இந்தத் தலைப்பு மிகப் பரந்தது என்பது நாம் அறிந்ததே.
எனவே ரொம்பவும் விலாவரியாக சொல்லாமல், முடிந்தவரை சுருக்கமாக, எனக்குப் புரிஞ்சவரை பகிர முயற்சிக்கிறேன்.

மொத்தம் மூனே மூனு விசயங்களில் தேடுவோமே…

1. கொஞ்சம் சர்வதேச பின்னணி.
2. நம்ம இந்திய சூழல்.
3. நம்ம தமிழ் நாட்டிலிருந்து ஒரு பார்வை.

I. சர்வதேச பின்னணி

அமெரிக்காவும் 

உலகைக் கட்டுப்படுத்திய அதன் 3 வழி முறைகளும்


1. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள்:

பெட்ரோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு (OPEC) 1960 ல் ஆஸ்திரிய நாட்டு வியன்னாவில் ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் தென் அமெரிக்க வெனிசூலா என 5 நாடுகளோடு தொடங்கியது.

 

இன்று 12 உறுப்பு நாடுகள்.

இந்த 12 நாடுகள்தான் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 81 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன.

அரபு நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, U.A.E ஆகிய நாடுகளும்,
ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, அங்கோலா,  லிபியா, நைஜீரியா மற்றும்
தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, ஈக்வடார் ஆகிய நாடுகள் இணைந்து

OPEC (0rganisation of the Petroleum Exporting Countries)  என்ற அமைப்பை ஏற்படுத்தி

45 நாட்களுக்கொருமுறை கூடி தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கின்றது. காண்க:

உலகின் மிகப்பெரும் எண்ணெய் வளமிக்க நாடு சவூதி அரேபியா. அதன் ஒரே ஒரு எண்ணெய் வயல் கவார் மட்டுமே (ரஷ்யா தவிர்த்து) உலகின் எந்தவொரு தனி நாடும் உற்பத்தி செய்யாத அளவுக்கு உற்பத்தி செய்கிறது.  காண்க:


வளைகுடா நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், அபுதாபி, யெமன், துபாய், U.A.E  போன்றவை இவற்றில் அடங்கும். இந்த மத்திய கிழக்கு நாடுகள் சுமார் 727 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்தினை கொண்டுள்ளது.

 

அதனால்தான் அமெரிக்கா எப்போதும் வளைகுடா நாடு களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் நாட்டம் கொண்டிருக்கிறது.

அதிகம் உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்யும் உலகின் முதல் 20 நாடுகள்.

2. பிரெட்டன் வுட்ஸ் மாநாடு (Bretton Woods Meet) 

இந்த மாநாடுதான் இன்றைய உலகப்பொருளாதாரத்தையே மாற்றி அமைத்த மாநாடு. ஒவ்வொரு நாடும் அதனதன் பண மதிப்போடு வியாபாரம் செய்து வந்த நேரத்தில்

அமெரிக்க டாலரை மையப்படுத்திய சர்வதேச பொருளாதாரம்

என்பதை நிறுவ முதன் முதலாக அடித்தளமிட்டது இந்த மாநாடு.

இரண்டாம் உலகப்போர் முடிவதற்கு சற்று முன்னதாகவே (1944 ஜூலை 1-22) அமெரிக்கா, ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா உள்ளிட்ட உலகின் 44 நாடுகளின் 730 நிதித்துறை அதிகாரிகளை அழைத்து இனி வரும் காலங்களில் இருக்கப்போகும் அமெரிக்க ஆதிக்கத்தை வெளிப்படையாக அறிவித்தது.


அம்மாநாடு எடுத்த முடிவுகளில் மிக முக்கியமான 2 முடிவுகள்.காண்க:

1. இனி சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரில் தான் நடைபெறும்.
2. நிதி நிர்வாகம், உதவி மூலமான ஆக்கிரமிப்பு களுக்கு 
1. சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும்
2. உலக வங்கி (World Bank- previously International Bank for Development) அமைத்தல்.

[இதனை ஒட்டி 1947 ல் தொடங்கிய (GATT -General Agreement on Tariff and Trade) உலக அளவிலான வரி, வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தை உலகில் 9 முறை நடைபெற்று இறுதியில் மொராக்கோ நாட்டின் மராகேஷ் நகரில் டங்கல் அறிக்கையை  (Dunkel draft) அடிப்படையாகக் கொண்ட உலக வர்த்தக நிறுவனமாக உருமாற (WTO – World Trade Organization) அதில் இந்திய உள்ளிட்ட 123 நாடுகள் 1994 ஏப்ரல் 15 ல் கையெழுத்திட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டனர். காண்க:]

 

