மருத்துவக் குறியீடாகவும்  மருத்துவர்களின் மருந்துத் தாளில் காணப்படும் அடையாளமாகவும் இருப்பது கீழ்க்காணும் படம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதன் பொருள் என்ன? இதற்கும் தமிழர்களின் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?
தேடித்தான் பார்ப்போமே.
 

ஐ.நா.வின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனத்தின் சின்னமும் இதுதான்.

இந்த மருத்துச்சின்னத்தின் தொடக்கம் ஒரு ஒற்றைப் பாம்பு சுற்றியுள்ள ஒரு கம்பு. இந்த ஒற்றைப்பாம்புக்கம்பு மேற்கத்தியர்களால் வழக்கம்போலவே கிரேக்க வரலாற்றோடு தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இதன் பெயர் அசேப்பியசின் தடி (Rod of Asciepius). 

இந்த அசேப்பியசு ஒரு மருத்துவர் என்றும், கிரேக்கப் பழங்கதையில் வரும் அப்போல்லோவின் மகன் என்றும், வரலாற்றின் தந்தை ஹிப்போகிரடஸ் என்பவரால் வணங்கப்பட்டவர் என்றும் அறியப்படுகிறார். கீழே  அசேப்பியசு படம்.

இந்த சின்னத்தில் இருக்கும் உருவம் பாம்பே அல்ல. அது ஒரு புழு. தமிழில் சிலந்திப்புழு என்று அழைக்கப்படும் டிராகன்குலஸ் புழு. காண்க:

உடலில் தோலுக்குள் இருக்கும் இப்புழுவை தமிழ் மருத்துவர்கள் குச்சி கொண்டு எடுத்து விடும் மருத்துவ முறை இருந்தது. காண்க:

பாம்பு பொதுவாக ஆபத்துக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அதன் மருத்துவ விஷம், மற்றும் அதன் சட்டை உரித்தல் புதுப்பிறப்பை, மரணத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆக பாம்பு தீமையையும் குறிக்கும் நன்மையையும் குறிக்கும்.

 1. மருத்துவ தொடர்பைக் குறித்த ஒற்றைத்தடி பாம்புதான் மருத்துவ அடையாளமாக இருக்க வேண்டியது.
 1. ஆனால் 1902 ஜூன் மாதம் 28 தேதியில் அமெரிக்க படையினரின் மருத்துவ குழும அடையாளமாக இரண்டு பாம்புகளோடு தடியும், இறக்கையும் என உருவான  பின்பு பலராலும் ஏற்கப்பட்ட பொதுவான மருத்துவக்குறியீடாக மாறிப்போனது. காண்க:

இரண்டு பாம்பு அடையாளம் ரோம கதுசெயுஸ் மெர்க்குரி (Caduceus of Mercury) அல்லது கிரேக்க கெர்மஸ் (Karykeion of Hermes) என்ற மந்திரவாதத் தன்மை உள்ள தெய்வங்களோடு தொடர்புள்ளதாக கருதப்படுகிறது. காண்க: 

இந்த அடையாளம் தமிழர்களோடு தொடர்புடையதா?

நாக வழிபாடு தமிழர்களோடும், தமிழர்களோடு இணைந்த நாகரீகங்களோடும் தொடர்புடையதே.

தமிழர்களுக்கும் பாம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழர்கள் நாகர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இன்றைய வடகிழக்கு இந்தியப் பகுதியான அன்றைய காமரூப நாட்டில் ஆண்ட நரகாசுரன் போன்றோர் நாக வம்சத்தை சேர்ந்தவர்களே. காண்க:

இன்றைய நாகாலாந்து, நாகப்பட்டினம், நாகர்கோயில், நாகமலை எல்லாம் அதன் தொடர்ச்சியே. மருத்துவ குணம் நிறைந்த அரச மரம் மற்றும் வேப்ப மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் நாக வழிபாடு, மற்றும் புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்றவை நாம் இன்னும் மறக்காத பாரம்பரியங்களே.

இங்கிருந்து சென்ற யூத, இசுலாமிய, கிறித்தவ ஆபிரகாம் வழி தமிழர்கள் அதன் தொடர்ச்சியாகத்தான் பாம்பை தீமையின் வடிவமாகவும் அதேசமயம் நன்மையின் வடிவமாகவும் கண்டனர்.

 1. ஆதாம், ஏவாளை ஏமாற்றியதும் பாம்பே; ஏதோன் தோட்டத்தை இழந்த அவர்களுக்கு மீண்டும் வாழ்வு கிடைக்க அறிகுறியாய் அவர்களுக்கு தரப்பட்டதும் ஒரு பாம்பே.

யூத மற்றும் கிறித்தவர்களின் விவிலிய பழைய ஏற்பாடு புத்தகத்தில் எண்ணிக்கை நூல் (21:5-9) மற்றும் 2 அரசர்கள் (18:4) என்ற இடங்களில் மோசே என்ற தலைவன் பாம்பால் துன்புற்ற மக்களுக்கு பாம்பாலேயே வாழ்வு கொடுப்பார்.

