.

 1. இத்தாலி-தமிழ்: மதம், வழிபாடு தொடர்பானவை 
 2. Ottaviano. வத்திகான் நகரத்தினருகில் முக்கிய சாலைப்பிரிவு Ottaviano. காரணம் அங்கு  8 சாலைகளின் பிரிவு இருக்கிறது. 8 வழி – எட்டு வழியான – ஒத்தொ-வியானோ. இத்தாலியில் ஒத்தோ (Otto) என்றால் எட்டு என்றே பொருள். (otto – எட்டு ; via – வழி)
 3. Colleseo (கொலே செயோ) – கொலை செய்யுமிடம், அடிமைகளையும், எதிரிகளையும் நேருக்கு நேர் சண்டை போடவைத்தோ அ கொடூர விலங்குகளோடு மோதவிட்டோ கொலை செய்வது. அதை அரங்கத்திலிருந்து அரசன் பரிவாரங்களோடு பார்த்து ரசிப்பது. இதற்கான இடம் தான் இது. Gladiator திரைப்படத்தில் வருவதைப்போல.
 4. Buono (போணோ)- நல்லது தமிழில் புண்ணியம். உங்களுக்கு நல்லதா போகட்டும், உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.
 5. Male (மாலே)- கெட்டது, தீயது. தமிழில் மலம் என்றால், கழிவு மட்டுமல்ல அழுக்கு, சீக்கு, குறை. அ – மல – உற்பவம் (குற்றம், தீமை அற்ற பிறப்பு உடையவர்.) அமலன், அமலி.
 6. Amen-ஆம் அப்படியே.
 7. Canto (கான்தோ) -கானம், பாட்டு.
 8. Santo (சாந்தோ)- புனிதன், தமிழில்  சாந்தம், சால்பு, சாந்தன், சாந்தி.
 9. Cere (சேறே)- மெழுகு, தமிழில் சேறு, மெழுகு சேறு.
 10. Oliva (ஒளிவா)- ஒளிவ மரம். தமிழில் ஒலிவ மரம் என்று எழுதப் பழகிவிட்டோம். உண்மையில் ஒளிவ மரம் என்றுதான் எழுதவேண்டும். காரணம், இந்த மரத்தின் காயிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது.
 11. Sano (சாணோ)- ஆரோக்கியம் தமிழில் சாணம் தொடர்பான பொருட்கள் கிருமிநாசினியாக பயன்பட்டது. வீடுகளில் சாணத்தில் மெழுகியது அதன் காரணமாகத்தான். சாணிடோரியம்.
 12. Parroco (பாரக்கோ)- பங்குப்பணியாளர் அ பங்குத்தந்தை. அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியின், பரப்பின் பொறுப்பாளர், தலைவன், (கோ) தலைவன், என்ற அடிப்படையில் பார் (உலகம், பகுதி) கோ.
 13. Nuovo (நோவோ)- நவ, புதிய. (புதிய ஏற்பாடு)
 14. Antico (அந்திக்கோ)- அந்திம காலம், வாழ்வின் இறுதிக்காலம், பழைய, முடிந்துபோன காலம். முந்தைய காலம். (பழைய ஏற்பாடு)
 15. Preghiera (ப்ரெகயிரா)- பரிகாரம், செபம்.
 16. Capella (கப்பெல்லா) – சிற்றாலயம், தமிழில் கபால (capo-இல்லம்)அ தலைவனின் இல்லம்.
 17. Aurora (அவ்ரோரா)- விடியல் தமிழில் ஆரோகணம், சூரியனின் எற்பாடு.
 18. Cielo (சேலோ)-வானம், வானகம். தமிழில் சைலம் என்றால் மலை. தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகரம் மலைகள் சூழ்ந்த நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று என மலைகள் சூழ்ந்ததால் அப்பெயர். மலை உயர்வை, மேட்டை, தரையைவிட வானம் நோக்கிய பகுதியைக் குறிப்பதால் வானம் ஆனது.
 19. Satana (சாத்தனா)-சாத்தான்.
 20. Paradiso (பாரதீசோ)- விண்ணகம், தமிழில் பரதேசம், பாரதேசம், தூரதேசம்.
 21. Croce (குரோச்சே)-சிலுவை. தமிழில் குருசு, குறுக்கு சட்டம்.
 22. Fariseo (ஃபரிசேயோ )- பரிசேயர்கள், பரிசுத்தமானவர்கள்.
 23. Carmel (கர்மேல்)- கருமலை, கருமையான மேரு (மலை), கருமேரு.
 24. Giusseppe (யோசேப்பு) – ஆங்கிலத்தில் joseph தமிழில் சூசை. எபிரேய மொழியில் இதன் பெயர் விளக்கம் பார்த்தால், துணை, சேர்ப்பு, உசாத்துணை என்றே வருகிறது.
 25. stella (ஸ்தெல்லா)- நட்சத்திரம்-

வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் ‘மண்ணில் வந்த நட்சத்திரம்’. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.

இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.