எவ்வாறு ஒரு மொழி மக்களின் சிந்தனையை, பண்பாட்டை உருவாக்குகிறதோ
அது போல சர்வதேச பண பரிவர்த்தனையான அமெரிக்க டாலர் உலக பொருளாதரத்தை

1. அமெரிக்க திட்டத்திற்கேற்ப,
2. அமெரிக்க உள்நாட்டு வளத்தை உருவாக்க,
3. பிறநாடுகளிடம் அமெரிக்க சார்புத்தன்மையை உருவாக்க,
4. ஒட்டுமொத்தமாக அமெரிக்க வல்லாதிக்கத்தை உலகில் திணிக்க வெகுவாக அடித்தளம் இட்டது

1944 ல் நடந்த பிரெட்டன் வுட்ஸ் மாநாடு.
1944 ல் தொடங்கிய அமெரிக்க வல்லாதிக்கம் 2015 இன்று வரை 70 ஆண்டுகளாக தொடர்கிறது. காண்க: அமெரிக்க டாலரை சர்வதேச வர்த்தக பணமுறையாக தக்க வைக்க அடிப்படை உலக அளவிலான ஆதார சுருதி (Point of reference) தேவைப்பட்டது.


   அமெரிக்க முதலாளியம் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் 

                                   3 வழிமுறைகளில்  

     மி கத்தந்திரமாக பொருளாதார அரசியல் காய் நகர்த்தி 

                தனது டாலர் ஆதிக்க பொருளாதார உலகை 

                         உருவாக்குவதில் வெற்றி கண்டது.


1. பிற நாட்டு பணம் > அமெரிக்க டாலர் > தங்கம்

அதாவது

சர்வதேச அடிப்படை வர்த்தகப்பணமாக டாலர் நிர்ணயிக்கப்பட்டது.
டாலரின் மதிப்பை தங்கம் நிர்ணயித்தது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர்.

1 அவுன்ஸ் தங்கம் என்பது 31 கிராம். காண்க:
(நமது கணக்குப்படி 1 பவுன் என்பது 8 கிராம்)
(1900 முதல் அமெரிக்க பணமதிப்பு, பண அச்சடிப்புக்கு தங்கம் அடிப்படை அளவுகோல் ஆனது.) காண்க:
இரண்டாம் உலகப்போருக்குப்பின் குறிப்பாக மார்ஷல் திட்டம் என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளை புணரமைப்பது அமெரிக்காவின் வியாபாரத் தந்திரமாய் இருந்தது.

-பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கடன் உதவி என்ற பெயரில் அமெரிக்க டாலர்.
-கடனை அவர்கள் தங்கம் மூலம் திருப்பிச் செலுத்தவேண்டும்.
-அமெரிக்க பொருட்களுக்கும் சந்தை திறந்து விடப்படவேண்டும்.


(இந்த வழிமுறை இன்று கிரீஸ் நாடு வரை தொடர்கிறது – கடனுக்கு நாட்டையே தனியாருக்கு திறந்து விடுவது. ஆக ஜெயித்தது கிரீஸ் மக்களோ அல்லது ஐரோப்பிய யூனியனோ அல்ல அமெரிக்காவும் அதன் ஐ. எம். எப் (I M F) பும் தான்)

இதன் மூலம் டாலர் – சர்வதேச செலாவணி என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்காவுக்கு தங்கம் குவிந்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்க I M F 3000 டன் தங்கத்தை குவித்தது. காண்க:

2. பிற நாட்டு பணம் > அமெரிக்க டாலர் > பெட்ரோல்

 

அமெரிக்காவின் தந்திரத்தை புரிந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தங்களிடம் இருந்த டாலரை விற்று தங்கமாக மாற்றி கொண்டனர். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என “பிரெட்டன் வுட்ஸ்” திட்டத்திலிருந்து விலக அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது.

1. ஜெர்மனியும், ஜப்பானும் பொருளாதாரத்தில் முன்னேறின. 2. அமெரிக்காவின் வியட்னாம் போர் தோல்வி என அமெரிக்க டாலர் ஆட்டம் காண ஆரம்பித்தது. 


1971 ஆகஸ்ட் 15 ல் அமெரிக்க அதிபர் நிக்சன் பிரெட்டன் உட்ஸ் லிருந்து வெளியேறுவதாகவும், அமெரிக்க டாலரைக் கொடுத்து தங்கமாக இனி மாற்ற முடியாதெனவும் அறிவித்தார். 

இது நிக்சன் அதிர்ச்சி என அழைக்கப்படுகிறது. காண்க:

அமெரிக்க டாலர் தங்கத்தின் பிடியிலிருந்து வெளியேறியதாய் அறிவிக்கப்பட்டதால் டாலரின் மதிப்பு அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஏற்றபடி மாறும் ஊசலாடும் பணமாக மாறியது. (Floating Currency)

நிக்சனின் அடுத்த திட்டம்

1973 ல் சவூதி அரேபியாவுடனான 

                       அமெரிக்க மூன்று தந்திர ஒப்பந்தங்கள்.


