நண்பர்களே, இத்தாலி-தமிழ்-மொழி தொடரில்  பொதுவான தொடர்பு வார்த்தைகளில் இரண்டாவது பகுதி.

 1. Cogliere (கோழியெரெ)-கொய்தல், பறித்தல்.
 2. Birra (பிர்ரா)- நீர், தமிழ்நாட்டில் பீர் என்றால் மதுபானம் என்றாகிவிட்டது. உண்மையில் பீர் என்றால் நீர் என்றுதான் அர்த்தம்.

மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகரம் பெய்ரூட் (Beirut) டின் அர்த்தம் கூட நீரூற்றுகளின் நகரம் என்பதாகும். காண்க: 

 1. Seno (செனோ) – சினை.
 2. Terra (தெர்ரா)-பூமி. நாம் தரைக்கு பயன்படுத்தும் வார்த்தையை அவர்கள் ஒட்டுமொத்த நிலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். Metro (Me-tro)- me அ ne என்றால் கீழே என்றுதான் பொருள்படும்.

(metro) மெட்ரோ-me – tharai தரை -தரைக்குக் கீழ்,

Nederland – ne -தரை -நிலம் – நிலத்தில் தாழ்வான பகுதி. (Holland – hollow land) காண்க:

 1. Mare (மாரே)- கடல், கடலுக்கு இன்னொரு தமிழ் வார்த்தை வாரி, அனைத்தையும் அலை வந்து வாரிச் சுருட்டி எடுத்துச் செல்வதால் அப்பெயர். இந்த வாரி தான் mare, marina என்றாகிவிட்டது. ஆங்கிலத்திலும் (maraine) மரைன். நம்மூர் மரினா (கடற்)கரை. marina என்றாலே கடல்தானே அப்பறம் என்ன தனியா கடல்னு.
 2. Sala (சாலா)- பெரும் அறை, சாலை, கல்விசாலை
 3. Tirare (திறாரே)-திறப்பது தமிழிலும் அப்படியே.
 4. Vaso (வாசோ)- சிறிய கொள்கலன், பாத்திரம். தமிழில் வசி என்றால் பாத்திரம் என்ற பொருள். (வசிப்பது இன்னொரு பொருள்)
 5. Pane (பாணே)- பண், ரொட்டி
 6. Pagina (பாஜினா)- பக்கம்
 7. Cassa (காஸ்ஸா )- காசு
 8. Paragonare (பர-கோணாரே)- ஒப்புமைப்படுதிப்பார்த்தல், பல கோணங்களில் ஒப்புமைப்படுத்துதல்.
 9. Pozzo (போட்சோ)-கிணறு, தமிழில் பொந்து, கிணறு.
 10. Onda (ஓந்தா)-அலை தமிழில் ஓதம்
 11. Digerire (திஜெரிரெ)-செரித்தல்
 12. Isola (ஈசோலா)- தீவு.

இந்த வார்த்தையும் கொஞ்சம் என்னை தேட வைத்தது.
எங்கெங்கு பார்த்தாலும் பாலைவனமாய் இருக்கும் பகுதியில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது பாலைவனச்சோலை என்பது நமக்குத்தெரியும்.
இதை அப்படியே கடலுக்கும் பயன்படுத்தலாம். எங்கெங்கும் கடலாய், கடல்நீராய் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது நீர்ச்சோலை.
இந்த நீர்ச்சோலை தான், நீர்சோலை, ந் + ஈர்சோலை, ஈசோலை, ஈசோலா (isola). இந்த ஈசோலை யிலிருந்து isola, அப்படியே ஆங்கிலத்தில் island.

(ஏதாவது ஆஸ்காருக்கு சொல்லுங்கப்பா இந்த கண்டுபிடிப்புக்கு.)

 1. Cavalcare (கவல்காரே)-காவல்தாண்டுதல்
 2. Signora, signore  (சிங்ஞோரா, சிங்ஞோரே  )- ஆங்கிலத்தில் சார், மேடம் என்பதைப்போல இத்தாலியில் பொதுப்பெயர். கணவான் எனலாம். சிங்காரன், சிங்காரி.  (சிங்காரவேலன்)

 3. Assegnare (அசெங்ஞாறே )-அசைபோடுதல்
 4. Violino (வியொலினொ)-

‘வை. கோ’ சொல்வதைப்போல 17 வகையான யாழ் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். யாழ்ப்பாணன் என்றால் யாழ் கொண்டு பாட்டு இசைப்பவன் என்று பொருள். அதில் பெரிய யாழ் பேரியாழ் எனப்பட்டது. விரியாழ் என்பது அகன்ற பெரிய யாழ்.

தமிழன் குறிஞ்சி மலைப்பகுதியில் வேட்டை ஆடிய போது பயன்படுத்திய வில்லில் உருவான சப்தம் கொண்டு உருவான இசைக்கருவி வில்-யாழ் – விரியாழ், வியாழ், வியாழினோ, வியொலினொ (இத்தாலியில்), வயலின் (ஆங்கிலத்தில்).

 1. Tyranno(திரான்னொ)- கொடுங்கோலன், கொடூரன் என்பதில் உள்ள டூரன், தூரன், திரான்னொ.
 2. Alluvione (அள்ளுவியோனே )- வெள்ளம், அள்ளிச்செல்லும் வெள்ளம்.

73. Denaro (தெனாரொ)-செல்வம், பணம், தனம். அராபிய பணமதிப்பும் தினார் என்று வரும். அதுவும் தனம்  தான்.

 1. Ospedale (ஒஸ்பெதாலே)- ஆஸ்பத்திரி- தமிழில் மருந்து என்பதற்குப்பெயர் ஔடதம்,  ஔஷதம், ஆஸ்பத்திரி, ospetale, hospital. காண்க: 
 2. Farmacia (ஃபார்மாச்சியா)- மருந்து நிலையம்.

தமிழர்கள்தான் முதன் முதலில் தசை, எலும்பு, நரம்பு முடிச்சுகளை கண்டறிந்தவர்கள். அவற்றை சரிப்படுத்துவன்மூலம் எந்த நோயையும் குணப்படுத்தமுடியும் என்று கண்டவர்கள். அதிலே சிறப்பு பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் இராச்சியம் என்ற ‘ப்ளாக்கில்’ இது பற்றி விபரமாகக் கூறப்பட்டுள்ளது.  காண்க:

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,

நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அகத்தியர்.

இந்த தமிழ் வர்மம் தான், கிரேக்கத்தில் pharma என்று மாறுகிறது.

இத்தாலியில்  ஃபார்மாச்சியா (Farmacia ), ஆங்கிலத்தில் pharmacy.

பொதுவான இத்தாலி-தமிழ் தொடர்பு வார்த்தைகள் இன்னும் இருந்தாலும் இத்துடன் முடிக்கலாம்.

அடுத்த தலைப்பில் மீண்டும் தேடுவோம்.

Advertisements