1. தமிழும் இத்தாலியும்

யாரும் தமிழின விரோதி சோனியா தொடர்பு பத்தி பேச போறேன்னு  நினைக்க வேண்டாம்.

நான் தொடங்க நினைத்திருப்பதுதமிழுக்கும்இத்தாலிக்கும்உள்ளமொழி தொடர்புபத்தியே.

தமிழ் மொழிய, தமிழர்கள் தவிர வேறு மக்கள் நல்லா பேசுறாங்கன்னா அது இத்தாலியர்கள்தான். இது ஏதோ ஆர்வத்த கிளற சொல்ற வார்த்த இல்ல. நாலஞ்சு வருசம் அந்த நாட்ல இருக்கறதால ஏற்பட்ட சின்ன அனுபவம்.

மொதல்ல ஒரு வார்த்தை வேதோவா(Vedova) நம்மூர் விதவை. இது நம்ம தமிழ் மாதிரி இருக்குதேன்னு பார்த்தேன். அப்படி ஒவ்வொரு வார்த்தையா தேடி ஏறக்குறைய 300 வார்த்தைகள் தமிழோடு தொடர்புடைய வார்த்தைகளை தேட முடிஞ்சது. வந்த வேலைய தவிர இந்த வேலைதான் முழு மூச்சா போனது.

எல்லாத்தையும் ஒரே மூச்சில சொல்லல, பயப்பட வேண்டாம். மெதுவாவே பயணம் செய்வோம்.

மொதல்ல இத்தாலி ங்கற நாட்டு பேரே தமிழ் பெயர்.

  1. இத்தாலியை அவர்கள் இத்தாலியா என்றே அழைக்கிறார்கள்.

இதற்கு என்னடா அர்த்தம் என்று கூகிளில் தேடினேன். இத்தாலியாவின் மூலச்  சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்றார்கள். அந்த கிரேக்கச்சொல் இத்தேல்லோஸ் (itellos). இந்த இதல்லோஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தேடிய பொது அது ஒரு இலத்தின் வார்த்தை மூலம். அந்த வார்த்தை விதெல்லோஸ். இலத்தினில் விதெல்லோஸ் என்றால் இளங்கன்று என்று போட்டிருந்தார்கள். இத்தாலிய மொழியிலும் வித்தெல்லொ (Vitello) அப்படின்னா இளங்கன்று தான்.  

இப்பதான் முக்கியமான திருப்பம். இந்த வித்தெல்லொ எங்கிருந்து வந்தது என்றால் இந்தோ-ஐரோப்பிய தொடர்பு அ கிழக்கத்திய மூலச்சொல் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இன்னும் போனால் குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா. அதாவது அவர்கள் இங்கிருந்து, தென் இந்தியாவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று குடியேறியவர்கள் என்ற உண்மை வெளி வந்துவிடும். ஐரோப்பியர்களுக்கு தாங்கள் மேன்மையானவர்கள்; தங்களிடமிருந்தே உலகம் அறிவு பெற்றது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள்.

சரி நம்ம விசயத்திற்குள் வருவோம்

இந்த Vitello எங்கேருந்து வந்ததுன்னு தேடிப் பார்த்தால் நம்மூரு விடலை. விடலை என்றால் இளங்கன்று என்று தமிழ் அகராதியில் போட்டிருந்தார்கள். நாம சொல்வோம் இல்லையா. விடல பையன் இளங்கன்று பயமறியாதுன்னு. ஆக தொடக்கத்தில் மாடுகள் அதிகமாக இருந்த நாடு இது. மாடுகளின் நாடு. மாடு மேச்ச பசங்கதான் இந்த இத்தாலியர்கள்.