1. சவூதி அரேபியா உலக நாடுகளுக்கு விற்கும் பெட்ரோலை அமெரிக்க டாலரில்தான் விற்க வேண்டும். (அமெரிக்க டாலர் இல்லாமல் எந்த நாடும் சவூதி அரேபியாவிடமிருந்து பெட்ரோல் வாங்கமுடியாது) (இதனை பிற பெட்ரோல் விற்கும் நாடுகளும் (OPEC) ஏற்றுக்கொண்டன. தற்போது   ஈரான், வெனிசூலா போன்ற சில நாடுகள் விலகிவிட்டன)


2. இந்த ஒப்பந்தத்தை சவூதி ஏற்கும் பட்சத்தில் சவூதியில் உள்ள எண்ணெய்க் கிணறுக்களுக்கு இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து பாதுகாக்க அமெரிக்க இராணுவம் பொறுப்பேற்கும். (ஏனெனில் 1973 அக்டோபர் 6-25 ல் தான் இஸ்ரேல்-9 அரேபிய நாடுகளுக்கிடையேயான யோம்-கிப்பூர் போர் நடை பெற்றிருந்தது. காண்க:


3. அவ்வாறு சவூதி சம்பாதிக்கும் அமெரிக்க டாலரை அமெரிக்க வங்கிகளில்தான் முதலீடு செய்ய வேண்டும்.


என்னவொரு அமெரிக்க ஆதிக்க சூழ்ச்சி. 

மற்ற நாடுகள் தங்களின் பணத்தை அதிகமாக அடித்து வெளியிட்டால் நாட்டில் பணவீக்கம் அதிகமாகி விலையேற்றம் நடக்கும். ஆனால் உலகளவில் அமெரிக்கா உருவாக்கின செயற்கையான டாலர் தேவை காரணமாக அந்த நாடு எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளும் ஆக்கிரமிப்புச் சூழல் உருவானது. அமெரிக்கா பண, செல்வ செழிப்பில், கொள்ளை, சுக போகத்தில் மிதக்க ஆரம்பித்தது.

அமெரிக்க இராணுவம் வளைகுடா நாடுகள்-இராக், குவைத், பக்ரென், கத்தார், சவூதி, யேமன், ஓமன் சிரியா- என அனைத்திலும் தனது தளத்தை நிறுவியது.

இராணுவ ஆக்கிரமிப்பு, எண்ணெய் வள கொள்ளை, டாலர் குவிப்பு, அமெரிக்காவில் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர்வு என பிற நாடுகளின் இரத்தத்தில் அமெரிக்க மக்களின் சொகுசு வாழ்க்கை தொடர்ந்தது.


3. இராணுவப்போர் > பெட்ரோல் > அமெரிக்க டாலர் 

நம் அனைவருக்கும் தெரிந்த விசயம் 2001 செப்டெம்பர் 11. இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு.


உண்மையிலேயே பின்லேடனோ அல்லது மதத் தீவிரவாத அமைப்புகளோ இதை செய்ததா என்றால் இல்லை என்பதே உண்மை.


1. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிக்க 2001 செப்டெம்பர் 11 க்கு முன்னமே போட்ட திட்டங்கள். காண்க:

2. இரட்டை கோபுரங்கள் இடிப்புக்கு பின்னணி அமெரிக்காவே. காணொளி ஆதாரம்: 

3. முக்கியமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் பெட்ரோல் விற்பனையை அமெரிக்க டாலருக்கு பதில் ஐரோப்பிய ஈரோவில் செய்யப்போவதாக அறிவித்தார். இதன் பின்னரே அமெரிக்கா அசாதரணமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது. அமெரிக்க மற்றும் உலக மக்கள் மத்தியில் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்க காரணம் இருப்பதை நம்ப வைக்க தன் கட்டடம், மக்களை பலி கொடுத்தது.

According to page 28 of William R. Clark’s book Petrodollar Warfare:

“On September 24, 2000, Saddam Hussein allegedly “emerged from a meeting of his government and proclaimed that Iraq would soon transition its oil export transactions to the euro currency.”

 ஈராக்கும் அமெரிக்காவும்

1928 ல் 3 அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கூடி குழு அமைத்தது. 1960 ல் இக்குழு 7 என்றானது. ஏழு சகோதரிகள் என்றழைக்கப்பட்டன. 85 சதவிகித உலக எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஏழில் சில ஒன்றோடு ஒன்று இணைந்து இன்று 4 (British Petroleum, Chevron, Exxon Mobil and Royal Dutch Shell) என உள்ளது.
காண்க:

நமது “திருமங்கலம் பார்முலா” என்பதுபோல எண்ணெய்க்கான தனியார்மய போர் பார்முலா என்பது ஈராக் மீதான போர் மூலம் அமெரிக்கா தொடங்கி உள்ள வழிமுறை. அதாவது போருக்கான வீரர்களை விட, தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்களே அதிகமாக நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டனர். காண்க:


ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம் கொழிக்கும் ஈராக் நாட்டினைப் பார்த்தாலே அமெரிக்காவின் எண்ணெய்க் கொலைவெறியின் பின்புலம் தெரிகிறது.

