இத்தாலி மொழிக்கும்  நம் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய தொடர் தேடலில் இன்றைக்கு பொதுவான சில வார்த்தைகளைப் பார்ப்போம். வார்த்தைகள் அதிகம் இருப்பதால் இதனை இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறேன். முதல் பாகத்தில்:

7.1 பொதுவானவை

 1. Guerra (குவெர்ரா)- போர்- குரோதம்
 2. Aqua (ஆக்குவா)- அக்கம் (தமிழ் வார்த்தைதான்),ஊற்றுநீர்.
 3. Latte (லாத்தே)- பால் – பாலாடை என்ற தமிழ் வார்த்தையில் ‘பா’ என்ற வார்த்தை நீங்கி லாடை, லாதை, லாத்தே ஆகிவிட்டது.
 4. Vestiti (வேஸ்திதி)-வேட்டி,வஸ்திரம்
 5. Camminare (கம்மினாரே)- நடத்தல்-கம்முதல் என்றால் பதுங்கி நடத்தல்.
 6. Tovalia (தொவாலியா)- மேசை விரிப்பு – மடித்துவாலை என்ற தமிழ் வார்த்தையில் ‘மடி’ யை எடுத்தால் துவாலை.
 7. Coppa, cup- கோப்பை
 8. Vuoto (வோத்தோ) – வெறுமை – வெற்று
 9. Rullo (ருள்ளோ)-உருளை
 10. Musica (மூசிகா)- இசை, – இசைவு, பல ஒலிக்கோர்ப்புகள் மற்றும் இசைக்கருவிகளின் சப்தங்கள் கோர்வையாக, இசைவாக வருவது இசை.
 11. Macinare-Masticare (மச்சினாரே)- அரைத்தல், சுழலுதல்- தமிழில் மசி என்றால் அரைத்தல் என பொருள்படும். எனது பாட்டியார் முன்பு என்னிடம் நல்லா மசிச்சு சாப்பிடு என்பார்கள்.  இந்த அரைத்தல் அப்படியே machine என்ற ஆங்கில வார்த்தையாய் எந்திரத்திற்கு எடுத்தாளப்படுகிறது.
 12. Alarme (அலார்மே)- ஆங்கில அலாரம் தான். தமிழில் அலறுதல்
 13. Scongiurare (ஸ்கொஞ்சுராரெ)-கொஞ்சுதல், கெஞ்சுதல்.
 14. Hook- கொக்கி
 15. Parola (பரோலா)- வார்த்தை – தமிழில் பரல்என்றால் வரிசை என்று பொருள். எழுத்துக்களின் வரிசை வார்த்தையாகிறது. தமிழிலும் அப்படித்தான், வார்த்தை என்றால் வரிசை என்றுதானே அர்த்தம். வார்க்கப்பட்டது, வரிசைப்பட்டது.
 16. Conducente (கொண்டுச்செந்த்தே)- ஓட்டுனர், தமிழில் கொண்டுசெல்பவர்.
 17. Caramilla (கரமில்லா)- இனிப்பு, மிட்டாய் – கார-மில்லா- காரம்- இல்லாதது, இனிப்பு.
 18. Ciao(ச்சாவோ)- ஆங்கிலத்தில் bye என்று பிரியும் வேளையில் சொல்வதைப்போல் இத்தாலியில் இந்த வார்த்தை. நம் தமிழில்  சாவு என்றால் பிரிவு, மரணம். அவர்கள் பிரியும் வேளையில் அவ்வாறு சொல்கிறார்கள்.
 19. Cucina (குச்சினா) – சமையலறை. நம் தமிழில் சமையறைக்கு இன்னொரு பெயர் குசினி. சமையற்காரரை குசினிக்காரர் என்றும் சொல்வார்கள். மேலும் தகவலுக்கு: காண்க:
 1. Casa (காசா)- வீடு.

இந்த வார்த்தைக்கான மூலச்சொல் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். கடைசியில தேடிப் பிடிச்சாச்சு. மூலச்சொல் நம் தமிழ் அகம். அகம் என்றால் வீடு. அகம், பொருள், இன்பம், வீடு (இந்த வீடு – இறுதி வீடு பேறு).
நம்மூர்ல பிராமணர்கள் தான் இன்னும் இந்த சுத்த தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.


ஆத்துல எல்லாரும் சுகமா? என்றால்

அகத்தில எல்லாரும் சுகமா? என்றுதான் அர்த்தம்.
பேச்சுவழக்கில் சற்று மாறிவிட்டது. தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அது கூட சொல்வதில்லையே. சரி விசயத்திற்கு வருவோம்.
இந்த அகம். இந்த அகத்தை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால் ahome, a-home.
கிரேக்கத்தில் வீட்டிற்கு, அகத்திற்கு பெயர் (அகோஸ்) Oikos.
இந்த Oikos ஐ Oi-kos என பிரித்தால் kos (அப்படியே இது ஆங்கிலத்தில் kos-hos-house),
கொஞ்சம் மாறி இத்தாலியில் cos, cas, casa என ஆகியிருக்கிறது.

