தீபாவளியும், பொங்கலும் வருசாவருசம் வர்றமாதிரி இந்த பட்ஜெட்டும் வந்துருது. ஏன், எதுக்குன்னு தெரியல? ஏதோ திட்டமிட்றாங்க போல, இருக்கட்டும்.

அவங்களும் வழக்கம்போல இது

 • மக்களுக்கான பட்ஜெட்,
 • இந்தியாவை வல்லரசாக்கும் பட்ஜெட்

அப்படின்னு 1952 லேர்ந்து சொல்லிக்கிட்டு இருக்காங்க.

பாவப்பட்ட நமக்குத்தான் புரிய மாட்டேங்குது, இந்த பாழாப்போன வல்லரசுன்னா என்னான்னு.

ஒருவேளை நமக்கே தெரியாம நாம வல்லரசு ஆகிட்டமோ?

இந்த பட்ஜெட் பத்தி யோசிச்சுத்தான் இவங்க குழம்பிப்போய்  இப்படி மட்டை ஆகிட்டாங்களோ?

பட்ஜெட் பத்தி விளக்கி எனக்கும் புரியாம, உங்களையும் குழப்பாம நாலே நாலு விசயம் நறுக்குன்னு சொல்லிட்டு போயிட்றேன்.

 1. பட்ஜெட்ல பற்றாக்குறை ங்கறாங்களே அப்படின்னா என்ன?
 2. பணவீக்கம் னு ஒரு வீக்கம் இருக்கே அது என்ன?
 3. மார்ச்ல வரும் வரி மார்ச்சுவரி, ஆக இந்த வரி பத்தி ரெண்டு வரி.
 4. கலரா இருந்தாலும் கறுப்பு-வெள்ளையில் சொல்லப்படும் கறுப்பு பணம் பத்தி ரெண்டு வார்த்தை.

(1) மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 3 வகைப்படும்.

 1. வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)
 2. நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit)
 3. பட்ஜெட் பற்றாக்குறை (Budget Deficit)

யாரும் பயப்படாதீங்க. சின்ன விசயம் தான், எளிமையா தான் இருக்கும் னு நம்பறேன்.

 1. வருவாய் பற்றாக்குறை 

– வரவுகள்(Revenue Income )

 1. வரி
 2. அரசு முதலீடு செய்துள்ள நிறுவனங்களிலிருந்து வருமானம்.

-வருவாய்ச் செலவுகள் (Revenue Expenditures):

 1. இராணுவ செலவு
 2. அரசு நிர்வாக செலவு
 3. சமூக செலவு.

-ஒரே வார்த்தையில் சொத்து எதுவும் உருவாக்காத செலவுகள்.

வருவாய் வரவைவிட வருவாய் செலவு அதிகம் இருந்தால் வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)

 1. நிதிப்பற்றாக்குறை 

– மத்திய அரசின் சொத்து சேர்க்கும் மூலதனச் செலவுகள் (Capital Expenditures)

 1. அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு
 2. கடன் வழங்குவது.
 3. நிலம், கட்டடம், எந்திரம் வாங்குவது.

மேற்சொன்ன (1) வருவாய்  மற்றும் (2) நிதி செலவுகளையும் விட வருவாய் வரவு (1) குறைவாய் இருந்தால் அது நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)

 1. பட்ஜெட் பற்றாக்குறை 

மேற்சொன்ன பற்றாக்குறை சமாளிக்க வழிகள்:

 1. கடன் வாங்குவது. [உள்ளூர் தனியார், வெளி நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து (IMF, World Bank)]
 2. ரிசர்வ் வங்கி பணம் அச்சிடுவது.

– இவை மூலதன வருமானம் (Capital Receipts) எனப்படுகிறது.