In 2009, Texas oil billionaire T. Boone Pickens complained that “we,” meaning the people of the United States, had sacrificed 5,000 lives, 65,000 wounded soldiers, and one and a half trillion dollars in Iraq, and that “we,” meaning U.S. oil corporations, were therefore entitled to Iraq’s oil, but that the oil contracts were all going to China. Oil and energy investigator and analyst Antonia Juhasz said, on the contrary, that the Iraq War served US and UK based oil companies very well. காண்க:


கீழ்க்காணும் டெய்லி மிர்ரர் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஜார்ஜ் புஷ் ஷின் அறிக்கையையும் அதன் பின்னால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் கோர ஆக்கிரமிப்பு முகத்தையும் காணலாம். (Read between lines என்ற ஆங்கில பதம் சொல்வதுபோல இங்கு புரிந்து கொள்ளலாம்)

2007 ல் துபாயில் ஈராக் நாட்டின் வளங்களை பங்கு பிரித்து கொள்ளை அடித்துக்கொள்ள மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ONGC) ஒன்று. காண்க:  

The oil majors met at the Iraq Oil, Gas, Petrochemical & Electricity Summit from 2 – 4 September 2007 in Dubai to discuss “the future of Iraq’s abundant energy resources.” Attending were US puppets, described as “some of the most important figures from Iraq’s energy sector.” Also attending were the waiting vultures, BP, Exxon, Conoco Phillips, Chevron, Lukoil, Statoil, Marathon Oil, Total, Shell, Kuwait National Petroleum, Annadarko, Schlumberger, ABB, ONGC, General Electric, Cummins Power, Mitsui, Aegis, ArmorGroup, Janussian, Control Risks Group, Unity, Hart, Olive Security, GardaWorld and Triple Canopy. காண்க:

                      II. நம்ம இந்திய சூழல்.

                                           பெட்ரோல் கொள்ளைகாரர்கள்
                      1. மத்திய மற்றும்  மாநில அரசுகளின் 10 கொள்ளைகள்
                                    2. ரிலையன்சின் ஏக போக கொள்ளை  
 

                                       (1) வது கொள்ளை


1. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்: விலையும் தொடர்பானவைகளும்

1 பீப்பாய் (Barrel) என்பது 159 லிட்டர் கொண்டது.
1 பீப்பாய் கச்சா எண்ணெய்

1980 ல் இருந்து 2002 வரை 20 டாலருக்குக் கீழாக விற்றது 2008 ல் 147 டாலராகி 2015 ல் 50 டாலரில் நிற்கிறது.

இந்திய அரசின் பெட்ரோலியத்துறை 01.12.2014 முதல் டீசல், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளதாகச் சொல்வது பன்னாட்டு பெட்ரோலிய விலைக்குத் தொடர்பில்லாத மோசடி அறிவிப்பாகும்.                                 

                                   கடந்த 25.07.2014 அன்று


பெட்ரோலியத்தின் பன்னாட்டு சந்தை விலை ஒரு பீப்பாய்க்கு 106.01 அமெரிக்க டாலர்கள் ஆகும். 

ஜூன் மாதம் ஒன்றாம் நாள் நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாயின் மதிப்பு 59.19 ரூபாய் ஆகும்.

இதன் படி பார்த்தால் பெட்ரோலியத்தின் ஒரு லிட்டர் பன்னாட்டு விலை 01.06.2014 அன்று 52.46 ரூபாய் ஆகும். அதே நாளில் இந்திய அரசின் பெட்ரோலியத் துறை ஒரு லிட்டர் பெட்ரோல் 74.60 ரூபாய் என்று விலை அறிவித்தது.     

                                         24.12.2014 அன்று


பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை பீப்பாய்க்கு 57 டாலர். 

அதாவது இன்றைய நிலவரப்படி ரூபாய் கணக்கில் லிட்டருக்கு 33.94 ரூபாய்.

அதாவது 2014 ஜூலையுடன்  ஒப்பிட 2014 டிசம்பரில் பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை 61 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதன்படி பார்த்தால் இந்திய அரசு டீசல் விலையை வரி உட்பட லிட்டருக்கு 37.28 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை 40.29 ரூபாய் என்றும் அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் விற்பனை வரியையும் சேர்த்து டீசல் விலையை 55.99 ரூபாய் என்றும் பெட்ரோல் விலையை வரி உட்பட 66.05 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது.

