மலேசிய  விமானமும் தியுகோ கார்சிகா தீவும்

சர்வதேச இராணுவ வலைப்பின்னலில் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப்பார்த்தால் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் கொடூர முகம் தெரிய வரும். இந்த வலைப்பின்னலில் ஒரு முடிச்சு தியுகோ கார்சிகா என்ற ஒரு தீவு. தற்போது அமெரிக்காவின் இராணுவத்தலமாய். ‘காணாமல் போன’ மலேசிய விமானத்தோடு தொடர்பு உடையது இந்தத் தீவு.

ஒரு சின்ன பின்னணி விளக்கம்.
உலகின் மூன்றாவது பெரிய கடலான இந்தியப் பெருங்கடல் இராணுவ, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடல் பாதை. காரணம்

 1. உலகளவில் கடல்வழி வர்த்தகத்தின் 80 சதவிகிதம் இக்கடல்வழிதான் நடக்கிறது.
 2. உலகின் 2 வது பொருளாதார வல்லரசு சீனா, 4 வது வல்லரசு ஜப்பான், 3 வது வல்லரசு இந்தியா (உள்நாட்டு வாங்கு திறன் அடிப்படையில், PPP – Purchasing Power Parity காண்க) ஆகியவை இவ்வழி தான் செல்லவேண்டும்.
 1. பெட்ரோல் உற்பத்தி செய்யும் மேற்காசிய அரபு நாடுகள், ப்ருனை உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு வேறு வழியே இல்லை. ஈரானின் செல்வாக்கு மிக்க ஹோர்முஸ் நீரினை (உலக எண்ணை வர்த்தகத்தில் 40 சதவிகிதம்)

தென்கிழக்காசியாவின் முக்கிய மலாக்கா நீரினை, (உலகப்பொருளாதாரத்தில் 35 சதவிகிதம்)

என முக்கியமான கடல்வழி இந்தியக்கடல் வழிதான்.

 1. உலகின் 50 சதவிகித போர்ச்சூழல் மிக்க பிராந்தியங்களும் (இந்தியா-பாக், மியான்மர், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மேற்குலகம் சொல்லும் அரபுப் பயங்கரவாதம், சோமாலிய கடற்கொள்ளை, கடல் மீன் பிடிப்பு (கபளீகரம்) (இத்தாலி கடற் படையினர் 2 பேர் மாட்டியதும் இப்பகுதிதான்)) இப்பகுதியில்தான்.
 2. அதனாலே அமெரிக்கா 5 ஆம் கடற்படையின் தலைமையகம் அமைத்திருப்பது பக்ரெயினில் (மேலே உள்ள ஈரானிய நிலப்படத்தில் காண்க)
 3. பிரான்ஸ் நாடு தனது இராணுவ தளத்தை அபுதாபி, ரியூனியன், டிஜுபோதி என 3 நாடுகளில் அமைத்திருப்பதும் இக்கடலில்தான்.
 1. சீனாவும் தனது வர்த்தகக் கடல் போக்குவரத்துக்கு இடையூறு வராமலிருக்க இலங்கையில் அம்பன்தோட்டா துறைமுகம், பாகிஸ்தானில் க்வேடார் துறைமுகம், பங்களாதேஷில் சிட்டகாங் துறைமுகம், மியான்மரில் குவாக்பியூ துறைமுகம், மேலும் செசல்ஸ் நாட்டோடு துறைமுகம் அமைக்க பேச்சு என பரந்த ஒரு வலைப்பின்னலை அமைப்பதும் இந்தக்கடல் பிராந்தியமே. இதற்கு சீனா வைத்திருக்கும் பெயர் முத்து மாலை (string of Pearls)
 2. இந்தியாவும் இதே வர்த்தக நோக்கத்திற்காக வலியனப்போய் உதவும் ஒரு தீவு நாடு மாலைத்தீவு இருப்பதும் இக்கடலில்தான்

இப்பதான் இந்தக் கட்டுரை முக்கிய பகுதி நோக்கி செல்கிறது.
இத்தனை இராணுவ காரணங்களுக்கும் அடிப்படை, இந்தியப்பெருங்கடலில் ஏற்கனவே மையம் கொண்டிருப்பது அமெரிக்க கடற்படை. தியுகோ கார்சிகா எனப்படும் ஒரு சிறு தீவுக்கூட்டம். இந்தியாவை விட்டு இங்கிலாந்து செல்லும் போது இந்தத்தீவுகளை ஆக்கிரமித்து அங்கிருந்த தொல் தமிழர்கள் 2000 பேரை விரட்டியடித்து பின்னர் அமெரிக்காவுக்கு  1966 ம் வருடம் 50 வருட குத்தைகைக்கு விட்டது. இந்த குத்தகை 2016 ல் முடிகிறது. ஆனால் 2014 டிசம்பரில் கூடி மேலும் 20 வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர் காண்க .
மீண்டும் அதே தீவுக்குச்செல்ல போராடும் மக்கள்.

