முதல் பகுதியில் மேரு மலை சுமேரிய நாகரீகம் முதல் அங்கோர்வாட் வரை தொடர்பு கொண்டிருந்ததைக்கண்டோம். முதல் பகுதிக்கான சுட்டி
சுமேரிய நாகரீகத்தை ஒட்டிய மெசபோடமியா நாகரீகமும் எப்படி தமிழர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்று என்பதைப்பற்றி தேடுவோம். நாம் தேடப்போகும் பகுதியில் உள்ள முக்கியமான 15 இடங்கள் பற்றி கலந்து பேசுவோம்.  

 1. 1. மெசோபேடாமியா 
 2. எகிப்து 2.1. நைல் நதி 2.2. பாரவோன் 2.3 பிரமிடு 2.4 சினை மலை
 3. பாபேல்
 4. ஓமன் நாட்டில் தமிழன்
 5. ஈராக்
 6. டைக்ரிஸ் ஆறு ஒரு தமிழ்ப்பெயர்
 7. யூப்ரடீஸ் ஆறு ஒரு தமிழ்ப்பெயர்
 8. எரிதிரைக்கடல் (Red Sea – செங்கடல் )
 9. எரித்ரியா
 10. சகோத்ரா தீவு
 11. அட்லாண்டிக் பெருங்கடல் ஒரு தமிழ்ப்பெயர்

ஒவ்வொன்றாய் தேடிக்காண்போம்:

 1. மெசோபேடாமியா

மெசோபேடாமியா என்ற வார்த்தையே ஒரு தமிழ் வார்த்தை.

மெசோபேடாமியா (Mesopotamia) என்பதன் பொருள் இரு ஆறுகளுக்கிடைப்பட்ட பகுதி. காண்க:  கிரேக்க, அராபிய, சிரிய, அரமாய்க் என அத்தனை மொழிகளிலும் இந்த வார்த்தைக்குப்பொருள் இரு ஆறுகளுக்கிடைப்பட்ட பகுதி என்பதே. இவ்வார்த்தையின் மூலச்சொல் தமிழிலேதான் உள்ளது.

மெசோபேடாமியா என்பதைப்பிரித்து எழுதினால் மிகச்சரியாக இதே பொருளுடன் தமிழ் வார்த்தை.

மெசோ-பேடா-மி-யா.

மிசை – பேட்டை- ஈ – யாறு  (ஆறு )

(மிசை என்றால் இடைப்பட்ட என்பதே பொருள். சிந்து நதியின் மிசை நிலவினிலே … என்ற பாடல் வரிகளில் காணலாம்) ஈ ஆறு என்றால் இரண்டு ஆறு என்பதே பொருள்.

நம்மூரிலும் ஈரோடு என்ற ஊரின் உண்மையான பெயர் ஈரோடை அதாவது இரண்டு ஓடை என்பதே. மருவி ஈரோடு ஆகிவிட்டது. இது போல தமிழ் நாட்டிலேயே பல ஊர்களின் பெயர்களின் மூலச்சொல் வழக்கொழிந்து போயிருக்கிறது.ஒரு சில உதாரணங்கள்: கோயம்புத்தூரின் மூலச்சொல் கோவன்புத்தூர், மாயவரம்-மயிலாடுதுறை, வேதாரண்யம்-மறைக்காடு, பொள்ளாச்சி – பொழில்வாய்ச்சி, துவாக்குடி – துழாய்க்குடி இன்னும் சில இங்கே காணலாம்.

2. எகிப்து 

ஜான் P.ராபர்ட்டி (John P. Rafferty) என்பவர் எழுதி ஒருங்கிணைத்த ஆறுகளும் ஓடைகளும் (Rivers and Streams) என்ற புத்தகத்தில் பக்கம் 155ல்  பண்டைய எகிப்தியர் ஆறுகளை ஆறு என்றே அழைத்தனர் என்கிறார்.

