யூத, கிறித்தவ, இசுலாம் மதங்களின் மூலம்: தமிழர் வானியலே.
ஒரு சிறிய சுய விளக்கம்: 
நாம் அனைவரும் பொதுவாக மத நம்பிக்கை உள்ளவர்களே.

இப்பதிவு தமிழே அனைத்திற்கும் மூலம் என்ற கருத்தை வலியத் திணிக்கும் நோக்கத்தோடோ, அல்லது

எந்த ஒரு மதத்திற்கும் எதிரான உள்நோக்கத்தோடோ எதுவும் சொல்ல நினைக்கவில்லை.

தெரிந்துகொண்ட ஒருசில உண்மைகளை, அறிவியலின் உரைகல் கொண்டு அலசிப்பார்த்து பகிரப்படும் ஒரு முயற்சியே. மாற்றுக் கருத்து இருந்தால் கலந்து பேசுவோம். திறந்த மனதுடன் வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொள்வோம். தவறுதலான புரிதலைத்தவிர்ப்போம், எல்லா நிலைகளிலும், மதம் உட்பட.

 1. ஆபிரகாம். யூத, கிறித்தவ, இசுலாமிய முதுபெரும் தந்தையர்களில் முதன்மையானவர்.

யூதம், கிறித்தவம், இசுலாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன. யூதர்களின் தோரா மற்றும் கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டிலும், இசுலாமியரின் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.
ஆபிரகாம் பற்றிய பஹாய் சமயக் கண்ணோட்டம்:
ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.
ஆபிரகாம் பற்றிய யூத, கிறித்தவ, இசுலாமியக் கண்ணோட்டம் விவிலிய மற்றும் திருக்குர்ஆன் அடிப்படையில்:
விவிலியத்தின் தொடக்க நூலின் படி ஆபிரகாம் என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தை ஆவார். விவிலியத்தின் படி ஆபிரகாமின் காலம் கி.மு. 2000. விவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் 11:26–25:10 முடிய ஆபிரகாமின் வாழ்வு விவரிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனின் 35 பிரிவுகள் (சூரா) இப்ராஹிம் அ ஆபிரகாம் பற்றிக் கூறுகிறது.
நோவாவின் பத்தாம் வழிமரபினரான தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். கல்தேய நாட்டின் ஊர் என்ற நகரில் பிறந்த ஆபிராம் அவரின் நாட்டிலிருந்தும், இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். வந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
ஆபிராமின் மனைவி சாராவுக்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண் ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார்.  ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்‘ என்று பெயரிட்டார். ஆபிரகாமுக்கு, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பெயரிட்டார்.

திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்கள் ஆபிரகாமை (இப்ராகிம்) ஒரு இறைத்தூதராக குறிப்பிடுகின்றன.
இவரின் முதல் மனைவியான சாராவுக்கு பிறந்தவர் ஈசாக், இரண்டாம் மனைவியான ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மாயில். ஈசாக்கின் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது யூதமும், கிருத்தவமும் என்றும் இஸ்மாயில் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது இசுலாமிய மதம் என்பது இம்மூன்று மதங்களின் நம்பிக்கை.

ஆபிரகாம் பற்றிய புரிதலில் ஆபிரகாமிய சமயங்களுக்கிடையே உள்ள வேறுபாடு:

 1. யூத மதத்தில் ஆபிரகாம் கடவுளோடு உடன்படிக்கை செய்ததால் உடன்படிக்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்த உடன்படிக்கையின் காரணமாக யூதர்கள் ‘கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்’ என சொல்லிக்கொள்கிறார்கள்.

கிறித்தவர்களின் முக்கிய நற்செய்தி அறிவிப்பாளர் பவுலடியாருக்கும், இசுலாமியரின் இறைத்தூதர் நபி மொகமது அவர்களுக்கும் இதில் மாற்றுக்கருத்து உண்டு.

 1. பவுலடியாருக்கு மோசே சட்டங்களின் அடையாளமான, ஆபிரகாம் தொடங்கிய விருத்தசேதனம் அல்லது சுன்னத் என்பதை பின்பற்றுவதைவிட விட கடவுள் மீதிருந்த ஆபிரகாமின் விசுவாச நம்பிக்கையே முக்கியமாகிறது.
 2. இறைத்தூதர் நபி மொகமது அவர்களுக்கு கடவுளுக்கு கீழ்ப்படிந்த இப்ராஹிம் அ ஆபிரகாமின் சமர்ப்பித்தலே முக்கியமாகிறது. இஸ்லாம் என்றாலே இறைவனுக்கு சமர்ப்பித்தல் என்றுதான் பொருள். இசுலாமியரின் ஒரே இறைத்தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் என்பதன் அடையாளக் குறியீடு  மட்டுமல்ல இப்ராஹிம் அ ஆபிரகாம் என்பவர், இறைவனுக்கு முழுமையாகக் கையளித்த முழு இசுலாமியர் அவர். இறைவனுக்கு கையளித்த இப்ராஹிம் அ ஆபிரகாம் தன் மகன் இஸ்மாயிலையே காணிக்கையாக்க முயற்சித்தபோது அதற்குப் பதிலாக இறைவனால் ஆடு கொடுக்கப்பட்டதால் இன்றும் அந்நிகழ்வு குர்பான் (“Qurban” – Sacrifice- தியாகப்பலி) என நினைவு கூறப்படுகிறது.

எனவே

யூதத்துக்கு முக்கியம் ஆபிரகாம் வழி பிறக்கும் சந்ததி.

கிறித்தவத்துக்கு முக்கியம் ஆபிரகாம் வழி பிறக்கும் நம்பிக்கை.

இசுலாமுக்கு முக்கியம் ஆதாமிலிருந்து நபி முகம்மது வரை தொடரும் இறைத்தூதர்களின் வரிசையில் இப்ராஹிம் அ ஆபிரகாம் வழி பிறக்கும் இறைத்தூதர்களின் தொடர்ச்சி. காண்க:
ஆபிரகாமின், யூதர்களின் பூர்வ தோற்ற வரலாறு.
யூத வரலாற்று ஆசிரியர் பிலேவியுஸ் யோசேபுஸ் (Flavius Josephus 37-100 AD) என்பவர் யூதர்களின் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராய்ந்து அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களே என்று உறுதிபட கூறுகிறார். காண்க:
மேலும் யூதர்களின் இந்திய மூலம் பற்றி அரிஸ்டாட்டில் கூறிய செய்தியும் முக்கியத்துவமானது.

In his plea Contra Apionem (1.179) the Jewish-Roman historian Flavius Josephus quotes Aristotle’s pupil Clearchos of Soli as having claimed that Aristotle had been very impressed once with the discourses of a Jewish visitor, and more so with the steadfastness of his dietary discipline and had concluded that in origin the Jews had been Indian philosophers. (p. 564)
“Antiquities of the Jews” என்ற நூலின் 7 வது பக்கத்தில் பிலேவியுஸ் யோசேபுஸ் யூதர்களின் தொடக்க வாழிடம் கங்கை ஆறு உள்ள இந்தியாவே என்று தெளிவாகத் தெரிவிக்கிறார். ஆபிரகாம் பற்றிய விவிலிய விளக்கத்திலும் அவரின் பிறந்த ஊரின் பெயரே ‘ஊர்’ என்றே அழைக்கப்படுகிறது. ஊர் நகரம் அமைந்த நாட்டின் பெயரும் கல்தேயம் அ கல்தேசம் என்றே அழைக்கப்படுகிறது.
Godfrey Higgins என்பவர் எழுதிய Anacalypsis என்ற நூலில் கி. மு. 300 இல் கிரேக்க அலெக்ஸாண்டருக்கு பிந்தைய ஆட்சியாளர் செலூகஸ் நிகேடார் என்பவர் அனுப்பிய தூதர் மெகஸ்தனிஸ் என்பவரின் இந்திய பயணத்திற்கு பிந்தைய குறிப்பேடுகளில் யூதர்கள் இந்திய மக்களினங்களில் ஒரு பிரிவினரே என்பதைக் குறிப்பிடுகின்றார்.