தியுகோ கார்சிகா தீவின் இருப்பிடமும் பிற பகுதியிலிருந்து உள்ள தொலைவும் .
தியுகோ கார்சிகா தீவும் அங்குள்ள கடற்படை, மற்றும் விமானப்படைத்தளங்கள்:

உலகிலேயே மிக இரகசியமான இடம் இது, காரணம் 2000 கி. மீ  தூரத்திற்கு கேட்க ஆளில்லை,  மாலைத்தீவைத்தவிர. மேலும் அதி நவீன இராணுவ ரேடார் சாதன வசதிகள் உள்ளதால், 2000 சுற்றளவிற்கு எந்த விமானம், கப்பல், எதுவும் இதன் உளவு கண்களிலிருந்து தப்ப முடியாது. அதனால் தான் மலேசிய விமானம் எங்கிருக்கிறது என்பது அமெரிக்காவிற்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. காண்க: இந்த மலேசிய விமானம் 

(ஒரு இடைச்செருகல்: இந்த தீவிலிருந்துகொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள், அவர்களின் கடற்படை செயல்பாடுகள் மற்றும் 2009 சிங்கள, இந்திய போர்குற்றங்கள் எல்லாம் கண்காணிப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியும். அதேபோல 2004 ல் இந்தோனேசியாவில் சுனாமி வந்தபோது 2 மணிநேரம் கழித்து அது இந்தியாவைத் தாக்குவதற்கு முன்னதாக தகவல் அளித்து 20,000 மக்களை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் செய்ய வில்லை. மூன்றாம் உலக ஏழை மக்கள் இருந்தாலென்ன, செத்தாலென்ன அவனுக்கு இராணுவ வியாபாரம் ஒழுங்கா நடந்தா சரி.)

(மலேசிய விமானம் பற்றிய எனது கணிப்பு: இது ஒரு நண்பரின் தளத்தில் மறுமொழியாக மார்ச் 18 ல் கடத்தப்பட்ட 10ம் நாளில் நான் எழுதியது. காண

எல்லாரும் கவலைப்படக்கூடிய விசயம்தான். 239 உயிர்கள், 239 குடும்பங்கள், அவர்களின் சொந்தங்கள், ஏறக்குறைய 10 நாடுகளின் அந்த 10 நாட்டு மக்களின் கவலைகள். விமானம் தயாரித்த போயிங் நிறுவனம் (அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்), இயக்கியை (மோட்டார்) தயாரித்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் (இங்கிலாந்து பன்னாட்டு நிறுவனம்)இவர்களுக்கு அதன் நுணுக்கங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மூடி மறைக்கப்படுது. கடத்தப்பட்ட சீனர்களில் 4 பேர் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர்கள். இவர்களுக்காகத்தான் ஒட்டு மொத்த விமானமும் கடத்தப்பட்டிருக்க வேண்டும். இதைக்கடத்தியவர்கள் இசுரேலிய மொசாட் படையினராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவர்கள் அமெரிக்காவின் பின் புல உதவி இல்லாமல் கடத்தியிருக்க முடியாது. அமெரிக்கா GPS (Global Positioning System) மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடியது. மலாக்கா நீரிணை ராணுவ பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சிறிய இடம் என்பதால் தொடர் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். பக்கத்திலேயே அமெரிக்காவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவிலும், இந்தியாவிற்கு நேர் கீழே இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான தியுகோ கார்சியா தீவிலும் அமெரிக்க போர் விமானங்கள் எப்போதும் கண்காணிப்பில் இருக்கும். அப்படி இருக்கும் பொது ஒன்னும் இதுவரை தெரியவில்லை என்று சொல்வது, காதில் பூ சுற்றும் வேலை. இந்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மலேசியாவும் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உலகமும் சீனாவும் ஏதாவது சொல்லுமே என்பதற்காக தேடுதல் நாடகம். அமெரிக்காவும் வழக்கம் போல அல் குவைதா, பாகிஸ்தான் என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. 4 தொழில் அதிபர்கள் மூலம் சீனாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலின் பலன் கிடைத்ததும் வேறொரு கதை சொல்லப்பட்டு அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்பது என் கணிப்பு. )

மேலும் ஏப்ரல் 4 ந்தேதி யாரும் தியுகோ கார்சிகா தீவிற்கு செல்லக்கூடாது என தடை விதித்திருக்கிறது அமெரிக்கா.
வெளி செல்ல தடை

தடை
இந்த அமெரிக்க இராணுவகாலனி ஆதிக்கத்தின் கதை இந்த தியுகோ கார்சிகா என்ற ஒரு தீவோடு மட்டும் உள்ள ஆக்கிரமிப்பு அல்ல. உலகெங்கும் நடக்கும் அமெரிக்காவின் இராணுவ, பொருளாதார ஆக்கிரமிப்பு ஒரு சர்வதேச சதிகார ஆக்கிரமிப்பு வலைப்பின்னல். சுருக்கமாகவே பார்ப்போம்.
அமெரிக்காவின் பெரும் இராணுவ படைத்தளங்கள் 12 என்றாலும் 7 முக்கியமாக சொல்லப்படும்.