உண்மையில் பன்னாட்டு விலையை விடப் பெட்ரோல் லிட்டருக்கு 25.76 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. டீசல் விலை பன்னாட்டு விலையை விட லிட்டருக்கு 18.71 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.   காண்க:

                                  இவ்வார நிலவரப்படியும் ஒரு பீப்பாய் 57 டாலர்தான்.


                  ஏன்யா பொதுமக்கள் வயித்துல அடிக்கிறதுக்கு 

                              ஒரு வரைமுறை இல்லையா?


இல்லை கேள்வியே கேட்க எந்த அமைப்பும் இல்லையா? இல்ல கேட்கவே முடியாதா?

இந்த இலட்சணத்தில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை 2014 ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது.

அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது. தங்கம் விலை போல், அன்றாட விலையைப் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் போல.

கம்பெனிகள் பொறுப்பில் விலைக் கட்டுப்பாட்டை வைத்தால், பிறகு பெட்ரோலிய அமைச்சகம் என்பதே தேவையில்லையே. மத்திய அரசு என்று ஒன்று அவசியமே இல்லையே.

   (2) வது கொள்ளை


1. பெட்ரோல் மீதான கலால் வரி மூலம் மட்டுமே மத்திய அரசு 2011-2012 ல் 68,000 கோடி கொள்ளை அடித்தது.

2. 2013-2014 ல் பெட்ரோல் வரி மூலம் மத்திய அரசின் கொள்ளை 77,000 கோடி.
அந்தாண்டின் மொத்த கலால் வரியான 1,79,00 கோடியில் பெட்ரோல் கொள்ளை மூன்றில் ஒரு பங்கு.

3. மக்களின் பைகளில் இருந்து மத்திய அரசு உருவும் ஒட்டு மொத்த மறைமுக வரியில்  (Indirect tax) பெட்ரோல் கொள்ளை மட்டுமே 5 ல் 1 பங்கு. காண்க:

   (3) வது கொள்ளை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 5,280 ரூபாய் விற்ற வேளையில்,

இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சி., உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 2,420 ரூபாய்க்கு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. ஆனால் இதுவும் மக்களுக்கு விற்கும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததுபோல விலை உயர்த்தியே கொள்ளையடிக்கப்பட்டது.
அமெரிக்க டாலர் மதிப்பில் அனைத்து எண்ணெயும் இறக்குமதியானதாக கற்பனையாகக் காட்டப்பட்டது.
கச்சா எண்ணெயின் மொத்தத் தேவையில் 78% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 22% உற்பத்தியாகிறது. காண்க:

அம்பானி நிறுவனங்களுக்கு பணம் வானத்திலிருந்து கொட்டவில்லை. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வின் ஒரு பகுதியை மக்கள் தலையில் தான் சுமத்தியாக வேண்டும். இதை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை’ என்று நூறு கோடி மக்களின் அன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  (இன்றைய ஜனாதிபதி) சொன்னார்.

ஒருவேளை உலகச்சந்தையிலிருந்து பெறுகின்ற கச்சா எண்ணெய்க்கு வேண்டுமானால் விலையேற்றம் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கும்.
ஆனால், உள்ளூரில் தோண்டி எடுத்து, துரப்பணம் செய்யப்படுகின்ற எண்ணெய்க்கும் அதே விலை வைப்பது, என்ன நியாயம்? மக்களை ஏமாற்றும் மோசடியல்லவா?

   (4) வது கொள்ளை

பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.77.53 என்றால் இதில் ரூ.45.75 பெட்ரோல் மீது இந்திய, தமிழக அரசுகள் விதிக்கும் வரித்தொகையாகும். பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்திவரி, மேல்வரி, கல்விவரி ஆகியவை மொத்தம் 32 விழுக்காடு. மாநில அரசின் விற்பனைவரி  27 விழுக்காடு.

கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்குக்கிடைத்த வரி வருவாய் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரியைப் பாதி குறைத்தால் கூட பெட்ரோல் விலை உயர்வைத் தவிர்க்கமுடியும்.

‘ எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா; ரொம்ப நல்லவன்டா ‘

என்று ஒரு படத்தில் வடிவேல் சொல்வதைப் போல, பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்தினாலும்  தாங்குறாங்க; நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்கப்பா என்று கிடுகிடுவென வரிக்கு மேல் வரி என்று விலையை ஏற்றிவிட்டார்கள்.

அட்டவணையில்  கச்சா எண்ணெய் அடிப்படை விலையையும், கட்டப் பஞ்சாயத்துக்காரன் ஸ்பீட் வட்டி, மீட்டர் வட்டி என்பதைப்போல மத்திய அரசின் கொடுமையான வரி சுமையையும் காணலாம்.

