1. விலங்கு, பறவை, தாவரம்
 1. Animalia  (அனிமாலி)- விலங்குகள்

தமிழில்  ஆத்மா, ஆன்மா என்பதன் மூலச்சொல் அகத்துமம். மனிதன்

தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ந்து முடிவெடுப்பவன்.

ஆதலால் ஆறாம் அறிவை பயன்படுத்தி சீர்தூக்கி மெய்ப்பொருள்

காண்பவன் அகத்துமம், ஆன்மா உள்ளவன். இவை இல்லாதவை

அகத்துமம் இல்லாதவை, ஆன்மா இல்லாதவை எனப்படும்.

ஆன்மா இல்லாத, ஆன்மா – இலி, அனிமாலி (விலங்குகள்).

பிராணிகள் என்பதற்கும் தமிழ் நல்ல வரையறை கொண்டுள்ளது.

பிராண வாயு சுவாசிக்கும் அத்தனையும் பிராணிகள். அதனால்தான்

கல்லையும், மரத்தையும் பிராணிகள் என்று சொல்வதில்லை.

கல் சுவாசிப்பதில்லை. மரம் கார்பண்-டை-ஆக்சைடை சுவாசிக்கிறது

நமக்கு தெரியும். இந்த கல் அ மரம் போன்று இருப்பவர்கள் அப்பிராணிகள்.

 1. Toro (தோரோ) Taurus – தார், காளை

வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் ‘மண்ணில் வந்த நட்சத்திரம்’. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.

 1. Gatto (காத்தோ)- பூனை, கொத்தி. கொத்தி என்றால் குருடு என்பது பொருள். பூனைக்கு பகலில் கண் சரியாகத் தெரியாது. ஆகவே தமிழர்கள் அதற்கு வைத்த பெயர் கொத்தி.
 2. Gallo (கால்லொ)-கோழி இப்பெயர் அப்படியே வருகிறது.
 3. Pollo (போல்லோ)-புல்லம், பறவை, கோழி
 4. Agnello (அஞ்னெல்லொ)- ஆடு, ஆநிரை என்பது ஆட்டைக்குறிக்கும். தமிழ் செய்யுளில் படித்திருப்போம்.
 5. Mandria (மந்த்ரியா)- மந்தை
 6. Mucca (மூக்கா)- பசு மாடு. நாம் பசுமாட்டை கோ (மாதா) என்று அழைப்போம். இந்த கோ, மூ-கோ, மூ-கா, மூக்கா ஆகிவிட்டது.
 7. Mangiare (மஞ்சாரெ) – சாப்பிடுதல், உண்ணுதல், மேய்தல்
 8. Vitello – இளங்கன்று இதைப் பற்றி இரண்டாம் கட்டுரையில் எழுதி உள்ளேன், எவ்வாறு இத்தாலி என்றே வார்த்தையே இதிலிருந்து வந்தது என்று.
 9. Erba (எர்பா)- அருகு, அருகம்புல் என்ற ஒரு புல் வார்த்தையையே இவர்கள் அனைத்து வகை புல், கீரைகளுக்கு பொது பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
 10. Serpente (செர்பெந்தெ ) – சர்ப்பம் அப்படியே உள்ளது.
 11. Cavalio (கவாலியோ) – குதிரை, காவல் குதிரை. இந்தப்பெயர் அப்படியே பிரெஞ்சு மொழிக்கு செல்லும்போது செவாலியே என மாறுகிறது. நம்மூர் நடிகர் திலகத்துக்கு பட்டம் கொடுத்தாங்கல்ல அதே செவாலியே பெயர்தான். பொருள் குதிரை வீரன் என்பதே.
 12. Ali (ஆலி), Uccello (உசெல்லொ) –

ஆலி என்றால் சிறகு என்று பொருள்.

உசெல்லொ என்றால் பறவை என்று பொருள்.

நம்மூரில் ஆலாய் பறக்கிறான் என்று சொல்வோம் இல்லையா.

ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கிறான் என்பதே.

 1. Snaka – நாகம். விளக்கம் தேவைப்படாது.
 2. Uva (உவா)-என்றால் திராட்சை, uovo (ஓவோ)- என்றால் முட்டை

என்று பொருள். நம் தமிழில் உவாமதி என்றால் முழு மதி.

உருவத்தில் கோளமாக, முழு வட்டமாக இருக்கக்கூடிய இவை இரண்டும்

அதே பெயரில் வருவது பொருத்தமே.

 1. Zinzero (ஜிஞ்செரொ) – இஞ்சி

18 . Riso (ரீசோ) – அரிசி. இவை இரண்டிற்கும் விளக்கம் தேவைப்படாது.

19 . Zucchero (சூக்கெரொ)- சர்க்கரை

20 . Albero (ஆல்பெரோ) – மரம்.

நம்மூரில் அகல விரிந்திருக்கும் மரம் ஆல மரம். இந்த ஒரு மரத்தின்

பெயரையே மரத்திற்கெல்லாம் பொதுப்பெயராக ஆல்பெரொ என்று

அழைக்கிறார்கள். இது மட்டுமில்லை ஆலமரம் பல

பறவைகளுக்கும், மனிதர்க்கும் தங்கி ஓய்வெடுக்கும்

வகையில் இருப்பதைப்போல, பலரும் தங்கும்

விடுதியை (lodge) albergo (ஆல்பெர்கொ) என்றே அழைப்பது தமிழ்

இங்கே எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதையும் ஆராய தூண்டுகிறது.

தொடர்ந்து தேடுவோம் …

Advertisements