– இந்த மூலதன வருமானத்திற்குப் பிறகும் கடன் இருந்தால் அது பட்ஜெட் பற்றாக்குறை (Primary Deficit)
அவ்வளவுதான். இந்த வருச பற்றாக்குறைய பாப்போமா? தொகை எல்லாம் (கோடிகளில்)

மவனே இவ்ளோ பற்றாக்குறையை வச்சிக்கிட்டு, 8 சதவீத வளர்ச்சி, மேக் இன் இந்தியா, செவ்வாய்க்கு செய்மதி, வளர்ச்சி நோக்கி இந்தியா ன்னு என்னாமா சவடால் விடறாங்க…

அதிலயும் திட்டத்திற்காக செய்ற செலவைவிட திட்டமில்லாம பண்ற செலவுதான் எக்கச்சக்கமா இருக்கு.

(2) பணவீக்கம் னா என்ன?

நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களைவிட ரூபாய் நோட்டுக்கள் அதிகமானால் அது பணவீக்கம்.

உதாரணமாக: சந்தையில்

100 ரூபாய் பொருட்களுக்கு மக்களிடம் 100 ரூபாய் இருந்தால் பிரச்சினை இல்லை.

100 ரூபாய் பொருட்களுக்கு மக்களிடம் 200 ரூபாய் இருந்தால் அது பணவீக்கம். விலை ஏற்றுவார்கள்.

மக்களிடம் 100 ரூபாய் இருந்து 50 ரூபாய்க்கு மட்டுமே பொருள் இருந்தாலும் அது பணவீக்கம். விலை ஏற்றுவார்கள்.

நாட்டில் பணவீக்கம் குறைந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் விலைவாசி குறையவில்லை. ஏன்?

கடந்த ஆண்டு சனவரியில் இருந்த 20 சதவீத பணவீக்கத்தைவிட

இந்த ஆண்டு சனவரியில் பணவீக்கம் 8 சதவீதம் தான்

அப்படின்னா

100 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 20 சதவீத உயர்வினால் கடந்த ஆண்டு 120 ரூபாய்க்கு விற்றது.

100 ரூபாய் விலையுள்ள அதே பொருள் இந்தாண்டு 8 சதவீத உயர்வினால் 128 ரூபாய்க்கு விற்கிறது.(120+8)

(அதே 20 சதவீதம் இந்த  ஆண்டும் என்றால் 140 ரூபாய்க்கு விற்றிருக்கவேண்டும்)

ஆக விலைவாசி குறையவில்லை; விலையேற்றத்தின் வேகம்தான் குறைந்திருக்கிறது, அவ்வளவுதான்.

என்ன ஒரு ஏமாற்று வேலை

இதிலே இன்னும் மூன்று வகை ஏமாற்று வேலை இருக்கிறது.

 1. பணவீக்கம் மொத்த விலை குறியீட்டு எண்ணை (Whole Sale Price Index) அடிப்படையாகக் கொண்டது.

அதாவது

ஒரு கனரக வாகனம் 10 சதவீத விலையேற்றத்திலும்

அரிசி விலையேற்றம் 50 சதவீதம் என்றால் மொத்த விலையேற்றம் 30 சதவீதம் என்பார்கள்.

அவசியப்பொருள் விலையேற்றத்தைக் குறைத்துக் காட்டி ஏமாற்றுவார்கள்.

பாதிப்பு அன்றாடவாசிகளுக்குத்தான்.

 1. ரெண்டாவதாக பொது மக்கள் சில்லறை விலையில் தான் வாங்குவார்கள். ஆனால் அரசு கணக்கெடுப்பது மொத்த விலை குறியீட்டு எண்ணை மட்டுமே. மொத்த விலை எப்போதும் குறைவாகத்தான் இருக்கும்.
 1. மூன்றாவதாக, மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடும்போது மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பேருந்துக்கட்டணம், மருத்துவக்கட்டணம், கல்விக்கட்டணம் போன்ற சேவைகளின் கட்டணத்தை சேர்க்க மாட்டார்கள்.

என்னவொரு வில்லத்தனமான ஏமாற்று வேலைகளை “மக்களின்” அரசுகள் செய்கின்றன.

