s responses to questioning on the assassination as unreliable and said that the ”needle of suspicion significantly points to his complicity or involvement.”

Mr. Dhawan was ousted from his post by Mrs. Gandhi’s son and successor, Rajiv Gandhi, but was reinstated last month. Cleared of All Charges.

அந்நிய சதி சதிகார காங்கிரசை பயன்படுத்திக்கொண்டது. காண்க:

The report said that police investigators had turned up material that showed that an unnamed foreign agency had inspired and trained Sikh terrorists in an effort to destablilize the country.

 1. ராஜீவ் காந்தி சி. ஐ. ஏ வால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு துறை தலைவர் கார்த்திகேயன் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று சொல்லியிருக்கும் இவ்வேளையில் …

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதியரசர் கே.டி .தாமஸ் இன்று “மூவருக்கு தண்டனை நிறைவேற்றுவது சட்டப்படி தவறு” என்று கூறியிருக்கும் இவ்வேளையில் …

இந்திய அரசு எந்த உண்மையை மறைப்பதற்காக மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றத் துடிகிறது?

தங்கள் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி மீது உண்மையான அன்பு இருக்குமாயின் ராஜீவ் கொலை வழக்கில் உலகுக்கே தெரிந்த விடையளிக்கப்படாத கேள்விகளுக்கு காங்கிரஸ் விடை தேடாதது ஏன் ?

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள் …

 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறிபெரும்புதூரில்; நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? சிறிபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
 1. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
 1. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
 1. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
 1. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
 1. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
 1. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
 1. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
 1. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
 1. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
 1. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
 1. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
 1. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
 1. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!
 1. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
 1. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
 1. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
 1. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
 1. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகிய மூவரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?

 

Adnan Khashoggi b. 1935, Saudi Arms Agent.

 1. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
 1. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் “இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார்” என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
 1. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்ம ராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?
 1. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் சிறிபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்?
 1. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
 1. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். கொலை நடந்த கூட்டத்திற்கு முன்பு நடந்த கூட்டம் வரையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்த மாநில தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தியும், மூப்பனாரும், ஜெயந்தி நடராஜனும் சிறிபெரும்புதுரில் மட்டும் 100 மீட்டர் தொலைவிலேயே நின்றுவிட்டதன் மர்மம் என்ன?
 1. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணிய சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?
 1. பெல்ட் பாம்(வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவேயில்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?

ராஜீவ் கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இது போன்று பல இருக்க.. காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக சொல்லி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது அறிவிற்கு உகந்ததா?

ராஜீவ் பற்றிய தகவலுக்கு நன்றி: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

மேலும் இது குறித்த தகவலுக்கு காண்க: 

Sonia Gandhi confirms that “it is a fact that Arafat sent my husband messages through the Palestinian mission in India saying that they had learnt of the threats to his life. This was reconfirmed to me and my children personally by Arafat when he met us soon after my husband’s funeral. There were several other occasions when he received similar information.”

 காண்க:

Justice Jain gives considerable import to the Arafat input.

“I find the information furnished by Yasser Arafat genuine and there is no reason to disbelieve it…. From the note of Shri Muchkund Dubey and the CCB telegram, it is amply borne out that there was an international plot to assassinate Rajiv Gandhi and that it was a Mossad/LTTE/CIA link.”

காண்க:

RAW too provided the Commission with inputs, which it had shared with IB, on the activities of Mossad and CIA in India in the year immediately preceding the assassination. The final report mentions Amos Radia and Giorce Betchar as agents operating for the Israelis in India. As regards CIA activities in India, RAW had informed the IB that two suspected US intelligence officers were in India in the months preceding the killing.

 காண்க:

Justice Jain has devoted separate chapters to three key Indian players who are suspected, one way or the other, to have had prior knowledge of the assassination. Nothing definitive or conclusive here, but Jain has woven in intriguing loops of circumstantial evidence—quoted and contained in the annexures—around godman Chandraswami, Janata Party leader Dr Subramanian Swamy and former PM Chandra Shekhar. The three are bracketed, prima facie, as either having a link with those who allegedly conspired with the assassins or at least having been privy to the fact of a plot.

  காண்க:

தொடர்ந்து தேடுவோம்…