“The ancient Egyptians called the river Ar or Aur (Coptic: Iaro)” காண்க:
1986 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பிரிட்டானியா என்சைக்ளோபீடியா முதல் தொகுப்பில் பக்கம் 121 ல்

கிரேக்க ஹோமர் எழுதிய ஒடிசி என்ற காவியத்தில் நைல் நதியின் பெயர் அகப்பிதோஸ் என்று ஆண்பாலாகவும் இந்த நதி பாயும் எகிப்து நாடு, அதே பெயரில்  அகப்பிதோஸ் என்று பெண்பாலாகவும் அழைக்கப்பட்டதாக எழுதியிருக்கிறார்.

 காண்க:

In The Odyssey, the epic poem written by the Greek poet Homer (7th century bce), Aigyptos is the name of the Nile (masculine) as well as the country of Egypt (feminine) through which it flows.

எகிப்து என்ற பெயரின் மூலச்சொல் அகப்பிதா என்பதே. அகம்-பிதா, தந்தையரின் நாடு, முன்னோர்களின் நாடு என்பதே பொருள். காண்க:
Egyptians referred to their country as “Hwt-ka-Ptah” (Ht-ka-Ptah, or Hout-ak Ptah) , which means “Temple for Ka of Ptah”, or more properly, “House of  the Ka of Ptah” Ptah was one of Egypt’s earliest Gods. Hence, in pronouncing Hwt-ka-Ptah, the Greeks changed this word to Aegyptus (Aigyptos)
2.1. நைல் நதி 


நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. எகிப்தில் நைல் நதி என்று ஒரே நதியாக சொல்லப்பட்டாலும் இரண்டு நைல் நதிகள் உண்டு. ஒன்று வெள்ளை நைல். மற்றொன்று நீல நைல். தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. திண்டுக்கல்லில் ஒரு சாலை இருக்கிறது, அதன் பெயர் சாலை ரோடு அது போலத்தான் வரலாறு மறந்த தமிழர்கள் நாம் ப்ளூ நைல் என்று சொல்லும் போது நீல நீல என்று சொல்லுகிறோம்.

எகிப்திய காப்டிக் மொழியில் நைல் நதி ஆறு என்றே சொல்லப்படுகிறது.

The Nile (Arabic: النيل‎, Eg. en-Nīl, Std. an-Nīl; Coptic: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; Ancient EgyptianḤ’pī and Iteru) is a major north-flowing river in northeastern Africa, generally regarded as the longest river in the world.[2] காண்க:
2.2. பாரவோன் 


பார் என்றால் உலகம் என்று நமக்குத்தெரியும். கோண் என்றால் அரசன் என்பதும் நமக்குத்தெரியும். இரண்டையும் சேர்த்து சொன்னால் அதுதான் பார்கோன். இத்தாலியில் Faraone (பாரவோனே) ஆங்கிலத்தில் Pharaoh (பாரோ)

2.3 பிரமிடு 
திரு ம. சோ. விக்டர் எனும் தமிழ் ஆர்வமிக்க தமிழாசிரியர் நல்லேர் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று எபிறேயமும் தமிழே என்பதே. அதில் அவர் தமிழே மூலமாய் உள்ள பல மொழிகளின் தொடர்புகளைத் தருகிறார். அதில் ஒன்று பிரமிடு என்பது ஒரு தமிழ் வார்த்தை என்பதே. இறந்தவர்களை அடக்கம் செய்ய இரண்டு வகை இடங்கள் தமிழர்களிடம் உண்டு. ஒன்று இடுகாடு, மற்றொன்று சுடுகாடு. குழியில் இட்டு அடக்கம் செய்வது இடுகாடு. சுட்டு எரிப்பது சுடுகாடு. அந்த வகையில் தமிழர்கள் பழக்கமான முதுமக்கள் தாழியின் பெரிய வடிவம் தான் பெரும் இடு அல்லது பிரமிடு என்பது. ‘பெரும்’ என்பது பல சொற்களில் திரிந்து ‘பிர’ என்றாகி உள்ளது என்கிறார். உதாரணமாக, பெரும் அண்டம்-பிரமாண்டம், பெரும் சாதம்-பிரசாதம், பெரும்அயணம்-பிரயாணம்.
2.4. சினை மலை
நான்கு பக்கமும் நிலம் தீர்ந்த பகுதி தீவு. ஒரு பகுதி மட்டும் நிலமாக இருந்து மீதி மூன்று பகுதியும் நீர் சூழ்ந்த நிலமாய், நிலத்தின் நீட்சி இருப்பது தீவக்குறை அல்லது தீபகற்பம். கர்ப்பமான பெண்ணைப்போல இருப்பதால் அப்பெயர். தென் இந்தியப்பகுதி ஒரு தீபகற்பம். படம் பார்த்தால் பொருள் எளிதில் விளங்கும்.

இதே கருத்தினைத்தான் இதற்கான ஆங்கில வார்த்தையும் கொண்டிருக்கிறது. Peninsula அதாவது,  சினைகொண்ட அல்லது சூல் கொண்ட ஒரு பெண்ணைப்போல இருப்பதால் பெண்ணின்சுலா. அதனால்தான் அம்மலை சினை மலை என அழைக்கப்படுகிறது. சினை மலையின் நில படம் பார்த்தால் எளிதில் புரியும்.

 1. பாபேல்  

விவிலிய பாபேல் கோபுரம் என்பதன் பொருள் கடவுளின் வாயில் என்பதே. வாயில் என்பதே மருவி பாபேல் ஆகிவிட்டது. எபிரேயர்கள் கடவுளை ஒளி எனபொருள்படும் எல் என்றே அழைத்ததை, முந்தைய இடுகையில் பார்த்திருக்கிறோம். காண்க: 

The phrase “Tower of Babel” does not appear in the Bible; it is always, “the city and its tower” (אֶת-הָעִיר וְאֶת-הַמִּגְדָּל) or just “the city” (הָעִיר). “Babel” means the “Gate of God”, from Akkadian bab-ilu (𒁀𒀊 𒅋𒌋), “Gate of God” (from bab “gate” + ilu “god”).

 1. ஓமன் நாட்டில் தமிழன்

அரபு நாடான ஓமனில் நக்கீரன் என்ற பெருவணிகனின் பெயர் பொறிக்கப் பட்ட முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பானை ஓடொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஓமனிலுள்ள Khor Rori எனும் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பண்டைய பானை ஓட்டில் தான் இந்த வணிகனின் பெயர் பதியப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் வரி வடிவத்தில் ‘ண-ந்-தை கீ-ர-ன்’ என இவ் வணிகனின் பெயர் பதியப் பட்டுள்ளது. சுமார் 1900 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பானை ஓடு பண்டைய வர்த்தக நகரமான ‘சும்ஹுரம்’ இல் கண்டுபிடிக்கப் பட்டதாக் கூறப்படுகின்றது. இப் பானை ஓட்டின் மூலம் புராதன இந்திய நகரங்களுக்கான கடல் வழி வணிகம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து முக்கியமான விவரங்கள் தெரிய வரலாம் என்பதால் இது மிக முக்கியமான தொல் பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.

இந்தப் பானை ஓடு செப்டம்பரில் ‘அலெக்ஸியா பவன்’ எனப்படும் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்பொருளியலாளரால் இந்தியாவின் ‘கோச்சி’ நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு பட்டறையில் (workshop) காட்சிப் படுத்தப்பட்டது

– ஜாஸ்பெர்

 1. ஈராக்

ஈராக் நாட்டின் பெயரும் வளமான பகுதி என இன்று பொருள் கொண்டாலும் அதன் மூலச்சொல் சுமேரிய ஊரு என்பதிலிருந்தே வந்தது என்கிறது மூலச்சொல் அகராதி (Online Etymological Dictionary).

Iraq

country name, 1920, from an Arabic name attested since 6c. for the region known in Gk. as Mesopotamia; often said to be from Arabic `araqa, covering notions such as “perspiring, deeply rooted, well-watered,” which may reflect the impression the lush river-land made on desert Arabs. But the name may be from, or influenced by, Sumerian Uruk (Biblical Erech), anciently a prominent city in what is now southern Iraq (from Sumerian uru “city”).

6. டைக்ரிஸ் ஆறு ஒரு தமிழ்ப்பெயர் 

 டைக்ரிஸ் ஆறு என்பதன் பொருள் அது வேகமான ஆறு என்பதே.  இந்த ஆறு அம்பு போல பாய்வதால் தீரமான ஆறு என்றே பெயரிடப்பட்டிருக்கிறது. தீரம் என்றால் அம்பு என்ற பொருள் என்பது கீழே தரப்பட்டிருக்கிறது. இந்த ஆற்றின் பெயரிலிருந்து tiger என்ற புலிக்கான ஆங்கிலப்பெயரும் ஒரு தமிழ்ப்பெயரே என்பது தெரிய வருகிறது. பெரிய தீரப்புலி அல்லது வேங்கைப்புலி என்று சொல்வோமல்லவா. இது பற்றிய ஒரு ஆங்கில விளக்கம் கீழே:

The Ancient Greek form Tigris (Τίγρις, Τίγρης) was borrowed from Old Persian Tigrā, itself from Elamite ti-ig-ra, itself from Sumerian idigna.

The original Sumerian Idigna or Idigina was probably from *id (i)gina “running water”,[5] which can be interpreted as “the swift river”, contrasted to its neighbor, the Euphrates, whose leisurely pace caused it to deposit more silt and build up a higher bed than the Tigris. The Sumerian form was borrowed into Akkadian as Idiqlat, and from there into the other Semitic languages (cf. Hebrew Ḥîddeqel, Syriac Deqlaṯ, Arabic Dijla).

Another name for the Tigris used in Middle Persian was Arvand Rud, literally “swift river”. Today, however, Arvand Rud (New Persian: اروند رود) refers to the confluence of the Euphrates and Tigris rivers (known in Arabic as the Shatt al-Arab). In Kurdish, it is also known as Ava Mezin, “the Great Water”.

The name of the Tigris in languages that have been important in the region:

Outside of Mosul, Iraq

Language Name for Tigris
Akkadian Idiqlat
Arabic دجلة, Dijla; حداقل, Ḥudaqil
Aramaic ܕܝܓܠܐܬ, Diglath
Armenian Տիգրիս, Tigris, Դգլաթ, Dglatʿ
Greek ἡ Τίγρης, -ητος, hē Tígrēs, -ētos; ἡ, ὁ Τίγρις, -ιδος, hē, ho Tígris, -idos
Hebrew חידקל , Ḥîddeqel biblical Hiddekel[6]
Hurrian Aranzah[7]
Kurdish Dîcle, Dîjla دیجلە
Persian Old Persian: 𐎫𐎡𐎥𐎼𐎠 Tigrā; Middle Persian: Tigr; Modern Persian:دجله Dejle
Sumerian Idigna/Idigina
Syriac ܕܹܩܠܵܬ Deqlaṯ
Dicle
புலி 

In 1758, Linnaeus first described the species in his work Systema Naturae under the scientific name Felis tigris.[3] In 1929, the British taxonomist Reginald Innes Pocock subordinated the species under the genus Panthera using the scientific name Panthera tigris.[4]

The word Panthera is probably of Oriental origin and retraceable to the Ancient Greek word panther, the Latin word panthera, the Old French word pantere, most likely meaning “the yellowish animal”, or from pandarah meaning whitish-yellow. The derivation from Greek pan- (“all”) and ther (“beast”) may be folk etymology.[5]

The specific epithet and common name comes from the Middle English tigre and the Old English tigras (a plural word), both used for the animal.[6] These derive from the Old French tigre, itself a derivative of the Latin word tigris and the Greek word tigris. The original source may have been the Persian tigra meaning pointed or sharp and the Avestan tigrhi meaning an arrow, perhaps referring to the speed with which a tiger launches itself at its prey.[7]
தீரம் என்றால் கரை, வீரம், என்பதோடு  அம்பு என்றும் பொருள் என்கிறது அகராதி. காண்க:

6.1. டைக்ரிஸ் ஆறு Hiddekel அல்லது இடப்பக்க ஆறு  அழைக்கப்பட்டது.