ஆபிரகாம், அவரது மனைவி சாராள் பெயர்களின் மூல வரலாறு.
இந்தியத் அ இந்துத் தொன்மக்கதைகளில் சரயுவதி அ சரஸ்வதி பிரம்மாவின் சகோதரியும் ஆவார், மனைவியும் ஆவார். எப்படி?
அடிப்படையில் சரயுவதி என்றால் வானில் உள்ள வாயு ஆறான ஆகாய கங்கையையும் குறிக்கும், மண்ணில் உள்ள நீர் ஆறான சரயு நதியையும் குறிக்கும் என்று கடந்த பதிவில் கண்டோம். வாயுவும் நீரும் பிரிக்க முடியாத ஒரே சக்தி (H2O) என்பதும் நமக்குத்தெரியும்.

சப்த சொரூபமாகிய சக்தியாலேயே இக்காணப்படுகின்ற எல்லா நிலைமைகளும் உண்டாயின.  சப்தத்தை உண்டாக்குவதற்குக் காரணமாயிருப்பது “நாவு” என்பதால் நாவுக்குப் பெயர் சரஸ்வதி ஆயிற்று.  அதனால்தான் கல்வியின் தெய்வமாக சரஸ்வதி கருதப்படுகிறார். சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளின் நாவில் எழுதி, பள்ளியில் சேர்க்க விரும்புவர். சப்தத்திற்கு சரஸ்வதி என்று பெயர்.  சரஸ்வதி எனப்படுவது நாக்காகும்.
அதே சமயம் உடம்பு இல்லாவிட்டால் நாவு இல்லை. உடலுக்கு உயிர் தரும் வாயு பிராண வாயு என்பதால் உயிருள்ள உடல் அ ஜடம் பிரம்மா வாகிறது. நாவு உடலோடு இணைந்து சப்தம் எழுப்புவதால் சரஸ்வதி பிரம்மாவிற்கு மனைவி. 
முதலில் நான் என்ற உடலும் பின்னர் உடலிலிருந்து சப்தமும் வருவதால் சரஸ்வதிக்கு (சப்தத்திற்கு) முன்பாக உண்டான (உடலுக்கு)பிரம்மாவிற்கு  சரஸ்வதி சகோதரி ஆகிறார்.காண்க: 
இதே பிரம்மாவின் மனைவியும் சகோதரியுமான சரயுவதி என்ற உருவகம் அப்படியே யூத, கிறித்தவ விவிலியத்திலும் காணப்படுகிறது.  
ஆதியாகமம் என்ற தொடக்கநூலின் 20 ம் பிரிவு முதல் வாக்கியம் முதல் 12 வரை சொல்லப்படுகிறது.
1ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார். 2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்… 9 பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, “நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? … நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?” என்ற அவரிடம் வினவினான். 11 ஆபிரகாம் மறுமொழியாக, “இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன். 12 மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே; இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல: அவளை நான் மணந்து கொண்டேன். 13 மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, ‘நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்; நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல்’ என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்” என்றார்.
இதே பிரம்மாவின் மனைவியும் சகோதரியுமான சரயுவதி என்ற வாயு-நீர் (H2O) உருவகம் அப்படியே இயற்கையிலும் காணப்படுகிறது.   
கங்கை, யமுனை, சரயுவதி நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் பெயர் இன்றைய அலகாபாத் ஆன முன்னைய பிரயாகை நகரம். பிரயாகை என்றால் பிரம்மனின் அகம் என்பதை முந்தைய பதிவில் விளக்கமாகக் கண்டோம்.

இந்த மூன்று நதிகளில் சரயுவதி என்ற நதி இன்று இல்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரீகக் காலத்தில் வளம் தந்த நதி சரயுவதி நதி. பல இயற்கை மாறுதல் காரணமாக திசைமாறி வறண்டுபோய் சிந்துவெளி நாகரீக அழிவுக்கு ஒரு காரணமாகி இன்று ஒரு சிறு கிளை நதியாக ஒரு முனை இந்தியாவில் காகர் (Ghaggar) நதி என்றும் இதன் மறுமுனை பாகிஸ்தானில் ஹக்ரா (Hakra) என்றும் அழைக்கப்படுகிறது.

 1. சரயுவதி என்ற சரயு நதி (Sara river) ஆறும் வறண்ட ஆறுதான் (Barren). 

ஆபிரகாமின் மனைவி சாரா (Sara wife) வும் பிள்ளைப்பேரற்றவரே (Barren). 

 1. சரயுவதி துணை ஆற்றின் பெயரும் காகர், 

     சாராவின் துணை ஆளின் பெயரும் காகர்.
செய்மதியின் (Satellite) துணையுடன் சரயுவதி நதியின் அன்றைய திசைப்போக்கைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.
ஹாகர் நதி (Ghaggar river) இந்தியத் துணைக்கண்டத்தில் ஓடும் ஒரு பருவகால ஆறாகும். இது பருவப் பெயர்ச்சிக் காற்றின் போது இமய மலையில் தோன்றி, பஞ்சாப் அரியானா மாநிலங்களுக்குள் ஊடாக யமுனை மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளுக்கிடையான சமவெளியில் பாய்கிறது, அரியானா பய்கன்னர் என்னும் இடத்தில், ராஜஸ்தான் பாலைவனத்தில் நுழைகிறது. இதற்கு சரசுவதி, சரஸ்வதி அல்லது சூர்ஸ்வதி என்ற கிளை நதியும் உண்டு.

யூத தோரா நூல் , மற்றும் கிறித்தவ விவிலிய நூல் அடிப்படையில் ஆபிரகாமின் மனைவி அ தங்கையின் பெயர் சாரா. சாராவின் வேலையாளின் பெயர் ஹாகர் (Hagar). Ghaggar, Hagar, Hakra, சரயு (Sarayu) நதி, Brahman, Brayaahai, Abraham என எல்லாம் தொடர்புள்ள பெயர்களாகவே அமைந்திருக்கின்றது.

Today the Ghaggar is an ephemeral river flowing only in the monsoons. Near Sirsa it dries up. Across the border in Pakistan it is called the Hakra. Remote Sensing studies have shown the Hakra to continue southward through the Thar desert terminating in the Rann of Kutch. – See more at: http://suvratk.blogspot.it/2008/04/is-saraswati-still-flowing-underground.html#sthash.i839x0Qs.dpuf

Today the Ghaggar is an ephemeral river flowing only in the monsoons. Near Sirsa it dries up. Across the border in Pakistan it is called the Hakra. Remote Sensing studies have shown the Hakra to continue southward through the Thar desert terminating in the Rann of Kutch. – See more at: http://suvratk.blogspot.it/2008/04/is-saraswati-still-flowing-underground.html#sthash.i839x0Qs.dpuf

Satellite photography has shown that the Ghaggar-Hakra was indeed a large river that dried up several times.  Recent research indicates that the Sutlej and possibly also the Yamuna once flowed into the Ghaggar-Hakra river bed. The Sutlej and Yamuna Rivers have changed their courses several times.[காண்க ]

Paleobotanical information also documents the aridity that developed after the drying up of the river. (Gadgil and Thapar 1990 and references therein). The disappearance of the river may additionally have been caused by earthquakes which may have led to the redirection of its tributaries.[காண்க ] It has also been suggested that the loss of rainfall in much of its catchment area as well as deforestation and overgrazing may have also contributed to the drying up of the river.