புதிய ஏற்பாட்டிலும் யோவான் (3:14) ல் இயேசு அதே மோசே வின் பாம்புக் குறியீடாகக் காட்டப்படுவார்.

பாம்புக்குறியீடும் தமிழரின் மருத்துவ அறிவியலும் 
உடலைக் கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு

ஏழு சக்கரங்கள் என்பவை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை.

இவை ஏழும் தமிழ் சித்தர்களோடு, தமிழரின் மருத்துவ அறிவோடு தொடர்புடையவை மட்டுமல்ல, இன்றைய மருத்துவ அறிவியலோடும் பொருந்தக்கூடியதே.

 1. மூலாதாரம்

  முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

2. ஸ்வாதிஷ்டானம்

தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.  உயிர் (ரிப்ரொடக்டரி) சுரப்பிகள்
உற்பத்தி உறுப்புகள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம்

தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.

கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது.
இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்

மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது.
தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

5. விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு.

தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. துரியம்

இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

எந்த ஒரு மனிதனும் ஆண் மற்றும் பெண் பண்புகளால் உள்ளவனே. மனிதனின் வலப்புறம் உள்ள செயல்பாடுகள் சூரிய அம்சம் அல்லது ஆணின் தன்மை கொண்டதாகவும், இடப்புறம் சந்திர கலையை அல்லது பெண் தன்மை கொண்டதாகவும் தமிழ் சித்த முறையில் கூறப்படுகிறது.
வலப்புற நாடி பிங்கல நாடி என்றும், இடப்புற நாடி இட நாடி என்றும் அறியப்படுகிறது. இவை இரண்டும் தமிழர் வழிபடும் அந்த நாக வழிபாட்டு பாம்பு போல இரண்டறக்கலந்தது. ஏழு சக்கரங்கள், மற்றும் இரு நாடிகளையும் மையத்தில் இணைப்பது சுழுமுனை.

மேலே சொல்லப்பட்ட ஏழு ஆதாரங்கள், பிங்கல, இட நாடிகள், மைய சுழுமுனை என அனைத்தும் நாம் முதலில் கண்ட மருத்துவ குறியீட்டோடு பொருந்தி இருப்பதைக் கீழே காணும் படும் தெளிவாக விளக்கும்.

இதையே விளக்கும் விதமாக இன்னொரு படம்.

ரொம்பவும் உயிரியல் சொல்லி பயமுறுத்த மாட்டேன். கவலைப்படாமல் மேலே செல்வோம்.

தற்சமயம் அப்படியே நம் உடலின் அடிப்படை விசயமான செல் மற்றும் டி,என்.ஏ (DNA) மூலக்கூறுக்குள் செல்லலாம்.

நம் உடம்பு செல்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே.

இந்த செல்லுக்குள் என்ன இருக்கிறது என்று தேடினால் இப்படம் விளக்குவது போல செல்லுக்குள் நியூக்ளியஸ், நியூக்ளியசுக்குள் குரோமோசோம், அதில் டி,என்.ஏ என நாம் காண முடியும்.

நம் உடலின் பிங்கல மற்றும் இட நாடி நாகங்களைப்போலவே அப்படியே இருக்கிறது டி.என்.ஏ வின் வடிவமைப்பு. ஆச்சரியம்தான்.

 1. இரு பாம்புகளை, அல்லது நாடிகளை ஒத்தது இரு வளையங்கள். (Two Strands of sugar phosphate backbone).
 1. மையத்தில் அனைத்து மனித தகவல்களையும் கொண்டிருக்கும் நான்கு படிநிலைகள். (Adenline-Thymine-Guanini-Cytosine). இவை எதிர்காலத்தில் பரிணாம வளர்ச்சியில் 12 படிநிலைகள் வரை செல்லலாம் என்கிறது ஆராய்ச்சி. காண்க:
 1. இணைக்கும் பாலமாக இருப்பது சுழுமுனை போல ஹைட்ரஜன் இணைப்பு (Hydrogen Bond).
 1. வெளிப்புறத்தில் நம் பார்வைக்கு புலப்படும் உடம்பு பௌதிக உடம்பு, அல்லது ஸ்தூலம் எனப்படும்.
 2. அகத்தில், நம் பார்வைக்கு புலப்படாத மனம் சூட்சுமம் எனப்படும்.
 1. முதல் ஐந்து ஆதாரங்களும் பஞ்சபூத மையங்களாகும்.இவை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை குறிப்பதாகும்.
 2. ஆறாவதுபகுதிமனம்சார்ந்தசூட்சமபகுதியாகும்.
 1. மிக முக்கியமான இடகலை, பின்கலை, சூழமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நம் உடம்புக்கும் இவ்வுலகின் ஐம்பூதங்களுக்கும் என்ன தொடர்பு?

