பொதுவா கேட்கப்படும் ரெண்டு கேள்விகள்

நிறைய நேரங்களில் நமக்கு வரும் பல கேள்விகளில் இவையும் இருக்கும் என நினைக்கிறேன். குழந்தைகள் தான் கேள்வி கேட்கும் என்றல்ல, நமக்கும் வரும். என்ன குழந்தைங்க மாதிரி தைரியமா கேட்க மனசு வராது. நம்மளை ஞானசூன்யம்னு நினைச்சுருவாங்களோன்னு சின்னதா ஒரு பயம். எல்லோருமே தேடலில் உள்ளவர்கள்தான்.

சரி கேள்விக்கு போவோம். இதுதான் எனக்குத்தெரியுமே என்று அறிவாளி படத்தில் என். எஸ். கிருஷ்ணனிடம் டி. ஏ. மதுரம் சொல்வது போல் சொல்லாமல், ஏதோ நம்மளால முடிஞ்சதை சொல்லும்போது ஒ அப்படியா அப்படின்னு சொல்லிட்டு போய்டுங்க.

மொதோ கேள்வி:

பூமி சுத்தும் போது எப்படி கடல் தண்ணி கீழ விழாமல் இருக்குது?

ரெண்டாவது கேள்வி:

மலைகள் தரையைவிட சூரியனுக்கு அருகில்தான் இருக்கு அப்பறம் ஏன் அதிகமா சுடாம, குளிரா இருக்கு?

அவ்வளவுதான் கேள்விகள். இப்ப பதிலுக்கு போவோம்.

1. பூமி சுத்தும் போது எப்படி கடல் தண்ணி கீழ விழாமல் இருக்குது?

எனக்குத் தெரிஞ்சு ரெண்டு காரணங்கள்.

ஒன்னு: புவி ஈர்ப்பு விசை:

இந்த ஈர்ப்பு விசை கொட்டிவிடாமல் இழுத்து வைத்துக்கொள்கிறது. இந்த புவிஈர்ப்பு விசைன்னா என்ன? ஏதோ பூமியின் வடக்கே காந்தம் இருப்பதாகச் சொல்கிறார்களே அப்படியா? எங்கயும் காந்தம் இல்லை, மாறாக காந்தப்புலம் இருக்கிறது. பொதுவான உதாரணமாக பாதியளவு தண்ணி உள்ள ஒரு வாளியை ஒரு கயிறால் கட்டி சுற்றினால் தண்ணி சிந்தாமல் இருக்கும் இல்லையா அதுபோல. சுற்றும்போது வாளிக்கு வாளி ஈர்ப்பு விசை வந்துவிடுகிறது.

இன்னொரு உதாரணம்:

நாம பேருந்தில் பயணம் செய்யும்போது, அந்தப் பேருந்து 100 கி.மீ வேகத்தில் செல்வதாய் வைத்துக்கொள்வோம். இப்ப அவ்வளவு வேகத்தில் செல்லும் பேருந்தில் உட்கார்ந்து இருக்கிற நீங்க திடீர்னு ஒரு ஆர்வக்கோளாறுல எந்திரிச்சு நின்னு ஒரு குதி குதிச்சா என்ன ஆகும். (நடத்துனர் ஒன்னும் சொல்ல மாட்டாரு, விடுங்க)

நீங்க நின்ன இடத்திலேயே திரும்பவும் கால் பதிப்பீங்க. இது எப்பிடீங்க?

வண்டி 100 கி.மீ.வேகம். நீங்க 0 கி. மீ. வேகம் (குதிக்கத்தான் செய்றீங்க ஓடலை)

நீங்க குதிச்சு அந்தரத்துல இருந்த அந்த 3 வினாடி நேரத்தில பேருந்து 50 மீட்டர் தூரம் போயிருச்சு.

நீங்க 50 மீட்டர் பின்னாடி போகலை. அதே இடத்துலதான் இருக்கீங்க. எப்பிடி?

சரி உங்க பக்கத்துல இருக்குறவரும் ஆர்வக்கோளாறுல, அதே வேகத்துல பேருந்து செல்லும்போது, குதிக்கிறேன்னு படியிலேருந்து வெளியே குதிச்சா என்னாகும்?

50 மீட்டர் பின்னாலே கிடப்பார். பொதுவா உள்ளே இழுப்பதால் பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொள்வது அதனால்தான்.

உள்ளே குதிச்ச உங்களை உள்ளேயே இருக்க வச்சது “பேருந்து ஈர்ப்பு விசை“.

ஆக பூமி சுத்திக்கிட்டு இருக்கும்வரைதான் இந்த புவியீர்ப்பு விசையும் இருக்கும்.

ரெண்டாவது: “மேலே-கீழே”

‘மேலே-கீழே’ யாருங்க கண்டுபிடிச்சது. “வானம் கீழே வந்தாலென்ன பூமி மேலே போனாலென்ன ” அப்படின்னு தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் நடிகர் கமல் பாடுவார்.

எதைவச்சு இது மேலே அது கீழே, இது பக்கத்தில், அது தூரத்தில் அப்படின்னு சொல்றோம். தொடர்புபடுத்த ஒரு ஆதார மையம் தேவை. உதாரணமாக கீழே உள்ள படத்தில் மரத்தைக்குறிக்க, அந்த மரம் வீட்டின் பின்னால் உள்ளது என்பதில் வீடு என்ற ஆதாரப்புள்ளி (Point of Reference) தேவை. ஒன்றை வைத்துத்தான் மற்றொன்று கீழே, மேலே, தூரத்தில், பக்கத்தில், 1967 ல் , கி.மு. 10 ம் நூற்றாண்டில் என்று அடையாளப்படுத்துகிறோம்.

விண்ணில் இந்த ஆதாரப்புள்ளி இல்லை. எல்லாமே அந்தரத்தில்.

அதனாலேயே பூமிக்கு “மேலே, கீழே” எந்த வித்தியாசமும் இல்லை. நாம் இங்கிருந்து சூரியனைப் பார்க்கும் போது சூரியனில் எது மேல்புறம் எது கீழ்புறம். அதுபோலத்தான் சூரியனிலிருந்து பூமியைப்பார்த்தால். ஆகவேதான் மேலே, கீழே என்று ஒன்று இல்லாத காரணத்தால் பூமியின் எல்லாப்பக்கமும் ஒன்றே. அதனால் கீழே கொட்டும் என்றே பேச்சே இல்லை.

“கீழே” என்ற ஒன்று இருந்தால் தானே கீழே கொட்ட.

நிலாவிலிருந்து பூமி பார்த்தால் எப்படி இருக்கும்.

இதையொட்டிய ஒரு திரைப்பாடலின் வரிகள் :

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குக் கிடையாது. துன்பங்கள் என்பதும் இன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது.

அதுனால கவலைப்படாம தூங்குங்க கடல் தண்ணி கொட்டிவிடாமல் அங்கேதான் இருக்கும்.

ஆனா, நீங்க வாளித்தண்ணிய கையித்தக்கட்டி சுத்தும்போது, நல்ல வேகமா சுத்திக்கிட்டு இருக்கும்போது திடீருன்னு ஒரு கம்பத்துல தட்டுச்சுனா மொத்த வாளித்தண்ணியும் வெளியே. வாளி ஈர்ப்பு விசை முடிஞ்சுபோச்சு.

பூமி மேல ஒரு கிரகம் வந்து மோதுச்சுன்னா நமக்கு கெரகம்தான். பூமி சுத்துறத நிறுத்தினால் புவிஈர்ப்பு விசையும் முடிவுக்கு வந்துவிடும். பூமியில் உள்ள அனைத்தும் பிடுங்கி எறியப்படும், கட்டடம், கடல், மரம், மனிதன் அனைத்தும் தூக்கி ஆகாயத்தில் வீசப்படும்.  அப்பறம் வூ வூ சங்குதான்

ரெண்டாவது கேள்வி:

2. மலைகள் தரையைவிட சூரியனுக்கு அருகில்தான் இருக்கு அப்பறம் ஏன் அதிகமா சுடாம, குளிரா இருக்கு?

ஒரு அதிர்ச்சியான தகவல் சொல்லட்டுமா?

நமக்கு இருப்பது ரெண்டு சூரியன்கள். பார்த்தீங்களா நம்ப மாட்டேங்கிறீங்க?

உண்மைதான்.

ஒன்னு நாம பார்க்கும் சூரியன். சரி. இன்னொன்னு (அதாங்க இதுன்னு சொல்ல மாட்டேன்)

நம்ம பூமிக்குள்ள இருக்குற இன்னொரு சூரியன். எப்படின்னா

ஏன் நம்ம பூமி சூரியனை சுத்துது? ஏன்னா நம்ம பூமியும் பிற 8 கிரகங்களும் சூரியனிலிருந்து பிச்சிக்கிட்டு (பிற நட்சத்திரம் சூரியன் மேல மோதி) வந்ததால சூரியனை சுத்துது.

நாம பார்க்கிற நிலா நம்ம பூமியிலேர்ந்து உருவானதால (பூமிமேல எரிகல் மோதி கால்வாசி பூமி நிலாவா ஆகிருச்சு) நம்ம பூமிய மட்டும் சுத்துது. இல்லேன்னா அது ஏன் பூமிய சுத்தணும், அதுக்கென்ன தலையெழுத்து. இது இயற்கை.

அப்படி சூரியனிலிருந்து உருவான பூமியும் தொடக்கத்தில் சூரியன் போல நெருப்பாத்தான் இருந்தது. சூரியன் உருவானது 457 கோடி வருடங்களுக்கு முன். (4.57 பில்லியன் வருடங்கள்) காண்க:

நம்ம பூமி சூரியனிலிருந்து பிரிந்து பிறந்தது 454 கோடி வருடங்களுக்கு முன்னர். நம்ம பூமியிலேருந்து நிலா உருவானது 453 கோடி வருடங்களுக்கு முன். காண்க:

சூரியனுக்கு பக்கத்தில் நம்ம பூமிய வச்சா எப்படி தெரியும். சூரியனின் அனல் வீச்சே பூமியைவிட பலமடங்கு பெருசு.

சூரியனிலிருந்து உள்ள தூரம், இரவு, பகல் மாற்றம் பல்லாண்டு கால இடைவெளி இவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக குளிர ஆரம்பிச்சது,  454 கோடி வருசமா. இத்தனை வருசம் ஆகியும் 40 கி.மீ.தான் குளிர்ந்திருக்கு. இன்னும் 6350 கி. மீ. ஆழத்திற்கு குளிராமல் நெருப்பாத்தான், சூரியனாகத்தான் இருக்கு.

மேலே இருக்கிற சூரியனாவது 15 கோடி கி.மீ. தூரத்துல இருக்கு. ஆனா பூமிக்குள்ள இருக்கிற சூரியன் 40 கி.மீ. தூரத்துலேயே இருக்கு. ஏற்கனவே பார்த்திருக்கிறோம் நம்ம கடலின் அதிக பட்ச ஆழம் 11 கி.மீ. தான் (மரியானா படுகுழி பிலிப்பைன்சுக்கு அருகில்).

40 கி. மீ. அருகில் இருக்கும் சூரியன் அடிக்கடி எட்டிப்பாத்துட்டு வேற போகுது எரிமலை ங்கிற பேரால.

மேலே உள்ள சூரியனை விட பூமியின் உள்ளே உள்ள சூரியனின் பாதிப்பு அதிகம். அதனால்தான் சுரங்கத்துக்குள் ஆழமாய் செல்லச்செல்ல வெப்பம் அதிகரிக்கும். அதற்கு மாறாக மேலே மலைக்கு செல்லச்செல்ல குளிர ஆரம்பிக்கும். எவரெஸ்ட் கடல் மட்டத்திலிருந்து 9  கி.மீ. (8848 மீட்டர்) உயரத்தில் இருப்பதால் எப்போதும் அது பனிமலைதான்.

Advertisements