However, Henri-Paul Francfort, utilizing images from the French satellite SPOT already two decades ago, found that the large river Sarasvati is pre-Harappan altogether and started drying up already in the middle of the 4th millennium BC; during Harappan times only a complex irrigation-canal network was being used.
The Ghaggar is an intermittent river in India, flowing during the monsoon rains. It originates in the Shivalik Hills of Himachal Pradesh and flows through Punjab and Haryana states into Rajasthan; The present-day Sarsuti (Saraswati River) originate in a submontane region (Ambala district) and joins the Ghaggar near Shatrana in Punjab.
The Hakra is the dried-out channel of a river near Fort Abbas City in Pakistan that is the continuation of the Ghaggar River in India. Several times, but not continuously, it carried the water of the Sutlej and Sarasvati during the Bronze Age period. Many settlements of the Indus Valley Civilisation have been found along and inside the river beds of the Ghaggar and Hakra rivers. காண்க:
கடல்கோள் மற்றும் சரயுவதி நதி காய்ந்து போனதால் சிந்து சமவெளியில் வாழ்ந்த தமிழினம் மேற்கு திசை நோக்கி இடம் பெயர்ந்தது. மேற்கு பகுதியில் இருந்த, இருக்கும் நதிகள் யூப்ரடிஸ், டைக்ரிஸ், எனவே அங்கு சென்று வாழ்ந்த தமிழினம் உருவாக்கிய நாகரீகம் மெசபடோமிய நாகரீகம். காண்க:
ஆபிரகாமின் இடப்பெயர்வு, தமிழர்களின் இடப்பெயர்வு எல்லாம் ஒரே நிகழ்வின் இரு வித கண்ணோட்டங்கள். 

 1. மத ரீதியாகப் பார்த்தால் ஆபிரகாம் நிகழ்வு. 
 2. வரலாற்று தொல்லியல் ரீதியாகப் பார்த்தால் கடல்கோளின் பின்னர் தமிழர் பரவிய நாகரீகங்களே. 

தமிழர்களின் வானியல் அறிவு மெல்ல மெல்ல பழங்கதையாக, பாரம்பரியமாக, மதமாக சொல்லப்பட்டு, எழுதப்பட்டு, நிறுவப்பட்டுவிட்டது.
“The drying up of the Sarasvati around 1900 BCE, which led to a major relocation of the population centered around in the Sindhu and the Sarasvati valleys, could have been the event that caused a migration westward from India. It is soon after this time that the Indic element begins to appear all over West Asia, Egypt, and Greece.”

(Indic Ideas in the Graeco-Roman World, by Subhash Kak, taken from IndiaStar online literary magazine; p.14)

சரயுவதி நதி மட்டுமல்ல நமது காவிரி நதியும்கூட பலமுறை திசை மாற்றம் அடைந்திருக்கிறது என்பது ஆய்வின் முடிவு.
கங்கை-காவிரி இணைப்பு-பலிக்குமா பாரதியின் கனவு?   என்ற தலைப்பில் இராமசாமி அவர்கள்  ஆய்வு செய்து அளித்துள்ள கட்டுரையில் காவிரி  ஆறு இப்போது நாம் காண்பது போல ஈரோடு , கரூர், திருச்சி, தஞ்சை வழியாக ஓடிய ஒரு நதி அல்ல. காவிரியின் திசை குறைந்த பட்சம் மூன்று முறை மாறியிருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.
செயற்கைக்கோள் படங்களை வைத்து இக் கட்டுரையாளர் மற்றும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்திய ஆய்வுகளின்படி,
(1) காவிரி நதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கேனக்கல்லில் இருந்து வடகிழக்காக தர்மபுரி-ஆம்பூர்-வாணியம்பாடி-வாலாஜாபேட்டை-திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே கடலில் கலந்தது தெரியவருகிறது.
(2) அப்போது சென்னைப் பகுதியில் பூமி மேலே எழும்பிய காரணத்தால் இப்பாதையை, காவிரி விட்டு விட்டு தற்போது மேட்டூர் அணையிருக்கும் இடத்திலிருந்து தோப்பூர் ஆறு – வாணியாறு– பொன்னையாற்றின் தற்போதைய பாதைவழியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடி கடலூர் பகுதியில் கடலில் கலந்திருக்கிறது.
(3) இக்கால கட்டத்தில், அடிக்கடி ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றத்தாலும், மேலும் இன்றைய மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு வழியாக வடக்கு – தெற்காக ஒரு பெரிய பூமி வெடிப்பு உருவான காரணத்தாலும், இந்த இரண்டாவது பாதையையும் விட்டுவிட்டு, தற்போதைய மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து தெற்காகத் திரும்பி அப்பூமி வெடிப்பின் வழியாக ஓடி, கரூர் – திருச்சி பகுதியை சுமார் 2300 ஆண்டுவாக்கில் அடைந்து இருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பின்னர், திருச்சியில் இருந்து கிழக்காக பல கிளை நதிகளாகப் பிரிந்து ஓடிக் கடலில் கலந்து இருக்கிறது. 

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதியில் ஓடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே புதுக்கோட்டை வரை தடம் மாறி ஓடி, பின் வடக்காகத் திரும்பி கொள்ளிடமாக நிலை பெற்ற பின், காவிரி விட்டுச் சென்ற பழைய பாதைகளைத்தான் பாலாறு, பொன்னை ஆறு, புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி போன்ற பல நதிகள் பின்னாளில் ஆக்கிரமித்துக் கொண்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள கொள்ளிடம் பாதையின் வயது சுமார் 750 ஆண்டுகள் தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. காண்க:

ஆபிரகாமின் இரண்டாவது மனைவியும் இந்தியத் தொடர்பும் 

 

ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.
விவிலிய தொடக்க நூல் பிரிவு 25 பின்வருமாறு கூறுகிறது.

1 ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.2 அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.3 யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.4 மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.5 ஆபிரகாம் தம்மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.6 ஆனால் அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இந்தியத் தொன்ம வரலாற்றின்படியும் பிரம்மாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சரயுவதி அ சரஸ்வதி. இரண்டாவது மனைவி காயத்ரி. (காயத்ரி – கெத்துரா)  காண்க:
Brahma was forced to marry his second wife “Gayatri” because his first wife, “Saraswathi or Savitri” had been hoodwinked to come late by their son.

 1. ஈசாக்கு: ஆபிரகாமின் மகன் – மூன்று முதுபெரும் தந்தையருள் ஒருவர்.

ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும்.

ஈசாக்குக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவர் ஏசா இளையவர் யாக்கோபு.
Isaac (Arabic: إسحاق‎ or إسحٰق‎ translit., Isḥāq) திருக்குரானில் ‘இஷாக்கு’ 15 முறை குறிக்கப்படுகிறார்.