   (5) வது கொள்ளை


பெட்ரோலியப் பொருள்களை மானிய விலையில் மக்களுக்கு அளிப்பதால், அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு திரும்பத் திரும்பக் கூறிவருவது அப்பட்டமான பொய்.

டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி எவரும் ஏன் வாய் திறப்பதில்லை.
நடுவண் அரசுக்கு உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 5இல் 2 பங்கு பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலமே கிடைக்கிறது. 2010-11ஆம் ஆண்டில் பெட்ரோலியத் துறை மூலம் நடுவண் அரசுக்கு ரூ.1,36,000 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.80,000 கோடியும் வருவாய் கிடைத்தது.

2010-11 காலத்திலான 6 ஆண்டுகளில் நடுவண் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

வருமான வரிச் சலுகையாக ரூ.3,74,937 கோடி,
உற்பத்தி வரிச் சலுகையாக ரூ.7,49,623 கோடி,
சுங்கவரிச் சலுகை யாக ரூ.10,00,463 கோடி
என மொத்தம் ரூ.21,25,023 கோடி அளித்துள்ளது.

அதாவது  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.240 கோடி தள்ளுபடி செய்துள்ளது. 

ஆனால் பெட்ரோலியப் பொருள் களுக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகப் பொய்யான புள்ளிவிவரத்தை அரசு அளிக்கிறது.   காண்க:

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23 ஆயிரத்து 325 கோடிதான்.

ஆனால் கிடைத்த வருமானமோ நடுவணரசுக்கு ரூ.4,10,842 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.2,63,766 கோடியுமாகும்.

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசு வழங்கும் மானியமோ கிடைக்கின்ற இலாபத்தில் வெறும் 3.45 விழுக்காடு மட்டுமே’ (நன்றி பி.எஸ்.எம்.ராவ், தினமணி)
காண்க:
மறுபுறம், கச்சா எண்ணெய்யின் விலையைப் போல 152 சதவிகிதம் அதிக விலைக்கு சாமானியனுக்கு பெட்ரோலை விற்று விட்டு நட்டம், மானியம் என ஓலமிடுகின்றன அரசும், ஊடகங்களும்.

இப்போது 2008 ல் இந்தியா வில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உருபா 53. ஆனால், பாக்கித்தானில் உருபா 26, வங்க தேசத்தில் உருபா 22, நேபாளத்தில் உருபா 34, இரத்தக்களறியாகக் கிடக்கும் ஆப்கானித் தானில் உருபா 33, மலேசியாவில் உருபா 20 என விற்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் தேவை யில் இந்தியா 70 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. இதைப்போலவே இந்த நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அந்த நாடு களில் மட்டும் விலை எப்படி மிகவும் குறைவாக இருக்கிறது?
உற்பத்தி வரி, சுங்கவரி என்று நடுவண் அரசும், விற்பனை வரி என்று மாநில அரசு களும் அதிகஅளவில் வரி விதிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது.   காண்க:

   (6) வது கொள்ளை

டாலருக்கு நிகரான உருபாயின் வீழ்ச்சியால் இறக்கு மதியாகும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறும் நடுவண் அரசு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் இதே காரணத்தால் கூடுதல் வருவாய் கிடைப்பதை மறைக்கிறது. 2010-11ஆம் நிதி ஆண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பு கொண்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பில் இது 16.53% ஆகும்.
காண்க:

   (7) வது கொள்ளை

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கக்கூடிய கமிசன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தங்கள் கூட்டமைப்பின் மூலமாகக் குரலுயர்த்தியுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் குதிப்பதைத் தடுப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தியுள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் வருமானத்திலிருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கமிசன் வழங்குவதை விடுத்து, அதனையும் ஒட்டு மொத்தமாக மக்களின் தலையில் கட்டியுள்ளனர். அப்பட்டமான இந்த மோசடியைக் கண்டிப்பதற்கு இந்திய நடுவணரசுக்குத் துணிச்சலில்லை. எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காகப் போராடும் எண்ணத்திலில்லை.  காண்க:

   (8) வது கொள்ளை


ஒரு பீப்பாயில்,
1. விமானங்களுக்கு பயன்படும், “ஏ’ ரக பெட்ரோல் 40 லிட்டர்,
2. கார்களுக்கு பயன்படும், “பி’ ரக பெட்ரோல் 50 லிட்டர் மற்றும் 41 லிட்டர் டீசல் கிடைக்கும்.
3. 18 லிட்டர் மண்ணெண்ணெய்,
4. 10 லிட்டர் உயர்தர மசகு எண்ணெய்
5. காஸ்,
6. தார் கோக்,
7. சுத்தப்படுத்தும் எண்ணெய்,
8. பிளாஸ்டிக் மூலப்பொருள்

இன்னும் பல பொருட்கள் கிடைக்கின்றன.