இதற்கு மாற்று இல்லையா? ஏன் இல்லை?

மொத்த விலை குறியீட்டு எண் (WPI) ணுக்குப்பதிலாக
நுகர்வோர் குறியீட்டு எண்ணை (Consumer Price Index-CPI) பயன்படுத்த வைக்க வேண்டும்.

இது தான் உண்மையான, அதிகமாயுள்ள பணவீக்கத்தை, விலை ஏற்றத்தை சரியாகச் சொல்லும்.

இந்த ரெண்டு வகை கணக்கீடுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை

கீழுள்ள படம் எளிதாய் விளக்கும்.

(3)  வட்டி, வரி, கிஸ்தி 

மத்திய அரசு நாட்டு மக்களிடமிருந்து இரண்டு விதமாக வரி வசூலிக்கிறது.

 1. நேரடி வரி: உங்களுக்கு தெரிஞ்சு உங்க பணத்தை எடுக்கிறது.

அதாவது வருமான வரி, நிறுவன வரி போல.

 1. மறைமுக வரி: உங்களுக்கு தெரியாமலே உங்க பாக்கெட்டுல இருந்து பணத்தை உருவுறது. அதாவது நீங்க குடிக்கிற தேநீரில் கூட (Tea) 42 வரி இருக்கிறது.  தேயிலை வரி, சர்க்கரை வரி, தண்ணீர் வரி, கடை வரி, மாநில வரி, மத்திய வரி, கூடுதல் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) என இன்னும் பல.

இதனை நம்பாதவர்களுக்கு நீங்க வண்டிக்கு போட்ற பெட்ரோலில் வரின்னு சொல்லி மறைமுகமா அரசு அடிக்கும் கொள்ளையை பாருங்க.

நீங்க ஒரே 1 லிட்டருக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்குப்பாதி அநியாய வரியால கொள்ளை அடிக்குது.

பணக்காரர்களிடமிருந்து, நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் நேரடி வரி மொத்தம் 38 சதவிகிதம்தான்.

ஆனால் ஏழை, உழைக்கும் மக்களிடமிருந்து வசூலிக்கும் மறைமுக வரி மொத்தம் 62 சதவிகிதம்.

இது இன்னைக்கு நேத்தல்ல 1951 லிருந்து இன்று வரை ஏழை மக்களின் இரத்தத்தை சுரண்டிய அரசுகளின் பட்ஜெட்.

இதையே நிரூபிக்கும் விதமாய் இன்னொரு அட்டவணை. 

நேரடி, மறைமுக வரியின் சதவிகிதங்கள் மாறவே இல்லை.

மக்களின் அரசுகள் மக்கள் முன்னேற்றத் திட்டங்களுக்கா முக்கியத்துவம் கொடுக்கின்றன?

அதிக வருமானமும், கமிஷனும் (போபர்ஸ் ஊழல், ராணுவ வீரர் சவப்பெட்டி ஊழல்) கிடைக்கும் இராணுவத்திற்கு (பாதுகாப்பு, இறையாண்மை, தேசியம் என்று சொல்லி கேள்வி கேட்கக்கூடாத வகையில் பயமுறுத்தி வைத்துக் கொண்டு) செலவழிக்கும் தொகை மற்றும் அன்றாட அடிப்படை மக்கள் தேவைகளுக்கு ஒதுக்கும் தொகையையும் பாருங்கள்.

எல்லாத்துக்கும் மேல நம்ம நாட்டோட வெளி நாட்டுக்கடனைப் பார்த்தால் இத்தனை வருஷம் (1947-2015 = 67) ஆண்டு இவங்க என்னத்தைத்தான்யா பண்ணாங்க?

2014 ல் 440 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்.

1 பில்லியன் = 100 கோடி (1,000,000,000)

440 பில்லியன் டாலர் = 440,000,000,000 டாலர்.

1 அமெரிக்க டாலர் = 62 ரூபாய்.

440,000,000,000 X 62 = 2,72,800,00,000,000. 00 ரூபாய் அந்நியக் கடன்.

