தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்.

இது என் முதல் பதிவு.

அடிப்படையில் நான் ஒரு தமிழ் ஆர்வலன்.

‘தேடுதல்’ எனக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

89 ம் ஆண்டளவில் தொடங்கிய தமிழார்வம் சரியான திசையில் இன்று வரை செல்வதாக நினைக்கிறேன்.

திரு. தெய்வநாயகம் அவர்களின் மாத இதழ் ‘திராவிட சமயம்’ என் தமிழ் ஆர்வத்திற்கு தொடக்கப்புள்ளி.

திரு. சாத்தூர்சேகரன்அவர்கள்  ‘ஜூனியர்போஸ்ட்’   என்ற

(சில  ஆண்டுகளில் நிறுத்தப்பட்டுவிட்டது)

இதழில் எழுதிய, ‘ஆங்கிலமும் தமிழ்தான் பிரெஞ்சும் தமிழ்தான்’  என்ற கட்டுரை தூண்டுதல் தந்தது.

தொடர்ந்து ஏற்பட்ட தேடல் சில கண்டுபிடிப்புகள் என்னை தமிழ்க்காதலனாக மாற்றிவிட்டது.

‘என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு’ என்று அடிக்கடி நினைத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் பல்வேறு முறைகளில், வடிவங்களில், உலகின் முதல் மொழியாய், உலக மாந்தரின் தோற்ற, வளர்ச்சியில், விண்ணியல், மொழியியல், அறிவியல், கடலியல், சித்தர்வியல் இன்னும் பல வழிகளில் விசுவரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஒரு சில தரவுகளை, எனக்கு தெரிந்த ஒரு சில செய்திகளை பகிர, ​பதிய  நினைக்கிறேன்.

மாற்று கருத்து உள்ளவர்களும் பகிருங்கள். சேர்ந்தே தேடுவோம். தமிழால், தமிழராய் இணைவோம்.​

தோழர். பிரெட்ரிக் ஏங்கல்ஸ் எழுதிய ‘இயற்கையின் இயங்கியல்’ (Dialectics of Nature) என்ற புத்தகத்தில் கூறுகிறார்:

“பல கோடி ஆண்டுகளுக்கு முன் நில வரலாற்றில்  இன்னும் தெளிவாக உறுதி செய்யப்படாத ஒரு கட்டத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற மனிதக்குரங்கினம் ஒன்று நில உருண்டையின் வெப்ப மண்டலத்தைச்சேர்ந்த ​ஏதோ ஒரு பகுதியில்  வாழ்ந்திருத்தல் கூடும். இந்து மாகடலுக்குள் ஆழ்ந்து மூழ்கிப்போன ஒரு மாபெரும் கண்டத்தில்  இந்த இனம் வாழ்ந்திருக்கக்கூடும். இவையே மாந்தனுக்கு முற்பட்டவையாகும். இதைப்பற்றி டார்வின் கிட்டத்தட்ட சரியானதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்.”

தொடர்ந்து தேடுவோம்.

Advertisements