 1. முதல் படை. (First Fleet) அமெரிக்க கடற்கரை பாதுகாப்புப்படை. இது அமெரிக்காவின் கடற்கரையினைப் பாதுகாப்பது.
 2. இரண்டாம் படை. Norfolk என்ற அமெரிக்க தலைமையகத்திலிருந்து வட அட்லாண்டிக் பெருங்கடல் முழுதும் ஐரோப்பா வரை கண்காணிக்கும்.
 3. மூன்றாம் படை. San Diego என்ற அமெரிக்க தலைமையகத்திலிருந்து பசிபிக் பெருங்கடல் முழுதும் ஜப்பான் வரை

கண்காணிக்கும்.

 1. நான்காம் படை.  பிரேசில் நாட்டில் Natal என்ற நகரின் தலைமையகத்திலிருந்து தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் முழுதும் கண்காணிக்கும்.
 2. ஐந்தாம் படை. அராபிய பக்ரீன் (Bahrain) நாட்டின் தலைமையகத்திலிருந்து கண்காணிக்கும். ஈராக் போர், பாலைவனப்புயல் (Desert Storm) செயல்பட்டது இங்கிருந்துதான். இந்த ஐந்தாம் படையோடு சேர்ந்தது தான் தியுகோ கார்சிகா இராணுவத்தளம். கீழே உள்ள படத்தில் எவ்வளவு அமெரிக்கப்படைகள், தளங்கள், அரேபிய நாடுகள் முழுவதும் அமெரிக்க படைகள் தான். எப்படி அவர்களால் சுதந்திரமாக செயல்பட  முடியும். 100  சதவிகித  ஆக்கிரமிப்பு, காலனிஆதிக்கம், எண்ணெய் கொள்ளை, பொருளாதாரச்சுரண்டல்.
 1. ஆறாம் படை. லண்டன் தலைமையகத்திலிருந்து மத்திய தரைக்கடல், ஐரோப்பா இவற்றை கண்காணிக்கும்.
 2. ஏழாம் படை. மிகப்பெரியது. 60 போர்க் கப்பல்கள், 200 போர் விமானங்கள், 60,000 படைவீரர்களோடு, ஜப்பான், மற்றும் குவாம் தீவுகளிலிருந்து இந்தியப்பெருங்கடல், தென் கிழக்காசியா, மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதி என அனைத்தையும் கண்காணிக்கிறது.

இவை தவிர உலகெங்குமுள்ள அமெரிக்க கடற்படை, மற்றும் விமானபடை தளங்கள் (அமெரிக்கா நாடு தவிர )

 1. அமெரிக்க கடற்படை தளங்கள்.

–>

 1. பக்ரீன் (Bahrain)

British Indian Ocean Territory

 1. பிரேசில் (Brazil)
 1. கியூபா (Cuba)
 1. திஜுபோதி (Djibouti)
 1. கிரேக்கம் (Greece)

6, குவாம் (Guam)

 1. இசுரேல் (Israel)
 1. இத்தாலி (Italy)
 1. ஜப்பான் (Japan)
 1. குவைத் (Kuwait)
 1. தென் கொரியா (South Korea)
 1. ஸ்பெயின் (Spain)
 1. எமிரேட்ஸ் (United Arab Emirates)
 1. அமெரிக்க விமானப்படைத்தளங்கள் 

–>

 1. ஆப்கானிஸ்தான் (Afghanistan (Middle East)
 1. பக்ரைன் (Bahrain)
 1. பல்கேரியா (Bulgaria)
 1. ஜெர்மனி (Germany)
 1. கிரீன்லாந்து (Greenland)
 1. குவாம் (Guam)
 1. இத்தாலி (Italy)
 1. ஜப்பான் (Japan)
 1. குவைத் (Kuwait)
 1. கிர்கிஸ்தான் (Kyrgyzstan)
 1. நெதர்லாந்து (Netherlands)
 1. ஓமன் (Oman)
 1. பாகிஸ்தான் (Pakistan)
 1. போர்த்துகல் (Portugal)
 1. குவெட்டார் (Qatar)
 1. சவூதி அரேபியா (Saudi Arabia)
 1. சிங்கப்பூர் (Singapore)
 1. தென் கொரியா (South Korea)
 1. ஸ்பெயின் (Spain)
 1. துருக்கி (Turkey)
 1. எமிரேட்ஸ் (United Arab Emirates)
 1. இங்கிலாந்து (United Kingdom)

இவ்வளவு படைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்காவை எதிர்த்து யார் குரல் கொடுக்க முடியும், அது ஐ. நா சபையாகவே இருந்தாலும் சரி, ஐ.எம்.எப் (IMF) மற்றும் உலக வங்கியாக இருந்தாலும் சரி. உலக நாட்டாமை, கட்டபஞ்சாயத்து எல்லாம் அமெரிக்காவின் பன்னாட்டு தொழில் முதலாளிகள்தான் முடிவு செய்வார்கள்.

தொடர்ந்து தேடுவோம்

Advertisements