இத்தாலிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகள் தேடலில் இப்ப உடல் உறுப்புக்களுக்கான இத்தாலிய வார்த்தைகளில் உள்ள தமிழ் மூலச்சொற்கள் சிலவற்றை காணலாம். இன்னும் வேறு சில வார்த்தைகளை யாரும் கண்டுபிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். பலருக்கும் பயன்படலாம்.

 1. உடல் உறுப்புகள்: இத்தாலியும் தமிழும்
 1. Naso (நாசோ) – நாசி, மூக்கு
 2. Gola (கோலா) – கழுத்து
 3. Dente(தெந்தே)-தந்தம், பல். யானையின் பல்லை மட்டும் தந்தம் என்கிறோம். இத்தாலியர்கள் இந்த யானையின் பல்லை பொதுவான பெயராக்கி பல்லுக்கு பயன்படுத்துகின்றனர்.
 4. Tosse (தோசே)-சலதோசம். இத்தாலியர்கள் இருமலுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
 5. Vegliare (வேழியாரே )- விழித்தல்
 6. Capo (காப்போ) – தலைவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். கபாலம், தலை. தலைமையான பல அர்த்தங்களுக்கு இவ்வார்த்தை பயன்படுகிறது. நாமும் தலையை  அடிப்படையாக வைத்தே முதன்மையை சொல்கிறோம் இல்லையா.

தலை-வர், தலை-ச்சன்பிள்ளை, தலை-நகரம், தலை-மை தபால் நிலையம் என்று.  கேப்டன் (Cap-tain) என்ற ஆங்கில வார்த்தையும் கூட இப்படித்தான். ஆங்கிலத்திற்கு போனால் எக்கச்சக்க வார்த்தை வரும். இப்போ வேணாம். இத்தாலிக்கே வருவோம்.

Capo-linea(காப்போ-லீனையா) – இதன் பொருள் பேருந்து நிலையம். அதாவது எல்லா வழித்தடங்களுக்கும் தலையாக இருக்கும் நிலையம்.

Capo-d’anno (காப்போ-தான்னோ) – வருடத்தின் தலைநாள். வருடத்தின் முதல் நாள். வருடபிறப்பு

capo-cuoco (காப்போ-கோகோ) – தலைமை சமையல்காரர், head-cook

Capo-luogo (காப்போ-லுவோகோ) – தலைமையிடம்

ஒரு சின்ன இடைச்செருகல்: புத்த மதத் தலைவர் தலாய் லாமா என்பதற்கு பொருள் தலைமை குரு, தலைமை ஆசான் என்பதே. தலை-லாமா

 1. Capelli (கப்பெல்லி) – capo – pelli கபால முடி. பீலி என்றால் தமிழில் முடி என்று பொருள். ( பீலி பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்து பெயின் ) இதன் பொருள்: எடை குறைந்த மயில் இறகே ஆனாலும் அதன் எண்ணிக்கை அதிகம் எனில் வண்டி குடை சாயும்.
 2. Occhio (ஓக்கியோ)-கண், அக்கம் என்றால் கண் என்பது பொருள். சந்தேகம் உள்ளவர்கள் தேடிப்பார்க்கலாம். http://ta.wiktionary.org/wiki/ (அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா – சிப்பிக்குள் முத்து படப்பாடல்.)
 3. Sangue (சாங்குவெ)-செங்குருதி, இரத்தம்
 4. Cuor (கோர்) – இருதயம், குருதி, செங்குருதி அனுப்பும் இடம்
 5. Muorire, Morto (மொரிரே, மோர்த்தோ )- மரித்தல், மரித்தவர், அமரர்
 6. Nascere (நாசறே) Nato -நாதி, பிறப்பு
 7. Mano (மாணோ)-மணிக்கட்டு, கை
 8. Collana-(கொல்லனா) கழுத்துநகை, நாம் கொல்லன் என்று நகை செய்பவரை அழைக்கிறோம். கொல்லனா என்றால் இத்தாலியில் கழுத்து நகை.
 9. Voce (ஓச்சே)- ஓசை
 10. Pedonale (பெதோநாலே) – பாதசாரி. ஆங்கிலத்தில் pedal, pedestrian எல்லாம் அடிப்படையில் பாதத்திலிருந்தே.
 11. Unghia (உன்கியா)- உகிர் உதிர்த்தல் நகம்
 12. Calcio- கால்பந்து விளையாட்டு . காலை பயன்படுத்தும் பல விசயங்களுக்கு கால் என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக

cal-pestare (கால்பெஸ்தாரே)- கால்பதித்தல்

cal-zone (கால்சொனே) – கால் சட்டை, trouser.

cal-za (கால்சா) – சாக்ஸ், காலுறை, கால்மேசு

cal-cagno (கால்காங்னொ ) – கணுக்கால்

cal-zalaio (கால்சலையொ) – பெரிய ஷூ, பெரிய பாதணி

தொடர்ந்து தேடுவோம்

Advertisements