தந்தை இப்ராகிம் (ஆபிரகாம்) அவர்களுடனும், மகன், யாகூப் (யாக்கோபு) உடனும் நினைவு கூறப்படுகிறார்.
யூத மரபுப்படி மூத்த, தலைச்சன் பிள்ளையே தந்தையின் உரிமை வாரிசாகக் கருதப்படும். ஆனால் ஈசாக்கின் மனைவி ரபேக்கா இளைய மகன் மீது பிரியம் கொண்டதனால் வயதான, பார்வைக்குறைபாடுள்ள தந்தையை ஏமாற்றி இளையவன் யாக்கோபு வாரிசு உரிமை பெறச்செய்கின்றார்.  காட்டு மிருகங்களை வேட்டையாடும்

திறமை மிக்க வலிமையான மூத்த மகன் ஏசா வாரிசு உரிமையை இழந்து விடுகிறார்.
இந்த நிகழ்வு அப்படியே திருவிளையாடல் திரைப்படத்தில் காட்டப்படும் இந்து மத தொன்மக்கதையாக மாற்றப்பட்ட தமிழர்களின் வானியல் அறிவே ஆகும்.

அதாவது ஞானப் பழத்திற்காக முருகன், கணபதி இடையே நடக்கும் போட்டி, மூத்தவர் அண்ணன் உலகத்தை சுற்றாமல், பெற்றோரை சுற்றி ஏமாற்றி பெற்று விடுவார். தம்பி முருகன் கோபித்துக்கொண்டு பழனிக்கு போய் விடுவார்.
இது மத ரீதியான தொன்மக்கதை அல்ல. தமிழர்களின் வானியல் கண்டுபிடிப்பு. அதனை மறைக்க அ கால மாற்றத்தில் வானியல் அறிவு ஒரு மதக்கதையாக மாற்றப்பட்டுவிட்டது. திருவிளையாடல் திரைப்படத்தில் காட்டப்படும் இந்து மத தொன்மக்கதையாக மாற்றப்பட்ட தமிழர்களின் வானியல் அறிவு பற்றி முந்தைய பதிவு உள்ளது. காண்க:
யூத, கிறித்தவ மத (விவிலிய) தொன்மத்தில் அண்ணன் ஏமாற்றப்படுவார். இந்து மதத்தொன்மத்தில் தம்பி முருகன் ஏமாற்றப்படுவார்.
ஆனால்:

 1. தென் இந்தியாவில் தான் தம்பி முருகன், அண்ணன் கணபதி.

மாறாக வட இந்தியாவில் முருகன் அண்ணன். கணபதி தம்பி.

 1. தென் இந்தியாவில் தம்பி முருகனுக்கு இரண்டு மனைவியர், வள்ளி, தெய்வானை என்று. அண்ணன் கணபதி கட்ட   பிரம்மச்சாரி.

வட இந்தியாவில் அண்ணன் கணபதிக்கு இரண்டு மனைவியர். தம்பி முருகன் கட்ட பிரம்மச்சாரி.

விபரங்களுக்கு காண்க:
ஆக தமிழர்களின் வானவியல் அறிவு இந்து மதத்தால் ஒரு தொன்மக்கதையாகவும், யூத மற்றும் கிறித்தவ மதத்தால் வேறொரு தொன்மக்கதையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
பிரம்ம விவர்த்த புராணத்தின் (Brahmavaivarta-Purâna) அடிப்படையில் கணபதி விஷ்ணுவின் புதல்வன். காண்க:

மேலும் நாம் ஏற்கனவே உள்ள பதிவில் கண்டபடி விஷ்ணு என்பது விண்ணு என்ற வான்வெளியைத் தான் குறிக்கும் என்பதால் அனைத்தும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களே, கிரகங்களே. காண்க:

 1. யாக்கோபு: ஈசாக்கின் மகன், ஆபிரகாமின் பேரன், மூன்றாவது முதுபெரும் தந்தை 

இவர் எபிரேய விவிலியம், தல்மூட், புதிய ஏற்பாடு, திருக்குர்ஆன் என்பவற்றில் குறிப்பிடப்படும் மூன்றாவது முதுபெரும் தந்தை ஆவார். இவர் மூலமே கடவுள் இசுரவேலர்களின் முன்னோரான எபிரேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இவருக்கு பின்பு வழங்கப்பட்ட பெயரான இசுரேல் என்பதிலிருந்து இவருடைய சந்ததியினர் இசுரேலியர் என அழைக்கப்பட்டனர். காண்க: விக்கிபீடியா  

Jacob known as Israel (Hebrew: יִשְׂרָאֵל, Standard Yisraʾel, Tiberian YiśrāʾēlArabic: إِسْرَائِيلIsrāʼīl), as described in the Hebrew Bible, the Talmud, the New Testament, the Qur’an and Baha’i scripture was the third patriarch of the Hebrew people, and ancestor of the tribes of Israel, which were named after his descendants.

 1. இசுலாத்தில் யாக்கோபு யாக்கூப் என்றழைக்கப்படுகிறார், Yaqub (Arabic: يَعْقُوب, translit.: Yaʿqūb).
 2. யூத, கிறித்தவ புனித நூல்கள் போலவே, இசுலாமிய புனித நூலான திருக்குர்ஆனில் இப்ராகிம், இஸ்மாயில், யாக்கூப் ஆகிய மூவரும் முது பெரும் தந்தையர்.
 3. யாக்கூப் பற்றி திருக்குர்ஆன் 16 இடங்களில் குறிப்பிடுகிறது.
 4. யாக்கோபின் செல்ல மகன் (யூசுப்-Yusuf) யோசப் பற்றியும், அவர் அவருடைய சூரியன், நிலா மற்றும் 11 நட்சத்திர வணக்க கனவு பற்றியும், அதனால் சகோதரர்களால் வெறுக்கப்பட்டு விற்கப்படுவதையும் கூறுகிறது. திருக்குர்ஆன் 12: 4, ; சுரா 12 அயத் 8-9

Jacob’s next significant mention in the Qur’an is in the narrative of Yusuf. Yusuf’s story in the Qur’an opens with a dream that Yusuf had one night, after which he ran to his father Jacob, saying: “O my father! I did see eleven stars and the sun and the moon: I saw them prostrate themselves to me!”

 1. யாக்கோபிடமிருந்து 12 பிள்ளைகள், 12 கோத்திரங்கள் அவர்களில் முக்கிய நபர்களாக, யோனா Yunus (Jonah ), தாவூத் Dawud (David) சுலைமான் Sulayman (Solomon), ஈசா Isa (Jesus).
 2. மேலும், இயேசு வைப்பற்றி கூறும் இடங்களில் அவர் எவ்வாறு கடவுள் அ அல்லா மீது நம்பிக்கை கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

The Quran mentions in chapter 3, verses 52-53, that the disciples submitted in the faith of Islam:

When Isa found Unbelief on their part He said: “Who will be My helpers to (the work of) Allah?” Said the disciples: “We are Allah’s helpers: We believe in Allah, and do thou bear witness that we are Muslims.