 1. சரகர் என்ற மருத்துவர் எழுதிய நூல் சரக சம்கிதை (Saraka Samhita )
 2. சுசுருதரின் நூல் சுசுருத சம்கிதை (Sushruta Samhita )
 3. மூத்த வாகபதர் (Vagabatha the elder) தொகுத்த அட்டாங்க சங்கரகம் (Astanga Sangraha)

என்ற மூன்று நூல்களும் ‘மூத்தோரின் மூன்று வழிகாட்டிகள்’ என்று அறியப்படுகின்றன.

இம்மூன்று தொகுப்பும் உடல், உயிர் பற்றி கூறும் செய்திகளை பின் வருமாறு சுருக்கலாம்.

 1. ஆயுர் வேதம் என்றால் ஆயுள் + வேதம் – ஆயுளை நீட்டிக்கும் அறிவியல்
 2. மனித உடல் பஞ்ச (5) பூதங்களால் ஆன 3 காரணிகளால் உருவாக்கப்பட்டது.
 1. வாதம் (காற்று, ஆகாயம்) – மூச்சு, பேச்சு, சீரணம், இரத்த ஓட்டம், கழிவு நீக்கம்.
 2. பித்தம் (நெருப்பு) -சீரணம், உடல் சூடு, இரத்த, உடல் நிறம், மனம்.
 3. கபம் (நிலம், நீர்) -எச்சில், உடல் சக்தி, சுவை, ஐம்புலன்கள், எலும்பு உயவு.
 1. சுசுருதர் பயன்படுத்திய மருத்துவக்கருவிகள்:
 1. மனித உடல் பஞ்ச பூதங்களின் கலவையே. 5 பூதங்களும் பல்வேறு விகிதங்களில் கலந்து
 1. ரசம் (Plasma) 2. இரத்தம் (Blood) 3. சதை (Flesh) 4. கொழுப்பு (Fat) 5. எலும்பு (Bone) 6. மச்சை (Marrow) 7. சுக்ரம் (Semen) ஆகிய 7 வகை திசுக்கள் உருவாகின்றன.
 2. சம்கிதைகளின் காலம் ஏறக்குறைய கி.மு. 1500 – 1000.

உலக வரலாற்றின் ஆசிரியர் என்று மேற்குலகம் சொல்லும் கிரேக்க ஹிப்போகிரேட்டஸ் (கி. மு. 460 – 370.) காலத்துக்கு 1,000 வருடங்களுக்கு முன்பு.
கிரேக்க அரிஸ்டாட்டில் தனியாக எழுதிக்கொண்டிருந்த கி. மு. 350 களில்,

பீகார் மாநில பாட்னா விற்கு 80 கிலோமீட்டர் தூரத்தில் 1,500 பேராசிரியர்களோடும், 10,000 பலநாட்டு மாணவர்களோடும் நாளந்தா என்ற சர்வதேச பல்கலைக்கழகமே செயல்பாட்டில் இருந்தது.

 1. நமது நாட்டில் சித்தர்களும், புத்தர்களும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் ஆய்ந்து சமூக மேம்பாட்டிற்காய் பங்களித்துக்கொண்டிருந்த காலம்.

மருத்துவத்துறையில் பெரும் பங்காற்றிய சித்தர்கள் 11 பேர். (பதிணென் சித்தர்கள்)
திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகனாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுண்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர்.

 1. நம் உடம்பு என்பது இந்த அண்டத்தின் ஒரு பகுதி; இந்த அண்டம் என்பது நம் உடம்பின் முழுத்தொகுதி என்பதை அண்டத்தில் பிண்டமும் – பிண்டத்தில் அண்டமும் என்ற சொல்வழக்கில் புரிந்து கொள்ளலாம்.

திருமூலர் 478
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச

மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி

குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்

தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.
இந்த பரந்துபட்ட அண்ட உலகம் நமது சின்ன உடலிலும் உள்ளது என்கிறார். அதாவது

 1. பூமி – மாமிசம்
 2. நீர் – இரத்தம்
 3. நெருப்பு – உடல் சூடு
 4. ஆகாயம் – கேட்கும் சக்தி
 5. கடல் – வியர்வை, சிறுநீர்
 6. மகாமேரு (இமயமலை)- கழுமுனை

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே.

என்பதை சட்டை முனி சித்தரும் விளக்குகிறார்.

மூளை சந்திரனைப்போல் இயங்குவதாகவும்,

பித்தப்பை செவ்வாயைபோல் இயங்குவதாகவும்,

இதயம் சூரியன் போல் இயங்குவதாகவும்,

சிறுநீரகமும் பிறப்பு உறுப்புகளும் சுக்கிரன் என்கிற வெள்ளியைப்போல் இயங்குவதாகவும்,

நுரையீரல் புதனைப்போல் இயங்குவதாகவும்,

கல்லீரல் குரு என்கிற வியாழனைப்போல் இயங்குவதாகவும்,

மண்ணீரல் சனியைப்போல் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.
காண்க: