நமது இத்தாலிய தமிழ் மொழிகளுக்கிடயிலான  தொடர்பு பற்றிய தேடலில் இன்று நிறங்கள் பற்றி பார்ப்போம். இந்த  பதிவு சின்னதுதான். நான்கு நிறங்கள் மட்டும்தான். தேடித்தான் பார்ப்போமே.

6. நிறம்.


1. Nero (நேரோ) – கறுப்பு.


கறுப்புதான்  எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் தமிழர் நிறம் கறுப்பு என்று  வரும். உண்மைதான். 

மனிதர், தெய்வங்கள் அனைத்தும் கறுப்பாக வைத்திருந்தான் தமிழன். கறுப்பை பிடித்திருந்தது தமிழனுக்கு. இப்ப இல்லை. வெள்ளைக்கு தாவி விட்டான். நடிகர், நடிகை முதற்கொண்டு, தெய்வத்தின் நிறம் வரை அனைத்தும் வெள்ளையாக இருக்க வேண்டும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வடிவேல் சொல்வது வெறும் நகைச்சுவை மட்டும் அல்ல அது சமுதாய உண்மை, கேடு. வெள்ளையாக இருக்கும் எதுவுமே நல்லதில்லை. பசும்பால், உப்பு, சர்க்கரை, வெள்ளை அரிசி, பற்பசை. எல்லாம் இரசாயன நிறமிகளால் நிறம் மாற்றப்படுகிறது வெள்ளையாக. ஐரோப்பாவிலுள்ள வெள்ளையர்களும் வெள்ளைத்தோல் நேரடியாக சூரிய ஒளியால் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதால் சூரியக்குளியல் செய்கிறார்கள். கறுப்பாக, நோய் எதிர்ப்புத்தன்மை பெற,  d விட்டமின் பெற. நமக்கு அது தேவையே இல்லை. உடம்பெல்லாம் மச்சம், கறுப்பு. சரி.

தமிழில் நிறம் என்றாலே அது கறுப்பைத்தான் குறிக்கும். நம்மூரில் மாப்பிள்ளை மாநிறம் என்றால், அவர் கறுப்பும் இல்லை. சிவப்பும் இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் என்று நினைக்கிறோம். உண்மையில்லை. மாநிறம் என்றால் மா கறுப்பு, மிகவும் கறுப்பு என்றுதான் அர்த்தம். 


நிறம் என்றாலே தமிழில் பொருள் கறுப்புத்தான்.


இந்த நிறம்,  கறுப்பு என்ற வார்த்தை தான் (நிறம்-negro-நெகறோ )நீக்ரோ என்றும் ஆனது. கறுப்பு இனத்தவர் 


அது இத்தாலியில் நேரோ-கறுப்பு என்று ஆகிவிட்டது. நிறம் என்றாலும் நீக்ரோ என்றாலும் நேரோ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். கறுப்பு.


2. Giallo (ஜாள்ளோ) – மஞ்சள், மஞ்சள் என்பதில் ‘ம’ வை மட்டும் எடுத்துவிட்டார்கள். ஞ்சள் -ஞ்சாள் -ஞ்சாள்ளோ. அப்படியே ஆங்கிலத்தில் யள்ளோ (yellow) என்றாகிவிட்டது.


3. Rosso (ரோசோ)- சிவப்பு, சிவப்புக்கு அடிப்படை இரத்தம். இரத்த வண்ணம் என்பது அப்படியே வண்ணத்துக்கானப் பெயராகிவிட்டது. சிவப்பு  வண்ணக் கடல் கூட (ரெட் சீ ) செங்கடல் என்றுதான் அழைக்கப்படுகிறது. முகம் சிவந்து கோபப்படுவதைக்கூட இத்தாலியர்கள் Arrabbiare என்று இரத்த நிறத்தை இணைத்துத்தான் சொல்கிறார்கள். (Arabia) அரபு நாடுகள் கூட செம்மண் பாலைவனமாய் இருப்பதால் தான் அரபு நாடு எனப்பெயர் பெற்றது.


4. Bianco (பியான்கோ)- வெள்ளை. பயத்தால் முகத்தில் இரத்த ஓட்டம் இல்லாது வெளிரிப்போய்விடும். பயங்கொண்ட நிறமாகத்தான் பியான்கோ என்கிறார்கள். 


ஆனால் எல் என்றால் ஒளி வெள்ளை என்று பொருள். இந்த ‘எல்’ லிருந்து வரும் சொல் இலவம். இலவம் என்றால் வெள்ளை என்று பொருள். இலவம் பஞ்சு. வெண்பஞ்சு. இத்தாலியர்கள் இந்த எல் அ ஒளி வெண்மையை பல வார்த்தைகளில் பயன்படுத்துகிறார்கள். 


இலவண்டெரியா-ஆடைகள் வெளுக்கப்படும் இடம். 

Elettricita – (Elettricity) ஒளி அமைப்பு,

(Alpi) ஆல்ப்ஸ் மலை-வெண்பனி மலை. 


லெபனான் நகரத்தின் பெயர்ப்பொருள் வெண்பனி நகரம் என்பதே. 


Rome நகரத்தின் ஊடாக பாயும் நதி டைபர் நதி. இத்தாலி மொழியில் அது தவெரெ (Tavere) என்று அழைக்கப்படுகிறது.Tiberinus silvius என்ற ரோமை நகர மன்னன் அப்போதைய நதியின் பெயரான (albula) அல்புழா என்ற இந்த நதியில் சிறுநீர் கழித்ததால் இந்த நதி அம்மன்னன் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. 


அல்புழா என்பதும், கேரளாவில் உள்ள ஆலப்புழை என்ற நதியின் பெயர் அர்த்தமும் ஒன்றே அது வெண்ணிற நதி என்பதே. அதாவது இந்த நதி அன்றிலிருந்து இன்று வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடக்கூடியது. புது வெள்ளம் வெண்பழுப்பு நிறத்தோடு அடிக்கடி வருவதால் இப்பெயர் பெற்றது. 


கொஞ்சம் சந்தேகம் கொள்பவர்கள் இந்த உசாத்துணையை நாடலாம்.


http://en.wikipedia.org/wiki/Tiber


                                        தொடர்ந்து தேடுவோம்…

Advertisements