Quran Surah Al-Imran 52-53

7. ஆதாம் முதல் முகமது நபி அ இசா நபி வரையிலான தலைமுறையில் சிலர்.
Lineage of six prominent prophets according to Islamic tradition
Adem (Adam)
Nūḥ (Noah)
Ibrāhīm (Abraham)
Ismā’īl (Ishmael) Isḥāq (Isaac)
Mūsa (Moses)
Marīam (Mary)
ʿĪsā (Jesus)
Abdul-Muttalib
Muhammad
Dotted lines indicate multiple generations

யாக்கோபுவும் தமிழ் பண்பாட்டுத் தொடர்புகளும்
தமிழர்களின் நினைவுக்கல் வழிபாடு, மற்றும் சூரிய-நில வழிபாடான சிவ-சக்தி வழிபாட்டினை நினைவுகூறும் விதமாய் யாக்கோபின் கல் மீது எண்ணெய் வார்த்த வழிபாடு அமைந்திருந்தது. விவிலிய தொடக்கநூல் 28:18 பின் வருமாறு கூறுகிறது.

The Linga which he worshipped is today enshrined in Mecca within the Kaaba. The stone, which is black in color, is said to have been given to Abraham by the Archangel Gabriel, who instructed him in its worship. Such worship did not end with Abraham, but was practiced by his grandson Jacob, as is shown in the twenty-eighth chapter of Genesis. – See more at: http://www.ocoy.org/original-christianity/the-christ-of-india/#sthash.9FNZ6IMe.dpuf

18 பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து,19  அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார். 22 மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். இதில் ஏல் என்ற கடவுளுக்குரிய எபிரேய வார்த்தையின் மூலச்சொல் ஒளி என்ற தமிழ் வார்த்தையே என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.

 மேலும் தொடக்கநூல் 35:14 பகுதியிலும் அதே நினைவுக்கல் வழிபாடு.
14 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார். 15 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் ‘பெத்தேல்‘ என்று பெயரிட்டார்.
திருக்குரானில் இந்த இடம், ‘பைத்துல்லா’ என அழைக்கப்படுகிறது. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். அது கடவுளான ஒளியின் இடம் என்பதே. காண்க:
மேலும் தொடக்கநூல் 31:13 லும் கடவுளின் கூற்றாக அதே போன்ற நிகழ்வு.
13 நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே.

அதே தொடக்கநூலில் பிரிவு 37:9 ல் யாக்கோபின் 12 புதல்வர்களில் அவர் மிகவும் நேசித்த மகனான யோசேப்பு ஒரு கனவு கண்டு விளக்குவார். அக்கனவில் யாக்கோபு சூரியன் எனப்படுவார். நிலவு அவரின் தாய். 12 புதல்வர்களும் நிலவின் பின்னால் 12 மாதங்களில் தென்படும் 12 நட்சத்திரக்கூட்டங்களைக் குறிக்கும். கடல்கோளில் தப்பிச்சென்ற தமிழர்களின் வானவியல் அறிவே பிற்காலத்தில் நபர்களைக்குறிக்கும் உருவகமாக, மத நபர்களாக நிறுவப்பட்டுவிட்டது.

The Linga which he worshipped is today enshrined in Mecca within the Kaaba. The stone, which is black in color, is said to have been given to Abraham by the Archangel Gabriel, who instructed him in its worship. Such worship did not end with Abraham, but was practiced by his grandson Jacob, as is shown in the twenty-eighth chapter of Genesis. – See more at: http://www.ocoy.org/original-christianity/the-christ-of-india/#sthash.9FNZ6IMe.dpuf
முஸ்லிம்களின் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள கபா என்னும் இடம் இப்ராஹிம் அ ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் மற்றும் கப்ரியேல் வானதூதர் இப்ராஹிம் அ ஆபிரகாமுக்கு கருப்புக்கல் வழங்கிய இடம் என்று இசுலாமியர்களால் நம்பப்படுகின்றது.
The Stone which he worshiped is today enshrined in Mecca within the Kaaba. The stone, which is black in color, is said to have been given to Abraham by the Archangel Gabriel, who instructed him in its worship. See more at:

இசுலாமியர்களின் புனித மெக்காவில் உள்ள காபா கல் எனப்படும் கறுப்புக்கல் தமிழர்களின் நினைவுக்கல் வழிபாட்டினை ஒத்ததே. 7 என்ற முழுமை எண்ணைக் குறிப்பதால் முழுமையாக 7 முறை சுற்றிவருகிறார்கள்.

The Encyclopedia Britannica elucidates;

Every Muslim who makes pilgrimage is required to walk around the Ka’bah seven times, during which process he kisses and touches the black stone … Muslims consider the Ka’bah the most sacred spot on earth and they recite their prayers looking in its direction…102  (Encyclopaedia Britannica, Vol.5, Micropaedia, 15th (Ed), 1982)
அவ்வாறு சுற்றி வந்து தங்களது “ஹஜ்” கடமையை நிறைவேற்றும் இசுலாமிய ஆண்கள் அணிய வேண்டிய உடை:

(1) தையல் இல்லாத வெள்ளை வேட்டி (2)  தையல் இல்லாத வெள்ளைத்துண்டு.

இவை தமிழர்களின் பாரம்பரியத் தொடர்புகளுக்கு தவிர்க்கமுடியாத எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டிலேயே சென்னைக்கிளப்பில் வேட்டிக்கு எதிர்ப்பு இருக்கும் இக்காலத்தில் தமிழர்களின் பாரம்பரியம் அரபு நாட்டில் பாதுகாக்கப்படுவது சிறப்புக்குரியது.

A person who reaches Mecca for worship should change his clothes whoever he may be and wear only white dhoti and a white towel that are unstitched, go around the Ka’bha again and again and kiss the memorial stone as a mark of his worship. They claim that they worship in the way their forefather Abraham (Ibrahim) worshipped. Also they observe tonsuring  like Tamilians who go to Palani or Thirupathy temples and undergo the same ceremony.

Scholars are of the opinion that wearing unstitched white dhoti and a white towel and going around a stone kissing and worshipping it, and observing tonsuring ceremony are the Tamilian or the Dravidian method of worship.
நினைவுக்கல் வழிபடும் யூதர், இசுலாமியர்களின் தொடர்ச்சியாக கிறித்தவர்களின் இயேசுவும் வாழும் கல்லாகக் குறிக்கப்படுகிறார்.

the Dravidian memorial stone as was found among the Israelites, attained its fulfillment in Christ and he is referred to as the living stone in Christianity.

“Come to him, to that living stone, rejected by men but in God’s sight chosen and precious….Behold, I am laying in Zion a stone, a corner stone chosen and precious, and he who believes in him will not be put to shame”

(1பேதுரு 2:4) காண்க:
விவிலிய மோரியா மலையும் தமிழ்த் தொடர்புகளும் 

 1. யூத தோரா மற்றும் கிறித்தவ விவிலியத்தின்படி (தொடக்க நூல் 22:2) கடவுள் ஆபிரகாமை அவர்தம் மகன் ஈசாக்கை பலியிடவேண்டும் என சொல்லிய மலை இந்த மோரியா மலை.

2 கடவுள், ″உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார்.