இந்த டைக்ரிஸ் ஆறு என்பதற்கு வேகமான அல்லது தீரமான ஆறு என்பதோடு, வேறு இரண்டு பொருளும் உண்டு. ஒன்று இடப்பக்க ஆறு, மற்றொன்று சின்ன ஆறு. மேலே உள்ள அந்த நிலப்படத்தை பார்த்தாலே தெரியும், டைக்ரிஸ் ஆறு யூப்ரடீசைவிட சின்ன ஆறு என்றும் இரண்டு ஆறுகளுக்கு மத்தியில் நின்று அந்த ஆறுகளின் ஓட்டத்திணை பார்த்த விதமாக நின்றால் இடப்பக்க ஆறு டைக்ரிஸ் ஆறு என்றும்.

Genesis 2: 14 King James Version விவிலியத்தில் பார்த்தால் டைக்ரிஸ் ஆறு hiddekel என்று அழைக்கப்படுகிறது.

“And the name of the third river is Hiddekel: that is it which goeth toward the east of Assyria. And the fourth river is Euphrates.”

6.2  டைக்ரிஸ் ஆறு Shinar  அல்லது சின்ன ஆறு  அழைக்கப்பட்டது.

டைக்ரிஸ்  ஒரு சின்ன ஆறு என்பதற்கு மேற்கூறிய விளக்கமே போதும் என நினைக்கிறேன். கிறித்தவ விவிலியத்தில் அது பற்றிய குறிப்பு.

Shinar is mentioned a total of eight times in the Bible:

Genesis 10:10; 11:2; 14:1, 9; Isaiah 11:11; Daniel 1:2; and Zechariah 5:11. In addition, Achan (Joshua 7:21) sinned in taking a Shinarish garment as forbidden loot in the destruction of Ai; although the KJV translation says the garment was “Babylonian,” the same Hebrew word is used for “Shinar” as in the previous seven verses (Strong 1894, #8152). The four Genesis verses all refer to Shinar as the place where the Tower of Babel was built; Isaiah 11:11 is a reference to the gathering of the children of Israel from far places; and Zechariah 5:11 sees a vision, in which an angel tells him that a house for the ephah

will be built in the land of Shinar.

The name Shinar occurs eight times in the Hebrew Bible, in which it refers to Babylonia.[3] This location of Shinar is evident from its description as encompassing both Babel (Babylon) (in northern Babylonia) and Erech (Uruk) (in southern Babylonia).[3] In the Book of Genesis 10:10, the beginning of Nimrod‘s kingdom is said to have been “Babel [Babylon], and Erech [Uruk], and Akkad, and Calneh, in the land of Shinar.” Verse 11:2 states that Shinar enclosed the plain that became the site of the Tower of Babel after the Great Flood. After the Flood, the sons of Shem, Ham, and Japheth, had stayed first in the highlands of Armenia, and then repaired to Shinar.[4]

In Genesis 14:1,9, King Amraphel rules Shinar. Shinar is further mentioned in Joshua 7:21; Isaiah 11:11; Daniel 1:2; and Zechariah 5:11, as a general synonym for Babylonia. காண்க:

 1. யூப்ரடீஸ் ஆறு ஒரு தமிழ்ப்பெயர்

 காண்க 
Euphrates (யூப்புறேட்டிஸ்) என்ற சொல் இப்புறத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்தது.
இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள சுருப்பக், நிப்பூர் ஆகிய இடங்களில் கிடைத்த ஆப்பெழுத்து ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் புரானுனா. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை புரத்து என அழைத்தனர். பழைய பாரசீக மொழியில் உஃபராத்து என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ஃப்ரட் என்றும், துருக்கிய மொழியில் ஃபிரட் என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான இயூஃபிரட்டீஸ் (Euphrates) பெறப்பட்டது.
எபிரேயர்கள் ஆங்கிலத்தில் Hebrews என அழைக்கப்படுவது நமக்குத்தெரியும். இந்த Hebrews என்பதே அப்புறத்திலிருந்து வந்தவர்கள் அதாவது இந்த ஆறுகளுக்கு அப்புறத்திலிருந்து (கிழக்கிலுள்ள இந்தியப்பகுதியிலிருந்து) வந்தவர்கள் என்றே பாபிலோனிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
The Ancient Greek form Euphrátēs (Ancient Greek: Εὐφράτης) was borrowed from Old Persian Ufrātu,[2] itself from Elamite ú-ip-ra-tu-iš. In Akkadian the river was similarly called Purattu,[3] which has been perpetuated in Semitic languages (cf. Syriac P(ə)rāṯ, Arabic al-Furrāt) and in other nearby languages of the time (cf. Hurrian Puranti, Sabarian Uruttu).