“ஏ’ ரக மற்றும் “பி’ ரக, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உயர்தர எண்ணெய், இவை மொத்தம் 150 லிட்டர்.  இதில் 40 லிட்டர், “ஏ’ ரக பெட்ரோல். இதன் விலை, சாதா பெட்ரோலை விட ஒன்றரை மடங்கு அதிகம். 40 லிட்டர், “ஏ’ ரக பெட்ரோலுக்கு 1,550 ரூபாய் கிடைக்கும்.  காண்க:

இதர பொருட்களின் விலை, கச்சா எண்ணெயை சுத்திகரிக்க ஆகும் செலவுக்கு போதுமானது.
மேலும்

மொத்தம் 150 லிட்டரில், சுத்திகரிக்கப்பட்ட பின் மாற்றப்படும் போது, அதில் 8 லிட்டர் வீணாக அல்லது ஆவியாக மாறினாலும், 142 லிட்டர் கிடைக்கும்.

ஆனால் பெட்ரோல், உப பொருட்கள் எல்லாம் சுத்திகரிக்கும்போது 159 லிட்டரைவிட அதிகமாக கிடைப்பதுதான் உண்மை. மேலே உள்ள படம் இதனை விளக்கும்.

ஆக இந்த இலாபத்தை கணக்கில் காட்டாது அடிக்கும் கொள்ளையை யாரிடம் சொல்ல?

   (9) வது கொள்ளை

1)  1976 இல் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பர்மா செல், கால்டெக்ஸ் போன்ற மிகப்பெரிய  வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். அதற்கு முன், அந்த நிறுவனங்கள் சர்வதேச விலை நிர்ணயத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிவந்தன.

2) 1991இல் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த, உலகமாயமாக்கல் கொள்கை, மீண்டும் தனியார் முதலீடுகளை அதிகரித்தது. விளைவு கட்டுப்பாடில்லாத விலை நிர்ணய நடைமுறை உருவானது.

3) இதற்கிடையில், 2010 ஜுன் 26 முதல் பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது.

அதற்குப் பிறகு, தனியார் முதலாளிகள் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்தத் தொடங்கினர். இப்போது, ஒரே ஆண்டிற்குள், 10ஆவது முறையாக விலையேற்றம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர்.

கொள்ளையில் தனக்குப் பங்கு தரும் தனியார் பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதில்தான் அரசுகள் கவனமாய் இருக்கின்றனவே அன்றி, மக்களை அல்ல.   காண்க:                             2. ரிலையன்ஸ் சின் கொள்ளை


 

கச்சா எண்ணெய் (Crude oil)  இந்தியாவில் 


1. பாம்பே ஹை (Bombay High),
2. அசாம் மாநிலம் (திக்பாய்),
3. குஜராத்,
4. ஆந்திரா (கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை)
5. தஞ்சை, நாகை, திருவாரூர் (காவிரி படுகை) ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

                                                  பாம்பே ஹை கடலடி எண்ணெய் துரப்பணம் 


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் OIL (OIL INDIA LIMITED) போன்றவையும்,

ரிலையன்ஸ் மற்றும் CAIRNS INDIA (P) LTDஆகிய தனியார் துறை நிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன.

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், கெரசின், LPG, நாப்தா, LSHS, F.O (Fuel oil), கெரசின், போன்ற எரிபொருட்களும், பென்சீன், டொலுவீன் போன்ற வாசனை வேதிப்பொருட்களும், சிறப்பு கொதிநிலை ஸ்பிரிட்டுகளும், பிடுமின் (தார்) போன்ற பயன்பாட்டு பொருட்களும் கிடைக்கின்றன.

இவையனைத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் (Refineries) சுத்திகரிக்கப்பட்டு, எண்ணெய் வணிக நிறுவனங்களால் (IOCL, BPCL, HPCL)  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது 20 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் IOCL, BPCL, HPCL, ONGC  போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆயில் போன்ற தனியார் துறை நிறுவனங்களும் அடங்கும். 

ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பு

1. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் குஜராத் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனமே. காண்க:

7,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த ஜாம் நகர் நிறுவனம்.