 1. விவிலியத்தில் பழைய நாளாகமம் என்ற குறிப்பேடு இரண்டாம் புத்தகம், பிரிவு 3 தொடக்கத்தில்:

1 பின்பு சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். தாவீது தன் பாவங்களுக்கு கழுவாயாக ஓர் ஆலயம் கட்ட இந்த இடத்தை ஏற்கெனவே தயார் செய்திருந்தார். (2 சாமுவேல் 24: 18-25)

 1. எருசலேமில் மோரியா மலையில் தற்போது உள்ள பாறை மண்டபம் (Dome of the Rock) என்பது இசுலாமியரின் பள்ளிவாசல் அல்ல மாறாக ஒரு புனிதத்தலம். மண்டபத்தில் உள்ள புனித பாறையிலிருந்துதான் முகம்மது நபி விண்ணிற்கு சென்று இறைச்செய்தி பெற்று வந்தார் என்பது அனைத்து இசுலாமியரின் நம்பிக்கை. நபி அவர்களும் இந்த புறப்பட்ட இடம் குறித்து தெரிவிக்கவில்லை. ஆனால் இசுலாமியரின் நம்பிக்கை இந்த இடம்தான் என்று. காண்க:

எனவே கி.பி. 637 ல் இசுலாமிய ஆட்சியின் போது அம்மண்டபம் கட்டப்பட்டது. இதுவே உலகளவில் இசுலாமியரின் மிகப்பழைய மதக்கட்டடம். (படங்களில் மேலே உள்ளது உள்புறம், கீழே வெளிப்புறம்)

 1. அதே இடத்தில் தான் தாவீது மற்றும் சாலமோன் அரசர்கள் 3000 ஆண்டுகளுக்குமுன் ஆலயத்தை கட்டினர் என்பதும், திருச்சட்டங்கள் அடங்கிய திருப்பேழை இருந்த புனித இடம் அந்தப்பாறை இடமே என்பதும் யூதர்களின் நம்பிக்கை. காண்க:

 1. இசுலாமியர் யூதர்களை அந்த மண்டபத்திற்குள் செல்ல அனுமதி தராததால் தாவீது, சாலமோன் கட்டியகோயிலின் எஞ்சியுள்ள சுவரான மேற்கு சுவரைமட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். அந்தச்சுவர் கூக்குரல் அ அழுகை சுவர் (Wailing Wall) என அழைக்கப்படுகிறது. அதாவது மெசியா வரும்போது தங்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் ஆலயம் கட்டித்தருவார் என்பது யூதர்களின் நம்பிக்கை.

யூதர்கள் அந்த சுவற்றில் முட்டி எவ்வாறு செபிக்கிறார்கள் என்பதைக்காண: காணொளி

 1. இசுலாமியரும் இப்ராகிம் என்ற ஆபிரகாமை ஒரு முக்கிய இறைத்தூதராகத்தான் கருதுகிறார்கள். ஆனால் திருக்குர்ரான் படி ஆபிரகாமால் பலி கொடுக்க கொண்டுசெல்லப்பட்டவர் ஈசாக்கு அல்ல, இசுமாயில். மேலும் கொண்டு செல்லப்பட்ட இடம் இஸ்ரேலின் எருசலேமில் உள்ள மோரியா அல்ல, சௌதி அரேபியாவில் மெக்காவுக்கருகில் உள்ள மார்வா என்ற இடம். The well-known site of Marwah (Arabic مروة) may be identified with the biblical Moriah (Hebrew מוריה) in Gn 22:2. காண்க:
 1. சாலமோன் கட்டிய கோயிலை கி.மு. 586ல் பாபிலோனிய மன்னன் நெபுகத்னெசர் அழித்தான். சைரஸ் என்ற மன்னன் அனுமதியோடு மீண்டும் கட்டப்பட்ட கோயில் கி.மு.20 ல் பெரிய ஏரோது மன்னன் காலத்தில் புதிப்பிக்கப்பட்டது. இயேசுவின் காலத்தில் அவர் கூறியது போல (மத்தேயு 24: 1-2) கி. பி. 70 ல் ரோமானிய டைட்டஸ் என்பவனின் படைகளால் மீண்டும் அழிக்கப்பட்டது.

இப்படியாக மோரியா மலை யூத, இசுலாமிய, கிறித்தவ மதங்கள் மூன்றுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மலையாகும். ஆனால் மத மோதல்கள் காரணமாக இம்மண்டபம் யோர்தானிய நாட்டு டிரஸ்டிடம் பராமரிக்கக் கொடுக்கப்பட்டுள்ளது. மண்டபம் இருக்கும் இடம் இசுரேல் நாட்டுக்குச் சொந்தமானது.
இம்மலை மோரியா தமிழர்கள் போற்றி வந்த உலகின் உயிர் உருவாக்கத்திற்கு தொப்பூழ்கொடியான இமய மலையான மேரு மலையின் தொடர்ச்சியாக சிந்துவெளியின் மேற்கு திசையில் நகர்ந்து சென்ற தமிழினம் மலைகளில் இறைவனின் இருப்பை கண்டு ஆற்றங்கரைகளுக்கு அடுத்த மலைப்பகுதிகளை முக்கிய இடங்களாக மாற்றினர்.

இதனால், அங்கிருந்த மூன்று மலைகளும் மூன்று முக்கியத்துவம் வாய்ந்தது.

 1. சீயோன் மலை அ சேயோன் மலை. இறந்த ஆன்மாக்கள் வசிக்கும் இடம்.
 2. மோரியா மலை. யூத, இசுலாமிய, கிறித்தவர்களின் முக்கிய இடம்.
 3. ஒளிவ மலை. இயேசு விண்ணகம் இங்கிருந்து சென்றதாகக் கூறப்படும் இடம்.

மோரியா மலையும் மேரு மலையும் 
கைலாய மலை, கைலாசம் என்றும் மேரு மலை என்றும் திருநொடித்தான் மலை என்றும் அழைக்கப்படும் மலை இமய மலையே. இவை அத்தனை பெயர்களும் நல்ல தமிழ்ப்பெயர்களே.
கயிலை என்பது வெள்ளி அ வெள்ளை நிறத்தைக்குறிப்பது. காண்க: இமய மலையின் சிகரங்கள் எப்போதும் பனி சூழ்ந்து வெள்ளையாக காணப்படுவதால் இப்பெயர்.
மேரு என்றாலே மலை, மேடு என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
திருநொடித்தான் மலை என்பது அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி அ சிவன் வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
மலைச்சிகரம் ஆணாகவும் (சிவன்) சிகரத்தின் கீழேயுள்ள மானசரோவர் ஏரி பெண்ணாகவும் (பார்வதி) உருவகப்படுத்தப்பட்டு சிவ-சக்தி என சொல்லப்படுகிறது. காண்க: அதாவது உயிர் உருவாகும் இடம். படத்தில் மானசரோவர் ஏரி மற்றும் ராட்சதலம் ஏரி (படம் செய்மதியிலிருந்து). சிவப்பு நிறத்தில் எழுதி இருக்கும் இடம். வெண்பனி கைலாயம்.

உயிர் உருவாக காற்று அவசியம். பனியிலிருந்து நீர் உருவாகி (H2O) உயிர் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைவது மட்டுமல்ல ஏராளமான ஆறுகள் உற்பத்தியாகி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவையே வாழச்செய்யும் மலை இமய மலை. ஆதலால்,உலகின் தொப்பூழ்க்கொடி என்று அழைக்கப்படுகிறது இந்த மலை. (காண்க: Himalaya: Michael Palin).
ஆந்திராவிலுள்ள திருக்காளத்தி கோயில் தென் கயிலாயம் எனப்படுகிறது. திருகாளத்தி கோயில் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றை அதன் சிறப்பாகக் கொண்டிருக்கிறது. காண்க: 
தென் கயிலாயம், காற்றை மையமாகக் கொண்டது என்றால் மூலமான (வட) கைலாயமும் அப்படிப்பட்டது தானே.

ஏன் காற்று அடிப்படை?
காற்று, பிராண வாயுவான பிரம்மன் இங்கிருந்து உயிர் கொடுக்கும் ஆறுகளாய் கிளம்புகிறது. அதனால் மிக நீளமான நதிக்குப்பெயர் பிரம்மபுத்ரா (பிரம்மனின் புத்திரன், மகன்). எத்தனை ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகிறது என்று பாருங்கள். தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா முழுவதும் சோறு போடுவது, உயிர் கொடுப்பது இம்மேரு மலை.

இத்தனை ஆறுகளின் மூலம் இங்கு இருப்பதால்தான் சீனா திபெத்தினை ஆக்கிரமித்து விடுதலை தர மறுக்கிறது.

அதிலும் குறிப்பாக சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகள் ஒரே இடத்தில் கைலாயத்திலிருந்து உற்பத்தியாகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேரு என்ற இமய மலையை தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் மேரு என்ற அப்பெயர் சொல்லியே அனைத்து உயரமான மலைகளையும் அழைத்தனர்.
இந்தோனேசியாவில் செமெரு, காண்க: 

ஆப்பிரிக்க தான்சானியாவில் மேரு மலை,

இமய மலையின் மேற்கில் சுமேரு, காண்க: 

இமய மலையின் கிழக்கில் குமேரு,

ஆஸ்திரேலியாவிற்கருகில் தெற்கு மேரு எனும் திமேரு (Timor), காண்க:

அமெரிக்காவில் மிசைமேருக்கா காண்க:

இஸ்ரேல் நாட்டில் மோரியா.
மேரு மலைகள் அனைத்துமே புனிதமானவை, கடவுளின் இருப்பிடங்கள், என்பதே இந்து, யூத, கிறித்தவ, இசுலாமிய மதங்களின் நம்பிக்கைகள்.
ஒரு சில சர்வதேச அறிஞர் பெருமக்கள், தங்களது ஆய்வின் மூலம் அனைத்து மதங்களின் மூலம் தொன்மையான இந்தியா, என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, அர்னால்ட் டோய்ன்பீ, ஜூல்ஸ், காந்தி, அகுஸ்தீன் போன்றவர்கள். அவர்களின் கருத்துக்கள்:

Dr. Arnold Joseph Toynbee (1889-1975) the great British historian. His massive research was published in 12 volumes between 1934 and 1961 as `A Study of History’.  Toynbee was a major interpreter of human civilization in the 20th century. He has said:

” India is not only the heir of her own religious traditions; she is also the residuary legatee of the Ancient Mediterranean World’s religious traditions.” “Religion cuts far deeper, and, at the religious level, India has not been a recipient; she has been a giver. About half the total number of the living higher religions are of Indian origin.” he said.


Jules Michelet (1789-1874) French writer, the greatest historian of the romantic school, affirms this: ” Follow the migration of mankind from East to West along the sun’s course and along the track of the world’s magnetic currents; observe its long voyage from Asia to Europe, from India to France…..At its starting point in India, the birthplace of races and religions, the womb of the world….”


Saint Augustin who wrote: “We never cease to look towards India, where many things are proposed to our admiration”.   
Mahatma Gandhi told Romain Rolland in Switzerland on his way back to India from the Round Table Conference (1911) that Christianity is an echo of the Indian religion and Islam is the re-echo of that echo.”

(source: One World and India – By Arnold Toynbee p. 42- 59).   மேலும் தகவலுக்கு:
மேலும் மதங்கள் கடைப்பிடிக்கும் ஒருசில வழிபாட்டு நடைமுறைகளில் காணப்படும் ஒப்புமைகள் ஆச்சரியமானவை. உதாரணமாக, ஆலய மணி, சாம்பிராணி தூபம், புனித உணவாக பிரசாதம், செபமாலை, திருப்பயணம், பவணி, தவ முயற்சிகள், நீர்முழுக்கு, மூவொரு கடவுள் தன்மை, தீப ஒளி, முன்னோர் புனிதர் வழிபாடு போன்ற பல தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியங்கள் யூத, கிறித்தவ, இசுலாமிய மதங்களில் இயல்பாக பரவி இருப்பதைக் காணலாம்.
இவையெல்லாம் ஒரு சில உதாரணங்களே. மதங்களுக்கிடையே காணப்படும் ஒப்புமைகள் என்று தேடிப்பார்த்தால் எந்த மதமும் சுயமாக உருவாகவில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றாக, ஒன்றுக்கு மாற்றாக, அரசியல் மேலாண்மையை நிறுவுவதற்காக, பிற நாடுகளை அடிமைப்படுத்த, என்று பல தவறுதலான முன்னுதாரணங்களே அதிகம் தென்படும் என்பதால், இந்தப்பதிவின் எல்லையை, மூன்று ஆபிரகாமிய சமயங்களின் மூலம், தமிழர்களின் வானியல் என்பதோடு தற்சமயம் நிறுத்துகிறேன்.


இந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு,  என்ற பெயர்களில் நபர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுப்பூர்வமான நம்பகத்தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பது மட்டுமல்ல இது வரை நாம் கண்டதுபோல இப்பெயர்கள் ஒரு பாரம்பரியமாக பயன்பாட்டுக்குள்ளான இயற்கை சக்திகளின் பெயர்களே என்பது தெளிவாகிறது.
Archaeologists had “given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible ‘historical figures'”.Dever, William G. (2002). What Did the Biblical Writers Know, and when Did They Know It?: What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel. Wm. B. Eerdmans Publishing.

மேலும் விபரங்களுக்கு: 
அந்த இயற்கைச்சக்திகளின் பெயர்கள் என்ன?
அவை தமிழர்களின் வானியல் குறியீடுகளே.

ஏற்கனவே
காற்று மண்டலம் என்ற பிரம்மன், (வளி)
விண்வெளி மண்டலம் என்ற விஷ்ணு, (வெளி)
சூரிய மண்டலம் என்ற சிவன் (ஒளி)
இவை மூன்றும் மூன்று சக்திகள், மாபெரும் இயற்கை சக்திகள் என்பதைக் கண்டோம்.
இம்மூன்று சக்திகளுக்கும் சமமான பெண்பால் சக்திகளும் தெய்வங்களாக உண்டு. அவை வான் ஒளியான இலக்குமி, வாயு மற்றும் நீர் ஆறான சரயுவதி, காற்று உள்ளடங்கிய நிலமான பாருலகவதி என்பதையும் கண்டோம்.
இந்த வளி, வெளி, ஒளி, என்ற தமிழர்களின் வானியல் கோட்பாடு உயிர் சூல் கொள்ள அடிப்படையான திரிசூலமாக பின்னர் பிரம்மன்,விஷ்ணு, சிவன் ஆக ஆரியர்கள் உருமாற்றிக் கொடுத்த இந்து மதமாக, மாறியதோடு அதே வானியல் இயற்கை சக்திகளே சிந்து வெளி நாகரீகத்திலிருந்தும், கடல்கோளில் தப்பித்தும் சென்ற தமிழர்களின் கால உருமாற்றத்தில் ஆபிரகமாக (brh – பிராண வாயு, பிரம்மன்), இஷாக்காக(விண்ணு, விண்ணவம், விஷ்ணு), இஸ்ரேல் (இஸ்-ஈசிக்கும் (ஈசன்) உயிர் காக்கும் / ஏல் – ஒளி, சூரியன்) அ யாக்கோபாக உருமாறி இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ரோம் நகரத்தில் இருந்த அன்றைய அரசியல் ஆட்சியாளர்கள், ஆதிக்க சக்திகள் மூவொரு இறைவனுக்குரிய சக்திகளாக பிதா, பரிசுத்த ஆவி, சுதன் என அவைகளை அப்படியே தகவமைத்துக்கொண்டனர்.
(Anacalypsis, by Godfrey Higgins, Vol. I; p. 400.) Among the many theories presented in this book is that both the Celtic Druids and the Jews originated in India – and that the name of the Biblical Abraham is really a variation of the word Brahma, created by shifting the last letter to the beginning: Abrahma. காண்க:
The identity of Abraham and Sara with Brahma and Saraiswati was first pointed out by the Jesuit missionaries.”(Vol. I; p. 387.)