7.1 யூப்ரடீஸ் பேராறு (Perat ) என அழைக்கப்பட்டது 
நிலபடத்தைப்பார்த்தாலே தெரியும் எப்படி டைக்ரிஸ் ஆறு சின்னதாகவும், யூப்ரடிஸ் ஆறு நீளமான பேராறு ஆகவும் இருக்கிறது என்று.
Map of the Tigris – Euphrates watershed.

The Euphrates (juːˈfreɪtiːz) (Arabic: نهر الفرات, Nahr ul-Furāt; Turkish: Fırat; Syriac: ܦܪܬ, Prāṯ; Hebrew: פרת, Pĕrāṯ) is the western of the two great rivers that define Mesopotamia (the other being the Tigris) which flows from Anatolia.
Modern names for the Euphrates may have been derived by popular etymology from the Sumerian and Akkadian names, respectively Buranun and Pu-rat-tu. The former appears in an inscription from the 22nd century BCE associated with King Gudea.

Etymologically, the name “Euphrates” is the Greek form of the original name, Phrat, which means “fertilizing” or “fruitful”.

Alternatively, the second half of the word Euphrates may also derive from either the Persian Ferat or the Greek φέρω (pronounced [fero]), both of which mean “to carry” or “to bring forward”.
PERAT

Perat, the fourth and last river, is generally associated with the Euphrates. The Hebrew name Perat finds its equivalent in the Assyrian Purattu and the Old Persian Ufratu.

 ref:  http://jhom.com/topics/lions/rivers/eden.htm
Language Name for Euphrates
Akkadian Pu-rat-tu
Arabic الفرات Al-Furāt
Aramaic ܦܪܬ Prāṯ, Froṯ
Armenian Եփրատ Yeṗrat
Greek Ευφράτης Euphrátēs
Hebrew פְּרָת Pĕrāṯ
Kurdish فرهات Firat, Ferat
Persian فرات Ferat
Sumerian Buranun
Turkish Fırat
 1. எரிதிரைக்கடல் (Red Sea – செங்கடல் )

தமிழ் அன்பர் ஒருவரின் தளத்தில் இந்தியப்பெருங்கடல் எவ்வாறு தமிழர் சூட்டிய கடல் பெயர் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

தமிழர்கள் சூட்டிய கடல் பெயர்கள் :

“பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ” (Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்க பட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம் சொல்லும் இந்து மா சமுத்திரம் . இந்து மா சமுத்திரம் வழியாக கடல் வாணிபத்தை குறிக்கும் வரைபடம் அது. அகவே முதலாம் நூற்றாண்டில் எரித்ரயென் கடல் என்று இந்து மா சமுத்திரம் அழைக்கப்பட்டது உறுதி ஆகிறது. இப்பொழுது “எரித்ரயென் சீ” என்ற வார்த்தையின் தன்மையை ஆராயும் பொழுது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

பெயர் : எரித்ரயென் சீ
பெயர் காரணம் : அந்த கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம் அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் (Trichodesmium erythraeum Algae) ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை. இதனால் இந்தவகை பூஞ்சை வளரும் கடல் என்பதால் இந்த கடல் அப்பெயர் பெற்றதாக கூறபடுகிறது.

கேள்விகள் :
இந்த வகை பூஞ்சை முதன் முதலாக கடல் மாலுமி குக்(Captain Cook) என்பவரால் 1770 ஆம் ஆண்டு தன பயணத்தின் பொழுது கவனித்து பின்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அறிவியல் பெயரிடப்பட்டது . அப்படி இருக்குமெனில் முதலாம் நூற்றாண்டில் உள்ள வரை படத்தில் எப்படி அந்த பெயர் இடம்பெற்றது ???