(1 கோடியல்ல 2 கோடியல்ல இரண்டு லட்சத்தி 72 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன்)

இந்த வருச பட்ஜெட்ல நம்ம அன்னியக்கடனுக்கு வட்டி மட்டும் எவ்ளோ கட்றோம் பாருங்க.

ஒவ்வொரு 100 ரூபாயிலயும் 20 ரூபா வட்டிக்கு மட்டும் கட்டுது இந்திய அரசு. 

இன்னும் அசலை கட்றது எப்ப?

(4) கறுப்புப்பணம்  

–>

சுவிஸ் வங்கிகளின் அறிக்கை படி இந்தியா என்ற ஒரே ஒரு நாட்டின் கறுப்புப்பணம் உலகின் பிற அனைத்து நாடுகளின் கறுப்புப்பணத்தைவிட  அதிகம். காண்க:

2008 மே, 22 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியிட்டபடி இந்திய அரசு முறைப்படி கேட்டால் 1947 முதல் 2014 வரை பணம் போட்டவர்களின் தகவல் தருவதாக சுவிஸ் அரசு கூறியும் இன்று வரை அதுபற்றி தகவல் அனுப்பவில்லை. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே நாட்டுமக்களை ஏமாற்றுகிறார்கள். காண்க:

 1. மொத்தப்பணமும் இந்தியா மீட்குமானால் நம் நாட்டின் அந்நியக் கடணை 13 முறை தீர்க்க முடியும்.
 2. அதிலிருந்து வரும் வட்டிப்பணம் மட்டுமே நம் நாட்டு ஒவ்வோர் ஆண்டின் பட்ஜெட்டுக்கு சமமாகும்.
 3. மக்கள் எந்தவிதமான வரியும் கட்ட தேவைப்படாது.
 4. 45 கோடி இந்திய ஏழைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் 1 லட்சம் வழங்கலாம். காண்க:

சுவிஸ்சில் ஒரே ஒரு வங்கியில் மட்டும் 70 லட்சம் கோடி என்றால் மீதமுள்ள 69 வங்கிகளில் எவ்வளவு இருக்கும். அத்தனையும் இந்தியாவிற்கு திரும்பி வந்தால் உலகின் செல்வந்த நாடு இந்தியாதானாம். காண்க:

இது இந்திய மக்களின் வியர்வையிலும், இரத்தத்திலும் உருவான பணம் இல்லையா?

பாருங்க நம்ம மக்களின் தலைவர்களின் அருகதையை. கடல்ல தூக்கிப்போட்டாலும் நீஞ்சி வந்து கொள்ளையடிப்பேன்னு சொல்றவரின் தனிப்பட்ட, குடும்ப சொத்து மற்றும் பல “தேசத்தியாகிகளின்” சொத்து மதிப்பையும் பாருங்க.

 

ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது. காண்க:

ராஜ் பவுண்டேசன்……….1,89,008 கோடி

அர்சத்மேதா……………..1,35,800 கோடி

லல்லு பிரசாத் யாதவ்………28,900 கோடி
ராஜீவ் காந்தி………………19,800 கோடி
கருணாநிதி………………..35,000 கோடி
சிதம்பரம்…………………..32,000 கோடி
சரத் பவார்…………………28,000 கோடி
கலாநிதி மாறன்……………15,000 கோடி
HD குமாரசாமி…………….14,500 கோடி
JM சிந்தியா………………….9,000 கோடி
கேடன் பிரகாஷ்………………8,200 கோடி
A ராஜா………………………7,800 கோடி
சுரேஷ் கல்மாடி………………5,900 கோடி

பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட், நக்சலைட்டுனு எவனை எவனையோ கைது பண்ணி குண்டர் சட்டம், பொடா ன்னு போடறீங்களே. இவனுங்களுக்கெல்லாம் அது இல்லையா?

வள்ளுவர் சொன்னது போல இடுக்கண் வருங்கால் நகுவோம்.