இவ்வாறு சொல்ல வேறு காரணங்களும் உண்டா?

 1. ஐரோப்பாவிலுள்ள அனைத்து மொழிகளும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் (Indo-Europian Languages) என்றே அழைக்கப்படுகின்றன. ஆக மொழி ஐரோப்பாவில் உருவாகவில்லை இங்கிருந்தே சென்றது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், மொழி மட்டும் தனியாகவா போனது? மனித நாகரீகப் பரவலில் தான் மொழி, மொழியோடு, பாரம்பரியம், வழிபாடு, அறிவியல், மத சிந்தனை அனைத்தும் சென்றிருக்க வேண்டும். அது தானே உண்மை, அது தானே வரலாறு.
 2. மனித இனத்துக்கு எண்களைக் கற்றுக்கொடுத்ததே இந்தியாதான் என்று ஏற்றுக்கொண்ட பல அறிஞர்களில் ஐன்ஸ்டின் முதன்மையானவர். கணிதம் தான் கட்டடக்கலை, வானியல், அறிவியல் அனைத்திற்கும் அடிப்படை எனும்போது நாகரீகப்பரவல் இங்கிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்.
 3. உயிர் உருவாக அடிப்படைத்தேவை சூரிய ஒளி. வெப்ப மண்டலம் என்று சொல்லப்படும் (tropical countries) நாடுகளில் தானே முதலில் உயிர் உண்டாகியிருக்க முடியும். இன்றும்கூட பல்லுயிர் பெருக்கம் (Bio-Diversity) இருப்பது அமேசான் காடுகள் உள்ள பிரேசில் முதல் இன்னும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கும் பல உயிரினங்கள் வாழும் இந்தோனேசியக் காடுகள் வரை இருக்கும் நாடுகள் எல்லாம் வெப்பமண்டல நாடுகள் தானே. குளிர்மிக்க அய்ரோப்பாவில் உயிர் தொடங்கியிருக்க வாய்ப்பேயில்லையே.
 4. தொல் நாகரீகங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் மூலங்களைத்தானே கொண்டிருக்கிறது.
 5. ஆங்கில மொழி தோன்றியே 600 வருடங்கள் தான் ஆகிறது. இங்கு 2000 வருடங்களுக்கு முன்னதாக தட்சசீல பல்கலைக் கழகமே இருந்திருக்கிறதே, 2500 வருடங்களுக்கு முன்னதாக மொழி இலக்கண நூல் தொல்காப்பியம் எழுதப்பட்டுவிட்டதே.
 6. 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தான் ஒரு இந்திய நாடுதானே. அங்கு ஒருபகுதியில் இன்றும் பேசப்படும் பிராகுய் மொழி தமிழ் மொழிக் குடும்பம்தானே? அங்குதானே தமிழரின் சிந்துவெளி நாகரீக ஹரப்பா, மொகஞ்சதாரோ இருக்கிறது.

500 வருடங்களுக்கு முன் கேரளா தமிழகத்தின் சேர நாடு தானே. 2000 ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பேசிய மொழி அன்றைய தமிழ்தானே?
அப்படியானால் இந்தோ-அய்ரோப்பிய மொழிகளுக்கு மூலம் எந்த மொழியாய் இருந்திருக்க முடியும்.

 1. 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்து, இசுலாம், கிறித்தவம் என எந்த மதப் பிரிவினைகளும் இல்லாத, ஆரியம் இல்லாத, காலனியாதிக்கம் இல்லாத ஆங்காங்கு கூடி வாழ்ந்த தமிழரின் நாகரீகங்கள் தானே. சிந்து வெளி பகுதியில் கி. மு. 300 ல் இந்தியா வந்த கிரேக்க அலெக்சாண்டரை தடுத்த மன்னன் தமிழ்ச்சோழ மன்னன் புருசோத்தமன் தானே? (புருசோத்தமன்-புருச-உத்தமன்-உத்தம புருசன்-நேர்மையான ஆண்மகன்)
 1. 12,13 நூற்றாண்டுகளில் இருண்ட காலங்களில் வாழ்ந்த அய்ரோப்பா 1492 ல் இசுபானியாவிலிருந்து கொலம்பசும், 1498 ல் இத்தாலியிலிருந்து வெஸ்புக்கியும், அதே ஆண்டில் போர்ச்சுகல் நாட்டிலிருந்து வாஸ்கோடா காமாவும் தேடிய தேசம் என்ன? அவ்வளவு வளமும் செல்வமும், பொருளாதார திறமைகளும், வியாபார செழிப்பும், உயர்ந்த நாகரீகமும் கொண்டிருந்த தேசம் இந்திய தேசம்தானே?
 2. அய்ரோப்பியர்கள் உயர்த்திப்பிடிக்கும் இலத்தீன், கிரேக்க நாடுகளின் பெயர்களே தமிழாயிருக்கும் போது அவர்களின் வரலாறும், தோற்றமும், மதங்களும் இங்கிருந்துதானே போயிருக்க வேண்டும்.
 3. தகவல் தொழில்நுட்பம் சிறந்து விளங்கும் இந்த 21 ம் நூற்றாண்டிலேயே நம்ம நாட்டு மஞ்சளுக்கும், வேம்புக்கும் அவர்கள் தங்களது கண்டுபிடிப்பு என்று காப்புரிமை வாங்கினார்கள் என்றால், கடந்த 500 ஆண்டுக்காலத்தில் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க கண்டங்களை அடிமைப்படுத்தியிருந்த போது என்னென்ன செய்திருப்பார்கள்.
 4. இங்கே மையப்படுத்த விரும்புவது மதங்களுக்கு மூலம் தமிழரின் வானியல் என்பதைவிட மதம் ஒரு பிரிவினை சக்தியே அல்ல. கடவுள் அல்லது மத வித்தியாசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் மொழி வித்தியாசம்தான். எல்லாவித மதங்களுக்கும் பின்புறம் இருந்துகொண்டு மக்களை அடிமைப் படுத்தும், பிளவு படுத்தும் சக்திகளை நாம் கண்டுகொள்ள வேண்டுமென்பதே. மதம் ஒரு பிரிவினைக்குறிய ஒரு சக்தியாய் புகுத்தப் படுகிறது. ஆதிக்க சக்திகளுக்கு எப்போதும் பிரிவினை இருந்துகொண்டே இருக்க வேண்டும். கம்யூனிசம் இல்லையென்றால் இசுலாம், இசுலாம் இல்லை என்றால் தேசீய விடுதலை இயக்கங்கள் என்று மதத்தின் பின்புலமாக இருந்துகொண்டு செயல்படும் கூடங்குள சக்திகளுக்கெதிராக, மீத்தேன் சக்திகளுக்கெதிராக, நியூட்ரினோ சக்திகளுக்கெதிராக, செயல்படும் மக்கள் இனத்துக்கு எதிரான பொது எதிரியை இனம் கண்டு கொள்வதே நமது முதல் வேலை.