2. அது மட்டுமல்ல எண்ணெய் துறையில் எந்த பொதுத்துறை நிறுவனமும் ரிலையன்ஸ் அனுமதி இல்லாமல் செயல்படமுடியாது. குறிப்பாக பிளாஸ்டிக், இராசயனம், பெட்ரோலிய உப பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அவர்கள் இந்திய அளவில் சர்வாதிகார கட்டுப்பாட்டினை கொண்டிருப்பதாக ஆதாரங்களைத் தருகிறது பிரண்ட்லைன் பத்திரிகை. காண்க:

3. ரிலையன்ஸ் நிறுவனத்தின்  ஆந்திர கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை கச்சா எண்ணெய் உற்பத்தி மட்டுமே ஒட்டுமொத்த இந்திய எண்ணெய் உற்பத்தியில் 60 %  காண்க:

4. 2002 ல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயலில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் கண்டுபிடிப்பு ரிலையன்சின் திருபாய் 1 எண்ணெய் வயல் . காண்க:
மற்றும் காண்க: 

5. எந்தெந்த தனியார் அந்நிய நிறுவனம், இந்தியாவின் எந்தெந்த எண்ணெய் வயல்களை கொள்ளை அடிக்கலாம் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தனியார் அரசு அனுமதித்துள்ளதைக் காணலாம்.

6. இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெறும் இலாபத்தைவிட அதிகமான இலாபத்தைக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறுகிறது.

7. ரிலையன்சு நிறுவனம் எண்ணெய் யைத் துரப்பணம் செய்தல், உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறது. கோதாவரிப் படுகையின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி-பகிர்வு ஒப்பந்த (PSC) விதிகளுக்குப் புறம்பாக ரிலையன்சு செயல்படுகிறது என்று அந்நிறுவனத்தின் மீது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

8. கோதாவரிப் படுகை டி6 எண்ணெய் வயலில் 1.85 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்திச் செலவைப் பொய்யாகக் காட்டியுள்ளது. இதை ரிலையன்சு நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காண்க:

9. ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை யில் ஏராளமாக பெட்ரோல் வளம் இருப்பதை இந்திய செய்மதி மூலம் கண்டுகொண்ட அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாநில அரசுக்கு உரிய ராயல்டி தராமல் சோனியா காங்கிரஸ் மூலம் கொள்ளை இலாபம் பார்த்தது (வருடத்துக்கு 25,000 கோடி). மாநிலத்துக்கும், தனக்கும் எதிர்பார்த்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி உலங்கு வானூர்தி “விபத்தில்” கொல்லப்பட்டார். காண்க:


அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என்று ரஷ்ய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இது குறித்த ரஷ்ய நிறுவனத்தின் தகவல். காண்க: 


ஒரு எண்ணெய் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பை ஒரு மாநில முதல்வரே தடுக்க முடியாது என்றால்

                                               இந்த நாட்டை ஆட்சி செய்வது யார்?

                                       தனியார் கும்பல்கள் கொள்ளையடிப்பது எவ்வளவு?


கெய்ன் (Cairn) நிறுவனம்

1. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றான இராஜஸ்தான் கச்சா எண்ணெய் வயலில் எண்ணெய் எடுக்க கெய்ன் (Cairn, Haryana) நிறுவனத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது. காண்க:

2. இராஜஸ்தானில் மட்டுமல்ல காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய்கிணறுகள், தஞ்சை காவிரி படுகை வரை அந்த கெய்ன் (Cairn) நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1989 லிருந்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலவரம்

YEAR               PETROL  KEROSENE    DIESEL     LPG
————————————————–
Apr 1  1989       8.50           2.25                   3.50      57.60
Oct 15 1990      12.23          2.77                   5.05       —
Jul 25 1991       14.62         2.52                      —       67.90
Sep 16 1992      15.71            —                      6.11      82.75
Jul 03 1996      21.13            —                      9.04     119.95
Jan 15 2000     25.94           —                      14.04       —
Mar 01 2002    26.54        8.98                    16.59     259.95
Jan 16 2003     30.33         —                       19.47       —
Jun 16 2004     35.71          —                      22.74     261.60
Nov 05 2004    39.00         —                     26.28     281.60

Jun 06 2007    43.52         —                      30.48       —
Jun 05 2008    50.56         —                      34.80     346.30
Apr 01 2010     47.93         —                      38.10     310.35
Jun 26 2010     51.43       12.22                 40.10     345.35

காண்க:

  3. நம்ம தமிழ் நாட்டிலிருந்து ஒரு பார்வை.

1. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.

இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி
தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

2. அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான்.

3. அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை (ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

4.  காவிரிப்படுகையை இந்திய அரசு அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும்போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்” . காண்க:

5. பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு தில்லியில் ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டில் ரூ.7.98
அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது!

6. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவளிக் கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து மாதந்தோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு மாதத்திற்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும். டீசல் நுகர்வு மாதத்திற்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.
அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்ச இலாபம் உட்பட அதன் அடிப்படை விலையானது அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு தேவைக்குத் தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சாஎண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேசச் சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

7. தமிழ்நாட்டின் எரிவளித் [எரிவாயு- (LPG-Liquified Petroleum Gas)] தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும். காண்க:

இந்திய தேசம் என்றைக்கு மக்களின் தேசமாய் மாறும் ???

தொடர்ந்து தேடுவோம்…