அடுத்து இத்தாலி மொழியில் உறவுக்கான வார்த்தைகளில் தமிழோடு தொடர்புகொண்ட ஒரு சில வார்த்தைகளை தேடுவோம். சந்தேகங்கள் இருந்தால் உடனே கேட்க மறக்க வேண்டாம்.

 1. இத்தாலிய உறவுகள் பெயரில் தமிழ்
 1. Genitori- பெற்றோர்-ஜெனித்தல், சனித்தல், சனனம், பிறப்புக்கு காரணமானவர்கள்.
 1. Vedova-விதவை. (வேதொவா) அப்படியே உள்ளது. தமிழில் பெண்ணுக்கு மட்டுமே இந்தப்பெயர். ஆணுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தாலியர்கள் சமத்துவமாக பயன்படுத்துகிறார்கள். ஆணுக்கு vedovo, பெண்ணுக்கு vedova.
 1. Papa-அப்பா
 2. Mamma-அம்மா

(அம்மா என்ற சொல் உலகளவில் 48 மொழிகளிலும், அப்பா என்ற சொல் 23 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார், மொழியியல் அறிஞர் தேவநேயப்பாவாணர். ஆக உலக மொழிகளுக்கெல்லாம் அப்பனும் ஆத்தாவும் தமிழே)

 1. Juvenile-யுவன், யுவதி
 1. Marito-மரித்தோ (கணவன் )
 2. Moglie-மோளியே (மனைவி)

கணவன் மனைவிக்கான இத்தாலிய வார்த்தை. Marito-Moglie.
நம்மூரில் கனவன் மனைவிக்கு பல வார்த்தைகள்:
கணவன் மனைவி, புருஷன் பொண்டாட்டி, துணைவி, இணைவி (உபயதாரர் ஆரூரார் ?)
இதுல கணவன் இறந்தால் மனைவியை சில வார்த்தைகளில் அழைப்பார்கள். ஒன்னு விதவை. இன்னொன்னு மூளி.

கணவன் மரித்தால் மனைவி மூளி. இது அப்படியே இத்தாலியில் “கணவன் மனைவி” க்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.

கணவன் – மரித்தோ-Marito; மனைவி-மோளியே – Moglie. இதற்கு காரணம் இருக்கு. என்னன்னா…

(தமிழ்நாட்டுல ஆத்துல புது பெருக்கு வந்தால் அது வெள்ளம்.
ஆனா சேர (கேரள)நாட்டுல அந்த வார்த்தை பொதுவாக தண்ணியை மட்டுமே குறிக்க பயன்படுது.)
இங்கே தனிச்சொல்லாக இருப்பது அங்கே பொது சொல்லாக மாறுகிறது.

அது போல கணவன் மனைவி உறவு முறைக்கான வார்த்தைகளில் மரித்த கணவன் மூளி மனைவி உறவு வார்த்தை, பல ஆயிரம் ஆண்டு உருமாற்றத்தில்
ஒரு குறிப்பிட்ட உறவுச்சொல்லே (மரித்த கணவன்-மூளி மனைவி )
பொதுச்சொல்லாகிவிட்டது ​(கணவன்- மனைவியாக).

​சேர நாடு பற்றி பேசுவதால் ஒரு சின்ன இடைச்செருகல். நாம் பயன்படுத்தும் சோழ, பாண்டிய, சேர நாடுகள் என்ற வார்த்தைகள் உண்மையில் வேறு மூலச்சொல்லொடு தொடர்பு கொண்டவை.

பாண்டிய நாடு உண்மையில் பண்டைய நாடு. கடல் கடந்து வந்தவர்கள் முதலில் குடியேறிய பகுதி. ஆகவே பண்டைய நாடு, மருவி பாண்டிய நாடாகிவிட்டது.
சோழ நாடு என்பதும் உண்மையில் சோதிய நாடு. சோதியான சூரியன் முதலில் உதிக்கும் பகுதி என்பதால் (Japan – Nippon போல)​

​சோழர் கொடியும் முதலில் சூரியக் கொடியாக, சூரியனைக்குறிக்கும் ​​ காளை மாட்டு கொடியாகத்தான் இருந்தது. அதனால்தான் சிவக் கோயில்களில் எல்லாம் மத்தியிலும் சுற்றிலும் இருப்பது காளை. இது தமிழர்களின் வானவியல் அறிவின் அடிப்படையில் Taurus (தார்க்குச்சி என்பது வண்டி காளைக்கான குச்சி. இதைப்பற்றி பின்னர் விளக்கமாக கூறுகிறேன்)என்ற நட்சத்திரக்கூட்டத்துக்கருகில் உள்ள சிவந்த நட்சத்திரம் தான் இது.