 1. Cipolli (சிப்போள்ளி)- வெங்காயம்- வெங்காயத்திற்கு ஒரு தமிழ் பெயர் உள்ளி.காண்க: 

நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி (பொருள்: நினைத்து, புறநானூறு)

 1. Panorama (பனோரமா)- ஆங்கிலத்திலும் கூட ‘panoramic view’ என்ற ஒரு பதம் வரும். பூரணம், முழுமை.
 2. Gaso (வாயு, எரிவாயு)-கசிவு, பாறைகளுக்கிடையிலிருந்து வரும் கசிவு.
 3. Covo (கோவோ)- குகை, மகாபலிபுரத்துக்கருகில் ஒரு சுற்றுலா விடுதியின் பெயர் ‘Fisherman’s cove’.
 4. Giolleria (ஜோயல்லேரியா)- ஆங்கிலத்தில் jewellery. தமிழில் சொலித்தல், இதன் மூலச்சொல்லும் சோதி, சூரியன். சோதி போல சொலித்தலால், சுய ஒளித்தலால் இப்பெயர்.
 5. Certo (செர்த்தோ)-சரிதான், அர்த்தமே அதுதாங்க. சரிதான் !
 6. Coprire (கொப்ரீரெ)- மூடுதல். கொப்பரை
 7. Scivolata (ஷி-ஒலதா)- ஒலட்டுதல், மிதிவண்டி பழகும்போது ஓட்டத்தெரியாமல் ஆட்டுவொம்ல அதுக்கு பேர்தான் இந்த ஒலட்டுதல்.
 8. Matura (மத்துரா)- முத்துதல், பழங்கள் முத்துதலுக்கு பயன்படும் வார்த்தை.
 9. Bugia (புஜிஆ)-பொய்
 10. Mosso (மோசோ)- கடல் அலைகள் கடுமையாக இருந்தால் அதற்கான வார்த்தை. (ஆங்கிலத்தில் rough sea) மோசம்.
 11. Palestra(பாலஸ்திரா)- உடற்பயிற்சிக்களம், பல்வேறு உடற்பயிற்ச்சிக்கருவிகள் உதவியால் பல திறன்கள் கற்கும் இடம்.
 12. Evitare (எ-விதாரே) -தவிர்த்தல்
 13. Ago (அக்கோ)- ஊக்கு, ஊசி
 14. Filo (ஃபீலொ)- இழை, நூல்
 15. Avvisare (அவ்-விசாரெ)- விசாரித்தல்
 16. Piove(பியோவே)- மழை, மழை பெய்கை, பொழிகை
 17. Balcone(பால்கோணே)- ஆங்கில balcony, தமிழில் பலகணி, பல கண்ணிகள் அ திறப்புகள் உள்ளது.
 18. Tour- ஆங்கிலத்திலும் ‘tour’ தான். தமிழில் தூரம், தொலைவு.
 19. Esili(ஏசிலி)-அபலை, ஆதரவற்றவர், நாடற்றவர், அகதி. நல்ல தமிழில் ஏதிலி – ஏதும் இல்லாதவர்.
 20. Vento(வெண்தோ)-காற்று. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று. தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். வன்மையான வாடைக்காற்று பனி நாடுகளில் அவ்வாறே அழைக்கப்படுகிறது. மின்விசிறிகூட ventilatore (வெந்திலாதோரே) காற்றை அலைபாயச்செய்தல் என்ற அர்த்தத்திலே வருகிறது. ஆங்கிலத்தில் கூட ventilator என்றால் காற்றை வெளியேற்றுதல் என்று நமக்குத் தெரியும்
 21. Accuragione (அக்-குறாஜியோனே)-குறிபார்த்தல்
 22. Sorgere(சோர்ஜெரெ)- உதித்தல், சூரிய உதயம், சூரியனிலிருந்து மூலச்சொல்லை எடுத்து அதன் செயலுக்கு இவ்வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
 23. Tunica (தூணிகா)-துணி
 24. Phallic-பாலியல், பலான
 25. Serrare (செற்றாரே)-செறிவுள்ள
 26. Fuoco(ஃபோகொ)- நெருப்பு, புகைக்கான வார்த்தையை அப்படியே நெருப்புக்கு பயன்படுத்துகிறார்கள். நாம சொல்வோமில்லையா நெருப்பு இல்லாமல் புகையாது என்று. அதனால அதை அப்படியே பயன்படுத்துறாங்க.
 27. Smarrire(ஸ்-மறீரே)-மறத்தல்
 28. Stabilito (ஸ்தபிலித்தொ)-ஸ்தாபித்தல், திறப்படுத்துதல்.
 29. territore (தெறித்தொரே)- தறிபோடுதல். (ஆங்கிலத்தில் textiles)

நன்றி

தொடர்ந்து தேடுவோம்

Advertisements