காண்க:

 1. Meditazione-(மெதிதாட்சியோனே )madi–tacere-மதி, மன அமைதிப்படுத்துதல். (tacere என்றால் அமைதிப்படுத்துதல் என்றே இத்தாலியில் அர்த்தம்)
 2. Maranatha (மாரநாதா)- வாரும் நாதா.
 1. Madonna, donna-மாது,  மாது-மதோன்னா ஆகி தோன்னா (donna) என்று சுருங்கிவிட்டது.

காண்க:

 1. Immacolato (இம்மாகொலாத்தொ)- male, மலம், சீக்கு,குறை, தீமை என்று இதே பதிவில் மேலே பார்த்தோம். அந்தக் குறைகளெல்லாம் இல்லாதவர்.
 1. Diavolo (தீயாவளோ)- தீயவன், சாத்தான், பேய். சூரியனிலிருந்து உருவான பூமி கோடிக்கணக்கான வருடங்கள் கழித்து குளிர்ந்து, நிலமாகி, உயிர் உருவாக்கத்தொடங்கியது என்று நாம் அறிவோம். அதனால் தான் இன்னும் பூமிக்குள்ளே அந்த சூரியக்குழம்பு நெருப்பாய், எரிமலைக்குழம்பாய் இருக்கிறது என்பதையும் அறிவோம். பூமிக்குள்ள உள்ள தீ யினால் நன்மை இல்லை கெடுதல் தான். அதனால் ஏற்படும் எரிமலை சுனாமி போன்றவைகளால் தீமைதான் என்பதால் பூமிக்குள்ளே இருக்கும் தீயை நரகம், பேயின் இடம், ‘தீ’ யவன், தீயாவுளோ, சாத்தான் என்றார்கள் முன்னோர். தீ ‘உள்’, தீயாவுளோ, diavolo, ஆங்கிலத்தில் devil, evil.
 2. Angelo (அஞ்செலொ )-வானதூதன். தமிழில் அஞ்சலன், அஞ்சல் அனுப்புவவன், தூதன். கிரேக்கத்திலும் Angelos. ஆங்கிலத்தில் ஏஞ்சல் (Angel)

காண்க:

 1. Dio (தீயோ)-கடவுள், தெய்வம்.

தமிழில் உயிர் உருவாக காரணமான தீயான சூரியனை தெய்வம் என்று வழிபட்டவர்கள் தமிழர்கள். அதனால் தான் பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பார்கள். தீயான சூரியன் உயிர் அனைத்தும் உருவாகக்காரணமாதலால் தீ – தீய்வம் – தெய்வம் என்போம். பூமிக்குள்ளே உள்ள தீ தீயது. ஆகவே diavolo, devil. பூமிக்கு வெளியே உள்ள தீ சூரியன் நல்லது. உயிர் தருவது. ஆகவே தெய்வம். உண்மையில் என்ன ஒரு அறிவியல் உண்மை.

மலயாளத்துலயும்  தெய்வம் தான்.

தெலுங்கில் இந்த தெய்வம் தேவுடு. சமஸ்க்ருதத்தில் தேஜஸ். தேஜஸா இருக்கிறான் என்றால் பிரகாசமாய், பள பள ன்னு இருக்கிறான் என்றே சொல்வோம்.

கிரேக்கத்தில் Theos, அதனால்தான் கடவுள் பற்றிய படிப்பு theology. Rome நகரத்தில் உள்ள மிகப்பழமையான கோயில் pantheon (பாந்தெயோன்). அதன் பொருள் பல தெய்வங்களின் கோயில். (pan-theon)

இந்தத்தெய்வம் (தீ) இலத்தீனில் Deus, அப்படியே இத்தாலியில் Dio- தியோ. இசுபானிய மொழியில் dios, பிரெஞ்ச் மொழியில் dieu,

 

வரலாற்றின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஹெரொடோடஸ்,

தத்துவத்துக்கு தந்தை யார்? கிரேக்க நாட்டு சாக்ரடிஸ்,

நிலவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு தாலமி.

கணிதவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஆர்கிமெடிஸ்.

இலக்கியத்தின் தந்தை யார்? இலியட், ஒடிசி எழுதிய கிரேக்க நாட்டு ஹோமர்.
ஏன்யா வேற யாருமே அவர்களுக்கு முன்னாடி வாழவில்லையா. ஐரோப்பியர்களுக்கு எல்லாம் அவர்கள் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற நினைப்பு. அறிவியல், முன்னேற்றம், வளர்ச்சி எல்லாம் அங்கிருந்தே தொடங்கியதாக உலகத்தை நம்ப வைக்க செய்திருக்கிறார்கள்.
இதனால் தான் அறிவியலில் சிறந்த கிழக்கத்திய நூலகங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், ஈராக்கின் (மெசபடோமியா) பாபிலோன், எகிப்தின் அலெக்சாண்டரியா என முன்னோடி அறிவியல், வானவியல், நூலகங்கள் பிரதிஎடுத்தபின் எரித்து அழிக்கப்பட்டது.

