கிறித்தவர்களின் கிறிஸ்துமஸ் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஒரே நாளில் (டிசம்பர் 25) வருகிறது. ஆனால் ஈஸ்டர் அ பாஸ்கா அ உயிர்ப்பு விழா மட்டும் ஏன் ஒவ்வோர் ஆண்டும் தேதி மாறி வருகிறது.


1. கி. பி. 190 வரை உயிர்ப்பு ஞாயிறு யூத பாஸ்கா விழாவினைப்போலவே நிஸ்ஸான் மாதத்தில் 14 ந்தேதி வரும் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்பட்டு வந்தது. அந்த பௌர்ணமி தினம் ஞாயிறாக இல்லாவிட்டாலும் பௌர்ணமி அன்றே கொண்டாடப்பட்டது.


2. திருத்தந்தை (போப்) முதலாம் விக்டர் கி. பி. 190 ம் ஆண்டில் இதை மாற்றினார். நிஸ்ஸான் மாதத்தில் 14 ந்தேதி பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறன்று கொண்டாடச்செய்தார். கி. பி. 325 ல் கூடிய நிசெயா சங்கமும் ஞாயிறன்று கொண்டாட வலியுறுத்தியது.


3 .  திருத்தந்தை முதலாம் கிரகோரி (கி. பி. 590-604) காலத்தில் ஏன் யூத நாட்காட்டியை பின்பற்றவேண்டும் என கேள்வி எழுப்பி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வரும் வசந்தகால சம பகலிரவு (Vernal Equinox-வெர்னல் என்றால் வருகை அதாவது வசந்தகால வருகை இத்தாலியில் Prima vera – பிரதம வருகை. Equinox என்றால் Equal night சம பகல்-இரவு) நாளுக்கு பிறகு வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறன்று கொண்டாட முடிவு செய்தார்கள்.



4. கி. பி. 1582 பெப்ரவரி 24ல் திருத்தந்தை 13 ம் கிரகோரி காலத்தில் நாட்காட்டியே மாற்றி அமைக்கப்பட்டது. அதுவரை செயல்பட்ட ஜூலியன் நாட்காட்டிக்கும் (ரோமை மன்னன் ஜூலியஸ் சீசர் கி. மு. 45 ல் கொண்டு வந்தது) கிரகோரியன் நாட்காட்டிக்கும் 13 நாள் வித்தியாசம் வரும்.  அதனால் தான் 1917 ல் நடந்த ரஷ்ய புரட்சி, ஜூலியன் நாட்காட்டிப்படி அக்டோபர் புரட்சி (அக்டோபர் 25) என்றும், கிரகோரியன் நாட்காட்டிப்படி நவம்பர் புரட்சி (நவம்பர் 7) என்றும் அழைக்கப்படுகிறது. கிரகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட கடைசி ஐரோப்பிய நாடு கிரீஸ் 1923ல். ரசியா 1918 ல் ஏற்றுக்கொண்டது.


5. கிரகோரியன் நாட்காட்டியின் படியும் உயிர்ப்பு ஞாயிறு சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வரும் வசந்தகால சம பகலிரவு (Vernal Equinox) நாளுக்கு பிறகு வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறன்றே இன்று வரை கொண்டாடப்படுகிறது.


6. 2014 ல்  சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வந்து, வசந்தகால சம பகலிரவு (Vernal Equinox) ஏற்பட்டது மார்ச் 20 ந்தேதி. (ஐரோப்பாவில் ஒரு மணி நேர கால மாற்றம் இதற்கடுத்த ஞாயிறன்று மார்ச் 23 ல் செய்யப்பட்டது) இதன் பின் பௌர்ணமி வந்த நாள் ஏப்ரல் 15 ந்தேதி. இதற்கு அடுத்து வரும் ஞாயிறு ஏப்ரல் 20 ந்தேதி ஈஸ்டர் அ உயிர்ப்பு ஞாயிறு. 

2015 ல் (Vernal Equinox) மார்ச் 20. அதற்கடுத்த பௌர்ணமி ஏப்ரல் 4 சனிக்கிழமை. அடுத்த நாள் ஞாயிறு ஏப்ரல் 5 உயிர்ப்பு ஞாயிறு.

மேலும் தகவலுக்கு: 

                                                                                                                                                      தொடர்ந்து தேடுவோம்