பின்பு இதற்கு தமிழ் விளக்கத்தை பார்த்தால் :
Erthraean sea = Ery + Thraen sea
எரித்ரயென் = எரி + த்ரயென்
Ery or Eri (எரி) = எரி என்பதன் அர்த்தம் நெருப்பு (burning or firing red in colour)

Thirai or Tharai- (திரை) = திரை என்பதன் பொருள் ”திரைகடல்” ”அலைகடல்” என்ற வார்த்தையில் இருந்து புரியும்(a screen or a wave)

எரி+திரை = எரிதிரை ; எரித்ரை ; எரித்ரயென் கடல்

Eri + thirai = Erithirai ; Erythirai ; Erythraean Sea

”எரியும் திரைகடல்” என்று அழகாக சொல்லப்பட்ட இந்த கடலின் பெயர் காலபோக்கில் மறைந்து இந்து மா கடல் என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த பெயரினால் அழைக்கப்பட்ட பெருங்கடல் பிறகு அதனோடு தொடர்புடைய ஒரு சிறு பகுதிக்கு மட்டும் வழங்கப்படலாயிற்று. அதுதான் செங்கடல். எரி திரை-எரி கடல்-இரத்த கடல்-red sea-செங்கடல். அதனால் தான் இந்த எரி திரைக்கு அருகில் உள்ள ஒரு நாடு எரித்திரேயா என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. 1993 ல் சுதந்திரம் பெற்ற நாடு.

9 எரித்ரியா 

 1. சகோத்ரா தீவு 

சகோத்ரா தீவு நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சவூதி அரேபியாவுக்கு கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ள ஏமன் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவு. இந்த சகோத்ரா என்ற பெயரின் மூலச்சொல் சுக தரை. தமிழர்கள் எகிப்த்துக்கும் கிரேக்க ரோம நகரங்களுடன் வியாபாரம் செய்ய கடலில் பயணித்த பொது தங்கி ஓய்வெடுத்த இடம் இது. ஆங்கிலேயர்கள் இதன் மூலச்சொல் சுகதரை தீவு என்றே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது சமஸ்க்ரிதம் என்று நினைத்துவிட்டார்கள். இது பற்றிய தகவல் காண.

இங்கு மட்டுமே காணப்படும் பல வித்தியாசமான தாவர விலங்கு உயிரினங்களில் ஒரு மரத்தின் பெயர் சின்ன பாரி (Dracaena cinnabari)

 

Socotra appears as Dioskouridou (“of Dioscurides“) in the Periplus of the Erythraean Sea, a 1st century AD Greek navigation aid. In the notes to his translation of the Periplus, G.W.B. Huntingford remarks that the name Socotra is not Greek in origin, but derives from the Sanskrit dvipa sukhadhara (“island of bliss”).

 1. அட்லாண்டிக் பெருங்கடல் ஒரு தமிழ்ப்பெயர் 

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயர் 19 ம் நூற்றாண்டு வரை அட்லஸ் கடல் என்றே அழைக்கப்பட்டது. பெருங்கடலின் தெற்கு பகுதி எத்தியோப்பியக்கடல் என்றே அழைக்கப்பட்டது. காண்க: கீழே உள்ள வரைபடத்திலும் எத்தியோப்பியப்பெருங்கடல்தான். ஏன் அட்லஸ் அல்லது அட்லாண்டிக் என்ற பெயர்?

பெருங்கடல்கோள் கி. மு. 10,000த்தில் ஏற்பட்டபோது மலைகளை நோக்கி இடம்பெயர்ந்த தமிழர்கள் அரேபிய, மத்திய கிழக்கு, கிரேக்கம், ரோமை என இடம் பெயர்ந்தவர்கள் தங்களின் ஆதி நிலத்தின் நினைவுகளை சுமந்தே சென்றனர். அந்த ஆதி நிலத்திற்கான கடல் வழி என்ற அடிப்படையில் தான், அக்கடல் ஆதிநிலக்கடல், ஆதிநிலந், ஆதிலாந், அத்லாந், அட்லாண்டிக் என மாறியிருக்கிறது. இது பற்றி அடுத்த பகிர்வில் அந்த ஆதி நிலம் எங்கிருக்கிறது என்பதைப்பற்றிக்காண்போம்.

                                                             தொடர்ந்து தேடுவோம்

Advertisements