காண்க:
ஆனால் கிரேக்க நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர்.

(Greece) கிரேக்க நாட்டிற்கு தொடக்க கால பெயர் எல்லே நாடு (ELLE).

எல், அல், என்றால் ஒளி என்பது பொருள். கிரேக்கத்தில் ஒளி தரும் எண்ணெய் மரங்களான ஒளிவ மரங்கள் அதிகம் என்பதால் அந்த நாடு எல்லே எனப்பட்டது. (Greek philosophy) கிரேக்கத்தத்துவங்களை (Hellenistic Philosophy) எல்லேனிய தத்துவம் என்றுதானே அழைக்கிறோம். ஏன்?
அந்த நாட்டில் உள்ள தீவுகள் தமிழ்ப்பெயரில் தான் உள்ளது. கரட்டு தீவு (crete), கரடு முரடான பாறைகள் நிறைந்ததுதான். செப்பறைத்தீவு (cyprus). செம்பு அதிகம் கிடைப்பதால். செம்புவுக்கு அறிவியல் குறியீடும் cu தான்.

இசுலாமியர்களின் இறைவனும் ‘அல்லா’ என்று அழைக்கப்படுவது இந்த ஒளியானவர் என்ற பொருளில் தான்.

காண்க:

அதனால்தான் அராபிய வானியலில் அனைத்து நட்சத்திரங்களும் AL என்ற முதல் வார்த்தையாகக் கொண்டுதான் குறிப்பிடப்படுகிறது.

எபிரேயக்கடவுளும் எல் (El) என்றே அழைக்கப்பட்டார். (Beth-el)  பெத்-தேல்- இறைவனின் வீடு. (Emmanu-el) இம்மானுவேல் மனுவோடு, மனிதனோடு கடவுள் என்று அழைக்கப்பட்டார்.

ஏன் மோசேயும் அவரது எகிப்திய அரசன் ஏகநாதனும் (Akhenaton) வழிபட்ட ஒரே கடவுளின் பெயர் ஏதேன். ஏதன்-ஏகன்-ஏக்-ஏகம்-ஒரு-ஒருமை-ஒரே இறைவன். யூத, இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் இறைவன் ஒருவனே என சொல்லும் ஏகத்துவ சமயங்களாக இருப்பதற்கு காரணம் இதுதான். மோசே எ மோயீசன் இடமிருந்து வந்தவை தான் அனைத்து 3 மதங்களும். ஆனால், அவைகளுக்கெல்லாம் காரணமான ஏகத்துவம் என்ற மூலச்சொல்லின் வேர் தமிழே.

காண்க:

அந்தக்கடவுள்
ஆக, உலகில் மதங்களுக்கிடையே இருப்பது மத வித்தியாசம் இல்லை. மொழி வித்தியாசம் தான். ஆனால் ஒவ்வொரு மதமும் (மதங்களில் இருந்த “விவரமானவர்கள்”) தங்களது தனித்துவத்தை தக்கவைக்க, நிரூபிக்க சட்ட திட்டங்களை, கோட்பாடுகளை, வழிபாட்டை ஏற்படுத்திக்கொண்டன. அது தான் உண்மை என்று உலக மக்களை நம்ப வைக்க எல்லா முயற்சிகளையும், தகிடுதத்தங்களையும் மேற்கொள்கின்றன. எதிர்ப்பவர்கள், உண்மையை வெளிப்படுத்துபவர்கள் “காணாமற்போய்” விடுவார்கள். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

கால மாற்றத்தில் வேர்மூலம் மறந்து போய் பின்னால் உருவான திரிபான வரலாறே உண்மையாகிப்போய் உள்ளது. போன வாரத்தில் நம்ம அரசியல் வாதிகள் வச்சிருந்த கூட்டணி தாவலையே மறக்கிற சாதி சனம் நாம. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறையா நினைக்கப்போறோம். அதுதானே அரசியல், மத தலைமைகளுக்கு வசதியா இருக்குது.
இந்த எல் என்பது ஒளி தானா என்று இன்னமும் சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு:
ஈழத்திலே எல்லாளன் என்ற மன்னன் இருந்தான். (உண்மையில் அவன் சோழ நாட்டு மன்னன்) எல்லாளன் என்றால் ஒளி ஆள்பவன், ஒளியின் மைந்தன் என்றே அர்த்தம். துட்டக்காமன் என்ற சிங்கள மன்னனை எதிர்த்து போராடி வென்றவன். எல்லாளனின் கல்லறை அருகில் தமிழர் தலைவர் பிரபாகரனின் தாயார் தலைவரை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தபொது அடிக்கடி வந்து அமர்ந்திருப்பாராம். சிங்களர்கள் அவ்வாறு உட்காரக்கூடாது என்று விரட்டி விடுவார்களாம். காரணம் எல்லாளனே மீண்டும் பிறந்துவிடுவார் என்ற அச்சம் காரணமாக.
இயற்கையை யாரால் வெல்ல முடியும்.

தொடர்ந்து தேடுவோம்

Advertisements