உசா: காண்க:

இன்றும் கூட சோழ மண்டல கடற்கரை கொண்டிருக்கும் ஆந்திராவின் கொடியில் இருப்பது சூரியன்தான்.

சோழ மண்டலக்கடற்கரை ஆங்கிலேயர்களின் வாயில் Coromandel கடற்கரை

ஆகி (நம்மையெல்லாம் mental ஆக்கிவிட்டான் ) இன்னும் அதையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் Coromandel Express, Coromandel Cement என்று. ஆங்கிலேயனை விட்டாலும் நாம ஆங்கில அடிமைத்தனத்தை விட மாட்டேங்குறோம்.

கொஞ்சம் திசை மாறிப் போனதற்கு மன்னிக்கவும்.  மீண்டும் வருவோம்

 1. Madonna, donna-மாது

மாது என்பது பெரிய பெண்ணைக்குறிக்கும். மாது மதோன்னா என்று ஆகி முதல் எழுத்து மறைய வெறும் தோன்னா donna என்பதோடு நின்று விட்டது.

 1. Gente-சனம்
 2. Vita-வித்து, விதை வித்யாலயா. உயிருக்கான தொடக்கம், வித்து, வித்யாலயா- தொடக்க அறிவு ஆலயம். வேதங்கள்-தொடக்கம் பற்றி பேசும் நூல், உயிர்களின் விதை அறிவின் விதை அனைத்தின் துவக்கம்.
 3. Filio- (பீலியோ ) பாலகன்
 4. Cognato-கொழுந்தன், நாத்தனார் நாற்று, உடன்பிறப்பு.

ஒரே செடியில் முதற் கொழுந்திற்கு அடுத்து, இரண்டாவது கொழுந்து வருவது போல கணவனோடு உடன் பிறந்த சகோதரக்கொழுந்து, கொழுந்தன் ஆகிறது. இத்தாலியில் cognato அ cognata. Cog-nato உடன் பிறந்தவர்.

 1. Zio-(சீயோ) சீயா- மாமா

எங்கள் ஊரில் (மதுரைக்கருகில்) மாமாவை சீயா என்றுதான் அழைப்பார்கள். என் அப்பா அவரது மாமாவை அவ்வாறு தான் அழைப்பார். இப்பதான் எல்லா உறவு வார்த்தைகளும் மறைந்துகொண்டே போகிறதே. எல்லாம் ஆண்ட்டி அங்க்கிள் தான். நம்ம நடிகர் விக்ரமுக்கான அடைமொழி பெயர்கூட சீயான் கூட மாமா என்ற அர்த்தம் தான் தரும்.

 1. Nepoti- நெபொத்தி-பேரன், பேத்தி

பேரன் என்றால் தாத்தாவின் பெயரை ஏற்பவன், பெயரன் என்றே பொருள். கிராமங்களில் இன்னும் இந்த நடைமுறை இருப்பது நம்மில் பலருக்கு தெரியும். அதே போல பெண் குழந்தை என்றால் பாட்டி பெயர் அ தாத்தாவின் பெண்பால் பெயரினை வைப்பது வழக்கம்.

இத்தாலியிலும் இதே நடைமுறை. nepoti- Ne – Poti நாமம் பெயர்த்தி நெபொத்தி nepoti.​

 1. Nato-நாதி, பிறப்பு
 2. Natale- நத்தார், கிறிஸ்துமஸ்

நாதி அற்றவன் அ அநாதை என்றால் பெற்றோர் அற்றவன், யாருமற்றவன், பிறப்புக்கான காரணங்கள் தெரியாதவன் என்பது நமக்கு தெரியும். இறைவனும் கூட அநாதியானவன் என்று அழைக்கபடுகிறார். அதாவது பிறப்பு, இறப்பு அற்றவர். நாதி-பிறப்பு Nato, Native, Nativity. நாதி, நத்தார் பெருவிழா, Natale.
தொடர்ந்து தேடுவோம் …

Advertisements